கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் வழமைபோல் கஹட்டோவிடாவும் சிறப்பிடம்

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இப்பெறுபேறுகளில் வழமைபோல் கஹட்டோவிடாவின் இரு பாடசாலைகளும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. கஹட்டோவிடாவின் இவ்வருட சிறந்த பெறுபேறாக 7A , 2B காணப்படுகிறது. இப்பெறுபேறை கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற மாணவி ஹிபா மதீன் அவா்கள் பெற்றுள்ளாா். 


அல் பத்ரியாவின் பெறுபேறு 7A 1B  1C ஆகும். இப்பெறுபேற்றையும் ஒரு மாணவியே பெற்றுள்ளார். அத்தோடு மாணவா்களில் சிறந்த பெறுபேறாக 6A, 2B என்ற பெறுபேறு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எமது கஹட்டோவிட மண்ணின் மைந்தா்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ஊருக்கும் நாட்டுக்கும் சமூகத்துக்கும் சேவையாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

சவுதி மன்னர் சல்மானின் தொடர் நெருக்கடிகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் இஸ்லாத்தை விமர்ச்சித்த குற்றத்திற்க்கு சுவீடன் பகிரங்க மன்னிப்பு கோரியது!

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை அண்மையில் கடுமையாக விமர்ச்சித்த சுவீடன் சவுதி அரேபியா கொடுத்த நெருக்கடிகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியது
இது தொடர்ப்பாக சுவீடன் மன்னர் சவுதி மன்னர் சல்மானுக்கு எழுதியுள்ள கடிதத்தில்


சவுதி மற்றும் சுவீடனிடையே ஏர்பட்ட பிரச்சனைகளுக்காக வருந்துவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ள அவர் சவுதி உடன் நட்புறவை விரும்புவதாகவும் இரு நாட்டின் உறவுகள் பலமிக்கதாக மாற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்

அது போல் சுவிடன் பிரதமர் இன்று பத்திரியைாளர் சந்திப்பில்
இஸ்லாமிய சட்டங்களை மதிப்பதிலும் இஸ்லாமிய குற்றவியல் நடைமுறைகளை செயல் படுத்துவதிலும் தீவிரம் காட்டும் சவுதி மன்னரின் உணர்வுகளை மதிப்பதாகவும் இரண்டு நாடுகளின் உறவில் ஏர்ப்பட விரிசலை சரி செய்ய வேண்டும் என்றும் நடந்த விசயங்களுக்காக சுவீடன் வருந்துவதாவும் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்


நன்றி  : மெளலவி சையது அலி பைஜி.

பொன்சேகாவுக்கு இன்று பதவியுயர்வு

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதவி உயர்த்தப்படவுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் மற்றும் முப்படை பிரதானிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட் மார்ஷல் தரத்துக்கு பதவியுயர்த்தப்படவுள்ளார்.
உலகில் இராணுவ அதிகாரி ஒருவரின் மிக உயர்ந்த பதவியாக ஃபீல்ட் மார்ஷல் காணப்படுகின்றது.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில் நாடுகளில் மாத்திரமே இந்த பதவி காணப்படுவதுடன் இந்த பதவிக்கு தெரிவாகும் முதலாவது இலங்கையர் சரத்பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.

வானையைச் சோ்ந்த சகோதரர் பாரூகு் அவர்கள் இன்று காலமானார்.

வானையைச் சோ்ந்த  சகோதரர் பாரூகு் அவர்கள்  இன்று  காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் ஷபீக் , டிலிஷாத்  ஆகியோரின் தந்தையும்,  உம்மு சபீலா அவர்களின் கனவரும் ஆவார். அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை ( 21.03.2015)   நல்லடக்கம் செய்யப்படும்.

   . اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار  

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக! 

பசிலின் வெற்றிடத்திற்கு சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக அர்ஜுனா - சந்திரிக்காவும் பங்கேற்பு (படம்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக,  துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எத்தியோப்பிய மக்களுக்கு குடிநீர் கிணறுகளை நிர்மாணித்து வழங்கிய இலங்கை அல்-கிம்மா நிறுவனம். (படங்கள்)


mmmm
ஆபிரிக்காவில் அல்-கிம்மா
கல்குடா அல்-கிம்மா நிறுவனமானது, இலங்கையின் பல பகுதிகளிலும் தங்களது அபிவிருத்திப்பணிகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் தொடரில், தங்களது சேவையினை இலங்கை மற்றுமன்றி இந்தியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளிலும் மேற்கொள்வதற்கான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் ஆபிரிகாவின், எதியோபிய நாட்டில் இருக்கக்கூடிய, குடிநீர் தேவையுடையவர்களுக்கு கிணறுகள் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பயனாக, இன்று 16.03.2015 திங்கட்கிழமை எதியோபியாவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு அல்-கிம்மா நிறுவனத்தினால் குடிநீர்க்கிணறு நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மேலும் பல குடும்பங்களும் பயனடையும் வகையில், வேலைத்திட்டங்களை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதியளவில் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் இந்தியா சென்று, அல்-கிம்மாவின் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான சாத்தியம் குறித்து ஆராயவுள்ளதுடன், முதற்கட்டமாக குடிநீர் கிணறு ஒன்றையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
INFO TECH SYSTEM
M.P.C.S. Road, Oddamavadi.
 madawala news

ஜனவரி 08 திகதி இரவு மகிந்தவுக்கு பயந்து குருநாகல் பிரதேசத்தில் தங்கியிருந்தேன்..!! ஜனாதிபதி மைத்திரி

எனது குடும்ப உறுப்பினர்களினது பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி தேர்தல் அன்று இரவு நான் குருணாகல் பிரதேசத்தில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் வைத்து பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் என்னைக் கைது செய்து, குடும்ப உறுப்பினர்களை அழிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.
தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் நான் உட்பட எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் உயிருடன் இருந்திருப்போமா என்பது தெரியவில்லை. அதுதான் மஹிந்த ராஜபக்சவின் ஜனநாயகமாகும். ஆனால் அவர் இப்பொழுது ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.
அன்றைய தினம் நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் எத்தனை பேர் கொல்லப்பட்டிருப்பார்கள், எத்தனை பேரின் கை கால்கள் உடைக்கப்பட்டிருக்கும், எத்தனை பேரின் தொழில்கள் இழக்கப்பட்டிருக்கும் என்பது எனக்கு தெரியாது. அப்படி இல்லை என்றால் மகிந்த ராஜபக்ச எனது முழு குடும்பத்தையும் சிறைப்படுத்தி அழித்திருப்பார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகிந்தவை பிரதமராக்குமாறு கோரிக்கைகள் கிடைக்கவில்லை: ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நியமிக்குமாறு இவ்வாறான ஓர் கோரிக்கையை யாரும் இதுவரையில் தன்னிடம் முன்வைக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான கோரிக்கை அல்லது யோசனையை முன்வைத்தால் அன்று நான் உரிய பதிலை அளிப்பேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இதயம் தாமே என மஹிந்த தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக பி.பி.சி சேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவியதற்கு உண்மையில் கட்சியின் இதயம் மக்களே என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இதயமும் மூளையும் மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுமே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆடம்பரத்துக்கு அடிமையாகாத ஜனாதிபதி குடும்பம்: லண்டன் அனுபவம்

