கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

UYK இவர்களது சேவையை நாமும் வாழ்த்துவோம். (முன்மாதிரி)

அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு எமது நிறுவனத்தினால் கஹடோவிட்ட அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வரிய மாணவர்களுக்கு School Shoes பெற்றுக் கொள்வதற்கான குறிப்பிட்ட தொகை பெறுமதியான Gift Vouchers "Uplift" education project எனும் தொனிப் பொருளில் முதற் கட்டமாக 30.05.2016 நேற்று பாடசாலை அதிபர் ஜனாப் அப்துல் காதர் மற்றும் உப அதிபர் ஜனாப் நுஸ்ரத் ஆசிரியர் அவர்களிடம் பாடசாலை அதிபர் காரியாலயத்தில் வைத்து எமது நிறுவன தலைவர் M.I.M IHSAN மற்றும் துணை செயலாளர்M.I.A JAZEEL மற்றும் இதர உறுப்பினர்களினால் கையளிக்கப்பட்டது.
இதற்கு அனைத்து வகையிலும் உதவிய நல் உள்ளங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக.
மென்மேலும் இது போன்ற உதவிகளைப் பெற்றுக் கொடுத்து சிறந்த ஒரு இளைஞர் சமுதாயத்தை உறுவாக்க முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்...

அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் பழைய மாணவிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக பழைய மாணவிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) பாடசாலை உப அதிபர் எம்.ரி.எம்.நுஸ்ரத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வருவோர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
உப தலைவி: எம்.ரி.எப்.நஸ்மியா
செயலாளர்: எஸ்.சி.எப்.நப்லா
உப செயலாளர்: எம்.என்.எப்.நிப்ரா
பொருலாளர்கள்: எம்.யு.எப்.ரிஸ்மியா, எம்.ரி.எப்.ரிப்கா
கமிட்டி உறுப்பினர்கள்:
1.எம்.என்.எப்.சிஜாரா
2.எம்.என்.எப். பகீஹா
3.எம்.ஐ.எப்.ரிஸ்னா
4.எம்.எம்.எப்.ரிஸ்னா ஆசிரியை
5.எம்.ஐ.எப்.ஜெஸ்லா
6.எம்.ரி.எப்.சம்ரூஸா ஆசிரியை
7.ஏ.ஆர்.எப்.ரயீஸா ஆசிரியை
8.எம்.என்.எப்.நஸ்ரின் ஆசிரியை
9.எம்.பி.எப்.சுல்பா ஆசிரியை
10.சானாஸ் ஆசிரியை
11.யாகூதுன் நிஸா ஆசிரியை

இங்கே பிரச்சனை ஒரு முதலமைச்சர் படைத்தளபதிக்கு ஏசியது அல்ல.

முதலமைச்சரினால் படை அதிகாரிக்கு
Just get out from here.
Idiot
If u don't know what is protocol is just get out from here.
Who the hell are you talk me?
முதலமைச்சரினால் ஆளுனருக்கு.
Even you governor you don't know the protocol.
I respect the excellency of the president of course
Much more than there is a protocol in this province and you should know about it. You should know the protocol.
Idiot என்ற வார்த்தையைத் தவிர வேறெதனையும் பெரிய தவறாக இங்கு குறிப்பிடமுடியாது.

