வாழைச்சேனை முஸ்லிம் பெண்மணியின் முன்மாதிரி
மூன்று பவுன் தங்கத்தினையும் பணத்தினையும் கண்டெடுத்த பெண்ணொருவர் வாழைச்சேனைப் பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் 19.08.2014ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது.
கல்மடு வீதி, விநாயகபுரத்தைச்சேர்ந்த எஸ்.சகுந்தலா என்ற பெண் வாழைச்சேனை இலங்கை வங்கிக்கு தனது தேவையின் நிமித்தம் ஆட்டோவில் வந்த சமயம், தவறுதலாக ஆட்டோவில் மூன்று பவுன் மதிக்கத்தக்க தங்கமாலையும், 38560.00 பணத்துடனும் தனது கைப்பையை தவற விட்டுள்ளார்.
அதே ஆட்டோவை கூலிக்குப் பிடித்துச் சென்ற, வாழைச்சேனை அறபா வீதியைச்சேர்ந்த எம்.ஐ.மசாகிரா என்ற பெண் ஆட்டோவிலிருந்த கைப்பையைக்கண்டு ஆட்டோக்காரரிடம் விசாரித்த போது, அவர் தனக்குத் தெரியாதென்று சொல்லவும், குறித்த நகையையும், பையையும் வாழைச்சேனைப் பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.
இதே வேளை, தனது பணமும் தங்கமாலையும் தொலைந்து விட்டதாகக் குறித்த பெண் வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்குச் சென்ற போது, குறித்த பெண்ணிடம் பணத்தினதும் தங்கமாலையினதும் அடையாளங்களை விசாரித்து விட்டு, உரியவரிடம் பொருட்களைக் கையளித்ததுடன், கைப்பையைக் கண்டெடுத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்ணை பொலிஸார் பாராட்டினர்.
கல்குடா செய்தியாளர்.
1 comments:
அல்ஹம்துலில்லாஹ். ஈமானிய உணர்வை நாம் அரபுநாடுகளில் தேடவேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு, இந்த சகோதரி ஒரு முன்மாதிரி.
அதற்குறிய நன்மையை அல்லாஹ் வழங்கப் போதுமானவன்.
Post a Comment