பிரித்தானிய மகாராணியின் அழைப்பையேற்று பொதுநலவாய தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள தனது பாரியார் மற்றும் பிரிதிநிதிகள் குழுவுடன் கடந்த வார இறுதியில் லண்டன் விஜயம் செய்து நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில், இரு ஜனாதிபதிகளின் அண்மைய லண்டன் விஜயங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை மாத்திரமன்றி மைத்ரி குடும்பம் ஆடம்பரத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் குடும்பம் என்பதையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
மஹிந்த ராஜபக்ச வந்த போது அவர் மாத்திரம் ஒரு நாள் தங்கியிருப்பதற்காக செலவு செய்ததன் ஒரு சிறு பகுதியே அனைத்து பிரமுகர்களும் தங்கியிருப்பதற்கு செலவாகியிருந்தமையும் வந்திருந்த பிரமுகர்கள் குழுவும் ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு ஏற்பவே வீண் விரயத்தை விரும்பித் தவிர்ப்பவர்களாகவும் இருந்தமை முக்கியமான விடயமாகும். இந்நிலையில் ஜனாதிபதியின் எளிமையான செயற்பாட்டைக் கண்டு இரு பாதுகாப்பு பிரிவினர்களிடம் இரு வேறு அனுபவத்தைக் கேட்டறிந்தோம்.

ஜனாதிபதி
முதலாவது, ஜனாதிபதியுடனேயே வருகை தந்திருந்த அவரது பிரத்யேக பாதுகாப்புக்குழு அடுத்தது பிரித்தானிய அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு குழு. இந்த இரு அணிகளிடமும் வெ வ்வேறு அனுபவங்கள் இருந்தன. இலங்கைப் பாதுகாப்புக் குழுவைப் பொறுத்தவரை அவர்கள் ஜனாதிபதியிடம் இன்னும் நெருங்கிப் பழகுவதற்குத் தயங்குவதோடு முன்னாள் ஜனாதிபதியின் அதிகார ஆளுமையிலிருந்து இன்னும் விடுபாடாத சூழ்நிலையையே காணக்கூடியதாக இருந்தது. அதேவேளை பிரித்தானிய பாதுகாப்புக் குழுவினர் தமது காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் ஒரு வகை ஆச்சரியத்துடனேயே காணப்பட்டார்கள்.
இதில் பிரித்தானிய பாதுகாப்பு ஊழியர்களிடம் தனித்தனியாக ஒரே கேள்வியைக் கேட்டுப் பார்த்தோம். அதாவது இதற்கு முன் இருந்த ஜனாதிபதியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது பார்த்திருக்கிறீர்களா என்பது தான் அது. அதில் மூத்த உறுப்பினர் ஒருவர் ஆம் நான் அவர் வந்த போதும் பாதுகாப்பு கடமையில் இருந்தேன் என்றார். அப்படியானால் அவருக்கும் இவருக்கும் வித்தியாசம் ஏதாவதிருக்கிறதா என கேட்க, இவரா ஜனாதிபதி என்று கேட்கும் அளவுக்கு மிக மிக எளிமையான மனிதராக இருக்கிறாரே என்று அவர் கூற இன்னொரு அதிகாரி ஆம்.. நானும் அவரைப் பற்றி அப்படித்தான் கேள்விப் பட்டிருக்கிறேன் என்றார்.
இத்தனைக்கும் இந்த சம்பாசனை இடம்பெறும் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒரு மிகச் சாதாரண சராசரி இளைஞனைப் போன்று பந்தா இல்லாமல் அவ்வப் போது அவ்வழியே நடந்து செல்வதும் எல்லோரையும் பார்த்து புன்முறுவலுடனேயே ஒவ்வொரு தடவையும் அவரைப் பார்த்து எழ முனையும் பாதுகாப்பு அதிகாரியை ‘உட்காரப்பா’ என்று சொல்வது போல் சைகை செய்வதுமாக தனது கடமைகளை செய்து கொண்டிருந்தார்.

முதற்பெண்மணி
இது ஒரு புறமிருக்க, அவரது மனைவி திருமதி மைத்ரிபால சிறிசேனவோ தன் சமையல் கடமைகளை செய்ய முடியவில்லையே என வருத்தத்துடன் முதல் நாளும் பின் அவ்வப்போது தன் கையாலேயே சமைக்கக் கூடிய வாய்ப்பையும் பெற்றதனால் தானுண்டு தன் கடமையுண்டு என்று இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதற்கும் மேலாக அவ்வப்போது ஜனாதிபதியுடன் வெளியில் செல்ல நேர்ந்தால் செல்லும் வழியில் சில வேளைகளில் ஜனாதிபதியை ஒரு தடவையேனும் பார்க்க வேண்டும் எனும் ஆவலுடன் ஹோட்டல் வரவேற்புப் பகுதியில் குவிந்திருப்போரைக் கண்டால் ஜனாதிபதி அங்கு சென்று அவர்களோடு உரையாடி விட்டு வரும் வரையும் மிகப் பொறுமையாக ஏதாவது ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டு எமக்கும் ஆச்சரியமாக இருந்தது.
ஒரு தடவை அவரோடு உரையாடிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் இர்பான் இக்பால் மூலமாக புகைப்படம் ஒன்றை எடுப்பதற்காக அனுமதி கேட்ட போது வெட்கத்தோடு புன்னகைத்துக் கொண்டு வேண்டாம் என்று கூட சொல்ல முடியாமல் அவர் தயங்கிக் கொண்டே இருந்ததை அவதானித்த போது அவரிடம் இருந்த எளிமையை நினைத்து ஆச்சரியமாகவே இருக்கிறது. இறுதியில் நேற்று மாலை ஜனாதிபதி விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் போது அங்கு 20 பேர் வரை கூடியிருந்த சூழ்நிலை காணப்பட்டது.

