மெக்கா, மற்றும் மதினா என்ற இடங்களைப் பார்த்து நெகிழ்ச்சியான அனுபவம்” Anatoly Ivanishin ரஷ்ய விண்வெளி வீரர்
ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள் ‘இளவரசர் சல்மான் அறிவியல் ஆய்வகத்துக்கு’ வருகை புரிந்திருந்தனர். விண்வெளி வீரர்களுக்கான அமைப்பாக செயல்படும் (ASE) என்ற அமைப்பின் 25 ஆவது அமர்வுக்கு இந்த விண்வெளி வீரர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
அனடோலி இவானிஷின்(Anatoly Ivanishin) என்ற ரஷ்ய விண்வெளி வீரர் அங்குள்ள மாணவர்களோடு பேசும் போது ‘நாங்கள் விண்வெளியில் பயணிக்கும் போது கால நிலை சிறப்பாக இருக்கும் நேரங்களில் பூமியை படம் பிடிப்பது உண்டு. அவ்வாறு நாங்கள் படம் பிடிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பாவின் சில இடங்களையும் படம் பிடிக்க முயற்ச்சித்தோம். லென்ஸ் அந்த அளவு பவர் இல்லாததால் எங்களால் துல்லியமாக எடுக்க முடியவில்லை.
சில மணிகளுக்கு பிறகு வளைகுடாவின் பக்கம் எங்கள் பார்வையை செலுத்தினோம். ஆச்சரியமாக அப்போது இரண்டு இடங்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இது எனக்கு அதிசயமாகவும் தெரிந்தது. அந்த இரண்டு இடங்களையும் வைத்து மேலும் பல புகைப்படங்களையும் எடுத்தோம். அதன் பிறகு பல ஆய்வுகளுக்கு பிறகு அந்த இரண்டு இடங்கள் மெக்கா, மற்றும் மதினா என்ற இடங்கள் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். உலகின் மற்ற பாகங்களில் இந்த மாற்றத்தை நாங்கள் காணக் கூடியதாக இல்லை. இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.
0 comments:
Post a Comment