ஞானசாரரிடம் ஒரு பில்லியன் இழப்பீடு கோரும் அமைச்சர் ராஜித
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனக்கு எதிராக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதால்இ ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அமைச்சர் ராஜித
சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று காலை சந்தித்த போது இது பற்றி பேசினேன்.
ராஜித.. இவற்றுக்கு பதிலளிக்க வேண்டாம் வழக்கு தாக்கல் செய்யுங்கள் என ஜனாதிபதி கூறினார்.இது ஒரு சதித்திட்டம் என்றும் தனது தேர்தல் செயற்பாடுகளுக்கு ஏற்கனவே இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பது முறை என்பதால்இ இவ்வாறு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பின் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும். ஞானசார தேரர் எனக்கு எதிராக சுமத்தியுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒரு பில்லியன் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்படும்.
வழக்கில் வெற்றி பெற்றால்இ கிடைக்கும் முழு பணத்தில் சட்டத்தரணிக்கான கட்டணத்தை செலுத்திய பின்இ மீதமாகும் தொகை தேசிய மீன்பிடி சம்மேளனத்திற்கு வழங்கப்படும்.என்னிடம் எத்தனை வீடுகள் இருக்கின்றது என ஞானசார தேரர் கேட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு நிர்மாணித்த ஒரே வீடு என்னிடம் உள்ளது. இதனை தவிர மீனவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுத்துள்ளேன்.
அண்மையில் வாகனம் ஒன்றை விற்று காணி ஒன்றை கொள்வனவு செய்தேன் எனவும் ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment