க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் வழமைபோல் கஹட்டோவிடாவும் சிறப்பிடம்
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இப்பெறுபேறுகளில் வழமைபோல் கஹட்டோவிடாவின் இரு பாடசாலைகளும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. கஹட்டோவிடாவின் இவ்வருட சிறந்த பெறுபேறாக 7A , 2B காணப்படுகிறது. இப்பெறுபேறை கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற மாணவி ஹிபா மதீன் அவா்கள் பெற்றுள்ளாா்.
அல் பத்ரியாவின் பெறுபேறு 7A 1B 1C ஆகும். இப்பெறுபேற்றையும் ஒரு மாணவியே பெற்றுள்ளார். அத்தோடு மாணவா்களில் சிறந்த பெறுபேறாக 6A, 2B என்ற பெறுபேறு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது கஹட்டோவிட மண்ணின் மைந்தா்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ஊருக்கும் நாட்டுக்கும் சமூகத்துக்கும் சேவையாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
0 comments:
Post a Comment