கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com
Showing posts with label இலுமினேடி. Show all posts
Showing posts with label இலுமினேடி. Show all posts

Malaysia Airlines MH-370 ன் மர்ம மறைவின் பின்னணி என்ன?

 
லேசிய விமானம் MH370-ன் மர்ம மறைவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்களும் ஊகங்களும் வெளியாகியுள்ள நிலையில் எமக்கு கிடைத்த தகவல்களின் உறுதித்தன்மைகளின் அடிப்படையில் சில விடயங்களை பகிர்ந்து கொள்வது முறையாகும் என எண்ணுகின்றோம். சில மாதங்களிற்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க உளவுத்துறை இராணுவ கொம்பிளேக்ஸ் தலிபான் போராளிகளின் தாக்குதலிற்கு உள்ளானது. இதன் போது அந்த கட்டிடம் சில மணிநேரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்த தாக்குதல் பற்றி விபரங்கள் அடங்கிய ஒரு பதிவை நாம் முன்பு வெளியிட்டிருந்தோம். உள்நுழைந்த தலிபான் போராளிகள் அங்குள்ள “ட்ரோன் கட்டுபாட்டு” மையத்தில் உள்ள உபகரணங்களையும், கனணிகளையும் கைப்பற்றி கூடவே தம்முடன் எடுத்துச் சென்றிருந்தனர். 
(Getty)

தலிபான்கள் என்றால் அழுக்கு ஆடையுடன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு கையில் கலஸ்னிகோவ்-47 இனை சுமந்து கொண்டு மலைப்பொந்துகளில் வாழும் குகைவாசிகளாகவே மேற்கின் ஊடக சித்தரிப்புக்கள் இதுவரை இருந்து வந்தன. ஆனால் மேற்கைரோப்பிய நாடுகளில் டெனிம் ட்றவ்சர்களும், டீ-சேர்ட்களும் அணிந்து  தோளில் லெப்-டொப்களை சுமந்தவாறு கசுவலாக வலம் தலபான்களை பற்றி இவர்களும் அறியவில்லை. நாமும் அறியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் முழு மேற்கைரோப்பா முதல் கனடா வரை  இயங்கும் தலிபான்களில் லொபிகள் பற்றிய விவரம் எவரிற்கும் தெரியாது. தலிபான்கள் தங்கள் பிறதேச முகாம்களை எம்பஸிகள் என்று அழைப்பார்கள். 

சர்வதேச உளவு வலையமைப்புகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளும உறவுநிலைகளையும் தலிபான்கள் பேண தவறவில்லை. அந்த வகையில் ட்ரோன் விமான கட்டுப்பாட்டு மென்பொருளும் அதன் கட்டுப்பாட்டு இயந்திரங்களும் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சீன உளவமைப்புடன் நடந்த பேரத்தின் பின்னர் பெரும் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதில் மலேசிய உளவமைப்பின் முகவர்களும் இடைத்தரகர்களாக செயற்பட்டிருந்தனர். 

சீனாவிடம் இந்த ட்ரோன் கட்டுப்பாட்டு செயன்முறை செல்லுமாக இருந்தால் முழு ஆசியா கண்டத்திலும் அமெரிக்காவினால் ட்ரோன் யுத்தம் செய்ய முடியாத நிலை உருவாகும். எந்த ட்ரோன்களும் பறக்க முடியாது. நிலைமையின் விபரீதம் அமெரிக்காவிற்கு நன்றாயவே புரிந்து இருந்தது. அமெரிக்க உளவமைப்பினர் இது எங்கு கடத்தப்பட்டது என்பதனை மோப்பம் பிடிப்பதற்கு உதவியது இஸ்ரெலின் மலேசிய மொஸாட் ஏஜேன்ட்டுகளேயாகும். இந்த கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் நேரம் இல்லை. பொருள் சீன உளவமைப்பின் கரங்களிற்கு சென்று விட்டது. அவர்களுடன் சண்டையிட்டு கைப்பற்ற முடியாது. சீனாவும் அவசர அவசரமாக அதனை மலேசியாவில் இருந்து பீஜிங்கிற்கு கொண்டு வரும் செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. இது மலேசிய அரசிற்கும் தெரிந்த விடயம். 

இந்த விமானம் காணாமல் போன மர்ம நாடகம் தொடரர்பில் இணையங்களில் வெளியான புகைப்படங்களில் இருந்தவர்கள் இருவர் இஸ்ரேலியர்கள். மற்றையவர் அமெரிக்கர். விமானியுடனான சீ.ஐ.ஏ.யின் பேரத்தின் பின்னர் தான் விமானம் புறப்பட்டது. அது நேராக டியகோ கார்சியா செல்லாமல் சுற்றுப்பாதையில் கடல் மட்டத்திற்கு பணிவாக சென்று ராடர்களின் பார்வைக்கு புலப்படாத நிலையில் மீண்டும் டியாகோ கார்சியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் மெக்கானிசமும் அதன் கொன்ரோலிங் யூனிட்டும் அதன் மென்பொருளும் மீண்டும் அமெரிக்கா வசமாகிவிட்டது. 

டியாகோ-கார்சியா பற்றி நாம் ஏற்கனவே ஒரு சிறப்பு பதிவினை வெளியிட்டிருந்தோம். பல வாசகர்களும் அதனை வாசித்திருந்தனர். இப்போது இந்த விமான கடத்தல் தொடர்பாக அமெரிக்காவிற்கோ, மலேசியாவிற்கோ, சீனாவிற்கோ எதுவும் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னைய இரு நாடுகளிற்கும் உண்மைகள் புரிந்தும் சர்வதேச அரசியல் களத்தில் தங்கள் நாட்டிற்கு பங்கம் வராமல் இருக்க மௌனம் காக்கின்றன. 

அதில் பயணித்த பயணிகள் என்ன ஆனார்கள்?, கொல்லப்பட்டு விட்டனரா போன்ற கேள்விகளிற்கான விடைகள் கிடைக்க பல வருடங்கள் ஆகலாம். ஆனால் விமானம் பத்திரமாக  டியாகோ-கார்சியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. கடத்திய அமெரிக்காவிற்கு அதன் கறுப்பு பெட்டியை கடலில் போடுவது ஒன்றும் பெரிய விடயமல்ல. கூடவே சில விமான பாகங்களையும் மனித உடல்களையும்.

- khibarthalam.

இலுமினேட்டி மர்மக்குழுவின் ரகசியங்கள்! illuminati and secret codes

இலுமினேட்டி (illuminati)! இந்த மர்மக்குழுமச் சொல்லில் புதைந்துள்ள மர்மத்தின் அடிப்படையை போன பதிவில் பார்த்திருந்தோம்.
( தவறவிட்டவர்கள் இதைசொடுகிப்பார்க்கவும்!)

இன்று இந்த மர்மக்குழு பற்றிய மேலும் சில விளக்கங்களையும், திட்டமிடல்களையும் பார்ப்போம். பின்னர், எதிர்வரும் சில மாதங்களில் நடாத்தப்பட இருக்கும் பாரிய சதித்திட்டத்தை ஆராயலாம்!
இலுமினேட்டி, உலகம் பூராவும் பல மூளைகளில் சில மர்ம நபர்களை அடிப்படையாக வைத்து இயங்கும் இவ் அமைப்பு, தமக்குள் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் தமது தனித்துவத்தை காட்டவும், பல குறியீடுகளை பயண்படுத்துகிறார்கள். இக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் எண்ணத்துடன் உலகின் பல சாதாரண அறிவுஜீவிகள் இணைந்து உருவாக்கி செயற்பட்டுவரும் அன்டி இலுமினேட்டி (anti illuminati ) இக் குறியீடுகளை வெளிக்கொண்டுவருவதில் மிகுந்த பிராயச்சித்தம் மேற்கொண்டுவருகின்றது. சில குறியீடுகளை வெளிக்கொண்டுவந்தும் உள்ளனர். அதில் முதன்மை பெறுவது “ஒற்றைக்கண்” ஆகும்!

ஒற்றைக்கண்!


இலுமினேட்டி என்ற சொல்லை தெரிந்த அனைவருக்கும் இவ் குறியீடு தற்போது தெரிந்திருக்கும்.
இங்கு படத்தில் காட்டப்படுவது தான் ஒற்றைக்கண் குறியீடு!
இவ் மர்ம குழுமம் உலகில் பரந்து வாழும் தம் அங்கத்தவர்களிடையே தொடர்புகளைப்பேணும் போது தொலைபேசியூடாகவோ இணையமூடாகவோ நேரடித்தொடர்புகளைப்பேணுவதில்லை. இவ்வாறான சில குறியீடுகளை பல வளிமுறைகளில் வெளிக்காட்டி தமது அங்கத்தவர்களுக்கு சேரவேண்டிய தகவல்களை எச்சரிக்கையோடு அனுப்புகிறார்கள். ஏன் இந்த எச்சரிக்கை? அதை பின்னர் பார்க்கலாம்!
இங்கு நாம் இன்னொரு விடையத்தை உறுதியாக அறிந்துகொள்ளவேண்டும், இலுமினேட்டி குழுமம் தமது திட்டத்தை நிறைவேற்ற முன்னர் அது தொடர்பான ஒரு சமிக்ஞை செய்தியை உலகம் பூராவும் அனுப்புகிறது. அதை அறிந்து செயற்படுபவர்கள் அழிவுத்திட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். அறியாத அப்பாவி பொதுமக்கள் அவர்களின் பார்வையில் மந்தைகள்!




13 ,33, 11, (9) இவ் எண்கள் இலுமினேட்டி குழுமத்தின் இஷ்ட எண்கள் என அன்டி இலுமினேட்டி ஆராய்வாலர்கள் உறுதியாக கூறுகின்றனர். அவர்கள் ஏன் அதைக்கூறுகின்றனர் என்பதை எதிர் வரும் பதிவுகளில் உதாரணங்களை பார்க்கும் போது விளங்கிக்கொள்வீர்கள்.

இவர்களின் தலைமைப்பீடம் எங்கு உள்ளது?
இக் கேள்விக்கு சரியான தீர்க்கமான முடிவு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றே கூறவேண்டும். ஆனால், வத்திக்கானை அடிப்படையாகக்கொண்டே இக் குழுமம் இயங்குவதாக பல அன்டி இலுமினேட்டி உறுப்பினர்கள் அடித்துக்கூறுகின்றனர்.
இது உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன!
காரணம், சில நூறு வருடங்களுக்கு முன்னர்… சுயமான சிந்தனையுடன் ” கத்தோலிக்க திருச்சபை” க்கு எதிரான விஞ்ஞான கருத்துக்களை பரப்பியவர்களை வத்திக்கான் அதிகாரம் நேரடியாகத்தண்டித்தது. ( இப்படியான கருத்துக்களைப்பரப்புபவர்கள் ” இது இப்படித்தான் என்ற வத்திக்கானின் ( இலுமினேட்டியின்) கொள்கையை மீறி ; உலக மக்களிடையே உண்மையை உறைக்கச்செய்து வத்திக்கானால் ஏற்படுத்தப்பட்டிருந்த மயையை உடைக்கச்செய்கின்றனர்.! )
அதேவேளை திரைப்படங்களூடாக “சில விஞ்ஞானிகளின் திட்டமிடல் தான் இந்த இலுமினேட்டி” என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி ” இலுமினேட்டி என்றால் விஞ்ஞானிகளின் சதி தான் ” என்று மக்களை நம்பவைத்து, விஞ்ஞானிகளின் கூற்றுக்களை அவ நம்பிக்கையடைய செய்கின்றனர்.

அடுத்து…
நடைபெறவுள்ள பாரிய அனர்த்தத்தைப்பார்க்க முன்…
2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட உலக வர்த்தகமையத்தாக்குதல் எதிர்பாராத ஒன்றல்ல… அது இலுமினேட்டி குழுமத்தின் கட்டளையின் படி நிறைவேற்றப்பட்டதே… என்பதை சான்றுகளுடனும்… அத்திட்டமிடல் தொடர்பாக அவர்கள் தம்மிடையே பரிமாறிக்கொண்ட குறியீடுகளையும் படங்களுடன் பார்ப்போம்!
தொடர்ந்து இணைந்திருங்கள்… எம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் மர்மக்குழுமத்தின் திட்டங்களை இயன்றவரை அறிவோம்…
இவ் ஆக்கத்தை பகிர்ந்து இலுமினேட்டி பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்துங்கள், அறியுங்கள், ஊக்குவியுங்கள்.
தொடரும்…

By : Chandran Pirabu (2716)

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) :அறிமுகம்



எம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்… அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்… பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம் என…
எம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு இந்த பதிவை எழுதுகிறேன்…
முதலில் அறியப்படாத ஒரு மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுமத்தைப்பற்றி பார்ப்போம்…
——————————————————————————————
இலுமினேடி (Illuminati)…
பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati ஐக்கூற வேண்டும்.
“உலகின் புதிய கட்டளை (New world order)” எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல… மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும். 20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.
தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் “கிங் மேக்கர்”களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்… லொஜிக் இல்லாதது போன்று தோன்றும்… ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன… பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்…)

யார் இவர்கள்…
நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன. 13 குடும்பங்கள் என்பது… ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது… இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள். இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப்பேணுவதில்லை… காரணம், தமது Illuminati தன்மைக்குரிய மரபணுக்களைப்பேணுவதற்காகத்தான்.
மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.

இவர்களின் நோக்கம்தான் என்ன…
சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்…
“ஒரு உலகம்.. ஒரு அரசு” என்பது தான் இவர்களின் நீண்டகாலத்திட்டம். இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்… சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரானவர்கள்… அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்…
இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்திவருகின்றனர்… அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
உதரணமாக…
சில வகை “இசை” வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்…. அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது.
மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.
(என்ன என்ன முறைகளில் இது நடை முறைப்படுத்தப்படுகிறது என்பது வரும் பதிவுகளில் தெளிவாக பார்க்கலாம்… )
முடிவில்… இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு. அதாவது… அடிமைப்படுத்த வேண்டும் என்பது.. எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும்… மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத்தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு… நீக்கப்படுவார்கள்-ஒழிக்கப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்களின் மிகப்பெரிய தலையிடி…
ஏஸியாப்பகுதியை சேர்ந்தவர்களும்…. இப்படியான பதிவுகளை வாசிப்பவர்களும் தான்… இவர்களின் மிகப்பெரிய தலையிடியாக இருக்கிறார்கள். அது ஏன் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
அடுத்த பதிவில் மிகவும் அதிர்ச்சிகரமான இவ்வருடம் திட்டமிட்டு நடைபெறவுள்ள ஒரு சம்பவத்தை பார்க்க ஆரம்பிப்போம்! இணைந்திருங்கள்!
பதிவை பகிர்ந்து ஊக்குவியுங்கள்! பல உண்மைகள் மண்டிக்கிடக்கின்றன!

By : Chandran Pirabu