கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தில்ருக்ஷியின்யின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த கோத்தா திட்டம் - இரகசிய தகவல் கசிந்தது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலைவி தில்ருக்ஷியின்யின் வீட்டை முற்றுகையிட திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் தொடர்பும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக இடம்பெறவுள்ள விசாரணையை தடுக்கும் வரையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலைவியின் வீட்டை முற்றுகையிட்டு தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இன்று 6 மணியளவில் மேஜர் ஜெனரால் எம்.ஆர்.டப்ளியூ.சொய்சா வீட்டில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேல் மாகாண சபை மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மேஜர் பிரதீப் உதுகொட உட்பட முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் ஆதரவாளர் சிலர் இக்கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக மேஜர் பிரதீப் உதுகொட தனது தொலைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி அவசியமானவர்களை அழைத்துக்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு சூழ்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம் எப்படியாவது விசாரணைகளை தடுத்து விடலாம் என கோத்தபாய ஆதரவாளர்கள் கற்பனை கோட்டை கட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தமையால் தாங்கள் விரும்பியது போன்று செயற்பட்டார்கள் எனினும் தற்பொழுது அவ்வாறு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

jaffnamuslim

0 comments:

Post a Comment