கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கோத்தாவுடன் ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் சந்திப்பு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவுக்கும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
முஸ்லிம் சமூகம் நிகழ்காலத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் போத்தபய ராஜபக்ஸ இதன்போது இணக்கம் வெளியிட்டுள்ளதுடன், பௌத்த அமைப்பு பிரதிநிதிகளையும் தான் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை சந்திப்பில் கலந்துகொண்டுள்ள முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் ஆதாரமற்ற குறுந்தகவல்ளை அனுப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பில் கோத்தபய ராஜபக்ஸவின் நேரடி கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அத்துடன் இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் தாயார் தமது மகன் எத்தகைய குற்றங்களையும் செய்யவில்லையென மனவேதனையுடன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்தே குறித்த முஸ்லிம் இளைஞர்களை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் பச்சைகொடி காண்பித்ததாக அறியவருகிறது.

jaffnamuslim

0 comments:

Post a Comment