கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

செங்கலடியில் நடைபெற்று வரும் கலப்புத்திருமணங்கள்-பின்னணி என்ன?

இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் உண்மை நிலை பற்றிய விடயங்களைச் சரி வர அறிந்து கொண்டதன் காரணமாக மேற்கத்தேய உலகமே இன்று இஸ்லாத்தை நோக்கி வீறுநடை போட்டு வரும் இக்காலச் சூழ்நிலையில், தங்களை இஸ்லாமியர்கள் என்றும் தாங்கள் முஸ்லிம்கள் என்றும் மூச்சுக்கு முன்னூறு தடவைகள் கூறிக்கொள்கின்ற எமது பெயர் தாங்கிகள் சிலர் தங்களுக்கு ஓர் வாழ்வியல் அடிப்படையையே போதித்துத் தந்த புனித மார்க்கத்தை, பெற்று வளர்த்த தாய்தந்தையர்களை மற்றும் பல இரத்த பந்தங்களையும் உறவுகளையும் மறந்து எங்கோ ஒரு மூலையில் மனித நாகரிகத்தின் அடிப்படையை மருந்துக்கூட கற்றிராத ஓர் மாற்று மதப் பெண்ணை மதம் மாறித் திருமணம் செய்து கொள்கின்ற நடைமுறை இப்போது நாம் அடிக்கடி கேள்விப்படுகின்ற ஓர் விடயமாக போய் விட்டது. 

உண்மையில் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான அடிப்படையறிவும் இஸ்லாமிய மார்க்கச்சூழலும் இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய ஐங்காலத் தொழுகையையும் தன்னகத்தே கொண்டுள்ள எந்தவொரு முஸ்லிமும் இவ்வாறான ஓர் இழிசெயலுக்கு ஆளாகமாட்டான் என்பது அல் குர்ஆன் கூறும் உண்மையாகும்.إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.(அல் குர்ஆன்.29:45)இவ்வாறான மானக்கேடான விடயங்களைப்பற்றி எச்சரிக்கின்ற அதிகமான அல் குர்ஆனிய வசனங்களும் நபிகளாரின் பொன்மொழிகளும் நம்முன்னே அரண் இட்டிருக்க அவற்றையெல்லாம் தாண்டி மாற்று மதத்தவர்களுடன் கள்ளத்தொடர்புகளை ஏற்படுத்தி அவை இறுதியில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தலைகுனிகின்ற அளவிற்கு மிகப்பாரதூரமான விடயங்களாக மாறுவதை ஏனோ நம்மத்தியில் உலாவருகின்ற சில நயவஞ்சகர்கள் உணரமறுத்துவிடுகின்றார்கள். 

பின்னணியில் இஸ்லாத்தின் விரோதிகள். 

இது இவ்வாறிருக்க மிகவும் தத்ரூபமான முறையில் திட்டமிட்டு முஸ்லிம்களை இம்மாயவலையில் சிக்கவைத்து இஸ்லாமிய சமூகத்தை சந்திசிரிக்க வைக்கின்ற கைங்கர்யத்தையும் சில விசமிகள் மேற்கொண்டு வருவதும் தற்போது சில இடங்களில் நிரூபணமாகியுள்ளது. 

அந்தவகையில் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கல்லடிப் பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டு கலப்புத்திருமணங்கள் இதற்கு பெரும் சான்றுகளாகும். 

பொதுவாக இறுதி யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடகிழக்கிலுள்ள பின்தங்கிய நிலையிலுள்ள தமிழ் மக்களின் தற்போதைய குடும்ப மற்றும் சமூகரீதியான சூழ் நிலையினை நாம் எடுத்துநோக்கினால், அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. குறிப்பாக விடுதலைப்புலிகள் ஒழித்துக்கட்டப்பட்டதன் பின்னர் தமிழ் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு தற்போது கலாச்சார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலைக்கு வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் நிலை மாறிப்போயுள்ளது. 

இந்நிலை உருவானதற்கு மிகவும் வலுவான காரணங்களும் உண்டு.யுத்த காலங்களில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புவைத்திருந்ததற்காக கணிசமான ஆண்கள் அரசபடையினரால் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக குடும்பங்களுடன் தொடர்பின்றி இருந்தமை, அதேபோன்று யுத்த காலத்தில் குடும்பப் பொறுப்புக்களை சுமந்திருந்த ஆண்கள் அதிகமாகக் கொல்லப்பட்டு  குடும்பங்கள் இன்றுவரைக்கும் அநாதரவான நிலையில் வறுமையில் வாடிவருகின்றமை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பில்  செயற்பட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைய வந்தவர்களை தமிழ் சமூகம் இன்று ஓர் பயம் கலந்த கண்ணோடு பார்ப்பதால் அவர்களின் தொழில் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கு மிகவும் அல்லல் படுவது போன்ற காரணங்களை வகைப்படுத்த முடியும். 

