திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளுமே அரேபியாவின் அரசியல் சாசனம் : மக்காவில் நடைபெற்ற மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் மன்னர் சல்மான் பேச்சு....
திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளுமே சவூதி அரேபியாவின் அரசியல் சாசனம் என்று மன்னர் சல்மான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான முழு விவரம் பின் வருமாறு....
புனித நகரமான மக்காவில் நடைபெற்ற மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மன்னர் சல்மான் பேசுகையில்...
எனது தந்தை அப்துல் அஸீஸ் அவருக்கு பிறகு இந்த நாட்டை ஆண்ட அவரது பிள்ளைகளான பைஸல், காலித், பஹத், அப்துல்லாஹ் உள்ளிட்ட அனைவர்களும் தங்களை மன்னர் என்றோ ஆட்சியாளர் என்றோ அழைப்பதை விட இரு புனித தலங்களின் காவலர்கள் சேவகர்கள் என்று அழைக்கப்படுவதையே பெரிதும் விரும்பினர்.
கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞர்களே...
சவூதி அரேபியா என்பது மற்ற நாடுகளை போல் அல்லாமல் இஸ்லாத்தின் அடிப்பைடையின் மீது கட்டி எழுப்பபட்டுள்ள ஒரு நாடாகும்.
திருமறை அல்குர்ஆனும் மாநபியின் வழிமுறைகளுமே இந்த நாட்டின் அரசியல் சாசனமாகும்.
இந்த அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டே சவூதி அரேபிய அரசு என்றும் பணியாற்றும்.
அழகான இந்த மார்க்த்தை நாம் பெற்றிருப்பதும் அந்த மார்க்கத்திற்காக சேவை செய்வதும் இறைவன் நமக்கு அருளிய மிகப்பெரிய பாக்கியமாகும்.
அழகான இந்த மார்க்கத்தின் எழில் முகத்தை கோரப்படுத்த சிலர் முயற்சித்து வருகிறார்கள். அவர்களை நாம் கண்டிப்பதோடு அவர்களுக்கு இறைவன் நேர்வழியை வழங்கவேண்டும் என்றும் பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளோம்
ஆட்சியாளர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையே போதுமானதாகும்.
மக்களை எழிய வழியில் அழைத்து செல்லுங்கள், அவர்களுக்கு சிரமம் கொடுக்காதீர்கள், மக்களுக்கு சுப செய்திகளை சொல்லுங்கள் அவர்களை வெறுத்து விரண்டோட வைக்காதீர்கள் (புகாரி முஸ்லிம்)
இந்த நபியின் வழியில் நின்றே நாம் இந்த நாட்டை ஆளுகிறோம் தொடர்ந்து அதில் நீடிக்க அறிஞர்களின் பிரார்தனையை மட்டும் இன்றி மக்களின் பிரார்தனையும் எதிர் பார்க்கிறோம்.
இவ்வாறு சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் இன்று மக்காவில் கூறினார்.
தகவல் உதவிக்கு நன்றி : செய்யது அலி ஃபைஜி
0 comments:
Post a Comment