கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

Telegram : முஸ்லிம் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட மென்பொருளா?

இன்று சமூகவளையதலங்களில் பரவலாக ஒரு விடயம் பரப்பப்படுகிறது. அதாவது இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படும் Whatsapp எனப்படும் கைத்தொலைபேசி மென்பொருள் ஒரு யூதனால் வடிவமைக்கப்பட்டதென்றும், எனவே, அதனை நீக்கிவிட்டு ஒரு ஜோர்டானிய முஸ்லிமால் வடிவமைக்கப்பட்ட “Telegram” எனப்படும் மென்பொருளை அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
“Whataspp” ஐப் பொறுத்தவரை இது ஒரு யூதனுடைய தயாரிப்பு என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் “Telegram” ஒரு ஜோர்டானிய முஸ்லிமுடைய தயாரிப்பு என்பது நம்பகத்தன்மை அற்ற ஒரு செய்தியாகும்.
இந்த “Telegram” மென்பொருளைப் பற்றி நாம் தேடிப்பார்க்கும் போது, பிரபல இணையதள தகவல் களஞ்சியமாகிய “விக்கிபிடியா” வில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, “இது ரஷ்யாவில் இருக்கும்  VK எனப்படும் பிரபல இணையதளத்தின் உரிமையாளர்களாகிய “நிகலோ” மற்றும் “பவல் ட்ரோப்” எனப்படும் இரு சகோதரர்களால் 2013ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும்.
எனவே நம்பகமான எந்த இணையதளங்களிலும் இது ஒரு ஜோர்டானிய முஸ்லிமின் தயாரிப்பு என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே, ஒரு தகவலைப் பரப்பும் போது அதன் உண்மை நிலையை அறிந்துகொள்வது கட்டாயமாகும்.

-techislam

0 comments:

Post a Comment