கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

யாழ்ப்பாண சிறுவன் காத்தான்குடி சென்றமை - வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்..!


 அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து சிறுவன் ஒருவன் முஸ்லிம்களால் கடத்தப்பட்டு காத்தான்குடிக்கு கொண்டு சென்று கொடுமைப்படுத்தப்பட்டதாக பல இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியான செய்தி முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 இது தொடர்பிலான உண்மை நிலையை அறிந்து, அதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக சம்மந்தப்பட்டவர்களை சஜில் ஊடகப் பிரிவு சந்தித்தது.

 இச்சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட காத்தான்குடியைச் சேர்ந்த நஜீம் என்பவரை சஜில் ஊடக  குழு அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தபோது, அவர் அளித்த தகவல்களை இங்கு தருகின்றோம்.

 'எனது பெயர் முஹம்மது முஸ்தபா முஹம்மது நஜீம். நான் சாரதியாகத் தொழில் புரிகிறேன். எனது தொழில் நிமித்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு அடிக்கடி சென்று வருகிறேன்.சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால், மரவவெள்ளிக் கிழங்கு சீவல்களை விற்பனை செய்யும் ஒரு வியாபாரியின் பொருட்களை எனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன்.
 
 இங்கே, குறிப்பிட்ட வியாபாரியின் பொருட்களை இறக்கிக் கொடுத்துவிட்டு எனக்கு அறிமுகமான ஒருவரின் குளிர்பானக் கடை(Cool Spot)க்கு சுமார் காலை பதினோரு மணியளவில் குளிர்பானம் அருந்துவதற்காகச் சென்றேன். குறித்த அந்தக் குளிர்பானக் கடையானது, யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு மிகவும் அருகிலேயே அமைந்துள்ளது. நான் அக்கடைக்கு சென்றிருந்த நேரம், அக்கடையில் சுமார் பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அழுக்கடைந்த பாடசாலை சீருடையில், மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான். அந்தக் கடையினை நடாத்தி வருபவர் என்னிடம் 'இந்தச் சிறுவன் நான்கைந்து நாட்களாக இங்கேதான் இருக்கிறான், வீதியோரங்களில் உறங்குகிறான், உங்களால் முடிந்தால் இச்சிறுவனுக்கு ஏதாவது உதவியை செய்யுங்கள்' என்று கூறினார்.
 
 நான் இதனைக் கேட்டதும், அந்த சிறுவனிடம் அவனைப் பற்றி விசாரித்தேன். அச்சிறுவன், 'எனது பெயர் ரஜிராம். நான் ஒரு அநாதை. எனது தகப்பன் கடந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார். எனது தாய் மரணித்து நான்கு நாட்கள் ஆகின்றன. எனவே, எனக்கு உறவினர் யாரும் இல்லை' எனவும் கூறினான். உடனே, நான் ரஜிராம் மீது வெகுவாக அனுதாபம் கொண்டேன். அவனை யாழ்ப்பாணத்தில் நான் தங்குகின்ற எனது நண்பர் ஒருவரின் அறைக்கு அழைத்துச் சென்று குளிக்க வைத்து பகலுணவும் வாங்கிக் கொடுத்தேன். அதன் பிறகு, அவன் அணிந்திருந்த ஆடைகள் மிகவும் அழுக்காகக் காணப்பட்டமையினால், புதிதாக சில ஆடைகளும் செருப்பும் வாங்கிக் கொண்டு மீண்டும் குறிப்பிட்ட குளிர்பானக் கடைக்கு அச்சிறுவனைக் கூட்டி வந்தேன். அப்போது ரஜிராம், நான் அவன்மீது காட்டிய அரவணைப்பைக் கண்டு தனக்கிருந்த ஒரு குடும்பத்தின் தேவையினை உணர்ந்தவனாக 'என்னை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்' என என்னிடம் மன்றாடினான்.
 நானும் ரஜிராமுடைய நிலைமையினை உணர்ந்து அவன் மீது அனுதாபம் கொண்டு, பிற்பகல் சுமார் ஆறு மணியளவில் அவனை என்னோடு எனது வாகனத்தில் காத்தான்குடிக்கு அழைத்து வந்தேன்.
 
 என்னுடைய வீட்டில் நான், எனது மனைவி, இரண்டு மகள்மார் (13வயது, 07வயது) மற்றும் ஒன்றரை வயதுடைய ஒரு கைக் குழந்தை. ஆக மொத்தம் ஐந்து பேரைக் கொண்ட ஒரு குடும்பம். எனது வீட்டில், ரஜிராம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அமையப் பெற்றான்.
 
 ரஜிராமிற்கு புதிய இடம், புதிய வாழ்க்கை, புதிய நண்பர்கள் என சுமார் ஒன்றரை மாதங்கள் கழிந்தன. இடையிடையே நான் ரஜிராமுடைய புதிய மனநிலையினை விசாரித்தறிந்து கொண்டேன். தனக்கு, புதிய சூழல் நன்கு பிடித்திருப்பதை தனது சந்தோஷத்தின் மூலம் ரஜிராம் எனது குடும்பத்திற்கு வெளிப்படுத்தினான். முஸ்லிம் சிறுவர்களின் நட்பு, அவர்களின் பழக்க வழக்கங்கள், குடும்ப அமைப்பு, உணவு முறை, வழிபாட்டு முறைகள் என்பவற்றால் ரஜிராம் வெகுவாகக் கவரப் பட்டான். எனது குடும்பத்தில் தானும் ஒரு முஸ்லிமாக வாழவேண்டுமென்று விரும்பி, அதை தன் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தினான்.
 
 ரஜிராமுடைய விருப்பத்தைக் கண்டு மகிழ்ந்த நான், ரஜிராம் தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்கள் கழிந்த பின்னர் முஸ்லிம்களுக்குரிய மார்க்கக் கடமைகளில் ஒன்றான 'சுன்னத்' (ஹத்னா) கடமையினை நிறைவேற்றினேன். சுன்னத் செய்யப்பட்டால், இரண்டு நாட்களுக்கு கட்டிலில் ஓய்வு தேவைப்படும். அந்த நாட்களில் கூட, ரஜிராமை எனது சொந்தப் பிள்ளையினைப் போன்றே நான் பராமரித்தேன். அதன் பிறகு ரஜிராமிற்கு 'அன்வர் ஹசன்' என பெயரை மாற்றியமைத்தேன்.

 அன்வர் ஹசன் என்னோடு அருகிலிருக்கும் பள்ளிவாயிலுக்குச் சென்று ஐவேளை தொழுகைகளிலும் அனைவருடனும் கூட்டாகக் கலந்துகொண்டான்.
 
 மூன்று மாதங்கள் கழிந்ததன் பின்னர், நான் ரஜிராமை காத்தான்குடி மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் கல்வி கற்பதற்காகச் சேர்த்தேன். ரஜிராமிடம் பிறப்பத்தாட்சிப் பத்திரம் மற்றும் ஏற்கனவே கல்வி பயின்ற பாடசாலையின் விடுகைப் பத்திரம் போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லாததன் காரணத்தால், மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் பதிவு நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் கல்வி கற்று வந்தான்.
 
 இஸ்லாமிய வேத நூலான புனித குர்ஆன் மற்றும் மார்க்க ஒழுக்கவிழுமியங்களை, நன்னடத்தைகளை போதிக்கின்ற இஸ்லாமிய மதரசாவிலும் அவனை சேர்த்தேன்.காலையில் பாடசாலைக்கும் பிற்பகல் குர்ஆன் கல்விக்கும் என மிகவும் ஆர்வத்துடன் அன்வர் ஹசன் சென்று வந்தான்.
 
 அவ்வேளையில் அன்வர் ஹசன் கல்வி கற்று வந்த மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் மாணவர் முன்னேற்ற அறிக்கை தயாரிப்பதற்கும், வகுப்பேற்றுவதற்கும் மாணவர்களின் பிறப்பத்தாட்சிப் பத்திரம் தேவை என என்னிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினார்கள்.

 பல வேலைப் பழுக்களுக்கும் மத்தியில் இருந்த எனக்கு, அன்வர் ஹசனை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு கூட்டிச் சென்று பிறப்பத்தாட்சிப் பத்திரத்தை எடுத்து வருவதற்கு சற்று கால தாமதமாகியது.

 அதன் பிறகு பிறப்பத்தாட்சிப் பத்திரத்தை எடுத்து வருவதற்காக கடந்த வாரம் நான் எனது நண்பர் ஒருவரின் துணையோடு அன்வர் ஹசனை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தேன். அன்வர் ஹசன் யாழ்ப்பாணத்தில் எனது நண்பரினது துணிக்கடையில் இருக்கும்போது, அங்கே வந்த அன்வர் ஹசனின் உறவினர் ஒருவர் பொலிசாருக்கு கொடுத்த தகவல் மூலம், அவன் பொலிசாரினால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டான்.' இவ்வாறு ரஜிராம் தொடர்பான விடயங்களை நஜீம் எம்மிடம் தெளிவாக எடுத்துக் கூறினார்.
 இது இவ்வாறிருக்க ஒரு சில தமிழ் இணையத்தள ஊடகங்கள் உண்மை நிலை என்னவென்பதில் சற்றேனும் கவனம் செலுத்தாமல், நாட்டில் நிலவுகின்ற இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை நலினப்படுத்தும் போக்கில் சில தகவல்களை திரிபுபடுத்தி வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டிய ஒரு விடயமாகும்.
 ஊடகங்களின் மெத்தனம்.
 
 மேற்குறித்த விடயம் தொடர்பில் இணையத்தள ஊடகங்களும், அச்சூடகங்களும் பலவாறான திரிபுபடுத்தப்பட்ட தவறான தகவல்களை செய்திகளாகப் பிரசுரித்துள்ளன.
 முப்பது வருட கொடிய யுத்தத்தின் பிடிக்குள் இருந்து விடுபட்டு, இப்போது நாடெங்கிலும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்ற இச்சூழலில், ஊடகங்கள் இவ்வாறான மேலெழுந்தவாரியான ஊகங்களை தங்களின் இணையத் தளங்களிலும் செய்தித் தாள்களிலும் வெளியிடுவதானது, நாட்டின் ஜனநாயக மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டி எழுப்புதல் போன்ற செயற்றிட்டங்களை வீழ்ச்சிப் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
 
 ஒரு ஜனநாயக நாட்டின் சீரான கட்டமைப்பிற்கும் அதன் சீர்குலைவிற்கும் ஊடகங்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். ஊடகங்கள் தங்களின் நடுநிலைத் தன்மையினை மறந்து, நடந்த சம்பவத்தின் உண்மை நிலை என்னவென்பதை சரிவர அறிந்துகொள்ளாமல் வெளியிடுகின்ற இவ்வாறான தகவல்களே, இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.
 
 மேற்குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட செய்திகளில் பிரபல இணையத்தள ஊடகங்கள் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான செய்திகளின் உண்மைத்தன்மையினை இங்கு தருகிறோம்.
 
 யாழில் 12 வயது சிறுவன் முஸ்லிம்களால் கடத்தல்..
 பொதுவாகக் கடத்தல் என்பது ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக அவரை வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்வதையே குறிக்கும். இதுவே கடத்தல் என்ற சொல்லுக்குரிய சுருக்கமான வரைவிலக்கணமாகும். ஆனால், நஜீம் செய்ததோ கடத்தல் அல்ல. மாறாக, ஒரு சிறுவனின் விருப்பத்திற்கும், வேண்டுதலுக்கும் இணங்கவே தன்னுடைய வீட்டிற்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். இதில் அச்சிறுவனுக்கு தேவையாக இருந்த ஒரு குடும்பத்தின் தேவைப்பாட்டை அவன் மீது கொண்ட ஒரு அனுதாபத்தின் காரணமாக நஜீம் நிறைவேற்றினார்.
 
 யாழ் நகருக்கு தொழில் நிமித்தம் அடிக்கடி சென்றுவரும் ஒருவர், அந்நகரிலேயே, பொது இடத்தில் வைத்து, பட்டப் பகலில் தன்னிடம் எந்தவொரு பக்கபலமும் இல்லாமல், தனியே ஒரு பன்னிரண்டு வயது சிறுவனைக் கடத்துவதென்பது முடியாத ஒரு காரியமாகும். அத்தோடு, சிறுவன் காலையில் நஜீமை சந்தித்தது முதல், மாலை ஆறு மணி வரைக்கும் அதே இடத்திலேயே நஜீமோடுதான் இருந்திருக்கிறான் என்பதற்கு, குளிர்பானக் கடையினை நடாத்தி வருபவர் சாட்சியாக இருக்கிறார். எனவே, ஒரு சிறுவனைக் கடத்திவிட்டு பின் அதே சிறுவனோடு அதே நகரில் சுமார் எழு மணித்தியாலங்கள் வரையில் தரித்திருப்பதென்பது அறிவு பூர்வமற்ற ஒரு விடயமாகும்;.
 
 பல ஆசை வார்த்தைகள் கூறி சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டான். ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்வதற்குரிய வயதெல்லைக்குள் சிறுவன் இல்லை. பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவன், மாற்றுமதத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அவரோடு காத்தான்குடி வரைக்கும் சென்று, சுமார் ஒருவருடத்தின் பின்னர், தான் கடத்தப்பட்ட அதே இடத்தில் மீட்கப்பட்டான் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயம்.
 வலுக்கட்டாயமாகவோ அல்லது ஆசை வார்த்தைகளின் மூலமோ ஒரு சிறுவனை கடத்திச் செல்கின்ற ஒரு நபர், மறுபடியும் அவனை அதே நகரத்திலுள்ள ஒரு துணிக்கடையில் தொழில் புரிவதற்காக அழைத்து வருவதென்பது, ஒரு சாதாரண அறிவு உள்ள எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாகும். ஆனால், இது விடயத்தில் போதிய ஆய்வை மேற்கொள்ளாத ஊடகங்களின் மெத்தனப் போக்கு கண்டிக்கப் படவேண்டியது.
 
 தமிழ் சிறுவனை கடத்தி முஸ்லீமாக மாற்றி கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்! அதிர்ச்சியில் தமிழ் மக்கள்... முஸ்லிம்களின் மதமான இஸ்லாத்தைப் பொறுத்தவரையில், எந்தவொரு மதத்தினை சேர்ந்த ஒருவரையும் கட்டாயமாத மதமாற்றம் செய்ய அதில் அனுமதி இல்லை. அவ்வாறு செய்யவும் இயலாது. மத நம்பிக்கைகள் என்பது அந்தந்த மதங்கள் மேலுள்ள சுய விருப்பங்களினால் ஏற்படுவதே. மாறாக, எந்தவொரு மதக் கோட்பாட்டையும் யாராலும் யாருக்கும் திணிக்க முடியாது.
 நஜீமுக்கும் அவ்வாறான ஒரு நிர்ப்பந்தம் கிடையாது. நஜீமுக்கு முஸ்லிம் சிறுவன் ஒருவன் தேவைஎன்றால், கிழக்கு மாகாணத்திலேயே நஜீம் வசிக்கின்ற ஊரான காத்தான்குடியில்தான் முஸ்லிம் அநாதை சிறுவர்களை பராமாரிக்கின்ற 'அனாதைகள் இல்லம்' உள்ளது. அங்கே சென்று அவர்களின் நிபந்தனையின் அடிப்படையில் ஒரு சிறுவனைப் பெற்றுக்கொள்வதில் நஜீமுக்கு எதுவித சிரமமும் இல்லை.
 