அதுவும் தனது உரிமை அல்லது கௌரவத்துக்கு கேடு விளைவிக்க நினைத்த ஒருவருக்கு இந்த வார்த்தை பிரயோகமும் சாதாரணமானதே!
இங்கே பிரச்சனை ஒரு முதலமைச்சர் படைத்தளபதிக்கு ஏசியது அல்ல. இதற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் விமல் வீரவன்ஷவின் கூட்டத்தை தடுக்கப்போன பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏசியது. பிக்குமார் தூசன வார்த்தைகளால் ஏசியது என எவ்வளவோ நடந்துள்ளது.
இங்கே பிரச்சனை ஒரு முஸ்லீம் ஒரு சிங்களவருக்கு ஏசியதுதான். இதையறியாமல் மு.காங்கிரசுடனுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை வைத்துக்கொண்டு நாமே அதை விமர்சிப்பதும் நமது சந்தர்ப்ப அரசியல் வாதிகள் இதில் குளிர்காய எத்தனிப்பதும் நமக்கு நாமே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் ஒரு செயலாகும்.
You should know the protocol என்று முதலமைச்சர் சொல்வதுதான் முழுப்பிரச்சனையுடைய சாராம்சம்.
Protocol என்பதன் நேரடி அர்த்தம் நெறிமுறை என்றிருந்தாலும் ஓர் அதிகார மட்டத்தில் இது இராஜதந்திர நிர்வாக கட்டமைப்பு நெறிமுறைகளைப் பேணுவதைக் குறிக்கும். தனது அதிகாரத்துக்குக் கீழுள்ள ஒரு மாவட்ட பாடசாலையில் அதுவும் ஒரு வெளிநாட்டுத் தூதுவர், மாவட்ட ஆளுனர் அழைக்கப்படும் வைபவத்தில் அம்மாகாண முதலமைச்சர் புறக்கணிக்கப்படுவது தெளிவான நெறிமுறைப் பிரழ்வே! அவர்களுக்கு அங்கே Protocol பற்றி முதலமைச்சர் பாடமெடுத்ததில் தப்பேதும் இல்லை
ஆனால் இங்கே மிகப்பெரிய துரதிஷ்டம் இதுவரை எமது பக்க நியாயங்களை சொல்ல ஒர் ஊடகத்தைப் பெற்றுக்கொள்ளாத ஊடக வங்கரோத்து நிலையில் இலங்கை முஸ்லீம் சமூகம் இன்னும் இருப்பதுதான். சில தசாப்தமாக முஸ்லீம்களுக்கான ஊடக அவசியம் பற்றி பலர் பேசினாலும் அது ஓர் எட்டாக்கனியாக இன்றுவரை இருப்பது வேதனைக்குறியது. சில வருடங்களுக்கு முன் (யுத்த காலத்தில்) இரவோடு இரவாக கொழும்பிலுள்ள வடபுல தமிழர்கள் இரானுவத்தினரால் வெளியேற்றப்பட்டனர். இதை அவர்களுக்கென இருந்த ஓர் ஊடகம் தூக்கிப்பிடிக்க கொழும்பிலிருந்து களைக்கப்பட்ட அத்தனை பேரும் 24 மணித்தியாலயத்திற்குள் கொழும்புக்கு அழைக்கப்பட்டார்கள். இன்றைய காலத்தில் ஊடகங்களுக்கு பெரும் பெரும் இராச்சியங்களையே கவிழ்க்க முடியம் என்பது அரபு வசந்தந்தின் போது நாம் கண்டதே!
நாம் பயன்படுத்தும் சமூக தல ஊடகங்களும் எமது தாய் மொழிக்குள்ளும் எமது சமூகத்துக்குள்ளும் சுருங்கியுள்ளதும்,
அதிலும் அதிகமாக பிக்கு பள்ளி கட்ட சீமேந்து வாங்கித்தருவதாக சொன்ன செய்தியும், முட்டையிலிருந்த அல்லஹ் என்ற எழுத்தும், KITO வை ஆராய்ந்து அதில் அல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்ததை கண்டுபிடித்த சாமர்த்தியங்களும் இன்னும் இயக்க சண்டைகளிலாலுமே தேங்கிப்போயுள்ளது வருத்தமளிக்கிறது.
Abdul Careem - Facebook

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குடும்பத்தினருக்கு இன்று போதாத காலம்

அவரது நம்பிக்கைக்குரிய பொலிஸ் அதிகாரி அனுர சேனநாயக்க நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மறுபுறத்தில் வலது கரமாக இருந்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டு பிணையில் வெளிவந்துள்ளார்.
இன்னொரு வலது கரம் லலித் வீரதுங்க பொலிசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்குள் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருக்கின்றார்.
நிதிமோசடிகளுக்குத் துணைபோன மேலதிக செயலாளர் காமினி செனரத் விசேட விசாரணைப் பிரிவில் முழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றார்.
இவை எல்லாவற்றையும் விட யோசித்தவின் காணிக் கொள்வனவு மோசடிகள் தொடர்பான விசாரணைகளும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அவர் தனது பாட்டியொருவரின் பெயரில் 14 இடங்களில் பெறுமதியான காணிகளை வாங்கிப் போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
வயோதிகப் பாட்டியுடன் யோசித்தவும் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவில் திகைத்துப் போய் உட்கார்ந்து கொண்டிருக்கின்றார்.
facebook - Ashroffali Fareed

