கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா மஸ்ஜித் கட்டுமானப்பணிக்காக நீங்களும் உதவலாம்.

"அல்லாஹ்வின் முகம் நாடி யார் ஒரு மஸ்ஜிதைக் கட்டுகிறாரோ.. அவருக்காக அதைப்போன்றதொன்ரை சுவனத்தில் அல்லாஹ் கட்டுகிறான்."
 நூல் புகாரி.

அன்புச் சொந்தங்களே..!!
இஸ்லாமிய பிரச்சாரத்தின் பிரதான ஸ்தலமாக பள்ளிவாயல்கள் திகழ்கின்றன. அந்த வகையில், எமது குக்கிராமத்தில் அல் குர்ஆன், அல் ஹதீஸ் வழியில் சீர்திருத்தம் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இப்பள்ளிவாயல், அல்லாஹ்வின் உதவியால் தம் பணியை முடிந்த அளவுக்கு செய்து கொண்டுவருகிறது. இரண்டு மாடிகளுடன் இயங்கும் எமது பள்ளிவாயல் மக்களது இட வசதி கருதி மூன்றாம் மாடியை கட்ட முடிவு செய்திருக்கிறது. இங்கே நடக்கும் மார்க்க நிகழ்ச்சிகளுக்கு பள்ளிவாயலின் விஸ்தரிப்பு பெரும் தேவையாக இருக்கிறது.
அந்த வகையில்,
எமது பள்ளிவாயலின் மூன்றாம் மாடியை முழுதும் செய்து முடிப்பதற்காக சுமார் பத்து இலட்சங்கள் (10,00,000Rs) தேவைப்படும் என்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனை ஜமாத்தார்களாகிய தங்களிடம் இருந்தும் நலன் விரும்பிகளிடமிருந்தும் வசூலிக்க முடியுமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனை ஐநூறு (500) பங்குகளாகப் பிரித்து, ஒன்றின் விலை இரண்டாயிரம் (2,000Rs) ரூபாய்களாக விற்கப்படுகிறது. எனவே, ஒரு பங்கை தனியாகவோ.. குழுவாகவோ சேர்ந்து வாங்கி எமது பள்ளியின் விஸ்தரிப்புக்கு உதவுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
Total Estimation - 10, 00,000 Rs
Total Shares - 500
Cost of 1 Share - 2,000 Rs
இந்தச் சிறு உதவி அல்லாஹ்விடத்தில் பெரும் பரிசாக திரும்பப்பெறக் கூடியது என்பதை மனதில் கொள்வோமாக..!!
மேலதிக தொடர்புகளுக்கு,,
077 655 4946
077 622 8889

0 comments:

Post a Comment