 யாழ்குடா நாட்டில் இன்றைய சூழ்நிலையினைப் பொறுத்தவரையில் கொலை, கற்பழிப்பு, போதை வஸ்த்துப் பாவனை, வழிப்பறி, விபச்சாரம், ஆட்கடத்தல் என்பன நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் அதிகமானவைகள் முஸ்லிம் அல்லாதவர்களாலேயே நிகழ்கின்றன. அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எவரையும் அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் பெயரை பயன்படுத்தி எந்தவொரு ஊடகமும் செய்திகளை வெளியிடுவதில்லை.
 
 ஆனால், முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படுகின்ற சில விடயங்கள் தவறாக நோக்கப்பட்டு அதனை அவர்கள் சார்ந்துள்ள மதத்தினையும் வசிக்கின்ற பிரதேசத்தினையும் குறிப்பிட்டு செய்திகளை பெரிதுபடுத்தி வெளியிடுவதானது, ஒரு சகோதர இனத்தின் மீதான அப்பட்டமான காழ்ப்புணர்வின் வெளிப்பாட்டினையே பறைசாற்றுகிறது.
 
 கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்!
இங்கே ஊடகங்கள் சிறுவனை கொடுமைப் படுத்தியதாகக் கூற முற்படுவது, இஸ்லாமிய மார்க்கக் கடமைகளில் ஒன்றான, விருத்த சேதனத் (சுன்னத்) தையாகும். விருத்த சேதனம் எனப்படுவது, இன்று முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் ஒரு காரியமாக இருந்தாலும், ஆரம்பகால அரேபிய மக்களிடம் இருந்து வந்த ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஏன் இயேசு கிறிஸ்துவுக்கே விருத்த சேதனம் செய்யப்பட்டிருந்ததாக பைபிள் கூறுகிறது. இன்னும் பைபிளில் வலியுறுத்தப்பட்ட ஒன்றாகவும் இவ்விருத்த சேதனம் காணப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கமும் இதனை வலியுறுத்துகிறது.
 
 நமது நாட்டில் முந்தைய காலங்களில் முஸ்லிம்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஆறு வயதை அடைந்ததன் பின்னரே விருத்த சேதனம் செய்வார்கள். ஆனால், இப்போது குழந்தைகள் பிறந்து வெறும் பத்து அல்லது இருபது நாட்கள் மாத்திரம் கடந்திருக்கும் போதே, இவ் விருத்த சேதனம் செய்யப்படுகிறது. அத்தோடு முன்னர், விருத்த சேதனம் செய்விப்பதற்கென்று அதில் தேர்ச்சிபெற்ற முஸ்லிம்கள் இருந்தார்கள். அனால், இப்போது இலங்கையில் வைத்தியர்களினாலேயே, அது நவீன முறைகளைக் கொண்டு மகவும் இலகுவான முறையில் மேற்கொள்ளப் படுவதால், இஸ்லாம் அல்லாத மக்கள் கூட, தூய்மை கருதி பெருமளவில் விருத்த சேதனம் செய்கிறார்கள்.
 
 இன்றைய நாட்களில் ஒரு குழந்தைக்கோ, ஒரு சிறுவனுக்கோ விருத்த சேதனம் செய்வதற்கு சுமார் ஐயாயிரம் ரூபா வரையில் செலவாகின்றது. ஒரு சிறுவனை யாழ்ப்பாணத்திலிருந்து கடத்திவந்து காத்தான்குடியில் வைத்து ஐயாயிரம் ரூபா செலவழித்து கொடுமைப்படுத்த வேண்டிய எந்தவொரு நிர்ப்பந்தமும் நஜீமுக்கு கிடையாது. எனவே, அவர் அச்சிறுவனை தனது குடும்பத்திலுள்ள ஒரு குழந்தையாக நினைத்ததன் விளைவாகவே இதனை மேற்கொண்டார்.
 
 எனவே, அறிவியல் ரீதியாக மிகச் சிறந்த நடைமுறை என அனுமதிக்கப்பட்ட ஒரு மத அனுஷ்டானத்தை சிறுவர்களைக் கொடுமைப்படுத்தல் என வர்ணிப்பதானது சகோதர மதமொன்றின் மேலுள்ள காழ்ப்புணர்வின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகின்றது.
 
 அதிர்ச்சியில் தமிழ் மக்கள்...
 தம் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் அல்லது ஒரு யுவதி மாற்று மதத்தவர்களால் கடத்தப்பட்ட செய்தியை அறிந்ததும், அம்மக்கள் அதிர்ச்சியடைவே தொன்றும் ஆச்சரியமான விடயமல்ல.நாட்டில் தமிழ் முஸ்லிம் உறவுகள் மீளக்கட்டமைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில், முஸ்லிம்களால் இக்கடத்தல் மேற்கொள்ளப் பட்டுள்ளது என தங்களை பிரபல்யப்படுத்திக் கொள்வதற்காக, முந்தியடித்துக் கொண்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியே மக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
 
 இவ்வாறான மெருகூட்டப்பட தகவல்கள் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் உறவுகள் கேள்விக்குறியாவது குறித்து, இவ்வூடகங்கள் ஏனோ சிந்திக்க மறந்துவிட்டன.
 
 சிறுவனுக்கு அன்வர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
குறித்த சிறுவன் கடத்தப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டான், என்பது ஊடகங்களின் வாதம். கடத்தப்பட்டு கொடுமைப் படுத்துவதற்கு, பெயர் மாற்றம் அவசியம் இல்லை. ஆனால், நஜீமின் குடும்பத்தில் ஒரு அங்கத்தவனாக மாறுவதற்கு, அவனுக்கு முஸ்லிம் பெயர் ஒன்று அவசியமாக இருந்தது. முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய ஒரு பிரதேசமான காத்தான்குடியில், ரஜிராம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அச்சிறுவனால் முஸ்லிம்கள் மத்தியில் ஒன்றரக் கலந்து வாழ முடியாது. எனவே, அவன் அன்வர் ஹசன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டான். இதில் ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்த அளவிற்கு விடயங்கள் ஏதுமில்லை.
 
 ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்த சிறுமியர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்வது, கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது என வீட்டு வேலைகளை செய்யுமாறு கொடுமைப் படுத்தப்பட்டான்.
  இச்செய்தி முதன் முதலாக ஒரு ஊடகத்தில் வெளியானதும், உடனே மற்றைய ஊடகங்களும் அச்செய்தியை பிரதியெடுத்தே சில சில மாற்றங்களை செய்து தங்களின் பங்குக்கு வெளியிட்டன. ஆனால், உண்மை நிலை என்னவென்பதனை ஆராய்வதற்கு அனைத்து ஊடகங்களும் தவறிவிட்டன.
 
 நஜீமுடைய குடும்பத்தைப் பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். நஜீமுடைய பிள்ளைகளில் முதல் இரண்டு பிள்ளைகள் மாத்திரமே பாடசாலையில் கல்வி கற்பவர்கள். முதலாவது மகள் தரம் ஏழிலும், இரண்டாவது மகன் தரம் இரண்டிலும் கல்வி கற்கிறார்கள். இவர்கள் செல்கின்ற பாடசாலையான மட்/அஷ்ஷுஹதா வித்தியாலயம் நஜீமின் வீட்டிலிருந்து வெறும் நூறு மீட்டர் தொலைவிலேயே உள்ளது. எனவே, வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பாடசாலைக்கு பதிமூன்று வயது சிறுமியை அழைத்துச் செல்வதற்கு துணை ஒன்றும் தேவையில்லை. அவர்கள் தாமாகவே பாடசாலைக்கு சென்று வருபவர்கள். அத்தோடு இதில் மிக முக்கியமான ஒரு விடயத்தை சகல ஊடகங்களும் தங்களின் மெத்தனப்போக்கால், இருட்டடிப்புச் செய்துவிட்டன.
 
 அதாவது, சிறுவன் ரஜிராம் காத்தான்குடி மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் தரம் ஏழில் சுமார் ஆறு மாதங்கள் வரையில் கல்வி கற்று வந்தான். பாடசாலை செல்வதற்காக நஜீமினால் ரஜிராமிற்கு சைக்கிள் ஒன்றும் வாங்கிக் கொடுக்கப் பட்டிருந்தது. அங்கே ரஜிராமின் வகுப்பாசிரியராக ஒரு தமிழ் ஆசிரியையே கடமை புரிந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ரஜிராமின் பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லாததன் காரணமாகவேதான் அதை எடுத்துச் செல்வதற்காக மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
 
 ஒரு வருடத்தின் பின் தாயாரினால் சிறுவன் அடையாளம் காணபட்டான்...
 குறித்த சிறுவனுக்கு மனிதாபிமான நோக்கத்தில் ஒரு முஸ்லிம் சகோதரரால் அடைக்கலம் கொடுக்கப்பட்டதை, ஆட்கடத்தல் என்று கூக்குரலிடுகின்ற தமிழ் ஊடகங்கள், தமிழர் நல அமைப்புக்கள், அச்சிறுவன் யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில் நாட்கணக்கில் அனாதரவாக அலைந்து திரிந்த போது, தங்களின் உதவிக்கரத்தினை நீட்டி உதவி செய்ய முன்வராததன் மர்மம்தான் என்ன?
 
 எனவே, இவ்வாறான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்கள் நாட்டில் நிலவுகின்ற இன நல்லுறவிற்கான தங்களின் கடப்பாட்டினை உணர்ந்து எதிர்காலத்தில் இது போன்ற செயற்பாடுகளிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
 
 'எந்தவொரு மனிதன் அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்கிறானோ அவன் முழு மனித சமுதாயத்தினையும் கொலை செய்தவனைப் போலாவான். எந்தவொரு மனிதன் ஒரு உயிரை வாழ வைத்தானோ அவன் முழு மனித சமூகத்தினையும் வாழ வைத்தவன் போலாவான்.' (அல் குர்ஆன் 05:32)
 
 கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுவன் ரஜிராம், மட்/அந்நாசர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் போது, தன் கைப்பட எழுதிய அப்பியாசக் கொப்பிகளின் பிரதி.
 normal_pregnant_silhouette_low_res
normal_pregnant_silhouette_low_res
normal_pregnant_silhouette_low_res
normal_pregnant_silhouette_low_res
normal_pregnant_silhouette_low_res
 
 
 
முஹம்மது நியாஸ்

17 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் - மாவனெல்லயில் அதிர்ச்சி

மாவனெல்ல பிரதேச பகுதியில் சிங்கள பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக இன்று செவ்வாய்கிழமை வெளியாகியுள்ள சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ஆசிரியர் நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியரின் பாலியல் பலாத்காரத்திற்கு மாணவ, மாவியர் உட்படுத்தப்பட்டமை அப்பகுதி சிங்கள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறியவருகிறது.

ஒரு சில முஸ்லிம் சகோதரர்கள் செய்யும் இவ்வாறான தவறுகள் முழு முஸ்லிம் சமூகுத்தையும் வெட்கமடையச்செய்யும் என முஸ்லிம் ஆர்வலர் ஒருவர் யாழ் முஸ்லிம் இணையத்திடம் தமது கவலையை பகிர்ந்துகொண்டார்

”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா..!




யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் (www.jaffnamuslim.com) யாழ் முஸ்லிம் இணையம் வெளியிடவுள்ள ''வேர் அறுதலின் வலி'' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 02-06-212 அன்று, காலை 10 மணிக்கு, முஸ்லிம் மாதர் நிலையம், இல 201 டீ.ஆர்.விஜயவர்த்தனா மாவத்த, கொழும்பு 10 (Muslim Ladies Study Circle, No. 201, D. R. Wijewardena Mawatha,Colombo 10) என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வுக்கு நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், முஸ்லிம் மீடியா போரம், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவருமான என்.எம்.அமீன் தலைமை தாங்கவுள்ளார்.

பிரதம அதீதிகளாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமும், வணிகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீனும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறப்பு அதீதிகளாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர், மாவை சேனாதிராஜா எம்.பி. - செயலாளர் - இலங்கை தமிழரசு கட்சி, கே.ஏ. பாயிஸ் புத்தளம் நகர சபைத் தலைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கௌரவ அதீதிகளாக மௌலவி எம். முபாரக் - அதிபர் யாழ் ஒஸ்மானியா கல்லூரி, , எம்.எஸ். ஜலீல் - பணிப்பாளர் - யாழ் கல்வி அலுவலகம், சட்டத்தரணி எம்.எம். ரமீஸ் - பிரதிமேயர் - யாழ் மநகர சபை, மௌலவி எம்.பீ.எம். சுபியான் - யாழ் மாநகர சபை உறுப்பினர், டாக்டர் ஹிஜாஸ் - மஹரகம தேசிய வைத்தியசாலை, டாக்டர் ஏ.சீ.ஜனொஸ் சதாத் - அநுராதபுரம் தேசிய வைத்தியசாலை, எம்.எம். இமாம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

விருதுபெறும் மூத்த இலக்கிய படைப்பாளிகள்

1. கவிமணி மௌலவி புஹாரி - காத்தான்குடி,
2. கலாபூஷணம் எஸ்.ஐ. நாஹுர்கனி - மாபோல,
3. ஏ.எல்.எம். சத்தார் - பாணந்துறை,
4. ரீ.எல். ஜவ்பர்கான் - காத்தான்குடி,
5. கவிஞர் ஜன்ஸி கபூர் - அநுராதபுரம்,
6. ஏ.எஸ். இப்ராஹீம் கலைமேகம் - மூதூர்,
7. கவிமணி நீலா பாலன் - வெலிமடை,
8. ஏ.எம்.எம். அலி - கிண்ணியா,
9. நவாலியூர்க் கவிராயர் - யாழ்ப்பாணம்,
10. கலாபூஷனம் அப்துல் லத்தீப் - புத்தளம்,
11. கலாபூஷனம் கே.எம்.ஏ. அஸீஸ் - சாய்ந்தமருது


சிறப்பு விருது பெறும் மூத்த படைப்பாளிகள்

1. கலாபூஷணம் கவிஞர் யாழ் அஸீம்
2. கலைவாதி கலீல்
3. முல்லை முஸ்ரிபா

முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ள, சிறப்பு பிரதியை சமூக சேவையாளர் எச்.எச்.எம். நியாஸ் பெற்றுக்கொள்வார்.

கிண்ணியா அமீர் அலி நிகழ்வுகளை தொகுத்தளிப்பதுடன், கவிஞர் யாழ் அஸீம் கவி வாழ்த்துரைப்பார்.

இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் கிடைக்காதவர்களும் கலந்துகொள்ள முடியும் தொடர்புகளுக்கு 0717268466, 0112671596.

ரிலாயா உம்மா காலமானார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த ரிலாயா உம்மா காலமானார். அன்னார் ஸூரைஹா உம்மா, அப்துல்லா லெப்பை ஆகியோரின் அன்புப் புதல்வியும். காலஞ்சென்ற உம்மு ஹபீபா, உம்மு ஹலீமா, மற்றும் உம்மு ஆய்ஷா ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 10.00 மணிக்கு கஹடோவிட முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இடம் பெறும்.

அல்லாஹ் இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் சற்று நேரத்துக்கு முன் நில அதிர்வொன்று உணரப்பட்டது. நுவரெலியா, ஹட்டன், பதியபெலல்ல உள்ளிட்ட பகுதிகளில் இது நன்றாக உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தமிழ்மிரரிடம் உறுதி செய்தது.

இந்த நில அதிர்வு இலங்கைக்குள் மாத்திரம் உணரப்பட்டதொன்றாகவே இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியின் காரணமாக இது ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பிரிவு தெரிவித்தது.

துட்டகைமுனுவின் வாளை வைத்திருந்தால் ஆயுள் முழுவதும் ஆளலாம் என நம்புகிறார்கள்: அநுரகுமார


தேசிய நூதனசாலையிலிருந்து புராதன வாள்கள் காணாமல் போன சம்பவமானது, புராணக்கதைகளையும் மூடநம்பிக்கைளையும் நம்பும் தலைமைத்துவத்தை நாடு கொண்டுள்ளதன் விளைவாகும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.