இவ்வாறு பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான பின்தங்கிய நிலையிலுள்ள இம்மக்கள் அன்றாட வாழ்வாதாரம், பிள்ளைகளின் படிப்பு போன்றவற்றுக்காக விபச்சாரத்தை தொழிலாக செய்யக்கூடிய ஓர் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தவிடயம் நானாக இட்டுக்கட்டியோ அல்லது வெறும் ஊகத்தின் அடிப்படையிலோ சொல்கின்ற தகவல் அல்ல.இன்று தங்களை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் தாங்கள்தான் தமிழர்களுக்கு மறுவாழ்வு பெற்றுக்கொடுக்கப்போகிறோம் என்றும் வெளிநாடுகளில் போர்க்கொடி தூக்கிக்கொண்டு தமிழர்களின் அழிவில் வயிற்றுப்பிழைப்பு நடாத்துகின்றவர்களின் இணையத்தளங்களிலும் அச்சூடகங்களிலும் வெளியாகின்ற செய்திகளை ஆதரமாகக்கொண்டே நான்  இவ்விடயத்தை சுட்டிக்காட்டுகிறேன். இன்னும் தமிழர்களின் கலாச்சார மரபுரிமை நகரம் என்று முற்காலத்தில் பெயர்பெற்றிருந்த யாழ்குடா நாட்டில் அவ்வப்போது முற்றுகை இடப்படுகின்ற விபச்சார விடுதிகளும் இதற்குப் பெரும் சான்றுகளாகும். 

கிட்டத்தட்ட அவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமையும் காணப்படுகிறது. அண்மையில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை அதனை உண்மைப்படுத்துகிறது. ”திருமணத்திற்கு முன்னரான இளம் வயதில் கர்ப்பம் தரிக்கின்ற பெண்களின் எண்ணிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படுகிறது.” என்பதே அவ்வறிக்கையாகும். 

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குடும்பத்தலைவர்கள் இன்றி செலவீனங்களை எதிர்கொள்ள முடியாமல் துர்நடத்தைகளுக்கு செல்ல எத்தனிக்கின்ற இளம் பெண்களை இனங்கண்டு அவர்களோடு தொடர்பு வைத்திருக்கூடிய இளைஞர்களின் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களின் விபரங்களை திரட்டி காதல் வலையில் சிக்கவைத்து இறுதியில் கல்யாணம் செய்து வைக்கின்ற சமூகசேவை(?)யினை செங்கல்லடிப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வும் துவேஷ எண்ணமும் கொண்ட ஓர் இனவாதியான செல்லம் திரைப்பட மாளிகை உரிமையாளரும் செங்கல்லடி வர்த்தக சங்கத் தலைவருமான திரு.மோகன் மேற்கொண்டுவருகிறார். 

இந்த மோகன் என்பவரைபற்றித் தெரியாதவர்களுக்கு ஓர் சிறு அறிமுகம். 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்றொரு இயக்கத்தை ஆரம்பித்து அதன்பிறகு அவ்வியக்கத்திலிருந்து பிரிந்து திராவிடன் சேனை என்றொரு இயக்கம் உருவானது. தற்போது அவ்வியக்கத்திற்கு தலைமை தாங்கி வருபவர்தான் இந்த தியேட்டர் மோகன் என்பவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அன்று தொடக்கம் முஸ்லிம்களை கருவறுப்பதையே தனது தலையாய கடமையாக கொண்டிருந்த இந்த புலிப்பினாமியின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவகையானவை. 

அதில் ஒருசிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் உறுகாமத்திலுள்ள இந்திய வீட்டுத்திட்ட திறப்புவிழா நிகழ்ச்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே முஸ்லிம்கள் மீதான தனது இனத்துவேஷத்தை வெளிப்படுத்துகின்ற துண்டுப்பிரசுரம் ஒன்றை மிகவும் பகிரங்கமாகவே வெளியிட்டார். 

அத்தோடு அந்நிகழ்வில் இருந்து சில மாதங்கள் கடந்த நிலையில் உறுகாமத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் கடைத்தொகுதியும் முச்சக்கர வண்டியும் தீக்கிரையாக்கப்பட்டது.இச்சம்பவத்தில் முக்கிய சூத்திரதாரியாக தியேட்டர் மோகனே இருக்கலாம் என பலமான சந்தேகம் நிலவிவருகிறது.காரணம், ஆரம்பகாலம் தொட்டே உறுகாமம் வாழ் முஸ்லிம்களுக்கு தியேட்டர் மோகனால் பலவழிகளில் அச்சுறுத்தல் இருந்தே வந்திருக்கிறது. 