ஜனாதிபதியின் புதல்வர்
ஜனாதிபதி உட்பட அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலியும் புறப்பட்டுச் சென்ற பின் அங்கு எங்கள் குழுவில் இருந்த மூவருடன் சேர்த்து பத்துப் பேர் நின்றிருந்தோம். சில நிமிடங்களில் கலைந்து செல்ல மெதுவாக நகர்ந்த போது எமது அருகில் எங்களோடு ஒருவராக மிகச் சாதாரணமாக ஜனாதிபதியின் மகனும் தனது நண்பர்கள் இருவருடன் நடந்து வந்தார். பின், புகையிரத நிலையம் வந்ததும் சென்று வருகிறோம் என ஒரு நண்பனாக அவரும் விடைபெற்றுச் சென்ற இந்த அனுபவங்களை இலங்கையின் முதற்குடும்பம் பற்றி வாசகர்களும் அறிந்து கொள்ள இங்கு பதவிலிடுகிறோம்.

இங்கு காணப்படும் படங்கள் கடந்த 10ம் திகதி புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை தூதரக ஏற்பாட்டில் சந்திப்பதற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி தனக்கான அழைப்பு வரும் வரை தனியாக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிந்த இடத்தில் அமர்ந்திருந்த வேளையில் எடுக்கப்பட்டவையாகும். எமது நிருபரின் வேண்டுகோளை மறுக்காது ஒத்துழைத்ததோடு எந்தவொரு கட்டத்திலும் அணுகி உரையாடக்கூடிய சாதாரண நபராகவே அவர் நடந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சோனகர்.கொம்

எங்களிடம் இஸ்லாம் இருக்கிறது இஸ்லாத்திர்கு நாங்கள் யாரிடம் இருந்தும் இருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிபார்க்க வில்லை

சவுதியை விமர்ச்சித்துள்ள சுவீடனுக்கு பதிலடி..!
இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைபடுத்தும் சவுதியை விமர்ச்சித்துள்ள சுவீடனுக்கு, இஸ்லாத்திர்கு நாங்கள் யாரிடம் இருந்தும்நன்னடத்தை சான்றிதழை எதிபார்க்க வில்லை என சவுதி பதிலடி தனது துதரையும் திரும்ப அழைத்து கொண்டது!
இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் இணைய தளத்தில் விமர்ச்சித்த சவுதியை சார்ந்த பதவி என்பவனுக்கு சவுதியின் இஸ்லாமிய நீதி மன்றம் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது
இந்த தண்டனை மனித உரிமைகளை தகர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது என்றும் .இஸ்லாமிய மார்க்க சட்டங்களை அரசியல் சாசனமாகவே சவுதி அரேபியா வைத்திருப்பது ஏர்க தகுந்த விசயம் இல்லை என்றும் சுவீடன் அண்மையில் கருத்து கூறியிருந்ததோடு 2005 ஆண்டில் சவுதி அரேபியா உடன் செய்து கொள்ள பட்ட இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் காலவதியாகும் நிலையில் இருக்கிறது அதை புதிப்பிக்க போவதில்லை என்றும் சுவீடன் அறிவித்திருந்தது
சுவீடனின் இந்த நிலைபாட்டிர்கு சவுதி அரேபியா கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறது
எங்களிடம் இஸ்லாம் இருக்கிறது இஸ்லாத்திர்கு நாங்கள் யாரிடம் இருந்தும் இருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிபார்க்க வில்லை இஸ்லாம் எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது எங்கள் நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை படுத்துவதை விமர்ச்சிக்க எவனுக்கும் உரிமை இல்லை என்று சவுதி அரேபியா கூறியிருப்பதோடு எங்களது உள்விவகாரத்தில் தலையை நுழைத்துள்ள சுவீடனை கடுமையாக கண்டிக்கும் விதத்தில் சுவீடனில் இருந்து சவுதி துதரை திரும் அழைத்து கொள்வதாகவும் சவுதி அறிவித்து சுவீடுனில் இருந்து தனது துதரையும் திரும்ப அழைத்து விட்டது
சவுதி அரேபியாவின் உறுதியான இந்த நிலைபாடு இஸ்லாமிய எதிரிகள் பலரையும் அதிர வைத்திருக்கிறது.
நன்றி : சையது அலி பைஜி

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை! - மிக முக்கியமான கட்டுரை

மிஸ்டு கால் (Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் மிஸ்டுகால்களை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான்.
உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மிஸ்டு கால் மூலமாக காதல் வலையில் சிக்குபவர்களிடையே பொருத்தங்கள் எதுவும் தேவை இல்லை. நிறம், அழகு, சாதி, குலம், குடும்பம், கல்வி, குணம், கலாச்சாரம், செல்வம் போன்ற எல்லைகள் எதுவும் இல்லை. இங்குள்ள ஒரே தகுதி குரல் மட்டுமே. அக்குரலில் காதல் தழும்புகிறதா? எனில் பூவின் மீது வண்ணத்துப் பூச்சிக்கு ஏற்படும் ஈர்ப்பு போலவே மோகமும் பற்றிக்கொள்ளும். பூவிற்கும், வண்ணத்துப் பூச்சிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பின் ஆயுளே மிஸ்டுகால் மூலமாக உருவாகும் காதலுக்கும் பொருந்துவதால் வாழ்க்கை தடம்புரண்டு போய்விடுகிறது.

மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில் :

ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை போஸ்ட் பதிவது, தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் மிஸ்டு கால்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. அந்த படங்களை பார்த்து, எண்ணைப் பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை உருவாகலாம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் தெரியாத, எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விட்டால் தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்...!!!

ஆனால் என்ன செய்ய! பாழாய் போன மனம் வசீகரிக்கும் குரலில் வலுவிழந்து விடுகிறதே.


யாரோ அழைத்திருக்கிரார்களே... முக்கியமான சமாச்சாரமோ என திரும்ப அழைத்தால் போச்சு! சிலர் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் கொடுத்து பேசச் சொன்னால் அத்துடன் பிரச்சனை முடிந்துவிடலாம். ஆனால், தனிமையில் இருக்கும் பெண்களிடம் தொடர்ந்து வரும் கால்கள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

கடிதங்கள் மூலமாகவும், பார்வை மூலமாகவும் பெண்களை வீழ்த்திய காலம் மாறிப்போய் மிஸ்டு கால்கள் மூலமாக பெண்களை வெகு விரைவாக எவ்வாறு தங்கள் வலையில் சிக்கவைக்கின்றார்கள் என்பது குறித்து ஆராயும் பொழுது விஞ்ஞானப்பூர்வமாக சில உண்மைகள் புலப்படுகின்றன.