துட்டகைமுனுவின் வாளை வைத்திருப்பவர் ஆயுள் முழுவதும் ஆட்சி செய்ய முடியும் என புராதன நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

'இத்தகைய நம்பிக்கைகள்தான் நூதனசாலையிலிருந்து புராதன வாள்களும் மோதிரங்களும் மர்மமாக காணாமல் போவதற்கு வித்திட்டதாகத் தோன்றுகிறது. மக்களைவிட சோதிட சக்தியை நம்பும் அரசியல் தலைமை உள்ளபோது இவ்வாறு நேரிடுகிறது. அவர்கள் தேடும் வாளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பொருட்களையாவது நூதனசாலையிடம் ஒப்படைக்குமாறு நாம் கோருகிறோம்' என அநுரகுமார திசாநாயக்க கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் இதேபோன் குற்றச்சாட்டை முன்வைத்தது.

எனினும் ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் மன்னர் ஒருவர் பயன்படுத்திய புராதன சிங்காசனமும் மன்னர் ஒருவரின் முடியும் காணாமல் போனதாக கலாசார அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க கூறினார்.

'இப்போது நீங்கள் வாள் காணாமல் போனமை குறித்து நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால், சிங்காசனம் காணாமல் போன அரசியல் வரலாற்றை நாம் கொண்டுள்ளோம்' என்றார்.

எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிம்களை மக்கள் நிராகரித்து விட்டார்களா....?



எகிப்திலிருந்து ஹபிபுல்லா பைஸ்

முஹம்மத் முர்ஸி-24.9%
அஹமத் சபீக்-24.5%

இவர்களில் "முஹம்மத் முர்சி" இஸ்லாமிய எண்ணம் கொண்ட இஹ்வானிய ஜனாதிபதி வேட்பாளராகவும் , "அஹ்மத் சபீக்" இவர் முன்னால் முபாரக்கின் ஆட்சியின் எச்சமாகவும் இருக்கிறார் . இவர்கள் இருவருக்கும் தான் "மீள் ஜனாதிபதி தேர்தல்" நடைபெற இருக்கிறது .

இருவருக்குமிடையில் உள்ள விகித வேறுபாடு மிக குறைவாகவே உள்ளது. இந்த வீதத்தை பார்க்கும் போது எகிப்திய மக்களின் போராட்டம் வெற்றுவேட்டாக மாறியுள்ளதை உணர முடிகிறது . மீண்டும் எகிப்திய ஆட்சி முபாரக்கின் எச்கங்ளுக்கே சென்று விடுமோ என்று அஞ்ச தோன்றுகிறது. எனவே மீள நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எகிப்திய மக்கள் சிந்தித்து செயல் பட வில்லையென்றால் மீன்டும் ஒரு முபாரக்கின் ஆட்சியை எதிர் கொள்ள நேரிடும் .
அப்படியான ஆட்சியில் இஸ்லாமிய சிந்தனை கொண்ட மக்களுக்கு என்ன நடக்கும் என்று அறிந்தே விடயமே .எனவே இந்த விடயத்தில் ஏனைய இஸ்லாமிய எண்ணம் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் வேற்றுமையை மறந்து ஓன்று பட்டு தங்கள் ஆதரவை இஸ்லாமிய வேட்பாளருக்கு வழங்குவார்களாக இருந்தால் நல்ல ஒரு மாற்ற அரசியலை பெற முடியும் .இன்னும் சொல்லப்போனால் இந்த நாலு வருட ஜனாதிபதி ஆட்சியில் எது நடைமுரைப்படுத்தப்படுகிறதோ அதுவே அந்த ஆட்சிக்கு பின்னும் தொடர இருக்கிறது .

இதையும் கவனத்தில் கொண்டு நல்ல ஆட்சியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எகிப்திய மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது.இந்த விடயத்தில் எகிப்திய புத்தி ஜீவிகளும், மார்க்க அறிஜெர்களும் நல்ல முடிவை மக்களுக்கு தெளிவு படுத்தி ,இந்த தெரிவில் உள்ள சாதக பாதக விடயங்களை தெளிவு படுத்தி நல்வழிக்கு இட்டு செல்வது சாலச்சிரந்ததாக இருக்கும் .இதன் விளைவாக இன்று மூன்று இஸ்லாமிய வேட்பாளர்கள் ஓன்று கூட இருப்பது குறிப்பிட தக்க விடயமாகும் . இந்த சந்திப்பு இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாற்றத்தை உண்டு பன்னக்கூடும் .எனவே என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .நாம் அல்லாஹ்விடத்தில் எகிப்திய மகளுக்கு நல்ல ஆட்சியை வழங்க துவா செய்வோமாக .

தெஹிவளை பள்ளிவாயல்,குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளுக்கு எதிராக பிக்குகள் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வலப்புறம் செலும் கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து அதே பிரதேசத்தில் அமைந்திருக்கும் கல்விஹாரவில் இருந்து புறப்பட்ட ஆர்ர்ப்பாட்டம் ஒன்று சற்று முன்னர் (பி. ப. 5:30 அளவில்) மிருக்கக்காட்சி சாலை – கல்விஹார பிளேஸ் சந்தியில் நிலைகொண்டிருந்தது.
ஜாமியுஸ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா, பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா என முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றன.

கடந்த சில வாரங்களாக குறித்த கட்டடம் புனரமைப்பு வேலைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இந்த பள்ளிவாயலின் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறைப்பாடு ஒன்று கல்விஹார பிக்குகளால் தெஹிவளை – கல்கிசை மேயரிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இன்று பி.ப. 2:30 மணியளவில் முச்சக்கர வண்டிகளில் வந்த இனந்தெரியாத கோஷ்டி ஒன்று மதரசா மீது கற்களை வீசிவிட்டுச் சென்றிருந்தது.
பின்னர் பிற்பகல் 4:00 மணியளவில் கல்விஹாரவில் இருந்து பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று புறப்பட்டு மத்ரசாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து சேர்ந்தது. அதில் கலந்து கொண்டோர் மதரசாவை அங்கிருந்து அகற்றுமாறு கோசமிட்டதுடன் சுலோகங்களையும் தாங்கியிருந்தனர். அவ்விடத்தில் போலீசார் அதிகளவில் வருகை தந்திருந்ததுடன், மதரசா பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

குறித்த இடம் மாடுகளை அறுக்கும் மடுவமாக பாவிக்கப்படுவதாகவும் அதை மூட வேண்டும் என்பதும் முக்கியமான கோசமாக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.

பிரச்சினை தீவிரமடைந்ததை அடுத்து பள்ளிவாயளுக்கு மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையின் ஐ. தே. க. உறுப்பினர் ஜனாபா மரீனா ஆப்தீன் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பான கூட்டம் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபையில் இடம்பெறும் என அறிய முடிகிறது.










 


தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை!


தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் மீது பௌத்த பேரினவாதக் கும்பல் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் பூர்த்தியாகிவிட்டபோதிலும் அப் பிரச்சினைக்கு இது வரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என்பது முஸ்லிம் சமூகத்தை பெரும் ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது.

இச் சம்பவம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்த போதிலும் துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் நீண்டதொரு மௌனம் சாதிப்பதும் பௌத்த பேரினவாதிகளுக்கு சார்பாக நடந்து கொள்ள முயற்சிப்பதும் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அதிருப்தியையே தோற்றுவித்திருக்கிறது.

பள்ளிவாசல் தாக்கப்பட்டவுடன் கொதித்தெழுந்த முஸ்லிம் சமூகம் இப்போது சற்று அடங்கிப் போயிருக்கிறது. அரசியல்வாதிகள் இப்போது அதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டனர். தம்புள்ளை சம்பவம் பற்றி இதன்பின்னர் தான் வாய்திறக்கப் போவதில்லை என்று சில வாரங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் பகிரங்கமாகவே கூறிவிட்டார். ஏனைய அரசியல்வாதிகளும் ஜனாதிபதி பார்த்துக் கொள்ளட்டும் என்று வாளாவிருக்கிறார்கள். சிவில் சமூக பிரதிநிதிகளினதும் செயற்பாட்டாளர்களினதும் முன்னெடுப்புகள் வலுவிழந்ததாகவே உள்ளன.

வெசாக் முடியும் வரை பொறுமையாக இருக்குமாறும் அதன் பின்னர் நிலையானதொரு தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் வெசக் முடிந்து பொசனும் வந்துவிட்டது. ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.
இம் மாத ஆரம்பத்தில் கூடிய அமைச்சரவையில் தம்புள்ளை விவகாரம் குறித்து பிரதானமாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை. முஸ்லிம் அமைச்சர்களுக்கு இந்த விடயம் அவசியமற்ற ஒன்றாக இருந்திருக்கக் கூடும்.
தம்புள்ளை சம்பவத்திற்குப் பின்னர் பாராளுமன்றம் கூடியபோதிலும் எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் அதுபற்றிக் குரல் எழுப்பவில்லை. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இரண்டு விடயங்களுக்காகவே வாய் திறப்பார்களாம். ஒன்று சாப்பிடுவதற்கு. அடுத்தது கொட்டாவி விடுவதற்கு என சில வருடங்களுக்கு முன்னர் சிரேஷ்ட உலமா ஒருவர் சொன்ன கருத்தே இந்த இடத்தில் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருந்த வெசக் கூட்டை மாடுகள் சேதமாக்கியமைக்காக இராணுவ வீரர் ஒருவர் தமிழ் சிறுவன் ஒருவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவத்தை விஜித ஹேரத் எம்.பி. பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தி குறித்த இராணுவ வீரரை கைது செய்வதற்கான அழுத்தத்தையும் வழங்கியிருந்தார்.
அநீதி இழைக்கப்பட்ட ஒரு தமிழ் சிறுவனுக்காக குரல் எழுப்பி நீதியைப் பெற்றுக் கொடுக்குமளவுக்கு விஜித ஹேரத் எம்.பி.க்கு இருக்கும் தைரியம் கூட முஸ்லிம் அமைச்சர்களுக்கோ எம்.பி.க்களுக்கோ இல்லை என்ற உண்மையை அவர்களை வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய நமது சமூகம் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.
மறுபுறம் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தினால் மேலும் உற்சாகமடைந்திருக்கும் பௌத்த பேரினவாதிகள் தமது கைவரிசையை நாடு முழுவதும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

குருநாகல் ஆரிய சிங்களவத்தையில் பல வருடங்களாக இயங்கிவரும் அஹதியா மற்றும் குர்ஆன் மத்ரசாவில் தொழுகை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. தெஹிவளை மிருகக் காட்சிச் சாலைக்குப் பின்புறமாக அமைந்துள்ள குர்ஆன் மத்ரசா ஒன்றின் புனரமைப்புப் பணிகளால் கலவரமடைந்த அப்பிரதேச பௌத்த பிக்குகள் தெஹிவளை-கல்கிசை மேயரிடம் அதுபற்றி முறையிட்டிருக்கிறார்கள்.
புறக்கோட்டை ரயில் நிலையம் அருகாமையில் அமைந்திருக்கும் உலக சந்தைக் கடைத் தொகுதியில் பணிபுரியும் முஸ்லிம்கள் அன்றாட தொழுகைக்காக பயன்படுத்தி வந்த கடை ஒன்றை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அநுராதபுரம் மடாட்டுகம பள்ளிவாசலுக்கு நான்கு பக்கங்களைக் கொண்ட அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திலிருந்து முஸ்லிம்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அக் கடிதத்தில் கோரப்பட்டிருக்கிறது.
இப்படி தம்புள்ளை சம்பவத்தினால் உற்சாகமடைந்திருக்கும் பேரினவாத சக்திகள் இன்று நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களைப் பரப்பத் தொடங்கியிருப்பது மிகவும் ஆபத்தான சமிக்ஞையாகவே தெரிகிறது.

நிலைமை இவ்வாறு மோசமடைந்து சென்று கொண்டிருந்தாலும் முஸ்லிம் சமூகம் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் கருத்து மோதல்களுக்குள் சிக்கி காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆற்றிய உரை பெரும் சர்சைக்கு வித்திட்டிருக்கிறது. தம்புள்ளை விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் அமைதி காக்க வேண்டும் என்றும் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்திருந்தார். குறிப்பாக கண்டி நகர அபிவிருத்திப் பணிகளுக்காக லைன் ஜம்ஆப் பள்ளிவாசலின் ஒரு பகுதி விட்டுக்கொடுக்கப்பட்டதாகவும் வீதி அபிவிருத்திப் பணிகளின் பொருட்டு பம்பலப்பிட்டி நிமல் வீதி பள்ளிவாசலினால் குறிப்பிட்டளவு காணி விட்டுக் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த உதாரணங்களைக் குறிப்பிட்டதன் மூலம் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்திலும் முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்வதன் மூலமே தீர்வினைக் காண முடியும் எனும் கருத்தினை அவர் மறைமுகமாக வலியுறுத்த முற்பட்டிருந்தார்.

ரிஸ்வி முப்தியின் இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்திருந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லதீப் பாரூக், முஸ்லிம் சமூகத்தை விற்று காடைத்தனத்துக்கு துணைபோவதாகவே இந்தக் கூற்று அமையும் என காட்டமாகவே குறிப்பிட்டிருந்தார்.
லதீப் பாரூக்கைத் தொடர்ந்து மேலும் பலரும் இந்த விடயம் தொடர்பில் மின்னஞ்சல் வழியாகவும் இணையதளங்கள் வாயிலாகவும் கருத்துக்களைப் பரிமாறி வருகிறார்கள். இந்த விமர்சனங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தம்புள்ளை விவகாரத்தில் எந்தவொரு தரப்பும் அரசியல் இலாபமீட்டும் வகையிலோ அல்லது பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் முரண்பாட்டைத் தூண்டும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது என்றே தாம் அழைப்புவிடுப்பதாகவும் ரிஸ்வி முப்தியின் கூற்று தொடர்பில் சிலர் ஊடகங்கள் வாயிலாக தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் தெரிவித்திருந்தது.

எது எப்படியிருப்பினும் தம்புள்ளை விவகாரத்தில் முஸ்லிம் சமூகத்தை ஓரணியின் கீழ் தலைமையேற்று நடத்துவதற்கான பொறுப்பு உலமா சபையிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. சம்பவம் இடம்பெற்ற மறுதினம் உலமா சபை தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல்வாதிகள், முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பூரண சம்மதத்துடன் உலமா சபையே இதனை தலைமையேற்று வழிநடத்த வேண்டும் எனும் தீர்மானம் எட்டப்பட்டது.
குறிப்பாக அரசியல்வாதிகளும் முஸ்லிம் அமைப்புகளும் பிரிந்து நின்று செயற்படக் கூடாது எனவும் உலமா சபைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் இதன்போது முக்கியமாகத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கப்பால் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்புதல், பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருதல் இல்லையேல் நீதிமன்றத்தை நாடுதல், பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவோ அல்லது வேறு இடத்தில் நிர்மாணிக்கவோ அனுமதிக்கக் கூடாது எனும் நான்கு முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன.