மேலும் 2012ம் ஆண்டு புனித ரமழான் மாதம் இறுதிப்பகுதியில் உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் ஓர் இரவு நேரத்தில் முஸ்லிம் பெண்ணொருவர் கோடாலியால் வெட்டப்பட்டு படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அதே இரவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் ஐந்து வீடுகளும் ஒரு வியாபார நிலையமும் உட்பட ஜும்மா பள்ளிவாயில் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது.இச்சம்பவத்திலும் மேற்குறித்த இனவாதி மோகனே சம்பந்தப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. 

இவ்வாறு முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் பொருளாதாரம், கலாச்சாரம், இருப்பிடங்கள் போன்றவற்றை சூறையாடுவதில் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்ற ஓர் இழிபிறவியான இந்த மோகனே தற்போது நடைபெற்றுவருகின்ற கலப்புத் திருமணங்களையும் முன்னின்று நடத்திவைப்பதை யதார்த்தமாகவே அவதானிக்கமுடிகிறது. 

இவ்வினவாதியின் சதிவலையில் இஸ்லாமியப்பெயர் தாங்கிகளேதான் விழுந்தாலும் இதை வைத்து முஸ்லிம்களை எள்ளிநகையாடி ஆத்திரமூட்டி மீண்டும் ஓர் இனக்கலவரத்திற்குத் தூபமிடுவதே இதன் முக்கியநோக்கமாகும்.ஏனெனில் செங்கல்லடியில் அதிகமாக வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் காத்தான்குடி, ஏறாவூர் போன்ற ஊர்களிலிருந்து வருகின்ற முஸ்லிம் வியாபாரிகளே.ஏற்கனவே ஓர் தடவை முஸ்லிம் வியாபாரிகளிடம் தமிழ் மக்கள் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம் எனப்பிரச்சாரம் செய்ததும் இவ்வினவாதி மோகன்தான் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். 

அதுமாத்திரமல்லாது செங்கல்லடியில் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்ற முஸ்லிம்வியாபாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்விதமாக அவர்களையும் தனது வலையில் சிக்கவைத்து திருமணம் (?) முடித்து வைக்கின்ற புதிய திட்டம் ஒன்றையும் தீட்டிவருவதாக சிலதகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதில் ஒன்றுதான் முஸ்லிம் வியாபரிகளிடத்தில் கடனாக பொருட்களை கொள்வனவு செய்கின்ற தமிழ்ப்பெண்கள் அவ்வியாபாரிகளை கடனை வசூலிப்பதற்காக தமது வீடுகளுக்கு வரவைத்து அவர்களுடன் தமக்கு தொடர்பிருப்பதாகக் கூறி பொறியில் சிக்கவைக்கும் ஓர் நூதனமான திட்டமாகும்.இவ்விடயத்தில் செங்கல்லடி மட்டுமல்ல மாற்றுமதத்தவர்களின் பிரதேசங்களில் தொழில் புரிகின்ற ஒவ்வொரு முஸ்லிம் வர்த்தகர்களும் தொழிலாளர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும். 

இதுவே தற்போது செங்கல்லடியில் நடந்துவருகின்ற கலப்புத் திருமணங்களின் பின்னணியில் இருக்கின்ற உண்மை நிலவரமாகும். 

இதற்கும் மேலாக, முஸ்லிம் இளைஞர்கள் மதம்மாறி திருமணம் முடிப்பதனால் அவர்கள் செங்கல்லடிக்கு வந்துதான் திருமணம் முடிக்க வேண்டுமா? 
முஸ்லிம் இளைஞர்கள் திருமணம் முடிப்பதற்கேற்ற அழகும் குடும்ப ஒழுக்கமும் நிறைந்த (?) பெண்கள் செங்கல்லடியிலேதான் இருக்கிறார்களா? 
அதுவும் அவ்வாறு திருமணம் முடிப்பவர்கள் அனைவரும் தியேட்டர் மோகனின் காலடியில்தான் தங்களுக்குத் திருமணம் முடித்துத் தரும்படி வேண்டி இறைஞ்சுகிறார்களா? 
என்பன போன்ற கேள்விகளும் தொக்கிநிற்கின்றன. 

நம்மிடமும் கடப்பாடுகள் உள்ளன.