1. வசீகரிக்கும் குரல் காதலுக்கு முக்கிய காரணியாக மாறும்பொழுது ஐம்புலன்களும் அதில் ஒன்றி விடுகின்றன.

2. கடிதத்திற்கோ, மின்னஞ்சலுக்கோ இல்லாத ஈர்ப்பு கேள்விப் புலனுக்கு உண்டு.
3. தன்னை ஒருவர் விரும்புகிறார் என்பதை கேட்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்றுதான். இது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே உள்ள பலகீனமாகும்.

4. காதலுடன் வாழ்வில் குறுக்கிடும் நபர் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவார் என்றதொரு கற்பனையை தாமாகவே வளர்த்துக்கொள்ளுதல்
அழையா விருந்தாளியின் மனசு!

மிஸ்டுகால் உறவுகளை ஆராயும்பொழுது நமக்கு புலப்படுவது என்னவெனில் மிஸ்டுகால்களை தொடுக்கும் நபரின் எண்ணமாகும். தனது இச்சையை தணித்துக்கொள்ளவும், சொந்த ஆதாயங்களையும் லட்சியமாக கொண்டே ஒருவன் மிஸ்டுகால் என்ற அம்பை எய்துவிடுகிறான்.

அழையா விருந்தாளியாக வீட்டின் வாசலை தட்டும் பொழுது அவனை வரவேற்க வேண்டுமா? புறக்கணிக்க வேண்டுமா? என்ற முடிவை எடுக்கும் சுதந்திரம் வீட்டுக்காரனுக்கு உண்டு. எவ்வித அறிமுகமும் இல்லாமல் வீட்டுக் கதவை தட்டுபவனை வரவேற்பதால் வீட்டுக்காரருக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. எவரேனும் இவ்வாறு அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்தால் அதில் 99 சதவீதமும் தவறான நோக்கமே அடங்கியிருக்கும்.

இதனைப் புரிந்துகொள்ளாமல் படித்த, அனுபவம் வாய்ந்த பெண்கள் கூட முன்னும் பின்னும் யோசிக்காமல் மிஸ்டுகால்களின் வலையில் சிக்கி விடுவதை நாம் காண்கிறோம்.

இதற்கு என்ன காரணம்?

1. வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு தேவையான கல்வி நமது குடும்பங்களில் இருந்தோ, கல்வி நிலையங்களில் இருந்தோ , மார்க்க நிறுவனங்களில் இருந்தோ கிடைப்பதில்லை.

2. நவீன காலக்கட்டத்தில் வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக உருவாகும் அபாயங்கள் குறித்து இந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுப்பதில்லை.

3. தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து சமூகம் அலட்சியமான போக்கை கையாண்டு வருகிறது. காலத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பழைய சம்பிரதாயங்களில் இருந்து மாத்தி யோசிக்க சமூகம் தற்பொழுதும் தயாராகவில்லை.

4. தன் மீதான அதீத நம்பிக்கையில் வளரும் இந்த தகாத உறவுகள் வெகுவிரைவில் தீவிரமடைந்துவிடுகிறது.

5. பெண்களில் தீவிரமாக காணப்படும் எதனையும் எளிதில் உள்வாங்கும் குணம் பாலியல் ரீதியான தவறுகளை புரிய துணைபுரிகின்றது.

6. நவீன காலக்கட்டத்தில் பெண்களுக்கு கிடைத்துள்ள பொருளாதார சுதந்திரம் செல்ஃபோன் தொடர்புகளை அதிகரிக்க செய்கிறது.

7. தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் எந்த மோசமான காட்சிகளையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து காணும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புதிய தலைமுறையினருக்கு இடையே ஆண்-பெண் உறவுகள் குறித்த பார்வையில் கலாச்சார வீழ்ச்சியை உருவாக்க இது காரணமாகிறது.

8. இல்லற வாழ்க்கையில் தம்பதியினர் இடையே பரஸ்பர அன்பும், பிணைப்பும் வறட்சியாக காணப்படுவதால் தாம்பத்தியம் குறித்த கனவு மாளிகைகள் தகர்ந்து போகின்றன. இல்லற வாழ்க்கையில் வெறும் உடல் இச்சை மட்டுமே குறிக்கோளாக இருக்கும் பொழுது வெகுவிரைவில் திருமண வாழ்க்கை சலித்துப் போகிறது.

9. வளைகுடாவாசிகளைப் பொறுத்தவரை திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே கணவன்-மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு விடுகிறது. விடுமுறை முடிந்து கணவன் வெளிநாட்டுக்கு திரும்புகையில் தம்பதியினர் இடையே உண்மையான அன்பும், நேசமும், காதலும் முறையாக பரிமாறப்படாத சூழல் உருவாகிவிடுகிறது. இத்தகையதொரு சூன்யமான சூழலில் வரும் மிஸ்டுகால்கள் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.

10. ஒரு குழந்தை பிறந்த உடன் தாம்பத்தியத்தின் வசந்தம் அணைந்து போவதைத் தான் பொதுவாக காண்கிறோம். முற்றிலும் இயந்திர மயமாகிப்போன வாழ்க்கையில் புதிய வசந்தங்களை மனம் தேட துவங்குகிறது.

தொடர்கதையாகும் துயரங்கள்!

மிஸ்டு கால் மூலமாக இளம்பெண்களின் அந்தரங்க வாழ்வில் ஊடுருவும் ஆசாமி உடனான உறவில் ஒரேயொரு அடிப்படையாக அமைவது செல்ஃபோன் நம்பர் மட்டுமே. இந்த ஆசாமி, குடிகாரனாகவோ, போதைப் பொருளுக்கு அடிமையானவனாகவோ, பெண்களை ஆபாச வலையில் சிக்கவைத்து அதன் மூலம் சம்பாதிப்பவனாகவோ, மனநோயாளியாகவோ, ரெளடியாகவோ இருக்கலாம்.

மேலே கூறப்பட்ட நபர்களுக்கு காதலும், பாலியலும் எல்லாம் ஆதாயமும், பொழுது போக்குமாகும். முறையான வழிகாட்டுதல்கள் இன்றி பாலியல் வக்கிரத்திற்கு அடிமையாகிப் போன விடலைப் பையன்களும் இதில் அடங்குவர். இத்தகைய நபர்கள் மிஸ்டுகால்களை விடுத்து காதில் ஓதும் மந்திரங்களை நம்பும் இளம் பெண்கள் வரப்போகும் துயரங்களை விலைக் கொடுத்து வாங்குகின்றனர்.