ஒரே மழை மூன்று வெள்ளங்கள் - முபாரிஸ் ரஷாதி

கடந்த சில நாட்களாக பொழிந்து
வந்த அடை மழை நாட்டிலுள்ள மூன்று தரப்பினர்களிடையே மூன்று விதமான வெள்ளங்களை ஏற்பட்டுத்தியுள்ளன
முதலாம் தரப்பினர்
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும்.
அவர்களுக்கு அது பலத்த பாதிப்புக்களை
உண்டு பண்ணியது
அதிலே பொறுமையாக இருந்தமைக்கு நிச்சயம் அவர்களுக்கு இறைவனிடம் மகத்தான கூலிகள் உண்டு.
இரண்டாம் தரப்பினர்
மனித நேய வெள்ளத்தால் அடிபட்டு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் வெள்ளம் போல் பாய்ந்து வந்து உதவி செய்தவர்கள் , இரவு பகலாக உழைத்தவர்கள்
நிச்சயம் அவர்களுக்கும் இறைவனிடம் மகத்தான கூலிகள் உண்டு.
மூன்றாம் தரப்பினர்
முஸ்லிம்களின் மனித நேயப் பணிகளால் பிற மத சகோதரர்களின் இதயங்களில் ஏற்பட்ட இஸ்லாமிய வெள்ளம்
இந்த வெள்ளத்தின் விளைவால் நிச்சயம் அவர்கள் இந்த தூய மார்க்கத்தின் கொள்கையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.
இலங்கையில் இஸ்லாம் மனித நேயப்பணிகளால் பரப்பப்பட்டது என்ற நாளைய வரலாற்றுக்கு சான்று பகர்வார்கள்
இன்ஷா அல்லாஹ்
- நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி
ஹதீஸ் துறை விரிவுரையாளர்
பாதிஹ் கல்வி நிறுவனம் - திஹாரி
23-05-2016

அல் ஹம்துலில்லாஹ் கஹடோவிட மக்களின் உதவிகள் அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மள்வானை மக்களை அடைந்தன.

கஹடோவிட இளைஞா்களால் அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகள் வழங்குவதற்கான செய்ற்திட்டத்தின் முடிவில் சுமார் 150 000 ரூபாய் பணமும், உலர் உணவுப் பொருட்கள், உடைகள் போன்றன சேகரிக்கப்பட்டிருந்தன.  
நேற்றிரவு  இதனை தரம்பிரித்து பொதியிடும் நடவடிக்கைகள் அல்பத்ரியா ம.வி நடைபெற்றது. 
இன்று காலை பொதியடப்பட்ட பொருட்களுடன் எமது இளைஞர்களும் வெள்ள அணர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மள்வானை பிரதேசத்தை நோக்கிப் பயனித்ததைகாணக்கூடியதாக இருந்தது. 





ஊா் வெள்ளம் வற்றியது, இரவோடு இரவாக அயல் ஊர் மக்களுக்காக நிவாரணங்கள் சேகரிப்பு (கஹடோவிட மக்களின் முன்மாதிரி)

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட  பிரதேசங்களில் கொழும்பு, கம்பஹா, கழுத்துரை போன்ற பிரதேசங்கள் குறிப்பிடத்தக்கதாகும். எனவே  பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு வழங்குவதற்காக கஹடோவிட வாழ் மக்களிடமிருந்தும் நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  களத்தில் பெரும் திரளான இளைஞர்கள் வீடுவீடாக சென்று நிவாரணப் பொருட்கள் சேகரிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.  
உலர் உணவுப்பொருடு்கள் ஆடைகள் சிறுவர் உடைகள் அல்லது பண உதவி என்பனவே தற்போது அவசியமாகத் தேவைப்படும் பொருட்களாகும் எனவே இம் மகத்தான பணிக்கு உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி அம்மக்களின் துயரத்தில் பங்கெடுப்போம்.  


கஹடோவிடாவின் வெள்ள நிலவரங்கள் (Updates)

கடந்த 14.5.2016 ம் திகதி சனிக்கிழமை   இரவு முதல் பெய்த மழை காரணமாக கஹடோவிடாவின் பிரதான பாதை வெள்ளத்தினால்  முழ்கடிக்கப்பட்டுள்ளது.