துரதிஷ்டவசமாக ஒரு மாத காலம் கடந்துவிட்ட போதிலும் மேற்குறித்த தீர்மானங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
ஜனாதிபதிக்கு இதுவரை கடிதம் அனுப்பப்படவில்லை என்பதும் 10 க்கும் குறைவான முஸ்லிம் எம்.பி.க்களே அதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்பதும் பலரும் அறியாத உண்மை.
இத் தாக்குதல் சம்பவத்தை தலைமையேற்று நடத்திய இனாமலுவே சுமங்கல தேரருக்கோ அல்லது அவரது குழுவினருக்கோ எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.மாறாக அவர் பகிரங்கமாக தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களையே பரப்பி வருகிறார். முஸ்லிம்கள் இந்த நாட்டைக் கொள்ளையடிக்க வந்தவர்கள் எனும் அபாண்டத்தை சுமத்துகிறார். அதுவும் போதாதென்று வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி அமைதிக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கிறார். இதன் பின்னணியிலேயே களுத்துறையில் கூட ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவோ அல்லது வேறு இடத்தில் நிர்மாணிக்கவோ முஸ்லிம் சமூகம் அனுமதிக்கக் கூடாது எனும் தீர்மானமும் இப்போது ஊசலாடிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சந்தித்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்திய செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டாலும் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த அச் சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது பற்றி இதுவரை உலமா சபை வாய்திறக்கவில்லை. இதன்போது பேசப்பட்ட விடயங்களை ஊடகங்ளில் வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி தம்மிடம் கேட்டுக் கொண்டதாக உலமா சபை பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தொடர்ந்தும் உலமா சபை இது பற்றி மௌனம் சாதிப்பது மென்மேலும் விமர்சனங்களுக்கே வழிவகுக்கக் கூடும்.

ஜனாதிபதியை உலமா சபை சந்தித்ததைத் தொடர்ந்து தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பான முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகள் மந்தகதியை அடைந்தன என்பதே உண்மையாகும். இந்த விடயத்தில் நியாயமான தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவேன் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். அதனை நம்பியே முஸ்லிம் தரப்பு அமைதி காத்தது. ஆனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு நிலையான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறதா எனும் சந்தேகமே தற்போது வலுப்பெற்றுள்ளது.
இனாமலுவே சுமங்கல தேரருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரகளுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய விரைவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பள்ளிவாசலை இடம்மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
சட்டவிரோத கட்டிடங்கள் என்ற பெயரில் கொழும்பிலிருந்து நூற்றுக் கணக்கான குடும்பங்களை வெளியேற்றிய, தொடர்ந்தும் வெளியேற்ற திட்டமிட்டிருக்கின்ற இந்த அதிகார சபைக்கு இது ஒன்றும் பெரிய சவாலான விடயமாக இருக்கப் போவதில்லை.

இந்த இடத்தில்தான் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை எதிர்வரும் நாட்களில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு கையாளப் போகிறது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆரம்பத்தில் இந்த விடயத்தை அரசியல் கலக்காது கையாள வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் தீர்மானித்தாலும் தற்போது இந்த விடயம் அரசியலாக்கப்பட்டுவிட்டது. பள்ளிவாசல் விடயத்தில் கடுமையாக உணர்ச்சிவசப்பட்டு பேசிய முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று ஜனாதிபதிக்குப் பயந்து மௌனம் காக்கிறார்கள். நாம் இது பற்றிப் பேசமாட்டோம் என்று பகிரங்கமாகவே சொல்கிறார்கள். அதாவது இதனை உலமா சபை பார்த்துக் கொள்ளட்டும் என்று கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக நடந்து கொள்கிறார்கள்.

முஸ்லிம் சிவில் சமூகமும் உலமா சபையை விமர்சிக்கிறதே தவிர அரசியல்வாதிகள் பற்றி பேசுவதாகத் தெரியவில்லை.
உலமா சபை இந்த விடயத்தை தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தர வேண்டியது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தார்மிகக் கடமையாகும்.
தம்புள்ளை பள்ளி விவகாரம் மார்க்கப் பிரச்சினை அல்ல. மார்க்கப் பிரச்சினை என்றால் அதற்கான தீர்வை உலமா சபையிடம் வேண்டி நிற்கலாம். மாறாக இது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமை சார்ந்த பிரச்சினை. சமூகத்தின் உரிமைகளை உறுதி செய்வதற்காகவே நாம் தேர்தல்களில் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறோம். நமது உரிமைகளை உறுதி செய்கின்ற இடமே பராளுமன்றம். மாறாக கோட்டை விடுகின்ற இடமல்ல.

ஆக இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க சமூகத்தின் உரிமையை உறுதி செய்ய வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையேயாகும்.
எனவேதான் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்திற்கான தீர்வைப் பெற்றுத் தருவதற்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்குமான அழுத்தத்தை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டியது முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடப்பாடேயாகும்.
ஆனால் அதற்கான அழுத்தத்தை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வழங்குவது யார்? என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியிருக்கிறது.
அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் வழங்குவதற்கான பலத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொண்டிருப்பதாக தெரியவில்லை. எனவேதான் உலமா சபை பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதான வலுவான ‘சிவில் சமூக அமுக்கக் குழு’ (PRESSURE GROUP) ஒன்று உடனடியாக தாபிக்கப்பட வேண்டும். அதில் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மாற்று அரசியல் சக்திகள் என பலம்வாய்ந்ததொரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இக் கட்டமைப்பே எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய வேண்டும். அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். இல்லையேல் சமூகப் பிரச்சினைகளை உலமா சபையின் தலைகளில் சுமத்திவிட்டு அரசியல்வாதிகள் தப்பித்துவிடுவதற்கான வழிகளை நாமே திறந்து கொடுத்ததாக அமைந்துவிடும்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட தலைமைகள் வெகு சீரியஸாக சிந்திக்க வேண்டும். சரியான தருணத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளே சமூகத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும். இது சரியான தருணம். சரியான முடிவை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

நன்றி: விடிவெள்ளி

யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு! முஸ்லீமாக மதமாற்றம் ??

இன்று சில தமிழ் பத்திரிகைகளிலும் மற்றும் தமிழ் இணையதளங்களிலும் வெளிவந்துள்ள தகவலை இங்கு தருகிறோம் : பத்திரிக்கை செய்திக்கும் இணையதளங்களின் செய்திகளுக்கும் இடையில் சில மாற்றம் காணப்படுகிறது இங்கு இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியை தருகிறோம்: செய்தி :’யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு! முஸ்லீமாக மதமாற்றம். யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில் அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.


தமிழ் சிறுவனை கடத்தி முஸ்லீமாக மாற்றி கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்! அதிர்ச்சியில் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று முஸ்லீமாக மாற்றி அவனை கொடுமைப்படுத்திய மிகவும் பரபரப்பான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியைச் சேர்ந்த பரமநாதன் ரஜிராம் வயது 12 என்ற மாணவனே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டவராவார்.யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலிருந்து கடந்த வருடம் யூன் மாதம் 8ம் திகதி இம்மாணவன் முஸ்லீம் ஒருவரால் ஆசை வார்த்தை கூறி துவிச்சக்கர வண்டியில் ஏற்றி செல்லப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்த வான் ஒன்றில் ஏற்றப்பட்டு அவனை யாழ். ஐந்து சந்திப் பகுதிக்கு கொண்டு வந்து அன்றிரவு அவனை மட்டக்களப்பு காத்தான்குடிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.அங்கு அவனுக்கு சுண்ணத்து பண்ணப்பட்டு தொடர்ந்து அன்வர் என பெயர் மாற்றப்பட்டு வீடொன்றில் தங்கவைக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்த மூன்று சிறுமியர்களை பாடசாலைக்கு கூட்டிச்செல்வது கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது என வீட்டு வேலை செய்யுமாறு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளான்.

இதன் பின்னர் இச்சிறுவன் யாழ்ப்பாணத்திற்கு இவ்வருடம் கொண்டு வரப்பட்டு நடைபாதை கடையொன்றில் வியாபாரத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது கடந்த 17ம் திகதி இவரை இனங்கண்டு சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஒருவர் இது தொடர்பில் தாயாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

பின்னர் தனது மகனை இனங்கண்ட தாயாரைக்கண்டு மகன் ஏன் மட்டக்களப்பிற்கு வந்தீர்கள் என கண்ணீர்; சிந்தி கதறி அழுதுள்ளார். ஏனெனில் தான் எங்கிருக்கின்றேன் என்பதே அவனுக்கு தெரியவில்லை.

இதன்போது உடனடியாகவே தாயார் சுதாகரித்துச் செயற்பட்டு ஏற்கனவே மானிப்பாய் பொலிஸில் முறையிட்டிருந்ததால் பொலிஸாரிடம் சென்று விடயத்தை தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இரு வர்த்தகர்களையும் உடனடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது சிறுவனை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு தெரிவித்ததோடு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் சிறுவன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஐந்து சந்தியிலிருந்த வீடொன்றிலிருந்து சிறுவன் கடைசியாக காணாமல் போன அன்று அணிந்திருந்த பாடசாலை சீருடை புத்தகப்பை என்பவற்றை பொலிஸார் மீட்டனர்.இதேவேளை சிறுவன் இன்னமும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லையென்பதோடு சிறுவனை வேலைக்கு அமர்த்திய நடைபாதை வியாபாரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் குறித்த சிறுவனை பொலிஸார் விலங்கிட்டு வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததை கண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொலிஸாரின் ஒரு பக்க சார்பான இச்செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.இச்சிறுவன் காணாமல் போனது தொடர்பில் தாயார் ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழு சிறுவர் நன்னடத்தை பிரிவு என்பவற்றில் முறையிட்டிருந்ததால் அவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொலிஸாரை வற்புறுத்தி வருகின்றனர்.

முஸ்லீம்கள் மேற்கொண்ட இக்கடத்தல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதோடு எரிச்சலையும் தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகரில் வலுக்குறைந்த இளம் பெண் ஒருவரையும் முஸ்லீம்கள் இருவர் கற்பழித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.’ என்று அந்த செய்தி தெரிவிக்கின்றது .

அஹதியா பாடசாலைக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர் அணிதிரள்வு - பதட்டம் தொடருகிறது



 தம்புள்ள பள்ளிவாயளுக்கு நேர்ந்தது போலவே குருனாகலுக்கு அண்மையில் உள்ள ( சுமார் இரண்டே கி.மீ ) ஆரிய சிங்கள வத்த என்கிற பிரதேசத்தில் ஒரு பதட்டமான சுழ்நிலை உருவாகி வருவதாக  மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா குறிப்பிடுகிறார். இவ்வூர் வாணி வீதி என்று தமிழில் அழைக்கப்படுகிறது .

 அவர் மேலும் கூறியவை,
 அஹதியா பாடசாலை நடத்துவதற்கு மட்டுமே முஸ்லிம்களுக்கு அனுமதி, அங்கு தொழுகை நடாத்தக்கூடாது என்று ஊர்பிரமுகர்களை , விகாரைக்கு அழைத்து வழக்கரிஞ்ஞர் முன்னிலையில் கையொப்பம் வாங்கிய செய்தி ஏற்கனவே அனைவரும் அறிந்ததே . இது நடந்து சில தினங்கள் ஆகிறது .
 ஆனால் நேற்று திரும்பவும் குருநாகல் பிரதேச சிங்கள கிராமங்களுக்கு " ஆரிய சிங்களவத்தையில் முஸ்லிம்கள் பள்ளி கட்டுவதாகவும் , அதனை தடுத்து நிறுத்துவதட்காக இன்று ( 20th May ) 4 மணிக்கு பெரும்பான்மை இனத்தவர்களை - அங்கங்கள ரஜ மகா விகாரயில்- ஒன்றுகூடுமாறும் " பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

 இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்களை சீண்டிவிட இனவாதிகள் எடுக்கும் இம் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எப்படி கையாள்வது என்பது சம்பந்தமாக நேற்று இஷா தொழுகைக்குப் பிறகு தெளியாகொன்ன பெரிய பள்ளிவாயலில் ஒரு ஒன்றுகூடல் நடந்தது.
 அப்போது கத்தார் செல்வதற்காக விமான நிலையத்தில் இருந்த அமைச்சர் ரவுப் ஹகீமுக்கு தொலைபேசியில் ரிஸ்வி ஜவஹர்ஷா நிலைமைகளை விபரித்தவுடன் , போலீஸ் மா அதிபர் - பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுடன் ஹக்கீம் தொடர்புகொண்டு வேகமாக இயங்கியுள்ளார்.

 இதன் பயனாக இரகசியப் போலீசார் உடனடியாகவே ( இஷாவிட்குப் பிறகு கூட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே ) குறிப்பிட பிரதேசத்திற்கு விஜயம் செய்து விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

 ரிஸ்வியிடமிருந்து தற்போது கிடைத்த செய்தி இப்போது சுமார் 25க்கும் மேற்பட்ட போலீசார் அஹதியா பாடசாலை அமைந்துள்ள வளவில் காவல் பணிகளில் உள்ளனர் . பன்சலையில் மாலை நடைபெறவிருக்கும் கூட்டத்தை தவிர்க்கிற முயற்சியில் பாதுகாப்பு படையினர் கவணம் செலுத்துகின்றனர் .மீண்டும் ஒரு இனமுறுகல் உருவாகாதிருக்க நாம் துஆ செய்வோம்.

ரவூப் ஹஸீர்

முஸ்லிம் சமூகத்தின் மீது பெளத்த பேரினவாதத்தின் மற்றுமொரு அடக்குமுறை !!