சிம் கார்டை மாற்றுவதன் மூலம் மிஸ்டுகால்களை தொடுத்து இளம் பெண்களின் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தப்பித்து விடுகின்றார்கள்.

தற்பொழுது குறைந்த கட்டணத்தில் இணையதளம் வாயிலாக இயங்கும் சட்டமுறையற்ற தொலைபேசி கார்டுகள் மூலமாகவும் அழைத்து தொந்தரவு கொடுக்கின்றனர். இதில் அழைத்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாததால் அனாமதேயர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துவிடுகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு சிலரே சைபர் செல்லில் புகார் அளிக்கின்றனர். திருமணமான பெண்களுக்கோ மிஸ்டுகால்கள் பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. இங்கே சில பெண்கள் துயரங்களுக்கு அப்ரூவர்களாக மாறிவிடுகின்றார்கள். இரண்டு குடும்பங்களிலும் சண்டைகளும், சச்சரவுகளும் உருவாகின்றன. குழந்தைகள் கவனிப்பாரற்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றார்கள். இறுதியாக தற்கொலையில் அபயம் தேடும் அவலநிலைக்கு மிஸ்டுகால்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் செல்கிறார்கள்.

இதுவெல்லாம் ஏதோ ஒரு சில சம்பவங்கள் என்று கூறி நாம் தப்புவிக்க முயலக்கூடாது.

செல்ஃபோன்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான குடும்ப உறவுகள் தகர்க்கப்பட்டுள்ளன. எத்தனையோ திருமண உறவுகள் விவகாரத்தை நோக்கிச் சென்றுள்ளன. எத்தனையோ இளம்பெண்கள் ஓடிப்போய் கடைசியில் ஆபத்துகளில் சிக்கியுள்ளனர். மன நல மருத்துவமனைகளும், குடும்ப நீதிமன்றங்களும் இதற்கு சாட்சியம் வகிக்கும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு அது மாறாத வடுவாக மாறிவிடுகிறது.

உண்மையில் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற சமூகரீதியான உணர்வுதான் இன்று ஒழுக்க விழுமியங்கள் ஓரளவு பேணப்படுவதற்கு காரணமாகும்.

புதிய தலைமுறையினர் இதுக்குறித்து எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. விளைவு – துயரங்கள் தொடர்கதையாகிறது.

தீர்வு என்ன?

காலம் மனிதனில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிமனையாகும். மாற்றங்கள் காலத்தின் புத்தாடைகள். இந்த ஆடைகளில் சில பொருத்தமாக அமையலாம். சில பொருந்தாது போகலாம். மனித சமூகம் தீமைகளில் குப்புற விழுந்த போதெல்லாம் விழுமியங்களின் வேத பாடங்கள் அவர்களை சீர்திருத்தியன. இனி வேத பாடங்களும் வரப்போவதில்லை. இறைத்தூதர்களும் வரமாட்டார்கள். ஆகவே, இந்த புதிய உலகம் விழுமியங்களில் உருவாக்கும் சீர்கேட்டிற்கு புதிய பரிகாரங்கள் தேவைப்படுகின்றன.

நீண்ட சொற்பொழிவுகளும், புத்தகங்களும் எழுதி நவீன தலைமுறையை நாம் சீர்திருத்தலாம் என கனவு காணத் தேவையில்லை. கொள்கைகளையும், கோட்பாடுகளையும் புதிய யுக்திகளை பயன்படுத்தி இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டியது சான்றோர்களின் பொறுப்பாகும்.

இன்றைய காலக்கட்டத்தில் தாம்பத்திய-குடும்ப வாழ்க்கையின் பரிசுத்தத்தை பேண திருமணத்திற்கு முந்தைய கவுன்சிலிங்கும், திருமணத்திற்கு பிந்தைய கவுன்சிலிங்கும்(மனவளத் துணை ஆலோசனை) மிகவும் உசிதமான ஒரு தீர்வாக கருதப்படுகிறது.

கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் அண்மைக் காலமாக திருமணத்திற்கு முந்தைய கவுன்சிலிங்கை கட்டாயமாக்கியுள்ளனர். அதிகரித்து வரும் விவாகரத்தை குறைக்கவே இத்திட்டம். இதனால் அதிகமான பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய கவுன்சிலிங்குகளில் முக்கியமாக கீழ்க்கண்டவை கவனிக்கப்பட வேண்டும்:

1. பரஸ்பர நம்பிக்கை- இது தகர்ந்துவிட்டால் குடும்பத்தின் நெடுந்தூண் சரிந்துவிடும்.

2. வாழ்க்கை பரிசுத்தம், உயர் பண்புகள், உணர்ச்சிப்பூர்வமான உறவு ஆகிய விழுமியங்களின் மகத்துவம்

3. ஆறுதல் இல்லாத இல்லற வாழ்வில் நிம்மதி இருக்காது

4. இத்தகைய உறவுகளில் தற்காலிகமாக மட்டுமே நிம்மதி கிடைக்கும்

5. இல்லற வாழ்வு என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல. உடல் சார்ந்த ஈர்ப்புடன் அங்கு இரக்கமும், இயல்பான நேசமும், பரஸ்பர அன்பும் இழையோட வேண்டும்.

6. இல்லற வாழ்க்கையை நேர்த்தியாக கொண்டு செல்வதில் இல்லற பங்காளிகளில் ஒருவருக்கு மட்டும் கடமை அல்ல. இருவருக்கும் சமமான பங்குண்டு.

7. இவ்வுலகின் உத்தரவாதமில்லாத குறுகிய கால வாழ்க்கையில் கிடைக்கும் அற்ப இன்பத்தை அனுபவிக்க மரணத்திற்கு பிந்தைய நிரந்தர வாழ்வின் இனிமையை இழந்துவிடக் கூடாது.

இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய இறைநம்பிக்கைக்கான பயிற்சியை(அத்தர்பியத்துல் ஈமானிய்யா) குழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஊட்டி வளர்த்து பெற்றோரும் முன்மாதிரிகளாக மாறும்பொழுது இத்தகைய சஞ்சலங்களும், சபலங்களும் நெருங்க முயலும்பொழுது சுயமாக தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உணர்வு ஏற்படும்.