இப்பெருவெள்ளம் முன்றாவது நாளாக  இன்னும் வற்றாது காணப்படுகிறது, சுமார் 300 பேரளவில்  இவ்வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட  இம் மக்களுக்கு  உணவு ஏனைய வசதிகளை கஹடோவிட  இளைஞர் குழுவினர்  ஊர்மக்களின்  ஆதரவுடன்  தொடர்தும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அத்துடன் அத்தனகல்ல பிரதேச செயலகத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  உலர் உணவுப் பொதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அது மட்டுமின்றி  வரலாற்றில் முதல் தடவையாக  பாதிக்கப்பட்ட மக்களை  சென்று பார்வையிடுவதற்காக  ஒரு படகு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும் . இப்படகை நிட்டம்புவ பிரதேச செயலகம் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாக்கத்தை எழுதும் இன்றைய தினம் 17.05.2016  காலை வெள்ள நீர் சற்று  குறைவடைந்த போதும் தற்போது கஹடோவிடாவுக்கு வடக்கு பிரதேசங்களில் தொடர்ந்தும் பெய்துவரும் மழை காரணமாக நீர் மட்டம் மீண்டும் அதிகரிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மேலும் காலைமுதல் மாலை வரை இயங்கிய 185ம் இலக்க போக்குவரத்தும் தற்போது தடைப்பட்டுள்ளது. 

தொடரும் மழை...கஹடோவிடாவின் பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பிரதான பாதை போக்குவர்த்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை பல பிரதேசங்களில் அனர்த்தங்களை ஏற்பட்டுத்தியுள்ளது. தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும்  கனமழை காரணமாக எமது ஊரின் பிரதான பாதை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. வழைமைபோன்று அவ்விடங்களிலே வசிக்கின்ற பல சகோதரர்களின்  குடும்பங்கள் மிகுந்த அல்லற்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.

காலநிலை, தொடரும் மழை இவற்றைப் பார்க்கும் போது மேலும் வெள்ள நீரோட்டத்தின் மட்டம் அதிகரிக்ககூடியதான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

கடந்த காலங்களைப் போன்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விடயங்களில் எம்மாலான ஏதாவது உதவிகள் செய்ய முற்படுவோமேயானால் அது அவா்களுக்கு பேருதவியாக இருக்கலாம். முக்கியமாக  இவ்விடயம் பள்ளிவாசல் நிறுவாகங்கள் கவனத்தில் எடுக்கவேண்டியவை.



கஹடோவிடாவில் சீரற்ற காலநிலை, தொடரும் மழை காரணமாக அயளவர் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. 3 வயது குழந்தை, தாய் பரிதாபநிலையில் வைத்தியசாலையில்.


இன்று காலை 6.30 மணியலவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  தற்பொழுது பேய்துகொண்டிருக்கும் மழைகாரணமாக வீட்டுச் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது. இடிந்த வீட்டின் சுவர் அருகில் இருந்த வீட்டின் மீது சரிந்து விழுந்துள்ளது. அப்போது அந்தக் இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் 3 வயது குழந்தை வீட்டின் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அயளவர்களின் முயற்சியினால் முழுமையாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்து குழந்தை சுமார் 20 நிமிடங்களின் பின்னர் எடுக்கப்பட்டதாகவும், தற்பொழுது தாய், சேய் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சொல்கின்றன.


மே 15 முதல் 18வரை விடுக்கப்பட்ட எச்சரிக்கை (காலநிலை)

தாழமுக்கம் காரணமாக மே மாதம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களுக்கும் மற்றும் கரையோர பகுதிகளுக்கும் கடும் காற்று மற்றும் கடும் மழை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையை அண்மித்து காணப்படும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளைய தினம் முதல் மேலும் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seve

ஜமாஅதே இஸ்லாமி பங்களாதேஷின் முன்னாள் தலைவர் மவ்லானா மோதியுர் ரஹ்மான் நிஸாமீ நேற்று தூக்கில் இடப்பட்டார்.

ஜமாஅதே இஸ்லாமி பங்களாதேஷின் முன்னாள் தலைவர் மவ்லானா மோதியுர் ரஹ்மான் நிஸாமீ நேற்று ஹசீனா கொடுங்கோன்மை அரசால் தூக்கில் இடப்பட்டார்.
ஷஹீதுகளின் தலைவரான ஹம்ஸா (ரலி) அவர்களுடன் மறுமையில் அன்னார் எழுப்பப்படட்டுமாக ஆமீன்.

"எனக்கு வயசாகிருச்சு. மவ்த்தும் நெருக்கம் தான். ஆனால் நான் ஷஹாதத்தை எதிர்பார்க்கிறேன். "

சிறையில் இருந்து மவ்லானா மோதியுர் ரஹ்மான்.