பாலஸ்தீன் மண்ணிலிருந்து யூத சியோனிசத்தை துடைத்தெறிய வேண்டும் என்ற தீராத ஆசை கொண்டவர்.
தனது அரண்மனையில் ஒரு மிம்பர் செய்து வைத்திருந்து, அதை எடுத்துச் சென்று பைதுல் முகத்தஸில் வைத்து தான் ஒரு குத்பா செய் வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.
போட்டோவில் இருப்பது மன்னர் பைசல் அவர்களுடன் பாலஸ்தீனத்தின் தலைமை முப்தி ஹஜ் அல் அமீன் |
பைத்துல் முகத்தஸை மீடபதற்காக பாகிஸ்தான் இராணுவத்தைக் கேட்டார். இதற்காக சவுதியின் ஒரு வருட பட்ஜட்டை தருவதாகக் கூறினார். ஆனால், பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் இராணுவமும் இஸ்ரவேலுக்கும் மேற்கிற்க்கும் அஞ்சியது. அதனால் அவர் ஒரு பிரார்த்தைனைய மேற் கொண்டார். யா அல்லாஹ் என்னை ஒரு கோழையாக மரணிக்கச் செய்யாதே! என்பது தான் அந்த பிரார்த்தனை.
திருமறை குர்ஆணை முழுவதும் மனனம் செய்திருந்த மன்னர்.
உலக வல்லரசு என்று மிரட்டிக் கொண்டிருக்கிற அமெரிக்காவிற்கு பெட்ரோல் தர மாட்டேன் என்று சொல்லி அதை செயலிலும் செய்து காட்டியவர்.
பெட்ரோல் விவகாரத்தில் சவூதி மன்னரின் அதிரடியை கண்டு ஆடிப்போன அமெரிக்க அரசு தனது பிரதிநிதியை சவுதிக்கு அனுப்பிய போது, அந்த அமெரிக்க பிரதிநிதியை பாலைவனத்தில் போடப்பட்ட எவ்வித வசதிகளுமற்ற கொட்டகைக்கு வரவழைத்து அலற விட்டவர்.
அமெரிக்க பிரதிநிதிக்கு முனனால் ஒரு தட்டில் ரொட்டியும் இன்னொரு தட்டில் பேரீச்சப்பழமும் ஒரு குவழையில் பாலும் மறு குவழையில் ஸம்ஸம் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. ”இது தான் எங்கள் தலைவர் மாமன்னர் நபி (ஸல்) அவர்களின் வாழ்கை முறை. இதை உண்டு கொண்டு தான் அவர் உலகை உலுக்கினார். அந்த மாமனிதரின் வாழ்வுக்கு நாங்கள் திரும்பத் தயார். முடிந்தால் மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்துக் கொள்ளட்டும் என்று கூறி அனுப்பி வைத்தவர்.
அமெரிக்க பிரதிநிதி அந்த மன்னரிடம் ஒரு எச்சரிக்கையை செய்தான். "YOU WILL HAVE TO PAY FOR THIS". பாலஸ்தீனை ஆதரித்ததற்கு அவர் கொடுத்தது தமது உயிரை.
பாலஸ்தீனுக்காக தன்னுடைய உயிரை கொடுத்த அந்த மன்னரின் பெயர் பைசல். 1964 முதல் 1975 வரை சவூதியை ஆண்ட அரசர்.
யா அல்லாஹ் இவரை போன்ற உறுதி மிக்கவர்களை முஸ்லிம் நாடுகளுக்கு ஆட்சியாளர்களாக கொடுப்பாயாக.
Facebook
0 comments:
Post a Comment