ஆகவே தவறிய அழைப்புகளில் தடுமாறாமல், தடம் புரளாமல் தனித்தன்மையை பாதுகாப்போம்.

http://www.unmaiyinpakkam.com/

JVP பாராளுமன்ர உறுப்பினர் விஜித ஹேரத்தின் மக்கள் சந்திப்பு இன்று இரவு கஹடோவிடாவில்

மக்கள் விடுதலை முன்னனி நாடாலுமன்ர உறுப்பினர் விஜித ஹெரத் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் இன்று இரவு கஹடோவிட மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வு எமது பிரதான வீதியில் அமைந்திருக்கும் தொலயான் டெக்ஸ், ACS Computer அருகாமையில் இரவு 8.30 மணியளவில் நடைபெற இருக்கின்றதாகவும் அறியக்கிடைக்கின்றது.

பாராளுமன்றத்தில் மஹிந்தவின் ஊழல்களை, அம்பலப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி

மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தன் காரணமாகவே மருந்துகள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர முடிந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 04-03-2015 தெரிவித்துள்ளார்.

Hope to give people the opportunity to elect a govt of their liking: Maithripala Sirisenaநாடாளுமன்றத்தில் ஔடதங்கள் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

மக்கள் என்னை ஜனாதிபதி தெரிவு செய்தமைக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஔடதங்கள் பாதுகாப்புச் சட்டமூலத்தை காணாமல் போக செய்வதற்காக 2011 ஆம் ஆண்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தலா 25 லட்சம் ரூபா திரட்டப்பட்டதாகவும் இப்படியான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய 400 நிறுவனங்களிடம் இவ்வாறு பணம் திரட்டப்பட்டதாக பின்னர் எனக்கு தெரியவந்தது.

திரட்டப்பட்ட அந்த பணம் எங்கு போனது என்பதை நான் அறியவில்லை. அந்த பணத்தின் மூலம் கிடைத்த பலம் காரணமாக சட்டமூலம் காணாமல் போக செய்யப்பட்டது.

சட்ட மா அதிபர் திணைக்களம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியிருக்கலாம். எனினும் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நான் ஜனாதிபதியாக தெரிவாகும் வரை கடந்த 5 வருடங்களாக எவ்விதமான விசாரணையும் நடத்தப்படவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களம் யாருக்கு கீழ் இருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.

இலங்கை மருந்து கூட்டுத்தாபனத்தில் மோசடிகள் காரணமாக ஏற்பட்டிருந்த துர்நாற்றத்தை நான் இன்னும் உணர்கிறேன். சுகாதார அமைச்சர் என்ற வகையில் மருந்து கூட்டுத்தாபனத்தில் கைவைக்க எனக்கு இடமளிக்கப்படவில்லை.
கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியின் மருத்துவர் பணியாற்றினார். அவர் ஜனாதிபதி ஒருவரை போல் நடந்து கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல முறை கூட்டுத்தாபனத்தில் நடக்கும் ஊழல் மோசடிகள் பற்றி பேச வேண்டாம் என என்னிடம் கூறினார். அவற்றை கணக்காய்வாளர் பார்த்து கொள்வார், அதனால் அது பற்றி பேசவேண்டியதில்லை என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சர் ஒருவரிடம் அப்படி கூறினால், அமைச்சராக இருப்பவர்களுக்கு எப்படியான அசௌகரியமான நிலைமை ஏற்படும் என்பதை இந்த சபையில் இருக்கும் அமைச்சர்கள் அறிவார்கள்.

அதிகாரிகள் முன்னிலையில், அப்படி கூறியதும் ஊழல், மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகள் துள்ளி குதித்து ஊழல், மேசடிகளில் ஈடுபட ஆரம்பித்தனர். அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

இந்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் ஜனாதிபதியாக நான் கலந்து கொள்வது காலத்தின் கோலம். இதற்கு எதிராக செயற்பட்டவர்கள் எவரும் சட்டமூலம் இவ்வாறு நிறைவேற்றப்படும் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

jaffnamuslim

உடுகொடையில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணும் படிப்பினையும்

கடந்த 25.02.2015 அன்று உடுகொடையில் இடம்பெற்ற 27 வயதான ஒரு கர்ப்பிணி தாயின் மரணம் ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் அனைவருக்கும் பாரிய படிப்பினையை வழங்கியது. ஆகவே இம்மரணம் பற்றிய சில தகவல்களை பொது மக்களுக்கு புரியும் வகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

குறிப்பிட்ட நபர் திருமணமாகி 3 வயது குழந்தையின் தாயாவார். சிறுநீர் பரிசோதனையின் மூலம் ஏறத்தாள 6 வார கால கருவை சுமந்திருப்பதாக கருதப்பட்டார். குறித்த தினம் காலையில் வயிற்றுவலி, வாந்தி போன்ற அசௌகரியங்கள் ஏற்பட அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோரால் அழைத்து செல்லப்பட்டார்.

இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் சாதாரண அறிகுறி என்பதாலும் அரசாங்க மருத்துவமனைக்கு செல்லுமிடத்து உடன் இருப்பதற்கு யாரும் இல்லை என்பதாலும் இவர்கள் தனியார் வைத்திய சாலையை நாடியிருக்கிறார்கள்.
வைத்திய பரிசோதனையின் பின் வழமை போன்று Saline ஏற்றப்பட்டு வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட குறித்த பெண் மாலை ஆகும் போது மிகுந்தசிரமத்துக்குள்ளாகியுள்ளார். உடம்பின் அசௌகரியங்கள் மேலும் அதிகரிக்க தொடங்கவே அருகில் உள்ள அரச மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். மருத்துவ மனைக்கு நுழையும் போதே துரதிஷ்டவசமாக உயிர் பிரிந்து விட்டது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
பிரேத பரிசோதனையின் மூலம் கருப்பை குழாய் வெடித்து மரணம் சம்பவித்ததாக உறுதி செய்யப்பட்டது. ( ruptured ectopic pregnancy ) இம்மரணம் இறைவனின் நாட்டப்படி நடந்த போதிலும் கூட எமக்கு நிறையவே படிப்பினைகளை சுமந்து நிற்கின்றது.

ஒரு பெண் கருத்தரித்து விட்டால் அந்த சிசு கருப்பையினுள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். ( intra uterine pregnancy)அதுதான் சாதாரண நிலை. மாற்றமாக கருப்பையின் வழமைக்கு மாற்றமான இடத்திலோ அல்லது கருப்பைக்கு வெளியிலோ அது காணப்பட்டால் அதை நாங்கள் ectopic pregnancy என்கிறோம். இவ்வாறு அசாதாரண இடத்தில் சிசு வளரும் போது அந்த இடம் வெடித்து உடனில் உள்ளே குருதிப்பெருக்கு ஏற்படுகின்றது.