நவமணி வாரப்பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ள செய்தி இங்கு தருகிறோம்: சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக குருநாகல் ஆரியசிங்கள வத்தையில் இயங்கும அல் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடத்தக் கூடாதென விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் பிரதேசத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குருநாகல், புத்தளம் வீதியில் சுமார் 100 மீட்டர் உள்ளாக அமைந்துள்ள சுமார் 70 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் ஆரியசிங்கள கிராமத்தில் இருக்கும் மத்ரஸாவில் ஐவேளை தொழுகையை நடத்தி வந்துள்ளனர். கடந்த திங்களன்று குருநாகலிலுள்ள அத்கந்த ரஜமஹா விஹாரையில் நடந்த கூட்டம் ஒன்றுக்கு இந்த ஊர் முஸ்லிம்களை அழைத்து மத்ரஸாவில் தொழுகை நடத்தக் கூடாதென கடிதம் ஒன்றில் கைச்சாத்திட்டு பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இக்கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.எம். நிஸார் தெரிவித்ததாவது,
கடந்த திங்களன்று பத்தினி தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயான ஹேமந்த பண்டார ஹேரத் அத்கந்த ரஜமஹா விஹாரையில் நடைபெறும் கூட்டம் ஒன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது ஊரிலிருந்து நாம் ஐவர் அங்கு சென்றோம். சிறிய ஒரு கலந்துரையாடலுக்கு வருமாறு கேட்டார்கள். நாம் அங்கு போய்ப் பார்த்ததும் வர்த்தகச்சங்க பிரதிநிதிகள். அரசியல் பிரமுகர்கள், மத்தியஸ்த சபை அங்கத்தவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலதரப்பட்டோர் இருந்தனர்.
அப்போது எமது மத்ரஸா பற்றிய விபரங்களைக் கேட்டனர். இது நான்கு வருட காலமாக இயங்குவதாகத் தெரிவித்தோம். அப்போது அங்கிருந்த சத்கந்த ரஜமஹா விஹாரை அதிபதி மஹசேன்கம பஞ்ஞானந்த தேரர், புதிதாக வழிபாட்டுத் தலங்கள் அமைக்கக் கூடாதென அரசு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த மத்ரஸாவினை மாணவர்களுக்கு சமயம் போதிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் யாரும் தொழக் கூடாது எனத் தெரிவித்தனர்.
நாம் இந்த மத்ரஸா உருவாக்கப்பட்ட முறை பற்றியும் அதில குர்ஆன் போதனை நடப்பதாகவும் தொழுகை நடைபெறுவதாகவும் தெரிவித்தோம்.
ஊர் சகோதரர் ஒருவர் வக்பு செய்யப்பட்ட இரு அறைகைளக் கொண்ட இடத்திலே மத்ரஸா இங்குவதாகவும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாகவும் கூறினோம்.
அங்கு சென்ற எமக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி இதில் கையொப்பமிடுமாறு கேட்கப்பட்டோம். கையொப்பமிடாவிடின் தம்புள்ளையில் நடந்தது போன்று நடக்கலாம் என்றும் கூறினார்கள். இந்த நிலையிலே நாம் கையொப்பமிட நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
இது தொடர்பாக சிங்களப் பத்திரிகை ஒன்றில் கடந்த புதனன்று வெளியான செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த செய்தி வருமாறு,
குருநாகல் புத்தளம் வீதியில் பௌத்த மக்கள் வாழும் பகுதியில் முஸ்லிம் மத்ரஸா ஒன்றை ஆரம்பிக்க முற்பட்டதனால் ஏற்பட்ட மக்கள் அமைதியின்மையை பௌத்த, முஸ்லிம் சமயப் பிரதிநிதிகள் சேர்ந்து சமாதானமாகத் தீர்த்து வைத்தனர். குருநாகல் ஆரியசிங்களவத்தை என்ற இடத்தில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் மத்ரஸ நிலையத்துக்கே பௌத்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக ஆரியசிங்களவத்தை பௌத்த மக்கள் குருநாகல் பிரதேசத்தின் பிரதான விஹாரையின் அத்கந்த ரஜமஹா விஹாரையதிபதி மஹசேன்கம புஞ்ஞானந்த தேரருக்கு முறைப்பாடு செய்தபின் பிரதேச பௌத்த சிவில் முஸ்லிம் சமயப் பிரநிதிகளை அழைத்து கலந்துரையாடப்பட்டது.
வரலாற்றுப் புகழ் வில்பாவ பத்தினி தேவாலய பஸ்நாயக்க நிலமே ஹேமந்த பண்டார ஹேரத் குருநாகல் மத்தியஸ்த சபையின் தலைவர் ஜே.எம்.எம்.பி. ஜயசுந்தர முஸ்லிம் மத நிலைய பொறுப்பாளர் ஏ.ஜே. நஸார் அதன் பிரதிநிதிகளான எம்.எஸ். சித்திக், ஜே.எம். தாஹிர், மில்லவ தர்மவிஹாராதிபதி ஓபாத தம்மஜான அஸ்வத்தும அபிநவராமாதிபதி வெலிவிடிகம சோமாநந்த தேரர் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
இக்கலந்துரையாடலின் பின் இரு தரப்பினரும் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின்படி முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பதில்லையென்றும் முஸ்லிம் தர்ம பாடசாலை ஒன்றை மட்டும் நடத்துவதற்கு வாக்குறுத் அளிப்பதாகவும் சட்டத்தரணிகள் முன் கையொப்பமிட்டு முஸ்லிம் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
மேற்குறிப்பிட்ட செய்தியின்படி நாம் அவ்வாறு கையொப்பமிட்டபோதும் அதன் பிரதியொன்றும் கூட எமக்கு தரப்படவில்லை என்றும் நான்கு வருட காலமாக மத்ரஸா இயங்கி வந்தபோதும் அயலிலுள்ள சிங்கள சகோதரர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் வெளியிலிருந்து வந்த சிலரது தூண்டுதலாலே இது நடந்ததாகவும் நிஸார் தெரிவித்தார்.
எமது மத்ரஸாவை இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து பார்த்துச் சென்ற 15 நிமிடங்களின் பின் எமக்கு மேற்குறிப்பிட்ட கூட்டத்திற்கு வருமாறு கேட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார் .- 

A.R ரஹ்மானுக்கு சவுதி அரபியாவிலுருந்து……..


சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜித்தாவில் உற்சாக வரவேற்பு, ‘புனித பூமியில் பிறந்தநாள் கொண்டாடிய இசைமேதை’ என்றெல்லாம் சில தினங்களுக்கு முன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதுபற்றி தெளிவுபடுத்த விரும்பியதன் விளைவே இந்த கட்டுரை.

ஆஸ்கார் விருது பெற்றபோது எல்லா புகழும் இறைவனுக்கே! என்று மிகத் தெளிவாக அறிவித்து எங்களைப் போன்றவர்களை வியப்பில் ஆழ்த்தினீர்கள்.
இஸ்லாத்தில் இசை என்பது தடுக்கப்பட்டது. ஒரு சாராயக்டையை அல்லது ஒரு விபச்சார விடுதியை நடத்தி அதன் மூலமாக வரும் கோடிக்கணக்கான வருமானத்தை ஒருவன் ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்தாலும் அவன் செய்யும் வியாபாரம் ஹலாலாக ஆகிவிடாது.

தடுக்கப்பட்டதை செய்து மக்களை வழிகெடுத்ததற்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இஸ்லாமிய நியதி. உங்களது இசையும் அது போன்றதே! நீங்கள் அமைக்கும் இசையானது வெறும் இசையுடன் மட்டுமின்றி ஆபாசக்காட்சிகளுடன் வெளியிடப்படுகின்றன.
அந்நியர்களுடன் சரச சல்லாபத்தில் ஈடுபடுவதும் அங்க அவயங்களை மாற்றாருக்கு காண்பிப்பதும் இஸ்லாத்தில் மிகப்பெரும் தவறு என்பதை தாங்கள் அறியாமலிருந்தால் அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். ஒரு தீமையை செய்ததற்காக கிடைத்த விருதை நீங்கள் பெற்றபோது ‘எல்லா புகழும் இறைவனுக்கே! என நீங்கள் விளித்தது ‘நன்மையும் தீமையும் இறைவனிடத்தில் இருந்து வருபவை’ என்ற இஸ்லாமிய கோட்பாட்டின் படி மட்டுமே சரியானது. ஆனால் தீமை செய்ததற்கான தண்டனையை மறுமையில் அனுபவித்தே ஆக வேண்டும்.
ஒருவன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்து வந்தால் அவனது முந்தைய பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகின்றான் என நமது வழிகாட்டியாகிய நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்ட நீங்கள் மீண்டும் தர்ஹாக்களுக்கு சென்று இணைவைப்பு எனும் பாவத்தை சம்பாதித்து வருகின்றீர்கள்.

காத்ரீனா கைஃப், ஷில்பா ஷெட்டி போன்றவர்களெல்லாம் தலையில் பூக்கூடை அணிந்தவர்களாக அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்கிறார்கள் என்றால் அது பிழைப்புக்காக! முஸ்லிம் ரசிகர்களும் படம் பார்க்க வரவேண்டும் என்ற நப்பாசையும் தனது படம் நிறைய நாள் ஓடவேண்டும் என்ற சுயலமும் தான் அதற்கு காரணம். அவர்களை பொறுத்தவரை அது பத்தோடு பதினொன்று. கோவிலுக்கும் செல்வார்கள், சர்ச்சுக்கும் செல்வார்கள், தர்ஹாவுக்கும் செல்வார்கள்.

இறைவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு எதையும் தந்திட முடியாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ‘எம்மதமும் சம்மதம்’ என்று சொல்பவன் ஏக இறைவனை வணங்கக் கூடியவனாக இருக்க முடியாது. பல தெய்வ கொள்கைகளை தகர்த்து ஏக தெய்வ கொள்கையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அப்படியிருக்க கல், மண், கப்ரு, மகான் என்பனவற்றிற்கு சக்தி எங்கிருந்து வரும். அவைகளால் திரைப்படம் அதிக நாள் ஓடும் என நீங்கள் நம்பினால் நீங்கள் இஸ்லாத்திலிருந்து விலகி விட்டீர்கள் என்றே அர்த்தம். உங்களை ஒரு இஸ்லாமியராக உலகம் பார்ப்பதால் தர்ஹாக்களுக்கு நீங்கள் செல்வதை இஸ்லாமிய வழிபாட்டில் ஒரு பகுதியாக சிலர் எண்ணும் வாய்ப்புகளுண்டு. அது களையப்பட வேண்டும்.

ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், உங்களை ஜித்தாவில் வரவேற்றவர்கள் இசை என்பது ஹராமென்றோ, தர்ஹாக்களிடம் கையேந்துவது மிகக் கொடிய பாவம் என்றோ தங்களுக்கு ஏன் சொல்லவில்லை என்பது தான். உங்களை வரவேற்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் அனைவருமே ஒரு பிரபலத்துடன் போஸ் கொடுக்க வேண்டும் என்ற நினைப்புடன் நடந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

மக்காவில் உம்ரா செய்ய வேண்டுமென்று வந்ததாகவும் அந்த புண்ணிய பூமியில் தங்களது பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென்றும் விரும்பியதாக தாங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். அஜ்மீர் தர்ஹா, கடப்பா தர்ஹாவிற்கு சென்று பிரார்த்திப்பது போன்றதல்ல மக்காவுக்கு செல்வது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
.
எண்ணப்படி தான் செயல்கள் அமையும் என்பது புகாரி ஹதீஸ் புத்தகத்தில் வரும் முதலாவது ஹதீஸ். இதுவரை நீங்கள் படிக்காமலிருந்தால் இன்றே அதை புரட்டுங்கள். ஒருவன் தனது நாட்டை, குடும்பத்தை, செல்வத்தை விட்டு அடுத்த நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது அங்கே இருக்கும் அழகான பெண்களைதிருமணம் செய்ய வேண்டும் என எண்ணி இருந்தால் அது நிறைவேறும். ஆனால் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியாது என்பது அந்த ஹதீஸின் அர்த்தம்.

பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற அர்த்தத்தில் நீங்கள் வந்திருந்தால் அது நிறைவேறிவிட்டது, உம்ரா இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமானதே! அதை இறைவன் ஒருவனே அறிவான்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை, நாம் போற்றும் நபிகளார் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது எந்த பிறந்தநாளுக்கும் கேக் வெட்டியதில்லை, இன்று என்னுடைய பிறந்தநாள், எனவே விழா எடுங்கள் என்றோ சொன்னதில்லை, அவர்களது காலத்தில் பாசத்திற்குரிய குழந்தைளுக்கும் அன்பிற்குரிய மனைவிகளுக்கும் நேசத்திற்குரிய தோழர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடியதில்லை, அதை அனுமதிக்கவுமில்லை.

ஆனால் அறியாமையால் நீங்கள் கேக் வெட்ட முனைந்த போது தங்களுடன் இருந்த எவருமே தடுக்காதது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அந்த இடத்தில் அது தவறு என்பதை தங்களுக்கு அவர்கள் உணர்த்தி இருந்தால் தாங்களும் அதை உணர்ந்து அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பீர்கள். அதன் மூலமாக தமிழ் முஸ்லிம்களிடத்தில் அது பற்றிய ஒரு விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கும். தாங்கள் செய்த அச்செயல் இன்று ஒரு முன்னுதாரணமாக மாறிவிடுமோ என்ற கவலையே என்னுள் எழுகின்றது.

பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது இஸ்லாமிய கலாச்சாரமல்ல! அதுவும் சவுதி அரேபியாவில் அதை அனுமதித்த ஜித்தா நண்பர்கள் மிகப்பெறும் தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் தங்களை இஸ்லாமியனாக பார்க்கவில்லை. உடன் நின்று போட்டோ எடுக்கும் பிரபலமாகத் தான் பார்த்திருக்கின்றார்கள். இல்லையேல் உம்ரா செய்யும் போது மொட்டை அடிப்பது தான் சிறந்தது என்பதை சொல்லி தந்திருப்பார்கள்.

ஏனெனில் உம்ரா செய்துவிட்டு முடிகளை விரலளவு களைவதை இஸ்லாம் கற்றுத்தரவில்லை. மொட்டையடிப்பதை சிறந்ததாக கூறுகிறது. மொட்டையடித்தவர்களுக்காக நபிகள் பெருமானார் மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதை உங்களது வழிகாட்டிகள் உங்களுக்கு சொல்லித்தரவில்லை. அவர்களுக்கும் தெரிந்திருக்குமோ என்பதும் சந்தேகமே!

சரி! தங்களது பிறந்தநாளில் என்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்தீர்கள். வயதை அளவிடும் ஒரு நாளே தவிர எந்த சிறப்பும் அதற்கு இல்லை. ஆண்டுக்கொருமுறை தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானித்தீர்கள். வருடத்திற்கொருமுறை ஏன் அந்த நாளை கொண்டாட வேண்டும். மாதத்திற்கொரு முறை கொண்டாடலாமே? ஒவ்வொரு மாதமும் 6ம் தேதி கொண்டாடலாமே? ஏன்? கிழமையை கணக்கிட்டு வாரத்திற்கொருமுறை கூட கொண்டாடலாமே? நீங்கள் பிறந்தது திங்கள்கிழமை என்றால் இன்று அது வியாழக்கிழமை! பின் எவ்வாறு பிறந்தநாள் கொண்டாட முடியும். எனவே சிந்தியுங்கள்!

நம்மை பொறுத்தவரை வாழ்க்கை என்பது இந்த உலகத்துடன் முடிந்து விடுவதில்லை. மறுமை உலகம் என்ற மாபெரும் பேறு நமக்காக காத்திருக்கின்றது. அதில் நாம் வெற்றியடைய வேண்டுமாயின் அதற்கான தேர்வுக்கூடம் தான் இது. உங்களை புகழ்ந்து கொண்டும் உங்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களும் மறுமையில் உங்களுக்கு துணையாக வரமாட்டார்கள். மறுமை நாளிலே இந்த கூட்டமெல்லாம் உங்களை வரவேற்க வராது, உதவிகள் செய்யாது. நீங்கள் மட்டும் தனித்து விடப்படுவீர்கள். மரணிக்குமுன் நீங்கள் தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் அவன் நாடினால் மன்னித்துவிடுவான்.
இறுதியாக, தமிழகத்திலோ அல்லது வடமாநிலங்களிலோ இந்த பிறந்தநாளை நீங்கள் கொண்டாட திட்டமிட்டிருந்தால் திரையுலகமும் ஆட்சியாளர்களும் திரண்டு ஊரே கோலாகலமாக இருந்திருக்கும்.

ஆனால் அதைவிட புனித பூமியான மக்காவிற்கு செல்வதை நீங்கள் சிறந்ததாக கருதியதிலிருந்து அந்த புகழாரத்தை விட மக்காவின் அமைதியை நீங்கள் விரும்பியுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது. எனவே தங்களை சுற்றியுள்ள கூட்டமே தங்களை முழுமையாக இஸ்லாத்தில் நுழையவிடாமல் தடுக்கின்றன என்பதை என்னால் உணர முடிகின்றது.
ரசிகர்கள் கூட்டத்தை கண்டு புளகாங்கிதம் அடையாமல் மறுமையை பற்றிய தேடுதலை அதிகப்படுத்துங்கள். அப்போது மிகப்பெரிய மாற்றத்தை காண்பீர்கள். உங்களது தேடுதலில் இறைவனை பற்றிய அறிவை நீங்கள் பெற்றுவிட்டால் கல்லை, கபரை, மனிதனை வணங்க கூடாது என நீங்கள் முடிவெடுத்து விடுவீர்கள். ஆனால் அதை அறிவித்து விட்டால் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்.

எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும். இசை, பாடல்களின் மூலம் கிடைத்த புகழாரம் மற்றும் வருமானம் நின்று போகும். உங்களின் இசை, ஆடல், பாடல்களை ரசித்து உங்களை சுற்றிலும் இருப்பவர்கள் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவர். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். இந்த விளைவுகளுக்கு நீங்கள் தயாராக இருந்தால் இன்றே தங்களது தேடுதலை துவக்குங்கள்.
அன்பிற்குரிய ரஹ்மான்!

நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டதை போல இணைவைப்பிலிருந்து விலகி தவ்பா செய்தால் மீண்டும் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக மாறுவீர்கள், மாறவேண்டும் என்பதே எனது அவா. ஏனெனில் மறுமை நன்மைக்காகத் தான் நீங்கள் உம்ராவுக்கும் வந்தீர்கள்.
மதீனாவிலிருந்து ஜித்தா செல்ல பிளைட்டுக்கு நேரமாவதைக் கூட உணராமல் பிரார்த்தனையில் லயித்ததாகவும் அதனால் பிளைட்டை தவற விட்டுவிட்டு காரில் ஜித்தா செல்லும் நிலை எற்பட்டதாகவும் செய்தி அறிந்தேன்.

பிரார்த்தனையில் இத்தனை நிகழ்வுகள் நிகழும் போது மறுமையில் கேள்விக்கணக்கு நாளில் நமது நிலை என்னவாக இருக்கும்! அங்கு தனித்து விடப்படுவதை காட்டிலும் இவ்வுலகில் தனித்து விடப்படுவது துன்பம் தரும் விஷயமல்ல. மரணத்திற்கு பின் இருப்பதே நிலையான வாழ்க்கை!!!

குளோபல் இஸ்லாம் பேஸ்புக் பக்கம் -

ரிஸ்வி முப்தி அவர்களின் தம்புள்ளை பள்ளி விவகார விட்டுக்கொடுத்தலுக்கான அழைப்பு வன்முறைக்கு அடிபணிவதாகவும் சமூகத்தை விற்பதாகவும் அமைந்துள்ளது


அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் M.I.M ரிஸ்வி முப்தி அவர்கள் கடந்த 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியாத் பள்ளிவாயல் தொடர்பாக ஆற்றிய உரை இலங்கை முஸ்லிம் சமூக மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஒரு கணம் நான் சகோதரர் ரிஸ்வி முப்தி வன்முறை மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரரின் பள்ளி தகர்ப்பு நோக்கத்தை நிறைவேற்றும் பிரச்சாரத்துக்காக ரியாத் நகர் அனுப்பப்பட்டாரோ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
அவரது பேச்சு ஜித்தாவை மையமாக கொண்டு இயங்கும் அரப் நியூஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் ஆங்கில தினசரிகளான டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே என்பவற்றில் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. அவரது உரையில் வன்முறை மூலம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தம்புள்ளை பிரச்சினை சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுத்தல் மூலம் சுமுகமாக தீர்க்கப்படல் வேண்டும் என்று கோரியிருந்தார்.
அவரது இக்கோரிக்கையை நியாயப்படுத்தும் முகமாக கண்டி லைன் பள்ளிவாயல் சமூக அபிவிருத்தி திட்டம் ஒன்றுக்காக அழிக்கப்பட்டதாகவும் மற்றும் பம்பலப்பிட்டியில் நாமல் வீதியில் அமைந்திருந்த பள்ளிவாயல் வீதி விஸ்தரிப்பு திட்டம் ஒன்றுக்காக நீண்ட தொலைவுக்கு நகர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது மக்களை பிழையாக வழி நடாத்த எத்தனிக்கும் ஒரு கூற்றாகும். கண்டி வாழ் முஸ்லிம்கள் அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்ல என்று கூறுகிறார்கள். அத்துடன் லைன் பள்ளி உட்பட எந்தவொரு பள்ளிவாயலும் அழிக்கப்படவோ நகர்த்தப்படவோ இல்லை என்று கூறுகிறார்கள்.
நாமல் வீதியில் அமைந்திருந்த பள்ளிவாயல் நகர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கூட பள்ளி அமைந்திருந்த இடத்தின் உரிமையாளர்களின் கருத்துப்படி இடமாற்றம் ஒரு சில யார்கள் தொலைவுக்கே நிகழ்ந்தது என்று அறிய முடிகின்றது. அவர்களின் கருத்துப்படி பழைய பள்ளிவாயல் புகையிரதப்பாதையில் இருந்து ஒரு சில யார்கள் தொலைவில் அமைந்திருந்தது. அஹதியா வகுப்புகளை நடாத்துவதற்காக தொடர்ந்து வந்த சில வருடங்களில் பள்ளிவாயல் விரிவு படுத்தப்பட்டது. இவ்வேளையில் மரைன் டிரைவ் பாதைக்காக சில யார்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்நிகழ்வு மிகவும் சமாதானமான முறையில் எவ்வித காடையர் கூட்ட இடைபடுதல் இன்றி நிகழ்ந்தது.
தம்புள்ளை பிரச்சனைக்கு ஒரு சுமுகமான வேண்டும் என்று குரல் கொடுக்கும் ரிஸ்வி முப்தி விட்டுக்கொடுத்தலுக்கான தேவையை முவைக்கிறார். இவ்விடத்தில் இவ்விட்டுக்கொடுத்தலின் அர்த்தம் பள்ளிவாயலை தகர்ப்பது என்று இருக்குமானால் இது அடக்குமுறைக்கு தலை வணங்குவது போன்றதாகும். இங்கு அவர் தம்புள்ளை பள்ளிவாயல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அதை அழிப்பதற்கான அறைகூவல் தம்புள்ளையில் உள்ள சிங்கள மக்களாலோ அல்லது இலங்கை பெரும்பான்மை சிங்கள இன மக்களாலோ விடப்படவில்லை என்பதை தனது உரையில் சுட்டிக்காட்ட தவறிவிட்டார். பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்த காவியுடை அடாவடித்தனத்தால் அவமானத்துக்கு உள்ளானதை அவர் இங்கு தெரிவித்திருக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தம்புள்ளை விவகாரம் தொடர்பில் மௌனம் சாதிக்கும் அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச பௌத்த கோட்பாட்டுக்கும் தம்புள்ளையில் நடந்த சம்பவங்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்று கூறியுள்ள அதேவேளை சிங்கள் நடுநிலை புத்தி ஜீவிகள் தம்புள்ளை சம்பவங்களுக்கு தமது கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்ததோடு ஒரு புத்திஜீவி இந்த செயலில் ஈடுபட்டவர்களை தம்புள்ளையின் மன நலமற்ற மனிதர்கள் என்று விமர்சித்தது இங்கு குறிப்பிட தக்கது.
இந்த அடாவடித்தனம் அரச துறைகளில் செல்வாக்கு மிக்க பதவிகளில் உள்ள ஒரு சில தீவிர சிங்கள தேசிய வாதிகளின் கைங்கரியம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. LTTE அமைப்பு வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் இந்த தீவிர சிங்கள தேசியவாதிகள் முஸ்லீம்கள் மற்றும் இஸ்லாத்துக்கு எதிராக விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பிரச்சாரங்கள் பத்து சிங்கள மொழி மூல இணையத்தளங்கள் மற்றும் ஒன்பது ஆங்கில இணையத்தளங்கள் மூலம் நடாத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் கூரகல என்ற இடத்தில் அமைந்துள்ள ஜெய்லானி என்ற இடம் முழுமையாக சிங்களவர்களுக்கு சொந்தமானது அதை முஸ்லீம்கள் கைப்பற்றி கொண்டார்கள் என்று தவறாக வழிநடாத்தும் ஒரு ஆவணப்படத்தையும் உருவாக்கியுள்ளனர்.
இவர்களின் மூலம் சமூக சக வாழ்வுக்கு ஏற்படும் பாதகமான சூழல் பற்றி நான் செப்டம்பர் 2011 இல் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரையை பிரசுரித்தேன். வழமை போல் முஸ்லிம் அரசியல்வாதிகள், கொள்கைவாதிகள் உட்பட எவரும் இதை கணக்கில் எடுக்கவில்லை. அதன் பின்னர் அனுராதபுரத்தில் தர்கா தகர்ப்பு இடம்பெற்றது. இப்பொழுது தம்புள்ளை விவகாரம் அரங்கேறியுள்ளது. இங்கு வந்த குண்டர் கூட்டம் வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு தம்புள்ளை முக்கிய மத குரு ஒருவரால் இந்த அடாவடித்தனங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன.
சட்டத்தை கையிலெடுக்கும் இந்த கும்பல்கள் இந்த முஸ்லிம் விரோத போக்கு மூன்று தசாப்த யுத்த அழிவுகளின் பின்னர் மீட்சி பெற்றுள்ள எமது நாட்டை மீண்டும் நாசமாக்கவல்லது என்பதை உணரவில்லை.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் ரிஸ்வி முப்தியின் விட்டுக்கொடுத்தலுக்கான கோரிக்கை நோக்கப்படல் வேண்டும்.
தம்புள்ளை விவகாரத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் கொள்கைவாதிகள் தலையிடும் முன்பு முஸ்லிம் சமூகம் இப்பிரச்சினையை ஒரு அமைதியான மற்றும் கௌரவமான முறையிலேயே அணுகினர். சமூகங்களுக்கு இடையான சகவாழ்வு என்பதே அவர்களின் சுலோகமாக இருந்தது.
எனினும் இந்த பிரச்சினையில் ரிஸ்வி முப்தியினால் கூறப்படும் விட்டுக்கொடுப்பு சட்டத்தை மதிக்காத தன்மையை ஏற்றுக்கொள்வதாகவே அமையும். இப்பிரச்சினை நடந்தவுடன் பிரதமர் அலுவலகம் குறித்த பள்ளிவாயலை நிர்மூலமாக்க உத்தரவிட்டது இங்கு நினைவூட்டத்தக்கது. அத்துடன் இவ்விட்டுக்கொடுப்பு ஒரு தவறான முன்னுதாரணத்தையும் பயங்கர பின்விளைவுகளையும் ஏற்படுத்தவல்லது. சமூகங்களுக்கு இடையான இவ்வாறான பிளவுகள் நாகரிகமான முறையில் நாட்டின் நிலங்கள் தொடர்பான சட்டங்களின் மூலம் தீர்க்கப்படல் வேண்டுமேயன்றி காடையர் கூட்ட அடாவடிகளின் மூலம் தீர்க்கப்படல் கூடாது என்பதே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த பற்றியெரியும் பிரச்சினை ஆறு மாத காலத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று முற்று முழுதாக சிங்கள அரச அதிகாரிகளால் நடாத்தப்பட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் எந்த வித முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இருக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் மக்களுக்கு இப்பிரச்சினை சம்பந்தமான யதார்த்தமான தகவல்களையே ரிஸ்வி முப்தி விளக்கியிருக்க வேண்டும். மாறாக இப்பிரச்சினைக்கு முஸ்லிம்களின் உரிமைகளை தாரை வார்த்து எட்டப்படக்கூடிய தீர்வு ஒன்றையே அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடத்தில் ரிஸ்வி முப்தி தனது வரையறைகளை கடந்து செயற்பட்டுள்ளார் என்றே தோன்றுகின்றது. உலமா சபை தலைவராக மார்க்க விழுமியங்களின் பிரகாரம் சமூகத்தை வழி நடாத்துவதே இவரின் பொறுப்பாக உள்ளது. எனினும் இவர் தனது வரையறைகளை மீறி வர்த்தகமயப்படுத்தப்பட்ட மற்றும் சமூக விரோதிகளால் நடாத்தப்படுகின்ற அரசியலுக்குள் இவர் நுழைந்துள்ளார். உலமா சபையின் செயற்பாடுகள் மார்க்கம் சம்பந்தமான ஒரு அமைப்பாக அதன் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக முஸ்லிம் சமூகத்தில் நிலவும் இந்த சந்தர்ப்பத்தில் இவரின் அரசியல் பிரவேசம் பாதகமான விளைவுகளியே உருவாக்கும்.
அதே வேளை முஸ்லிம் சமூகம் சம்பந்தமான முடிவுகளை ஜம்இய்யதுல் உலமா எடுக்குமுன்னர் சமூகத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் சமூகம் எதிர்பார்க்குகின்றது.

இந்த பொறுப்பற்ற பேச்சு சம்பந்தமான விளக்கத்தை சமூகத்துக்கு அளிக்கும் தார்மீக கடமை ரிஸ்வி முப்தி அவர்களுக்கு உள்ளது.

- By Latheef Farook / தமிழாக்கம் காத்தான்குடி இன்போ -

ஒட்டு மொத்த இஸ்லாமுக்கு எதிராக போரைத் தொடுக்கும் அமெரிக்கா! ஆதாரங்கள் இணைப்பு

பெரியண்ணன் என்ற பங்கில் இம்மியளவும் விட்டுக் கொடுக்காமல் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் உயர்நிலை இராணுவ கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மார்க்கத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான ஒட்டுமொத்த யுத்த நடவடிக்கை குறித்து கற்பித்துக் கொடுக்கப்பட்டு இருக்கின்றமை அம்பலத்துக்கு வந்து உள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மக்கா நகரத்தை அழிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது என்றும் இங்கு உபதேசிக்கப்பட்டு இருக்கின்றது.

அமெரிக்காவின் எதிரி இஸ்லாமே ஒழிய தீவிரவாதிகள் மாத்திரம் அல்லர், எனவே பொதுமக்கள் இறப்புக்களைகூட பாராமல் இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா, மதீனா ஆகியவற்றை அழித்தே தீர வேண்டி உள்ளது, இரண்டாம் உலக யுத்தத்தின்போது மீது ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது நடத்தப்பட்ட அணு குண்டு தாக்குதலையோ, ஜேர்மனின் ட்ரெஸ்டன் நகரத்தின் மீது நடத்தப்பட்ட எரிகுண்டு தாக்குதலையோ முன் மாதிரியாக கொண்டு இஸ்லாமுக்கு எதிரான போரை முன்னெடுக்க வேண்டி உள்ளது என இங்கு படிப்பிக்கப்பட்டு இருக்கின்றது.

ஆயினும் இக்கற்கைநெறி கடந்த மாத இறுதியுடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சால் இடை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

காரணம் மாணவர்களில் ஒருவர் இக்கற்கைநெறிக்கு எதிர்ப்பு வெளியிட்டு இருந்தார். இக்கற்கைநெறி இஸ்லாமுக்கு விரோதமான போக்கை மிக கடுமையாக முன்னெடுக்கின்றது என அமெரிக்க உளவுப் படை கடந்த வருடம் கண்டு கொண்டு சில மாற்றங்களை கொண்டு வந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்சொன்ன கல்லூரியில் இருந்து ஊடகங்களுக்கு கிடைக்கப் பெற்று உள்ள சில ஆவணங்களில் சிலவற்றை இச்செய்திக்கான ஆதாரங்களாக இணைக்கின்றோம்.


via tamilcnn

மூட்டைப் பூச்சியை விட மோசமானவர்கள்

-
பலரது வீட்டில்
அடுப்பு எரிகிறதோ இல்லையோ
வயிறு எரிகிறது
வட்டிக்குப் பணம் கட்டிக்கட்டி..!

பலர்
வீடு கட்டுவதற்காகத்தான்
வட்டிக்கு வாங்கினார்கள்
இப்போது
வட்டி கட்டுவதற்காகவே
வீட்டை விற்கிறார்கள்.

நம்மவரின்
வீடுகள் பல
அரச வங்கிகளில் இன்னும்
அறுதியாகி நிற்கின்றன.
மீட்டுக் கொள்ள முடியாமல்
பலர்
துக்கத்திலே தொங்கிப் போனார்கள்!

வட்டி
குட்டி போடுகிறதோ இல்லையோ
பலரது வாழ்வை
குட்டிச் சுவராக்கியிருக்கிறது.!

ஆடம்பர வாழ்க்கைக்கு
ஆசைப்பட்டுத்தான்
பலரின்று
வட்டியெனும் கொடுமைக்குள்
வசமாக மாட்டியிருக்கிறார்கள்.!

