''மாநாயக்க தேரர்களால் செய்யமுடியாத பணிகளை நாட்டுக்காக செய்துவரும் பொதுபல சேனாக்கு ஆசீர்வாதம்''
மாநாயக்க தேரர்களால் செய்ய முடியாத பணிகளை நாட்டுக்காக செய்துவரும் பொதுபல சேனா அமைப்புக்கு தனது ஆசீர்வாதம் எப்போதும் உண்டு என மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கூறியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் தேரர்கள் 8-8-2014 கண்டி மல்வத்து மாநாயக்க தேரரை சந்தித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் நிலைமைகளால் பௌத்த பிக்குகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஞானசார தேரர், மாநாயக்க தேரருக்கு விளக்கியதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பார் மாதம் நாட்டில் மாபெரும் சங்கள சம்மேளனம் ஒன்றை நடத்தி, பௌத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பிக்க போவதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மாநாயக்கருடன் நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்னவை பற்றியும் பேசப்பட்டுள்ளது.
அமைச்சர்களுடன் வாத விவாதங்களுக்கு செல்வதில் பயனில்லை என மாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியதாகவும் அமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு ஆசி வழங்கியதாகவும் பொதுபல சேனா அமைப்பு கூறியுள்ளது.
jaffnamuslim
0 comments:
Post a Comment