உண்மையில் நாம் மேற்சொன்ன பெண்ணுக்கு நாங்கள் கூறிய அந்த ectopic pregnancy இருந்துள்ளது. அது ஒரு scan (USS) செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்படாமல் saline மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே scan (USS) பண்ணப்படாத நிலையில் வயிற்றுவலி, வாந்தி, தலைச்சுற்று போன்றன ஏற்பட்டால் saline கொடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியாது.உரிய நேரத்தில் சத்திர சிகிச்சை செய்வதன் மூலம் உயிராபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

உண்மை நிலை இவ்வாறிருக்க வைத்தியரிடம் போகும் போது எமது சமூகம் விடுகின்ற மிகப்பெரும் தவறு என்னவென்றால் வைத்தியர்களிடம் தாங்களாகவே முன்வந்து saline ஒன்று கொடுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்கிறோம். அவர்களும் பணத்துக்காக இதை கண்மூடி தனமாக செய்கிறார்கள்.

இவ்வாறானதொரு உயிராபத்தை தான் நாங்கள் கடந்த வாரம் சந்தித்தோம்.
ஆகவே இதன்பிறகாவது அனைவரும் விழிப்புடன் இருந்து இது போன்ற அசம்பாவிதங்கள், உயிராபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இந்த செய்தியை எமது சமூகத்துக்கு மட்டுமல்ல தெரிந்த அனைவருக்கும் எத்திவையுங்கள்.
Dr. Ahamed Rifath (MBBS)
Dr. Mifraaz shaheed (MBBS)

திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளுமே அரேபியாவின் அரசியல் சாசனம் : மக்காவில் நடைபெற்ற மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் மன்னர் சல்மான் பேச்சு....

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளுமே சவூதி அரேபியாவின் அரசியல் சாசனம் என்று மன்னர் சல்மான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான முழு விவரம் பின் வருமாறு....
புனித நகரமான மக்காவில் நடைபெற்ற மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மன்னர் சல்மான் பேசுகையில்...
எனது தந்தை அப்துல் அஸீஸ் அவருக்கு பிறகு இந்த நாட்டை ஆண்ட அவரது பிள்ளைகளான பைஸல், காலித், பஹத், அப்துல்லாஹ் உள்ளிட்ட அனைவர்களும் தங்களை மன்னர் என்றோ ஆட்சியாளர் என்றோ அழைப்பதை விட இரு புனித தலங்களின் காவலர்கள் சேவகர்கள் என்று அழைக்கப்படுவதையே பெரிதும் விரும்பினர்.
கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞர்களே...
சவூதி அரேபியா என்பது மற்ற நாடுகளை போல் அல்லாமல் இஸ்லாத்தின் அடிப்பைடையின் மீது கட்டி எழுப்பபட்டுள்ள ஒரு நாடாகும்.
திருமறை அல்குர்ஆனும் மாநபியின் வழிமுறைகளுமே இந்த நாட்டின் அரசியல் சாசனமாகும்.
இந்த அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டே சவூதி அரேபிய அரசு என்றும் பணியாற்றும்.
அழகான இந்த மார்க்த்தை நாம் பெற்றிருப்பதும் அந்த மார்க்கத்திற்காக சேவை செய்வதும் இறைவன் நமக்கு அருளிய மிகப்பெரிய பாக்கியமாகும்.
அழகான இந்த மார்க்கத்தின் எழில் முகத்தை கோரப்படுத்த சிலர் முயற்சித்து வருகிறார்கள். அவர்களை நாம் கண்டிப்பதோடு அவர்களுக்கு இறைவன் நேர்வழியை வழங்கவேண்டும் என்றும் பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளோம்
ஆட்சியாளர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையே போதுமானதாகும்.
மக்களை எழிய வழியில் அழைத்து செல்லுங்கள், அவர்களுக்கு சிரமம் கொடுக்காதீர்கள், மக்களுக்கு சுப செய்திகளை சொல்லுங்கள் அவர்களை வெறுத்து விரண்டோட வைக்காதீர்கள் (புகாரி முஸ்லிம்)
இந்த நபியின் வழியில் நின்றே நாம் இந்த நாட்டை ஆளுகிறோம் தொடர்ந்து அதில் நீடிக்க அறிஞர்களின் பிரார்தனையை மட்டும் இன்றி மக்களின் பிரார்தனையும் எதிர் பார்க்கிறோம்.
இவ்வாறு சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் இன்று மக்காவில் கூறினார்.
தகவல் உதவிக்கு நன்றி : செய்யது அலி ஃபைஜி

''ஜனாதிபதியின் கோட்டையில் உடைக்கப்பட்ட பள்ளிவாசல்'' உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம் - ஹலீம்



பொலன்நறுவை மாவட்டத்தில்  மின்னேரிய இங்குராக்கொடை போகஹதமன கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் உடைப்புத் தொடர்பாக உண்மையான நிவலரத்தைப் பெற்று ஜனாதிபதிமற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள்  முஸ்லிம் சமய காலாசார திணைக்களத்திடம் தொடர்புகொள்ளுமாறு முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

கடந்த காலங்களில் நிகழ்ந்த பள்ளி உடைப்பு, ஹலால் பிரச்சினை போன்ற விடயங்கள் நடப்பதற்கு இனிமேல் இடமளிக்கக் கூடாது. இதனுடைய உண்மைத் தன்மையைக் கண்டறிந்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இந்த ஆட்சியின் மீது சேறு பூசுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சதி முயற்சிளாகவும் இது இருக்கலாம் ஆகவே அந்தப் பிரதேசத்திலுள்ள முக்கிய நபர்களும் இந்தப் பள்ளிவாசல் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தினரும் முஸ்லிம் சமய காலாசாரத் திணைக்களத்திடம் தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பள்ளிவாசல்கள் உடைப்புத் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தகவல்களைப் பெற்றுக் கொண்ட போதும் பள்ளி கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தினர்ளுடன்  தொடர்பு கொள்ள பல  முயற்சிகள் மேற்கொண்டோம்.  ஆனால் அவர்களிடமிருந்து இதுவரை தொடர்பு இணைபப்பினைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இந்தப் பள்ளிசல் நிர்வாகத்தினர் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் உடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்வதாக அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்துள்ளார்.