வட்டிக் காரர்கள்
மூட்டைப் பூச்சியை விட
மோசமானவர்கள்.
இல்லை
இரத்தத்தை உறுஞ்சும்
அட்டையை விட அபாயமானவர்கள்.!

எங்களுரில்
சாராயக் கடைக்கும்
லாட்டரி டிக்கட்டுக்கும்
சினிமா தியேட்டருக்கும்
ஒருபோதும் அனுமதியில்லை.
இவையெல்லாம் ஹறாம் என்பதால்.!

ஆனால்
வட்டிக் கடைகளாய் மாறிவரும்
வங்கிகளுக்கு மாத்திரம்
அனுமதியிருக்கிறது.
திறந்து வைத்தவர்களே
ஓதிப் படித்தவர்கள்தானே..?

நாம்
வட்டி வங்கிகளுக்கு
வாசல்களைத் திறந்து கொடுத்து விட்டு
கூடாது என்று
கோசம் போடுவதில்
என்ன பயன் இருக்கிறது..?

வட்டி ஒழிப்பு மகாநாடு
ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்து
வாய் கிழியக் கத்துகிறோம்
ஒரு நாளாவது
வட்டி வங்கிகளே வெளியேறென்று
வாசலுக்காவது வந்துள்ளோமா..?

செக்கை வைத்து
வட்டித் தொழில் செய்து
பலரைச் சிலர்
சிக்கலுக்கலுக்குள்
சிறை வைத்திருக்கிறார்கள்.!

வட்டிக்குள் மாட்டிய சிலர்
சிறிய குழியை மூடுவதற்காக
பெரிய குழிகளை வெட்டி
அதற்குள்ளே வீழ்ந்து
அறுதியாகிப் போனார்கள்

வட்டிக்கு
தான் கொடுப்பதே பாவம் என்று
இன்னும் சிலர்
அந்நியர் மூலம்
அதனை நம்மவருக்கே கொடுத்து
அதிக இலாபம் பெறுகிறார்கள்.

கொடுமைகளில் மிகக் கொடுமை
இந்த வட்டியை
கொடுப்பவன் வாங்குபவன்
உண்ணுபவன்
அதற்காய் கணக்கெழுதுபவன்
சாட்சிக்கு நிற்பவன்
அத்தனை பேரையும்
அல்லாஹ் சபிக்கிறான் என்பது
அண்ணல் நபியின் அமுத வாக்காகும்.

ஒரு திர்ஹம் வட்டி
அல்லாஹ்விடத்தில்
முப்பத்தி ஆறுமுறை
விபச்சாரம் செய்த குற்றத்தை விட
கொடியதாகும்.
இதுவும் கோமான் நபியின் கூற்றாகும்.

வட்டிக்கு
தொன்னூற்றி ஒன்பது வாயில்கள்
தாழ்ந்தது
தன் தாயோடு ஸினாச் செய்யப்
போவது போன்றாகும்

வட்டி வாங்குபவனுக்கு
நிரந்தர நரகம் என்பதே
இறைவனின்
நிறைவான கருத்தாகும்
இறைவா..!
வட்டியின்
வாசம்கூடப் படாமல்
எங்களை வாழவைப்பாயாக..?

(கருத்துக்குப் பொறுப்பு கவிதையாக்கியவனே)
மதியன்பன்-

தம்புள்ளையை வரைந்த ஒவியர்கள் - சில புரிதல்களின் குறிப்புகள்



தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம் தொடர்பில் நாம் பல வழிகளிலும் தகவல்களை அறிந்துள்ளோம்.

இன்னும் அறிந்தும் வருகிறோம். முஸ்லிம்களின் உறுதியான நிலைப்பாடு, பௌத்த இனவாதிகளின் தொடர் அழுத்தங்கள், பிரதமரின் துரோகம், ஜனாதிபதியின் தடுமாற்றம் என தம்புள்ளை மஸ்ஜித்  விவகாரம் தள்ளாடுகிறது. ஐ.பி.எல். கிரிக்கட் முடிவுகள் போல எதுவும் நடக்கலாம்.

 இறுதியில்...
மேற்படி நிகழ்வில் இருந்து இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இரண்டு விடயங்கள் பிரதானமாக வெளிகொணரப்பட்டுள்ளன. அதே போன்று அரசிற்கும் சிங்கள இனவாத அமைப்புகளிற்கும் ஒரு  ஒரு விடயம் தெளிவாக புரிந்துள்ளது. முதலில் முஸ்லிம்கள் தொடர்பான இரு விடயங்கள் யாதென
 பார்ப்போம்.

1) தம்புள்ளை விவகாரத்தை சர்வதேசமயப்படுத்தியதில் முஸ்லிம்களின் தொடர் ஊடகங்களின் வலிமையும் அதன் வளற்ச்சிப்போக்கும்.

 2) இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு தளத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டியதன் அவசியம்.

முன்னைய விடயம் தொடர்பாக நாம் பூரிப்பும், திருப்தியும் அடையும் வேளை, பின்னைய விடயம்  தொடர்பாக நாம் கவலை கொள்ளவேண்டியுள்ளது. இலங்கை முஸ்லிம்களிற்கான தலைமைத்துவம், அதை உருவாக்குவதற்கான தளம், அதற்கான பொறி முறை போன்றன இங்கே எழுந்து நி்ற்கும் பிரதான கேள்விகளாகும்.

சிங்கள பொளத்த இனவாதிகள் பற்றி நாம் கடுமையான சொற்பதங்களை பிரயோகிப்பதனாலோ, எழுதுவதனாலோ பிரச்சனை தீர்ந்து விடப்போவதில்லை. இந்த நாட்டின் அரசியல் பௌத்த மயப்படுத்தபட்டுள்ளது. இந்த நாட்டின் பௌத்த மதம் ஆயுத மயப்படுத்தப்பட்டுள்ளது.

 இன்னொரு சிறுபான்மையை அடக்க, ஒடுக்க, நசுக்க இந்த இரண்டு விடயங்களும் நடைபெறல் வேண்டும். அவையிரண்டும் துர்அதிஷ்டவசமாக இலங்கையில் நடந்து முடிந்துள்ளன. வெற்றிகரமான இனசங்காரத்திற்கான அனைத்து தயாரிப்புகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இனவாத சக்திகள் அரசின் கண்அசைவிற்கு காத்து கிடக்கின்றன. இதுவே இன்றைய இலங்கையின் யதார்த்தங்கள்.

ஓர் அரசியல் கட்சியின் துரோகம்தம்புள்ளை விவகாரத்திற்கு பின்புலத்தில் சில நிகழ்வுகள் மறைந்துள்ளன. நாம் பார்த்த சுமங்கள ஹாமத்துருவிற்கு பின்னால் இந்த நாட்டின் ஒரு அரசியல் கட்சி தன் கரங்களை நீட்டியுள்ளது.

 ஜெனீவா  நிகழ்வுகளின் விளைவில் வந்த சில விடயங்கள், முஸ்லிம்களை இந்த நாட்டின் நன்றியுள்ள மக்கள் என சிங்கள மக்கள் ஒப்புகொள்ளும் நிலைக்கு தள்ளியுள்ளது. அரசும் முஸ்லிம்களை புகழ்ந்து அவர்களுடன்  நெகிழ்வான ஒரு போக்கை கடைபிடிக்க முற்பட்டது. இதன் விளைவாக முஸ்லிம்கள் ஆளும் அரச தரப்பின் பக்கம் மொத்தமாக சாய்ந்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக, முஸ்லிம்கள் அரசை வெறுக்கும்  நிலைக்கு தள்ளப்படல் வேண்டும் என்ற திட்டத்தின் மறு வடிவமே தம்புள்ள விவகாரம்.

 தங்களிற்குள் பல கோஷ்டி சண்டைகள், உட்பூசல்கள் காரணமாக தமது இருப்பை தக்க வைக்க முடியாத அந்த அரசியல்  கட்சியிடம் எஞ்சியிருந்தது உறுதியான காலம் காலமாக வாக்களிக்கும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியே.
அதையும் இழக்க அவர்கள் தயாரில்லை. தம்புள்ளைக்கு தங்கள் கட்சிசார் காலி பிரதேச முஸ்லிம் விரோத அங்கத்தவர்களை ஒன்று திரட்டியே மேற்படி நிகழ்வை செய்து முடித்தனர்.

முஜிபுர் ரஹ்மான்
மேல்மாகான சபை முஜிபுர் ரஹ்மான் நாம் அறிந்த நபர். போராட்டகாரர். கொழும்பு முஸ்லிம் அரசியலில்  தவிர்க்க முடியாத சக்தி. சகதி என்றும் சிலர் சொல்வார்கள். வெள்ளிக்கிழமை தம்புள்ளை மஸ்ஜித் ஆக்கிரமிப்பு விவகாரம் நடைபெற்று முடிந்த மறு நிமிடமே ஸ்ரீ கொத்தாவில் வைத்து இவரால் ஒரு ஊடகவியளாலர் சந்திப்பு நடாத்தப்பட்டது.

 அதில் தம்புள்ளை விவகாரம் பற்றி காரசாரமாக அரசை சாடிய ரஹ்மான் ஜெனீவாவிற்கான பிரதிபலன் இதுவா என கேள்வி எழுப்பினார். அரசு முஸ்லிம்களிற்கு துரோகம் செய்துள்ளது என அழுத்தமாக கூறினார். சம்பவம் நடந்த அரை மணித்தியாளங்களுல் சம்பவம் தொடர்பாக முழு அறிக்கை வாசித்ததன் உட்புலம் பல கேள்விகளை எழுப்புகிறது இங்கே.

ஜம்மியத்துல் உலமாவிற்குள் புகுந்த இளைஞர் கோஷ்டி
 அங்கே தம்புள்ளையில் இனவாதிகளின் அட்டகாசம். இங்கே முஜிபுர் ரஹ்மானின் தம்புள்ளை முழக்கம்.  இவையிரண்டிற்கும் இடையில் இரண்டு ஆட்டோக்களில் வந்த இளைஞர்கள் “ரிஸ்வி முப்தியை” தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஜம்மியதுல் உலமா சபை இதை கப்சிப் என்று மறைத்து விட்டது. ஆனால்  இந்த இளைஞர்கள் வழைத்தோட்டத்தில் ஒரு இடத்தில் அணி திரண்டு புறப்பட்டு வந்து ஜம்மியதுல் உலமா சபையிடம் ஜெனீவா விவகாரம் தொடர்பாக பிரஸ்தாபித்து இதற்கு முடிவு வேண்டும் என எச்சரித்து  சென்றனர்.

சொற்ப நிமிட இடைவெளியில், ஏன் பல முஸ்லிம் ஊடகங்களிற்கே தகவல்கள் சரியாக கி்டைக்காத கால இடைவெளியில் இவர்களிற்கு எவ்வாறு துல்லியமாக தகவல்கள் கிடைத்தன? ஜெனீவா விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி, தம்புள்ளை விவகாரத்திற்கான தீர்வையும் எப்படி சொல்ல முடிந்தது..?

 இவர்கள் தான் மீண்டும் தெவட்டகஹா மஸ்ஜித்தில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி முடித்தனர். இவர்களின் முஸ்லிம்கள் தொடர்பான  உண்ர்வினை மஸ்ஜித் ஆக்கிரமிப்பு தொடர்பான கவலையினை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஒரு  உணற்சிபூர்வமான முஸ்லிமாக செயற்பட்டுள்ளனர். அது பெரிதும் வரவேற்கதக்கதே. ஆனால் இதற்கு பின்னால்  இவர்களை இயக்கும்  இன்னொரு பேரினவாத அரசியலை இவர்கள் புரிய மறுப்பது, அல்லது புரிந்தும் சில வாய்ப்புகளிற்காக அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுவது தவறானது என்பதனையே  சுட்டி காட்ட விரும்புகிறேன்.

முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்கள் மீதான பிரச்சனையை செயற்படுத்தும் பயங்கரமான அரசியல்வாதிகள்  உள்ள தேசம் இது. இப்போது அந்த பிரச்சனையை ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத இயக்கங்கள் கையில் எடுத்துள்ளன. அதை தேசியரீதியிலான பிரச்சனையைாக மாற்றுவதில் முனைந்து நிற்கின்றன. இலங்கை முழுவதற்குமான புனித பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் பள்ளிவாயல்கள் பற்றிய சூடான விவாதங்களை திட்டமிட்டு நடாத்துகின்றன. இலங்கையை மியான்மாறாக மாற்றும் அவர்களின் கனவு திட்டத்தை நிறைவேற்ற இதனை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளப்பார்க்கின்றனர்.

தம்புள்ளை நிகழ்வில் சிங்கள அரசிற்கும், இனவாத அரசியல் கட்சிகள், இயக்கங்கள் போன்றவற்றிற்கும் இந்த விவகாரத்தின் பின்பு ஒரு விடயம் பளிச்சென புரிந்துள்ளது. அது “முஸ்லிம்களின் எல்லை கடந்த ஊடக பலம்”.
கட்டுப்படுத்த முடியாத, தணிக்கை செய்ய முடியாத அளவில் அவர்கள் தகங்களிடையே ஊடக வளங்களை கொண்டுள்ளனர். குறிப்பாக இன்டர்நெட் இதில் பெரிய பலம். அல்-ஜெஸீரா முதல் லண்டன் பீ.பீ.சி. வரை அவர்கள்
 இந்த பிரச்சனையை எடுத்து சென்றுள்ளனர்.

சில நாட்களிற்கு முன்பு பென்சில்வேனியா (யூ.எஸ்) நகரில் உள்ள டெம்பிள் யூனிவர்சிட்டி அரசியல் கற்கைகளிற்கான பேராசிரியர் ஏ.ஆர்.எம். இம்தியாஸ், பால்ய நண்பர்.  தம்புள்ளை விவகாரம் தொடர்பாக திடீரென பேசினார்.
 தான்  அதனை இலகுவாக “யாழ் முஸ்லிம்”  இணையத்தின் ஊடாக தொடராக பெற்று கொண்டதாகவும் பின்னர் அதனை  அடிப்படையாக கொண்டு பல ஆங்கில கட்டுரைகளை தம்புள்ளை விவாகாரம் தொடர்பாக எழுதியதாகவும் கூறினார். தான் எழுதிய கட்டுரைகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவி நின்றதாகவும் ஆதாரப்படுத்தினார்.

 இந்த வகையில் இலங்கையின் விவகாரங்கள் எங்கிருந்தோ வெளியிடப்பட்டு எங்கிருந்தோ உள்வாங்கப்படும் அளவிற்கு நாம் வளரந்து நிற்கிறோம்.
 தென்னிந்திய பிரபல ஆசிரியர் மார்க்ஸ். அவர் சில தம்புள்ளை தொடர்பான  பதிவுகளை எனக்கு அனுப்பி வைத்தார். அவையனைத்தும் நம்மவர்கள் உலகிற்கு எடுத்துச் சென்ற செய்திகளே. ரஷ்யா டுடே எனும் சோவியத் ரஷ்யாவின் தொலைக்காட்சி தம்புள்ளை விவகாரத்தை செய்தியாக விவரித்து இருந்தது. இதனை அவர்கள் பெற்றுக்கொண்ட ஆதார வழி இலங்கை முஸ்லிம்களின் புளொக்களில் வெளியான செய்திகளே. அதன் மொழி பெயர்ப்புகள் தான் ரஷ்யா டுடேயின் செய்தியாக மாறி நின்றது.
 இது தான் இன்றைய எமது பலம். இதனை இல்லாமல் செய்ய சிங்கள இனவாத சக்திகள் தங்களின் அனைத்து வழங்களையும் திரட்டி செயற்படுவர். அதற்கு பின்பே அடுத்த தம்புள்ளையில் கையை வைப்பார்கள்.

