கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

உடுகொடையில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணும் படிப்பினையும்

கடந்த 25.02.2015 அன்று உடுகொடையில் இடம்பெற்ற 27 வயதான ஒரு கர்ப்பிணி தாயின் மரணம் ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் அனைவருக்கும் பாரிய படிப்பினையை வழங்கியது. ஆகவே இம்மரணம் பற்றிய சில தகவல்களை பொது மக்களுக்கு புரியும் வகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

குறிப்பிட்ட நபர் திருமணமாகி 3 வயது குழந்தையின் தாயாவார். சிறுநீர் பரிசோதனையின் மூலம் ஏறத்தாள 6 வார கால கருவை சுமந்திருப்பதாக கருதப்பட்டார். குறித்த தினம் காலையில் வயிற்றுவலி, வாந்தி போன்ற அசௌகரியங்கள் ஏற்பட அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோரால் அழைத்து செல்லப்பட்டார்.

இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் சாதாரண அறிகுறி என்பதாலும் அரசாங்க மருத்துவமனைக்கு செல்லுமிடத்து உடன் இருப்பதற்கு யாரும் இல்லை என்பதாலும் இவர்கள் தனியார் வைத்திய சாலையை நாடியிருக்கிறார்கள்.
வைத்திய பரிசோதனையின் பின் வழமை போன்று Saline ஏற்றப்பட்டு வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட குறித்த பெண் மாலை ஆகும் போது மிகுந்தசிரமத்துக்குள்ளாகியுள்ளார். உடம்பின் அசௌகரியங்கள் மேலும் அதிகரிக்க தொடங்கவே அருகில் உள்ள அரச மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். மருத்துவ மனைக்கு நுழையும் போதே துரதிஷ்டவசமாக உயிர் பிரிந்து விட்டது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
பிரேத பரிசோதனையின் மூலம் கருப்பை குழாய் வெடித்து மரணம் சம்பவித்ததாக உறுதி செய்யப்பட்டது. ( ruptured ectopic pregnancy ) இம்மரணம் இறைவனின் நாட்டப்படி நடந்த போதிலும் கூட எமக்கு நிறையவே படிப்பினைகளை சுமந்து நிற்கின்றது.

ஒரு பெண் கருத்தரித்து விட்டால் அந்த சிசு கருப்பையினுள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். ( intra uterine pregnancy)அதுதான் சாதாரண நிலை. மாற்றமாக கருப்பையின் வழமைக்கு மாற்றமான இடத்திலோ அல்லது கருப்பைக்கு வெளியிலோ அது காணப்பட்டால் அதை நாங்கள் ectopic pregnancy என்கிறோம். இவ்வாறு அசாதாரண இடத்தில் சிசு வளரும் போது அந்த இடம் வெடித்து உடனில் உள்ளே குருதிப்பெருக்கு ஏற்படுகின்றது.

உண்மையில் நாம் மேற்சொன்ன பெண்ணுக்கு நாங்கள் கூறிய அந்த ectopic pregnancy இருந்துள்ளது. அது ஒரு scan (USS) செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்படாமல் saline மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே scan (USS) பண்ணப்படாத நிலையில் வயிற்றுவலி, வாந்தி, தலைச்சுற்று போன்றன ஏற்பட்டால் saline கொடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியாது.உரிய நேரத்தில் சத்திர சிகிச்சை செய்வதன் மூலம் உயிராபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

உண்மை நிலை இவ்வாறிருக்க வைத்தியரிடம் போகும் போது எமது சமூகம் விடுகின்ற மிகப்பெரும் தவறு என்னவென்றால் வைத்தியர்களிடம் தாங்களாகவே முன்வந்து saline ஒன்று கொடுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்கிறோம். அவர்களும் பணத்துக்காக இதை கண்மூடி தனமாக செய்கிறார்கள்.

இவ்வாறானதொரு உயிராபத்தை தான் நாங்கள் கடந்த வாரம் சந்தித்தோம்.
ஆகவே இதன்பிறகாவது அனைவரும் விழிப்புடன் இருந்து இது போன்ற அசம்பாவிதங்கள், உயிராபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இந்த செய்தியை எமது சமூகத்துக்கு மட்டுமல்ல தெரிந்த அனைவருக்கும் எத்திவையுங்கள்.
Dr. Ahamed Rifath (MBBS)
Dr. Mifraaz shaheed (MBBS)

0 comments:

Post a Comment