யாப்பு சீர்திருத்தத்தின் பின் ஜனாதிபதி ,பிரதமர் , பாராளுமன்றம் – சம அதிகாரம் கொண்டவையா ?

உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக தற்போது தீவிரமாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன  அதன்பிரகாரம் பிரதமரின் ஆலோசனைப்படியே ஜனாதிபதி எப்போதும் செயற்படுவது தொடர்பாக மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆயினும் ஜனாதிபதிக்கு பிரதமர் வழங்கிய ஆலோசைனையை மீள்பரிசீலனை செய்யுமாறு அவரை ஜனாதிபதி கோருவதற்கு இயலுமானதாகவும் ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமொன்றை மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்றத்தை ஜனாதிபதி கேட்கக்கூடியதாகவும் ஏற்பாடுகளை மேற்கொள்ள பரிசீலிக்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் பிரதான நோக்கத்துடன் அரசியலமைப்பில் 19 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தும் சட்டமூலம் அடுத்தமாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் பாராளுமன்றமும் பகிர்ந்துகொள்ளும் அதேவேளை ஒன்றையொன்று மேவிச் செல்லாமல் சமநிலையை பேணுவதற்கான செயற்பாட்டுத்திறனுடனான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்படுவதாக அரசியலமைப்பு திருத்தத்துடன் தொடர்புபட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிரணியின் பொதுவேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாரியளவில் ஜனநாயகரீதியான  சீர்திருத்தங்களை மேற்கொள்வதென உறுதியளித்திருந்தார்.
அவருக்கு முன்பு ஜனாதிபதி பதவியில் இருந்தவர்கள் கொண்டிருந்த எதேச்சாதிகாரமான அதிகாரங்களை நீக்கிவிடும் அம்சங்களை அவரின் 100 நாள் வேலைத்திட்டம் கொண்டிருக்கிறது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளினால் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் பற்றி தற்போது கலந்துரையாடப்படுகிறது.
இக்கலந்துரையாடல்களின் போது பல்வேறு முக்கியமான யோசனைகள் முன்வைக்கப்பட்டு ஆராயப்படுகின்றதென வட்டாரங்கள் தெரிவித்தன.  ஜனாதிபதி நாட்டின் தலைவராகவும் நிறைவேற்று தலைவராகவும் முப்படைகளின் தலைவராகவும் விளங்குவார்.
பிரதமர் நியமன விவகாரம் அல்லது அரசியலமைப்பின் பிரகாரம்  தேவைப்படுவதைத் தவிர பிரதமரின் ஆலோசனையின்படி அல்லது பிரதமரின் அங்கீகாரம் வழங்கப்பட்ட ஏனைய அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் ஜனாதிபதி எப்போதும் செயற்படுவார்.
அதேசமயம் தனக்கு பிரதமரால் அல்லது பிரதமரின் அங்கீகாரத்தைப் பெற்ற அமைச்சர் ஒருவரினால் வழங்கப்பட்ட ஆலோசனையை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரமுடியும். அத்துடன் ஜனாதிபதியின் சம்மதத்தை பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் ஒன்று தொடர்பாக அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்றத்தைக் கோரமுடியும்.
மீள் பரிசீலனைக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு பின்னர் அது தொடர்பாக ஜனாதிபதி செயற்படுவார். பாராளுமன்றத்தில் மீள் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் தொடர்பாகவும் அவர் அங்கீகாரத்தை வழங்குவார்.
ஜனாதிபதியின் விடுபாட்டு உரிமையானது அவரின் உத்தியோகபூர்வ பதவிநிலைக்கு அப்பால் செயற்படுவதற்கு விரிவுபடாது அல்லது நீக்கப்படாது.  ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களாகும். ஜனாதிபதி தேர்தல் முறைமை மாற்றப்படாது. இந்த விடயம் அடுத்த பாராளுமன்றத்திற்குரியதாக அமையும்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றமுடியும். தற்போதுள்ள அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை ஏற்பாடுகள் நீக்கப்படும்.
பிரதமர்
அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் விளங்குவார். பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கும் ஒருவரை பிரதமராக ஜனாதிபதி நியமிப்பார். அதேவேளை பாராளுமன்றத்தின் நம்பிக்கையை அந்த உறுப்பினர் கொண்டிருக்கிறார் என்ற அபிப்பிராயத்தை ஜனாதிபதி கொண்டிருப்பதன் பிரகாரம் பிரதமரை ஜனாதிபதி நியமிப்பார்.
அதேசமயம் பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் பிரதி பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார். அமைச்சர்களின் எண்ணிக்கை முப்பதுக்கு மேற்படாது. இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை நாற்பதுக்கும் மேற்படாது.
பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையான ஆசனங்களையும் இரண்டாவது அதிக தொகை ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் கட்சிகள் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்க இணங்கும். தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கான காலப்பகுதிக்குள் கட்சிகள் 45 மற்றும் 55 இற்கும் மேலான எண்ணிக்கையை கொண்டிருப்பது தொடர்பாக பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றை கொண்டுவரும்.
பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் 5 வருடங்களாகும். முதல் நான்கு வருடங்கள் 6 மாதங்களில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றத்தை கலைக்கமுடியும்.  18 ஆவது திருத்தத்தின் மூலம் அகற்றப்பட்ட அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன நிறுவனங்களுடன் தொடர்புபட்ட ஏற்பாடுகள் குறிப்பிட்ட சில மாற்றங்களுடன் மீள ஏற்படுத்தப்படும்.
கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய முகாமைத்துவ ஆணைக்குழு என்பன சுயாதீன நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்படும். அரசியலமைப்பு பேரவையானது பிரதம நீதியரசர், நீதியமைச்சர், சட்டமா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவரின் ஆலோசனைகளை உயர் நீதிமன்ற,  மேன்முறையீட்டு நீதிமன்ற நியமனங்கள் தொடர்பாக பரிசீலிக்கும்போது பெற்றுக்கொள்ளும்.
முதலாவது வாசிப்புக்கு 14 நாட்களுக்கு முன்பாக மசோதாக்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும்.  ஜனாதிபதியினால் சட்டமூலங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். அவசர சட்டமூலங்கள் இருக்காது.  19 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த திகதியிலிருந்தும் பொதுச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு , மனித உரிமை ஆணைக்குழு ,  இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு போன்றவற்றின் உறுப்பினர்களின் பதவி காலாவதியாகும்.-
lankamuslim