கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அல்-கஸ்ஸாம் பிரிக்கேட்டின் பேச்சாளர் “அபூ உபைதா” விக்டரி கொன்ஸ்பிரன்ஸில் கூறிய வார்த்தைகள் பற்றி...!

ரபு யுத்தத்தில் இஸ்ரேல் காஸாவை வெறும் அரை மணிநேரத்தில் உட்புகுந்து கைப்பற்றியது. ஆனால் இப்போது அது அவர்களால் முடியாமல் போயுள்ளது. ஐம்பது வருடங்கள் எல்லோரையும் அச்சப்படுத்திய இஸ்ரேலிய இராணுவம் பற்றிய மித் 50நாள் சண்டைகளில் தகர்ந்து போயுள்ளது. இராணுவ பலம்தொழில்நுட்ப திறன் என்பவற்றின் அடிப்படைகளிலேயே பலஸ்தீனில் ஸியோனிஸம் தன்னை ஸ்தாபகம் செய்திருந்தது. அதே இராணுவ பலம்தொழில்நுட்பம் என்பவற்றை உபயோகித்து ஹமாஸ் இஸ்ரேலை தாக்க முற்பட்ட போது அந்த தேசத்தின் அத்திவாரங்கள் அசைய ஆரம்பித்து விட்டன. மீண்டும் குள்ள நரித்தந்திரத்துடன் தனது கொளவரவம் வீழ்ச்சியடைந்தாலும் பரவாயில்லை என சமரச ஒப்பந்தத்திற்கு இணங்கியுள்ளது யூத அரசு. ஆனால் இந்த ஒப்பந்தத்தை எதுவரை அது மதித்து நடக்கும் என்ற கேள்விக்கு உலகில் யாராலும் விடை சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் யூதர்கள். ஸியோனிஸ்ட்கள்.
Abu Ubaida: Perlawanan Palestina unggul dalam mempertahankan Gaza
 அல்-கஸ்ஸாம் பிரிக்கேட் கடந்த புதன் கிழமை இரவு (27-08-2014) நடாத்திய விக்டரி கொன்ஸ்பிரன்ஸ் (வெற்றி மாநாட்டு)” நிகழ்வில் அதன் செய்தித்தொடர்பாளர் அபூ உபைதா” கூறிய வார்த்தைகளின் அவதானங்கள் பற்றி நாம் சற்றுப் பார்ப்போம். எதிர்கால ஹமாஸின் செயற்பாடுகள் பற்றியும் பலஸ்தீன விடுதலைக்கான பாதை பற்றியும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

பலஸ்தீன எதிர்ப்பு இயக்கத்தின் முன் கட்டாயமாக எதிரியை பணிய வைக்கும் நிலையை நாம் ஏற்படுத்தியிருந்தோம். எமக்கு எதிரான எந்த மூலோபாயத்தையோ,தந்திரோபாயத்தையோ பிரயோகிக்க நாம் எந்த சந்தர்ப்பத்தையும் வழங்கவில்லை. அவர்களது ஸ்டடர்ஜீமற்றும் டக்டிஸ் பற்றி நாம் ஏலவே கணத்திருந்தோம். அது போலவே அவர்கள் செயற்பட்டதனால் அவர்களிற்கு எந்த அவகாசத்தையும் வழங்காது இக்கட்டிலும்இழப்பிலும்பின்வாங்களிலும் தள்ள எம்மால் முடிந்தது.

அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட உளவியல் யுத்தத்தின் சக்கரங்கள் தகர்க்கப்பட்டு விட்டன. இதன் பிறகு அவர்களால் இன்னொரு மாயையான இராணுவ பிரமாண்டங்களை உருவாக்க முடியாது.

இராணுவ பரிமாணங்களில் மட்டுமன்றி அரசியல் பரிமாணங்களிலும் இஸ்ரேல் தோற்றுப்போய் வி்ட்டது. அதன் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் அனைவரும் கொடிய குற்றவாளிகள். கொலைகாகரர்கள் என்பதனை இன்று உலகம் அறிந்துள்ளது. சாதாரண பொது மக்களை கொலை செய்ததன் ஊடாகவும்குழந்தைகள்பெண்கள்,முதியவர்கள் போன்றோரை அநியாயமாக கொலை செய்ததன் ஊடாக இன்று உலகம் அந்த தேசத்தையும் அதன் தலைவர்களையும் கொலையாளிகளாகவே பார்க்கின்றனர். இது எமது போராட்டத்திற்கு கிடைத்த ஒரு அரசியல் வெற்றியாகும்.

