பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருந்தவரின் பணம் கொள்ளை - சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியது
கொழும்பு மருதானை சின்னப்பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருந்த ஒருவரிடமிருந்து 45 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய இது போன்ற சம்பவங்கள் இந்த பள்ளிவாசலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அத்தோடு பள்ளிவாசலில் சீ.சீ.டி.வி. கெமரா பொருத்தப்பட்ட பின்பும் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மேலும் இதற்கு முன்பு மடிக்கணனியொன்றை கொள்ளையிட்ட சந்தேக நபரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 8 மடிக்கணனிகளை மீட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த சனிக்கிழமை தொழுகைக்கு பின்பு பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருந்த நபர் ஐந்தாயிரம் ரூபா நோட்டுக்களின் தொகையிலான பணத்தொகையுடன் உறங்கிய பின்பு பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஒருவர் உறக்கத்தில் இருந்தவரின் பணத்தை சூட்சுமமான முறையில் திருடியுள்ள காட்சி பள்ளிவாசலில் சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலும் இப்பள்ளிவாசலில் பேஷ் இமாமின் தொலைபேசியை திருடியதிலிருந்தே இத்திருட்டு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
அத்தோடு இதற்கு முன்பு மடிக்கணனி ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் குறித்த மடிக்கணனி திருடியதின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து எட்டு மடிக்கணனிகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment