கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஞானசாரருக்கு காதலி உள்ளார் - அசாத் சாலி, நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை அரசாங்கத்தின் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள் இன்று சந்திக்க உள்ளமை பிக்கு எனும் போர்வைக்குகள் இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்றுமத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
 
இஸ்ரேலுக்கு விரோதமாக யாரேனும் குரலெழுப்பினால் அவர்களை முறியடிப்போமென்று ஞானசார தேரர் சூழுரைத்துள்ளார். அவருக்கு இந்தளவு அதிகாரத்தை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது. இன்று பாலஸ்தீனத்தில் மகிந்த ஷ்ரீட் குண்டு வெடிப்பு மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி அறிவாரா என்று தெரியவில்லை. 2000ற்கு மேற்பட்ட மக்கள் அங்கு கொல்லப்பட்ட பின்னரும் அரசாங்கம் எந்த எதிர்ப்பினையும் தெரிவிக்கவில்லை. பாலஸ்தீன பிரன்சிப் எசோசியன்ஸ் தலைவராக பொதுநலவாய நாடுகளின் தலைவராக ஜனாதிபதி பதவி வகிக்கின்ற போதிலும் ஏன் இன்றும் மௌனமாக உள்ளார் என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
 
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;
 
அமைச்சர் ராஜித்த சேனரத்னவிற்கு எதிராக இன்று பொதுபலசேனாவினால் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. இதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு உடையது. ஏனெனில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட பல இடதுசாரிகள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமைக்கு எதிரான கருத்தை உடையவர்களாக உள்ளனர். அதே கருத்தையுடைய அமைச்சர்கள் பலர் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக அரசாங்கத்திற்குள்ளேயே செயற்படுகின்றனர். இதில் ராஜிதவும் உள்ளடங்குகின்றார். அதனால்தான் அவருக்கு எதிராக அரசாங்கம் ஞானசார தேரர் மூலம் அவதூறுகளை பரப்பி வருகின்றது.
 
மேலும், ஞானசார தேரர் நோர்வே நிதி உதவியுடனேயே தனது அராஜகங்களை அரங்கேற்றி வருகின்றார். என்பது தெட்டத்தெளிவாகி விட்டது. அத்துடன் லங்கா ஏ நியூஸில் தனது காதலியுடன் டெனிம் அணிந்த நிலையில் ஞானசார தேரர் உள்ள படம் பிரசுரமாகியுள்ளது. உண்மையில் பௌத்த துறவிகள் பெண்களுடன் தொடர்பற்று இருப்பர். ஆனால் ஞானசாருக்கு காதலி உள்ளார். வாகனம் ஓட்டுனர் மதுபானம் உட்பட அனைத்து தீயப்பழக்கங்களையும் கொண்டவராகவுள்ளார். இவர் தொடர்ந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்தால் 99.9 வீதமான சிங்கள பௌத்தம் அழிவை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.
 
மேலும், அரசாங்கத்தின் அபிவிருத்தி பொருளாதார திட்டங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியுள்ளன. மிகின்லங்கா உட்பட அனைத்தும் நட்டத்தில் இயங்குகின்றது. இருந்தும் அவற்றைக் கைவிடாது அரசாங்கம் தனது சுயநலத்திற்காக இயக்கிக் கொண்டிருக்கின்றது. விவசாயிகள் பட்டினியில் இந்த நாட்டில் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஜனாதிபதி நாம் கேள்விப்படாத ஊர்களுக்கெல்லாம் சுற்றுலாச் சென்றுக்கொண்டிருக்கின்றார்.
 
இந்த அரசாங்கம் ஊவா தேர்தலோடு விழப்போகின்றது. இதன் அத்தனை அடக்குமுறைகளுக்கும் ஊவா மாகாண தேர்தல் பதில் அளிக்கும் என்றார்.

jaffnamuslim

0 comments:

Post a Comment