சியோனிச இஸ்ரேலிய உற்பத்தி பொருட்களை பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள்- றாவூர் பள்ளிவாயல்கள் சம்மேளன...
இஸ்ரேலினதும் யூதப் பயங்கரவாதிகளினதும் உற்பத்திப் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஏறாவூர் நகரில் பிரசாரம் செய்யப்படுகின்றது. ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின்.
சம்மேளத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரத்தின் ஒரு அங்கமாக நகரெங்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
யூதப் பயங்கரவாதிகளின் உற்பத்திப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இஸ்ரேலிய யூதப் படைகள் பாலஸ்தீன மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், இறை இல்லங்களுக்கும் ஏற்படுத்திய பேரழிவுகளை மனித நேயமிக்க எந்த உள்ளமும் மன்னிக்காது. இவ்வாறான யூதர்களுக்கு நிதி சேர்க்கும் வர்த்தக நிறுவனங்களின், பெரும்பாலான உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலமாக காஸாவில் ஆயிரக் கணக்கில் பொதுமக்களையும், குழந்தைகளையும் கொன்றுகுவித்து ஈனச் செயலைப் புரிந்து கொண்டிருக்கும் யூதர்களுக்கு நாமும் பொருளாதார ரீதியில் மறைமுகமாக உதவுகின்றோம் என்பதை எமது சமூகம் மறந்து செயற்படுகின்றது.
யூதர்களின் உற்பத்திப் பொருட்களைப் நாம் பாவிக்காது பகிஷ்கரிப்பதன் மூலமாக அவர்களுக்குச் சென்றடையும் பொருளாதார ரீதியிலான உதவிகளை எம்மாலும் தடுக்க முடியும் என்பதை நாம் நினைவில் கொள்வோம். உற்பத்திப்பொருட்களின் பட்டியல் குறியீடு 729 தொடரிலக்கங்களைக் கொண்ட உற்பத்திகளையும், இலச்சினை பொறிக்கப்பட்ட பொருட்களையும், கொள்வனவு செய்வதையும், விற்பனை செய்வதையும் தவிர்த்துக் கொள்வதன் மூலமாக பாலஸ்தீனத்தில் அவதியுறும் எமது உறவுகளுக்கு உதவுமாறு வேண்டிக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளது.-
100 % முஸ்லிம்களைக் கொண்ட எமது கிராமத்தின் பள்ளிவாசல்கள் சம்மேளனம், மற்றும் இதர இஸ்லாமிய இயக்கங்களின் நிலை????
சகோதரர்களே பலஸ்தீன் மக்களுக்காக நாம் செய்யக் கூடிய உதவிகளில் முதலாவது அல்லாஹ்விடம் கையேந்துவது, அடுத்து முடியுமான அளவு இஸ்ரேலிய பொருளாதாரத்தில் கைவைப்பது.
கஹடோவிட மற்றும் அயற்கிராமங்களான ஓகடபொல, கொச்சிவத்த, உடுகொட, மௌலானாபுர, ... போனற இடங்களில் விற்பனைசெய்யப்படுகின்ற இஸ்ரேலியப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறு உங்களால் முடியுமான வேளைகளை எமது சமூகத்துக்கு செய்யுங்கள்.
0 comments:
Post a Comment