 وَلَا تَقْرَبُوا الزِّنَا  ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல் குர்ஆன்.17:32) 

இன்றைய நாட்களில் விபச்சாரம் என்பது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது.அதிலும் நமது முஸ்லிம் இளைஞர்களின் நிலைமையை பார்த்தால் அது ஏனைய மதத்தவர்களுடன் போட்டி போடக்கூடிய அளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளது. ஒரு இளைஞன் தனக்கு ஒரு பெண்ணுடனான தொடர்பு இருப்பதை கௌரவமாக நினைக்கிறான்.பெண்களோடு தொடர்பு இல்லாத இளைஞர்களை நண்பர்கள் தங்களின் வட்டத்தில் சேர்ப்பதில்லை என்ற நிலைக்கு ஆண்பெண் தொடர்பு இன்று ஒரு அதிகப்படியான தகுதியாக காணப்படுகிறது.அதில் இன்னும் விசேஷம் என்னவென்றால் முஸ்லிம் இளைஞர்கள் மாற்றுமதப் பெண்களுடனான தொடர்புகளையே அதிகம் விரும்புவதாக அறியக்கிடைக்கிறது. காரணம் என்னவென்று அறியமுடியவில்லை. 

உண்மையில் அல்லாஹ்தஆலா ஒருமுஸ்லிம் தனது உடலில் ஏற்படுகின்ற பாலியல் வேட்கையினை தீர்த்துக்கொள்வதற்காக மிக அழகான பல வழிகாட்டுதல்களை ஏவியிருக்க அவற்றைப் புறக்கணித்து ஷைத்தானிய சிந்தனைகளுக்கு ஆட்பட்டு சமூகத்தின் மானத்தை சந்தி சிரிக்க வைக்கின்ற இந்நயவஞ்சகர்கள் முதலில் அல்லாஹ்வையும் அவனது இறுதிநாளையும் சற்று ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். 

வெறுமனே ஒருசில மாதங்களில் தணிந்து போகக்கூடிய அற்பத்தனமான உடல்தேவைக்காக ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்துகின்ற இக்கயவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் எவ்வாறு முகம்கொடுக்கப் போகிறார்கள்? 

ஒருபக்கம் இஸ்லாத்தை நோக்கிய இனவாத யுத்தத்திற்கு முகம் கொடுக்கமுடியாமல் திண்டாடிகொண்டிருகின்ற சமூகத்திற்குள் கூடவே இருந்து செல்லரிக்கின்ற இப்புற்றீசல்களுக்கு முதலில் ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும். இவர்களால் இஸ்லாமிய மார்க்கத்திற்கு நற்பெயர் வராவிட்டாலும் பரவாயில்லை இக்கயவர்கள் அவப்பெயரை ஏற்படுத்தாமல் இருந்தால் அதுவே போதுமானது. 

இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொள்ளக்கூடிய அவ்வப்பிரதேசங்களில் பலம்பொருந்திய தஃவா அமைப்புக்கள் இவ்வாறான மார்க்க அறிவில் வங்குரோத்து நிலையிலுள்ள இளைஞர்களை துல்லியமாக இனங்காண்பதற்கு தனியாக பிரிவுகளை உருவாக்கி அவர்களுக்கு உரியமுறையில் பயிற்சியளித்து சமூக நீரோட்டத்தில் கலந்து வாழ்வதற்கு உறுதுணைபுரிவது காலத்தின் தேவைகளில்  உணரபடுகிறது. 

எது எவ்வாறு இருப்பினும் ஒருமனிதனின் வாழ்க்கையின் எப்படி இறுதிநேரம் இருக்கவேண்டும் எனத்தீர்மானிக்கும் ஆற்றலையுடையவன் வல்ல அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. அவனது சித்தப்படியே ஒவ்வொரு ஆத்மாவினதும் இறுதிநேரம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே நாம் எவ்வளவுதான் உபதேசங்களை அள்ளிவீசினாலும் ஒருமனிதனுடைய முடிவு எவ்வாறிருக்கும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். 

இருப்பினும் அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு எச்சரிக்கிறான்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ 
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.(அல் குர்ஆன்.03:102)

அந்தவகையில் அல்லாஹ்வை அஞ்சி வாழக்கூடிய முஸ்லிம்களாக நாம் ஒவ்வொருவரும் மாறவேண்டும்.அத்தோடு நமது வாழ்க்கையின் இறுதிநேரம்  இறைவனுக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும் என்பதோடு இவ்வாறான மானக்கேடான காரியங்களிலிருந்து நம் அனைவரும் விலகியிருக்க எலாம் வல்ல அல்லாஹ்வை இருகரமேந்திப்பிரார்த்திப்போம். 

முஹம்மது நியாஸ் 

0 comments:

Post a Comment