பொதுபல சேனாவின் சவால்களை எதிர்கொள்ள அமைச்சர் ராஜிதவுக்கு பூரணமான உதவி - பசில் ராஜபக்ஷ
பொதுபல சேனா அமைப்பின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பூரணமான உதவி வழங்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் பேரை கலந்து கொள்ள செய்து ராஜித சேனாரத்ன தனது அரசியல் பலத்தை நிரூபித்து காட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, மகிந்த அமரவீர, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.
இதனிடையே அமைச்சர்கள் முன்னணி என்ற பெயரில் அமைச்சர்கள் இணைந்து அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து பௌத்த சமயத்தை காப்பாற்றும் நோக்கில் நாடு முழுவதும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
ராஜித சேனாரத்ன, மேர்வின் சில்வா, சாலிந்த திஸாநாயக்க, ஜனக்க பண்டார தென்னகோன், துமிந்த திஸாநாயக்க, திலங்க சுமதிபால உள்ளிட்டோர் இது சம்பந்தமான அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 comments:
Post a Comment