கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் நேற்றைய தினம் எமது ஊர்மக்களோடு பகிர்ந்துகொண்டவை..

சுதந்திர கட்சியின் புனர் நிர்மானப் பணிக்காக நேற்றைய தினம் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மற்றும் அத்தனகல்ல தேர்தல் தொகுதி பிரதம அமைப்பாளறும், கப்பல் துறைமுகங்கள் அமைச்சறுமான அரஜுனா ரனதுங்க ஆகியோர் எமது ஊருக்கு சமூகம் அளிந்திருந்தனர். 

பிரமுகர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, கடந்த தேர்தலில் ஆட்சிமாற்றத்திற்காக எமது ஊர்மக்களில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்களாகள் ஆதரவு நல்கியதை சுட்டிக்காட்டியதோடு அதற்கு நன்றியைத் தொிவித்துக்கொள்ளுமுகமாக அவர்களுடைய இந்த ஒன்றுகூடலை ஹொரகொள்ளை சமாதியில் கூடி அதன்பின்னர் கஹடோவிடாவினுடாகவே ஆரம்பிக்கவேண்டும் என சந்திரிக்கா அம்மையார் விரும்பியதற்குணங்க  இங்கு ஆரம்பிக்கப்பட்டதாக கருத்துத்தெரிவித்தததை காணக்கூடியதாக இருந்தது. 
முன்னால் ஜனாதிபதி சந்திரிகா அவாகள் கருத்துத் தெரிவிக்கும் போது பல விடயங்களை ஊர்மக்களுடன் பகிர்ந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது. ஆவரது உரையில் கடந்தகாலங்களில் எமது ஊருடன் இருந்த தொடர்புகள் பற்றி சிலவிடயங்களை நினைவுபடுத்தினார். அதில் ”புரியானி“ என்றபதத்தை சுவாரசியமாக நினைவுபடுத்த தவரவில்லை. 

மேலும் அவா் கருத்துத் தெரிவிக்கையில் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஸ அழிக்க முயற்சிக்கின்றார் என அவர் குற்றம் சுமத்தினாா்.

முதல் தடவையாக சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமை பறிக்பக்கப்பட்ட போது, பிரஜா உரிமை பறிக்கப்பட்ட பெண் ஒருவரை கட்சியின் தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது என நாடு முழுவதிலும் மஹிந்த கூட்டங்களை நடத்தினார் என அவர் குறிப்பிட்டார்.

தற்போது எவ்வாறு கூட்டங்களை நடத்துகின்றாரோ அதே போன்று கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு சிறிமாவோவை விரட்டியடிக்க முயற்சித்தார் என அவர் தெரிவித்தார்.

2001ம் ஆண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சிக்கவிக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுமாறு பலர் தம்மை வற்புறுத்திய போதிலும் ஜனநாயக ரீதியில் தாம் நடந்து கொண்டதாகவம், மஹிந்த ராஜபக்ஸவை கையில் பிடித்துக் கொண்டு சென்று பதவியில் அமர்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஸக்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டாார்.

நீதிமன்றில் சாட்சியங்கள் நிரூபிக்கும் வரையில் காத்திருப்பதாகவும் வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டுக்காக ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் ஓய்வு பெற்றுக ;கொண்டதன் பின்னர் நடந்து கொண்டதனைப் போன்று மஹிந்த ராஜபக்ஸவும் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

தாம் ஆட்சி செய்த காலத்தில் 283 பேராக இருந்த ஜனாதிபதி செயலகத்தின் பணியாளர் எண்ணிக்கை 1600 பேராக உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

மஹிந்த, அவரது சகோதரர்கள், மகன்மார், மனைவி, மனைவியின் உறவினர்கள் மற்றும் ஏனைய நண்பர்கள் உறவினர்கள் ஆட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

தோல்வியைத் தழுவினால் ஒரமாக சென்று ஒய்வு எடுக்க வேண்டுமே தவிர, நாட்டை அழிக்க முயற்சிக்கக் கூடாது என சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரினார்.

இறுதியாக எமது பிரதான பாதை புணர் நிா்மானம் சம்பந்தமாக அவரிடம் மகஜர் ஒன்று கையலிக்கப்பட்டது. அதற்கு அவா் பதில் அளிக்கும் போது நான் இந்த பாதையை செய்துதருவதாக வாக்குறிதி அளிக்கமாட்டேன். ஆனால் என்னால் இயன்ற அளவு அதற்காக முயற்சி எடுப்பதாக கருத்துக் கூறியதை காணக்கூடியதாக இருந்தது. 

0 comments:

Post a Comment