இது எமது போராளிகளிற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்லஎமக்காக உயிர் நீத்த தங்கள் குழந்தைகளிற்கு பாலூட்டிய தாய்மார்களின் வெற்றி. தாக்குதலில் எம்முடன் உடன் தரித்திருந்த சகோதரிகளின் வெற்றி. தங்கள் கணவர்களை களமனுப்பிய மனைவியர்களின்தங்கள் பிள்ளைகளை களமனுப்பிய தாய்மார்களின் வெற்றி.

“நாம் மேலும் வலுவான படையணிகளை உருவாக்குவோம். இஸ்ரேலினுள் பல சுரங்கங்களை அமைப்போம். ஆக்கிரமிப்பாளர்கள் நிம்மதியாக இனி தூங்க முடியாது. நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் என்பவற்றை எதிர்வரும் காலங்களில் கையாள்வோம். இந்த சமரசம் என்பது தற்காலிகமானது என்பதும் எமக்கு தெ்ரியும். யூத தேசம் மீண்டும் தனது குணத்தை காட்வே செய்யும். இது தான் அவர்களின் வரலாறு.”

இதுவரை காலமும் பலஸ்தீனர்கள் உலகம் முழுவதும் அநாதைகளாக அலைந்து திரிந்தனர். இப்போது அவர்கள் அநாதைகள் இல்லை. அவர்களின் தேசம் பலஸ்தீனம் இருக்கிறது. எதிரியினால் வெல்ல முடிாயாத காஸாவே அதன் ஆரம்பம். அநாதைகளாக வளர்ந்த இன்றைய பலஸ்தீன தலைமுறை தொழில்நுட்பத்திலும்,இராணுவ அறிவிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. எதிரிகளிற்கு நிகரான மதிநுட்பம் மிக்க பலஸ்தீனர்கள் எம்மில் உருவாகியுள்ளார்கள்.

எதிரி எம்மை அழிக்க நினைத்தான். ஆனால் அவன் எம்மை ஒற்றுமைப்படுத்தியுள்ளான்.இந்த சண்டைகளில் அவன் சாதித்தது இதனைத்தான். காஸாவை காப்பாற்ற நாம் ஒரு அணியில் நின்று போராடினோம். இந்த ஒற்றுமை மகத்தானது. நாங்கள் எதிர்பார்க்காதது.

இந்த வெற்றி மகத்தானது. போதுமான ஆயுத பலமும்நம்பிக்கையும் இருக்கும் என்றால் எம்மால் ஜெருஸலேமின் கதவுகளையும் திறக்க முடியும். அரை பில்லியன் அராபிய மற்றும் முஸ்லிம்களின் நம்பிக்கை காஸா வெற்றி மூலம் உறுதியாகியுள்ளது.

எமதும் எமது மக்களினதும் வெற்றியை நாம் இந்த சண்டைகளில் போராடி,எதிரியினால் கொல்லப்பட்டு மரணித்த தியாகிகளிற்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.” 

“எதிரிகள் அச்சமடைந்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலை விட்டும் செல்லும் எண்ணத்தை பற்றி சிந்திக்கவும் ஆரம்பித்து விட்டனர். இது ஒரு பெரிய வெற்றியாகும். யார் யாரை ஆக்கரமிக்க முனைந்தனரோ அவர்கள் இப்போது தங்கள் தேசத்தில் இருப்பவர்களை தக்க வைக்கும் போராட்டத்தை நோக்கி எம்மால் தள்ளப்பட்டுள்ளனர்.”

“ இறைவனிற்கே எல்லாப் புகழும். அவனின் உதவியில்லையென்றால் எப்போதோ நாம் இல்லாமல் போயிருப்போம். அல்லாஹ் எங்களை மீண்டும் ஒரு முறை காப்பாற்றியுள்ளான். அவன் பெரியவன்.”

khibarthalam

0 comments:

Post a Comment