J.R. ஜெயவர்தனவினால் இரட்டைப் பொறியியலாளர் பதவியும் பட்டமும் பறிக்கப்பட்ட கலாநிதி விக்கிரமபாகுவிற்கு கிடைக்கப்போகும் அதிஷ்டம்!
நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக கறுப்புக்கொடி உயர்த்திய காரணத்தால் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் இரட்டைப் பொறியியலாளர் பதவியும் பட்டமும் பறிக்கப்பட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவிற்கு உரிய நட்ட ஈட்டினைப்பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக டாக்டர் ராஜித்த சேனாரத்ன இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 19 ஆவது திருத்தச் சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக இடதுசாரியான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன செயற்பட்டவர். அவர் இரட்டை பொறியியலாளராக பதவி வகிகத்தவராவார். அவர் நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிராக கண்டியில் கறுப்பு கொடி ஏற்றினார் என்பதற்காக அவரின் இரட்டை பொறியியலாளர் பதவி பறிக்கப்பட்டதுடன் பட்டங்களும் பறிக்கப்பட்டன. அவருக்கு இதுவரையில் அந்த பதவி வழங்கப்படவில்லை.
ஆகவே அவருக்கான நஷ்டஈட்டினை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். அதன்படி தற்போது அதற்கு ஏற்ற ஆவணங்களை திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
0 comments:
Post a Comment