கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

"இலட்சியப்பாதையில் மாணவர்களுக்கான சவால்கள்" என்ற தலைப்பில் அல்பத்ரியா ம.வி. நடைபெற்ற கருத்தரங்கம்.

அல்ஹம்துலில்லாஹ். KES - Kahatowita Educational Societyஇனால் ஏற்பாடு செய்யப்பட்ட "இலட்சியப்பாதையில் மாணவர்களுக்கான சவால்கள்" எனும் தொனியிலான விழிப்புணர்வு கருத்தரங்கு மிகவும் வெற்றிகரமான முறையில் நடந்து முடிந்தது.
பல்வேறு வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று எமது ஊருக்கு வருகை தந்து நிகழ்வை மிகவும் சிறந்த முறையில் நடாத்திய இலங்கை உளவள ஆலோசக நிபுணர்களின் சங்கத்தின் துணைத்தலைவரும்
இங்கிலாந்தின் பொதுச்சுகாதாரத்திற்கான றோயல் கழகத்தின் புலமையாளரும் சிரேஷ்ட மனநல விருத்தி ஆலோசனை நிபுணருமான அஸ்ஹர் அன்ஸார் M.S Psych.C (Ind), A.D.Psycho.C (SL), D.Psy.C (SL), D.Y.T (Ind), FRSPH (UK) அவர்களுக்கு எமது ஊர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அல்லாஹ் அவர்களுக்கு மேலும் அருள் புரிவானாக.

Rihmy Mohamed -facebook

0 comments:

Post a Comment