 நாம் அவசரமக சில புரிதல்களிற்கு முன்வரல் வேண்டும். இன்றைய இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகள் என்பது பிரதேச சாயங்களிற்கு அப்பால் முழு இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை என உணரப்படல் வேண்டும்.

 அப்படியென்றால் தான் எமது பிரச்சனைகைள் முழு முஸ்லிம் உம்மாவின் பிரச்சனை என்பது உணரப்படல் முடியும்.

 நாம் நிறைய சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இலங்கையின் முஸ்லிம் பதிவர்கள், இணையங்களை நடத்துவோர் ஒரு குடையில் அணி திரட்டப்பட்டு அவர்களிற்கான வழிகாட்டல் வழங்கப்படல் வேண்டும். நாம் திட்டமிட்டு உருவாக்காத ஆனால் இனவாதிகளை  திணறடிக்க வைத்த எமது ஊடக பலம் செம்மையாக வழிநடாத்தப்படல் வேண்டும். அதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்புகளையுடைய பலமான முகாமாக மாற்றப்படல்
 வேண்டும்.

 சிங்கள பேரினவாதத்தால் சிங்கள தேசத்திலேயே கர்ஜிக்க முடியும். அது சுவிற்சர்லாந்தின் பனி முகடுகளில் ஒரு போதும் எதிரொலிக்க போவதில்லை...!

அபூ ஹம்ஸா

முஸ்லிம் விரோதி நிக்கொலஸ் சர்கோசி மண் கவ்வினார் - பிரான்சொஸ் கொலண்டே ஜனாதிபதி


பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் சர்கோசி இரண்டாவது முறையாகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சோஷலிஸ்ட் கட்சி சார்பில், பிராங்காய்ஸ் ஹோலண்டே போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.


ஹோலண்டே 52%

சர்கோசி 48%

அனைவரும் பரபரப்பாக எதிர்பார்த்திருந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்றைய இரண்டாம் சுற்றுத் தேர்தலின் முடிவில் François Hollande 52% மான வாக்களுடன் பிரான்சின் ஐந்தாவது குடியரசின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட Nicolas Sarkozy 48% மான வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்.

ஜனாதிபதியாக இருந்து தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியமை இதுவே முதற் தடவையாகும்.
கிட்டத்தட்ட 81 சதவீதமான மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர். 2007 இல் 83.97 சதவீதமான மக்கள் வாக்களித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு மக்கள் எதிர்பார்த்த ஒரு புதியமாற்றம் இன்று நிகழ்ந்துள்ளது.
முதல்கட்ட தேர்தலில் அதிபர் சர்கோசி 2 சதவீதம் வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளார். அதை தொடர்ந்து அவர் 2-வது கட்ட தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நிக்கொலஸ் சார்க்கோசி ஜனாதிபதியாக இருந்தவேளை முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கு எதிரான கருத்'துக்களை பகிரங்கமாக கூறிவந்தமையும், இவரின் ஆட்சிக் காலத்திலேயே பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் சகோதரிகள் அணியும் பர்தாவுக்கு தடை கொண்டு வரப்பட்டமையும் இங்கு கவனிக்கத்தக்கது. 

தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி பேட்டியின் தமிழ் வடிவம்

 தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ சுமங்கள தேரரை சண்டே லீடர் ஊடகவியலாளர் நிரஞ்சலா ஆரியவன்ஷா சந்தித்து பேட்டி கண்டுள்ளார் . அதிகார தோரணையில் அந்த பெண் ஊடகவியலாளரையும் மிரட்டியுள்ள தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி. தனது 65 ஆண்டுகால மஸ்ஜிதுக்கு எதிரான வன்முறைகளையும் நியாயப்படுத்தியுள்ளார். அவர் வழங்கியுள்ள பேட்டியின் முக்கிய பகுதிகளை தமிழில் உங்களுக்கு வழங்குகிறோம் : இன்றைய சண்டே லீடர்:

நிரஞ்சலா : நீங்கள் விகாரையின் நிலத்தில் இருப்பதாக சொல்லப்படும் ஒரு பள்ளி கட்டிடத்தை எதிர்த்து இரண்டாவது தடவையும் கவனத்தை பெற்றுள்ளீர்கள். இந்த ஆர்பாட்டத்தில் இருந்தும் எதிர்காலத்தில் பின்வாங்குவீர்களா ?
இனாமலுவ: இல்லை ஒரு தடவை நாம் பாடம் கற்றுகொண்டோம். இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பதை கற்றுகொண்டோம். யாராவது , எதேச்சாதிகாரமாக ஆட்சி செய்தால் , அது ஜனநாயகத்திற்கு எதிராக இருந்தால் , நாங்கள் உயிருக்கு பயப்படாமல் அதை எதிர்ப்போம் .
நிரஞ்சலா : எப்படி ஜனநாயகம் இல்லாத ஒரு அரசாங்கத்தை எதிர்க்க முடியும் என்று கருதுகிறீர்கள் ?
இனாமலுவ: அதை நாம் அண்மையில் காண்பித்தோம்’.
நிரஞ்சலா :வன்முறை மூலமாகவா ?
இனாமலுவ: ஆம் , அது பகுதியளவில் உண்மையானது . நாம் அமைதி பூர்வமாகவே -ஆர்பாட்டத்தை- ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் உணர்ச்சி அதிகரிக்கும்போது அதை கட்டுப்படுத்த முடியாது போய்விட்டது . இதை தேசிய மட்டத்திலும் , சர்வதேச மட்டத்திலும் காணலாம் தீவிரவாதிகளான பின் லாடன் போன்றவர்கள் என்ற செய்தார்கள் ? அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய இரத்தம் சிந்தினார்கள் .அதுதான் உண்மை .
எங்கள் மக்கள் பெளத்த கலாச்சாரத்தை சூழ கனவுகளையும் , எதிர்பார்ப்புகளையும் கட்டியுள்ளார்கள் அவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள் ஆனால் இங்கு அந்த பொறுமை சற்று ஓரத்தில் வைக்கப்பட்டது. நான் இதை வன்முறையாக பார்கவில்லை .
நிரஞ்சலா : பௌத்தம் பொறுமையை போதிக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு பகுதி பௌத்தர்களுக்கு எதிர்மறையாக செயல்பட தலைமை தாங்கினீர்கள் அது ஏன் ?
இனாமலுவ: இல்லை. அதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது .இது அரசாங்கம்தாம் அப்படியான செயலை செய்தது . 30 வருடங்களுக்கு முன்னர் விகாரையையும் அதனை சூழவுள்ள நிலத்தையும் பாதுகாக்க ஒரு திட்டம் இருந்தது . அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தாததன் மூலம் அரசாங்கம் மக்களை -ஆர்பாட்டதிற்கு – நிற்பந்தித்துள்ளது . அவ்வாறு செய்வதற்கு மக்கள் என்னை வேண்டினார்கள் என்று நீங்கள் கூறினால் அது சரியானதாகும் . அதற்கு அரசாங்கமும் பொறுப்பு கூறவேண்டும் .
நிரஞ்சலா : இந்த ஆர்ப்பாட்டம் அவசரமாக செய்யப்பட்டது இல்லை என்பதை கூறினீர்கள். பௌத்தர்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு .அரசாங்கம் அவர்களை பொறுமையற்றவர்களாக ஆக்கியுள்ளது. அரசாங்கமே இதற்கு பொறுப்பு என்றும் கூறினீர்கள் அதன் பின்னர் இஸ்லாத்தை பரப்ப எப்படி பின் லாடின் வன்முறையாக செயல்பட்டார் என்று கூறுனீர்கள். அப்படியானால் மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்று நம்புகிறீர்களா ?
இனாமலுவ: ஆம் நீங்கள் கூறியது உண்மை , அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் , ஆனால் 20 ஆம் திகதி இரத்தம் சிந்தப்படவில்லை .
நிரஞ்சலா : 20 ஆம் திகதி நீங்கள் ” இன்று நாங்கள் எங்கள் கையில் பெளத்த கொடியுடன் வந்தோம் . ஆனால் அடுத்த முறை இது வித்தியாசமாக இருக்கும்” என்று பகிரங்கமாக கூறினீர்கள். அப்படியானால் அடுத்த முறை மதவன்முறை ஏற்பட்டு ,இரத்தம்சிந்தும் நிலை ஏற்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு கூறுவீர்களா ?
இனாமலுவ: அதற்கான பொறுப்பை இந்த நாட்டின் செயலற்ற ஆளும் தரப்புதான் பொருப்பு கூறவேண்டும் . இந்த பள்ளியை பற்றி அவர்களின் அரசாங்கத்தின் முஸ்லிம் தலைவர்கள் பொய்களை பரப்புகிறார்கள் .இந்த நாட்டின் பிரதமர் இதன் மீது ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளார் என்பதை அவர்கள் கண்டிப்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் .
பிரதமர் இந்த நாட்டின் இரண்டாவது குடிமகன். அவர் பெளத்த சாசன அமைச்சரும் கூட. அவர் அரசாங்கத்தின் முடிவை பிரதிபலித்துள்ளார். அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ளவர்கள், அமைச்சரவையில் தம்புள்ளையை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அந்த தீர்மானதிற்கு எதிராக செயல்படமுடியுமா ? அமைச்சர் ஜானக பண்டார தென்னகோன் கூறுகிறார். அந்த பள்ளி அகற்றப்பட்ட மாட்டாது என்று , பிரதமர் கூறுகிறார் அந்த பள்ளி அகற்றப்படும் என்று ,அமைச்சர் ரவூப் ஹகீம் அந்த பள்ளி தொடந்து இருக்கும் என்று கூறுகிறார். இது அரசாங்கம் பிளவு பட்டுள்ளதை கட்டுகிறது , அத்துடன் அரசாங்கத்தில் பிரதமரை விடவும் பெரிய ஆட்கள் இருப்பதை இது காட்டுகிறது ,அப்படி இருக்க முடிமா ? அரசாங்கத்தினதும், அமைச்சரவையினதும் கூட்டு பொறுப்புக்கு என்ன நடந்தது ? அதனால்தான் இந்த ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகிறோம் .
நிரஞ்சலா : நீங்கள் அமைச்சரவையின் கூட்டு பொறுப்பு பற்றி பேசும்போது நான் உங்களுக்கு இலங்கை பல மதங்களை ,கலாச்சாரத்தை ., பல இனங்களை கொண்ட நாடு என்பதை நினைவுபடுத்துகிறேன்.
இனாமலுவ: என்ன அர்த்தமற்ற பேச்சு , நீ அர்த்தமற்ற தத்துவம் ஒன்றை பேசுகிறார் . இந்த நாடு 14 மில்லியன் பௌத்தர்களை கொண்டது . எவ்வளவு முஸ்லிம்கள் இங்கு இருக்கிறார்கள் ?
உதாரணமாக தாய்லாந்தின் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் ,மியன்மாரில் பெரும்பான்மையினர் பௌத்தர்கள். கத்தோலிக்கர்கள் வத்திகானில் பெரும்பான்மையினர். அதனால்தான் வத்திகான் கத்தோலிக்க நாடு என்று கூறுகிறோம். அதேபோன்றுதான் மத்திய கிழக்கு அதிகமான நாடுகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டுள்ளது. அதனால்தான் அவற்றை இஸ்லாமிய நாடுகள் என்று கூறுகிறோம் .
நிரஞ்சலா :என்னுடைய கேள்வி இதை குறிக்கவில்லை , ஒரு நாடு பல மதநம்பிக்கைகளை கொண்டிருக்கும்போது அவைகள் சம உரிமைகளை கொடிருக்க கூடாதா ? என்பதுதான் எனது கேள்வி.
இனாமலுவ: நீ எமது பெளத்த உரிமைகளை பறித்தெடுக்க முயல்கிறாயா ? நாம் அனைவரையும் மதித்தோம், இங்கு அவைகள் அல்ல பிரச்சினை , இது பெளத்த பாரம்பரியங்களை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதுடன் தொடர்பானது .
இங்கு அர்த்தமற்ற பேச்சு தேவை இல்லை . நாங்கள் 2500 ஆண்டுகால பெளத்த வரலாற்று பாரம்பரியங்களை பாதுகாக்க போராடுகிறோம். அது எங்களுடையது. அவர்கள் அதற்கு மாற்றமாக வரலாற்று பாரம்பரியங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள். எதார்த்தத்தை விளங்கிக்கொள்வது அனைவருக்கும் நல்லது.
நான் எமது உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுக்கிறேன் , மற்றவரின் உரிமைகளை ,சொத்துக்களை பறிப்பதற்காக அல்ல .இஸ்லாமிய வாதிகள்- தம்பியா -இங்கு வேறு ஒன்றை செய்ய முயற்சிக்கிறார்கள் .அதை அனுமதிக்க முடியாது .நாங்கள் ஒருபோதும் ஈராகிற்கு, மத்திய கிழகிற்கு இஸ்லாமியவாதிகளின் உரிமைகளை பறிக்கசெல்லவில்லை. இது ஒரு கொள்ளை. நீ இந்த முழு நாட்டிற்கும் இந்த நிலையை தெளிவாக சொல் .
நிரஞ்சலா : நீங்கள் ஒருவரின் உரிமைகளை பாதுகாக்க போராடும்போது மற்றவரின் உரிமையை மீறுகிறீர்கள் ?
இனாமலுவ: நீ பௌத்தர்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறாயா ?
நிரஞ்சலா : இல்லை . அவர்கள் பள்ளி 1962 ஆம் ஆண்டில் இருந்து இருப்பதற்க சொல்கிறார்கள்
இனாமலுவ: மூன்றாவது கண்னை கொண்ட ஒருவனை போன்று உன்னுடன் நான் பேசுவேன் .நான் உலகில் என்ன நடந்து கொடிருக்கிறது என்பதை பேசுகிறேன் .நான் உலகளாவிய ரீதியில் என்ன நடக்கிறது என்பதை ஒப்பிடுகிறேன் . உலகளாவிய ரீதியில் இஸ்லாம் மேலோங்கிக் கொடிருக்கிறது . சில சிங்கள பெயர் தாங்கிகள் அவர்களுக்கு கைகொடுகிறார்கள். நீ அப்படி செய்யவேண்டாம் என்று உன்னை கோருகிறேன் .
நிரஞ்சலா :உலகமயமாக்களில் நம்பிக்கை கொண்டவர் என்ற வகையில் ‘கலப்பற்ற இனம்’ தத்துவத்தை ஏற்று கொள்கிறீர்களா ?
இனாமலுவ: மிகச் சரியான கேள்வி : நான் உலகமயமாக்களை ஏற்று கொள்கிறேன். அதேபோன்று -மாற்று இன -இரத்தக் கலப்பற்ற சிங்கள இனமொன்றும் உண்டு என்று நம்புகிறேன். என்னை நான் அவ்வாறான ஒருவனான நம்புகிறேன் . ஆகவே யாராவது உங்களை போன்று கலப்பற்ற இனம் இல்லை என்று கூறினால் அதற்கு ஒருவன் காரணங்களை கூறினால் , நான் நினைக்கிறேன் அவர்கள் -மாற்று இன இரத்தக் கலப்பை கொண்டவர்கள். அதாவது அங்கு ஒரு வகை கலப்பு உண்டு என நினைக்கிறேன், அப்படியானவர்கள் கண்டிப்பாக தம்பி முதியன்சலாகே போன்ற பெயர்களை தங்களது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில் வைத்துகொள்ள வேண்டும் .

M.ரிஸ்னி முஹம்மட்: