கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com
Showing posts with label தகவல்கள். Show all posts
Showing posts with label தகவல்கள். Show all posts

ஜம் ஜம் நீர் குறித்து விக்கிப்பீடியா பின்வரும் தகவலை தெரிவிக்கின்றது..

சோதனைக்காக, ஜம் ஜம் நீர், நொடிக்கு 8000 லிட்டர்கள் விதம், 24 மணி நேரத்திற்கும் மேலாக பம்ப் செய்யப்பட்டது. ஆரம்பத்தில், நிலமட்டத்தில் இருந்து 3.23 மீட்டர் கீழிருந்த தண்ணீரின் அளவு 24 மணி நேர சோதனைக்கு பிறகு 13.39 மீட்டராக குறைந்தது. தொடர்ந்து பம்ப் செய்த போது (ஆச்சர்யப்படுத்தும் விதமாக) தண்ணீரின் அளவு மேற்கொண்டு குறையாமல் 13.39-மீட்டரிலேயே நீடித்தது.
பம்ப் செய்யப்படுவது நிறுத்தப்பட்ட பிறகு, (வியப்பேற்படுத்தும் விதமாக) தண்ணீரின் அளவு, 11 நிமிடத்தில், மறுபடியும் மூன்று மீட்டருக்கு வந்துவிட்டது !!!!

மெக்கா, மற்றும் மதினா என்ற இடங்களைப் பார்த்து நெகிழ்ச்சியான அனுபவம்” Anatoly Ivanishin ரஷ்ய விண்வெளி வீரர்

ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள் ‘இளவரசர் சல்மான் அறிவியல் ஆய்வகத்துக்கு’ வருகை புரிந்திருந்தனர். விண்வெளி வீரர்களுக்கான அமைப்பாக செயல்படும் (ASE) என்ற அமைப்பின் 25 ஆவது அமர்வுக்கு இந்த விண்வெளி வீரர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
அனடோலி இவானிஷின்(Anatoly Ivanishin) என்ற ரஷ்ய விண்வெளி வீரர் அங்குள்ள மாணவர்களோடு பேசும் போது ‘நாங்கள் விண்வெளியில் பயணிக்கும் போது கால நிலை சிறப்பாக இருக்கும் நேரங்களில் பூமியை படம் பிடிப்பது உண்டு. அவ்வாறு நாங்கள் படம் பிடிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பாவின் சில இடங்களையும் படம் பிடிக்க முயற்ச்சித்தோம். லென்ஸ் அந்த அளவு பவர் இல்லாததால் எங்களால் துல்லியமாக எடுக்க முடியவில்லை.
சில மணிகளுக்கு பிறகு வளைகுடாவின் பக்கம் எங்கள் பார்வையை செலுத்தினோம். ஆச்சரியமாக அப்போது இரண்டு இடங்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இது எனக்கு அதிசயமாகவும் தெரிந்தது. அந்த இரண்டு இடங்களையும் வைத்து மேலும் பல புகைப்படங்களையும் எடுத்தோம். அதன் பிறகு பல ஆய்வுகளுக்கு பிறகு அந்த இரண்டு இடங்கள் மெக்கா, மற்றும் மதினா என்ற இடங்கள் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். உலகின் மற்ற பாகங்களில் இந்த மாற்றத்தை நாங்கள் காணக் கூடியதாக இல்லை. இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.

பொதுநலவாய மாநாடு (CHOGM) ஓர் கண்ணோட்டம்…!



23வது CHOGM இலங்கையின் கொழும்பு மாநகரில் பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் வம்பர் 15 -17ம் திகதி வரை நடைபெறவுள்ளது. அந்தவகையில்,  பொதுநலவாய அமைப்பு மற்றும் CHOGM தொடர்பிலான சுவையான தகவல்கள் உங்களுக்காக…!

Y பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள், பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. உலக சனத்தொகையில் 30% ஆனோர்  பொதுநலவாய அமைப்பு நாடுகளில் வசிக்கின்றனர்.  

Y பொதுநலவாய அமைப்பு 1931ம் ஆண்டு "பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகள்" என்கின்ற நாமத்தில் உருவாக்கப்பட்டு 1946ம் ஆண்டு "பொதுநலவாய நாடுகள்" என பெயர் மாற்றம் பெற்றது.

Y பொதுநலவாய அமைப்பில் 54 நாடுகள் அங்கத்துவம் பெறுகின்றன. அரசியல் குழப்பநிலையின் காரணமாக பிஜி நாடு 2009ம் ஆண்டு பொதுநலவாய அமைப்பிலிருந்து இடை நிறுத்தப்பட்டது.




Y மார்ச் மாதத்து 2வது திங்கட்கிழமையன்று பொதுநலவாய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

Y பொதுநலவாய அமைப்பின் பிரதான தலைமைத்துவத்தினை வகிப்பது பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத் ஆவார். 


Y பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத் அவர்கள் முதன்முதலில் கலந்துகொண்ட CHOGM 1973ம் ஆண்டு கனடா, ஒட்டாவாவில் நடைபெற்றது. இதற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து CHOGMகளிலும் மகாராணி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் தற்சமயம் இலங்கையில் நடைபெறுகின்ற 23வது CHOGM இல் மகாராணியின் சார்பாக, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் அவர்களே பங்கேற்கின்றார்.
Yபொதுவாக 02 ஆண்டுகளுக்கொரு தடவை பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களது கூட்டம் (CHOGM) நடைபெறுகின்றது. 

1வது CHOGM 1971ம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.  


தற்சமயம் நவம்பர் 15-17ம் திகதி வரை இலங்கையில் நடைபெறுவது 23வது CHOGM ஆகும்.

Y 24 வது CHOGM 2015ம் ஆண்டு  மொறீசியஸ் நாட்டில் நடைபெறவுள்ளது.

Y பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய நாடு கனடா, இதன்  நிலப்பரப்பு 10 மில்லியன் சதுரகிலோமீற்றர்கள் ஆகும்.

Y பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் சனத்தொகை கூடிய நாடு இந்தியா, சனத்தொகை 1.1 பில்லியன் ஆகும்.

Y பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் மிகச்சிறிய நாடு நவ்ரு, சனத்தொகை 13,000 ஆகும்.

Y பொதுநலவாய அமைப்பிலிருந்து எந்த நேரத்திலும் தனது உறுப்புரிமையை விலக்கிக் கொள்ளும் உரிமை அங்கத்துவ நாடுகளுக்கு உண்டு. 1949ம் ஆண்டு அயர்லாந்து குடியரசும், 2003ம் ஆண்டு சிம்பாப்வேயும் தமது  உறுப்புரிமையை விலக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
Y பொதுநலவாய அமைப்பில் நவ்ரு தேசம் விசேட உறுப்புரிமை வகிக்கின்றது. இது CHOGM இல் கலந்துகொள்வதில்லை.
 
தகவல் - கே.கே.லோகநாதன் (kklogan.blogspot.com)