படித்த முஸ்லிம் தலைவர்கள் தம்முடன் உள்ளனராம்: BBS
அமைச்சர் ராஜித சேனாரத்ன பொதுபல சேனாவுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனாவின்
தலைமையகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
படித்தஇ முஸ்லிம் தலைவர்கள் பலர் எம்மோடு இணைந்து செயற்படுகின்றார்கள். இவர்கள் முஸ்லிம் அடிப்படை வாதத்துக்கு எதிரானவர்கள். தவ்ஹீத் ஜமாஅத்இ ஜமாத்தே இஸ்லாம்இ இக்வானுல் முஸ்லிம் மற்றும் அல் ஷபாப் ஆகிய அமைப்புக்களுக்கு இவர்கள் எதிரானவர்கள். இது போன்ற முஸ்லிம் குழுவினர் பலர் எம்மோடு இணைந்து செயற்படுகின்றார்கள் என்பது உண்மையானது.
நாம் தான் இந்த சமூகத்தில் பிரபலம் மிக்க ஒர் அமைப்பு. இந்நாட்டில் அதிகமான கிளைகள் உள்ள ஒர் அமைப்பே நாம். எம்மிடம் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உள்ளனர். பாரியதொரு தொகையில் மக்களை பாதைக்கு இறக்கி ஆர்ப்பாட்டம் செய்யக் கூடிய ஒரு அமைப்புதான் பொதுபல சேனா.
அளுத்கம நிகழ்வு குறித்து இப்போது யாரும் அறிந்த விடயம். இந்த உண்மைகளை கண்ணால் கண்டதன் பின்னரும் உண்மைகளைக் கொலை செய்யும் ராஜித அவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது. தேரர்களை இழிவுபடுத்துவதற்கு கணக்கிலெடுக்கப்படாத இந்த ஒதவாக்கரைக்கு என்ன உரிமை இருக்கின்றது. ரவி கருணாநாயக்க எனக்கு பணம் தருவதாக சொல்லுகின்றார். இன்னும் சற்று நேரத்தில் நோர்வே பணம் தருவதாக கூறுகின்றார். ஒரு சதம் சரி எமக்குத் தந்திருப்பதை முடியுமானால் நிரூபிக்கட்டும்.
நாம் கிராமத்திலிருந்து கொழும்புக்கு வந்து காவியுடையை உடுத்திக் கொண்டு திரிபவர்கள் என ராஜித கூறியுள்ளார். அடுத்த சில நாட்களில் இந்தக் கூற்றுக்கு எமது நிக்காயவைச் சேர்ந்த பிரிவினரால் அவருக்கு பதில் கிடைக்கும். நாம் ராஜிதவுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மிகவும் தெளிவானது. வேண்டுமானால்இ இதற்கு மேலதிகமாகவும் முன்வைக்கலாம். இன்னும் துள்ளினால் நாம் அவற்றையும் முன்வைப்போம். அதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.
எமக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை ஊடகத்தின் முன்வந்து அவர் முன்வைத்துள்ளார். அதில்இ மொஹமட் ஹனீபா என்பவர்இ பொதுபல சேனாவுக்கு கயிறு கொடுத்த மற்றுமொரு குற்றவாளி என்று கூறியுள்ளார். நாம் கூறுகின்றோம். எமக்கு யாரும் கயிறு தரவில்லை. எந்தவொரு முஸ்லிம் நபரும் அரச தொடர்பில் வந்து எமக்கு எதனையும் தெரிவிக்க வில்லை.
எமக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை ஊடகத்தின் முன்வந்து அவர் முன்வைத்துள்ளார். அதில்இ மொஹமட் ஹனீபா என்பவர்இ பொதுபல சேனாவுக்கு கயிறு கொடுத்த மற்றுமொரு குற்றவாளி என்று கூறியுள்ளார். நாம் கூறுகின்றோம். எமக்கு யாரும் கயிறு தரவில்லை. எந்தவொரு முஸ்லிம் நபரும் அரச தொடர்பில் வந்து எமக்கு எதனையும் தெரிவிக்க வில்லை.
அவ்வாறான கோள்களை நாம் கேட்பதுமில்லை. படித்தஇ முஸ்லிம் தலைவர்கள் பலர் எம்மோடு இணைந்து செயற்படுகின்றார்கள். இவர்கள் முஸ்லிம் அடிப்படை வாதத்துக்கு எதிரானவர்கள். தவ்ஹீத் ஜமாஅத்இ ஜமாத்தே இஸ்லாம்இ இக்வானுல் முஸ்லிம் மற்றும் அல் ஷபாப் ஆகிய அமைப்புக்களுக்கு இவர்கள் எதிரானவர்கள். இது போன்ற முஸ்லிம் குழுவினர் பலர் எம்மோடு இணைந்து செயற்படுகின்றார்கள் என்பது உண்மையானது.
ஆனால்இ உமர் என்பவருடன் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. ஒரு முறை ஒருவர் வந்து குர்ஆன் மொழி பெயர்ப்பில் பல சர்ச்சைகள் உள்ளன. இந்த மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்ளுங்கள் என ஒரு குர்ஆனைத் தந்துவிட்டுச் சென்றார். அவர் இன்று இங்கு இருக்கின்றார்.
உமர் என்பவர் ஒரு குற்றவாளி. அவரை பொதுபல சேனாவின் காரியாலயத்தில் வைத்திருக்கின்றார். இவரைப் பிடிப்பதற்கு பொலிஸாருக்கு தகவல் வழங்குவதாக ராஜித கூறியுள்ளார். நாம் கேட்கின்றோம். மீன் தட்டைப் பார்த்துக் கொண்டிருக்காமல்இ பொலிஸுக்குத் தகவல் வழங்க இவர் யார்? இவர் பொலிஸ் மா அதிபரா? பாதுகாப்பு அமைச்சரா? அவர் அமைச்சர் என்றால் அமைச்சரின் வேலையைப் பார்க்கட்டும்.
என்மீது குற்றச்சாட்டை சுமத்தும் ராஜித்த அவர்கள் கொஞ்சமாவது சிந்ததுண்டா? தான் செய்யும் இந்த வேலை சரியானதா? இது உண்மையானதா? இதனால்இ எனக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி இந்த பாவப்பட்டவர் கொஞ்சமும் யோசிக்கவில்லை. இவர் எதன் மூலமாவது திருத்தப்பட வேண்டியவர். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனைச் செய்யவில்லையென்றிருந்தால் வேறு முறையொன்றை நாம் யோசிக்க வேண்டியிருக்கும்.
மஹிந்த ஜனாதிபதிக்கும் நாம் பகிரங்கமான ஒரு சவாலை விடுக்கின்றோம். பொதுபல சேனாவினால் அரசாங்கத்துக்கும் பிரச்சினை என ஜனாதிபதி அமைச்சர் ராஜித்தவிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைக்கப்பட்டது அரசாங்கத்தினால் அல்ல. பொதுபல சேனா என்பது அரசாங்கத்துக்குக் கீழ்படிந்துள்ள நாய்க்குட்டியோ பூனைக் குட்டியோ அல்ல.
பொதுபல சேனாவினால் அரசியல் செயற்பாடுகளுக்குப் பிரச்சினை. அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள் என அமைச்சர் ராஜதவிடம் ஜனாதிபதி கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாம் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஐ.தே.க.யுடன் பேசினோமா? ஜே.வி.பி.யுடன் பேசினோமா? பொன்சேகாவுடனோ அல்லது சோபித்த தேரருடன் பேசினோமா? அப்படி சூழ்ச்சி இருப்பதாயின் நீங்கள் கூறுங்கள் எனவும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டார்.-
தமிழில் – எம்.எம். முஹிடீன்-டெய்லி சிலோன்
0 comments:
Post a Comment