கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ரஜப் தயிப் அர்துகான் அமோக வெற்றி. துருக்கி பொதுமக்கள் தேர்ந்தெடுத்த முதல் தலைவர். காஸாவுக்காக முதல் உரையில்…

நேற்று நடைபெற்ற துருக்கி ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரஜப் தய்யிப் அர்தூகன் அவர்கள் 53% வீதமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியடைந்தார்.
இதன் மூலம் அவர் பன்னிரண்டாவது துருக்கிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை அந்நாட்டின் அதிபரை, பார்லிமென்ட் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி, 91 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் உயரிய தலைவரான அதிபரை, பொதுமக்களே தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று காலை துவங்கியது.
மொத்தம், 5.3 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க, 1.6 லட்சம் ஓட்டு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று மாலையுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.தேர்தலில்,  பிரதமரும், அந்நாட்டின் பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற்றவருமான, தாயிப் எர்டோகன்,  மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் முன்னாள் தலைவர், எக்மெலிட்டின் இசானக்லு, (70) குர்திஷ் இன மக்கள் தலைவர், செலாஹதின் டெமிர்டாஸ், (41) ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர்.
இதில் ரஜப் தய்யிப் அர்தூகன் அவர்கள் 53% வீதமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியடைந்தார்.
இந்நிலையில், தனது வெற்றிக்குப் பின்னரான முதலாவது உரையில் காசா மக்களை நோக்கி ஒரு முக்கிய செய்தியை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது,
“காசாவில் மற்றும் சிரியாவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளவர்கள், இடம் பெயர்ந்துள்ளவர்கள் அனைவருக்கும், அவர்கள் எனக்காகச் செய்த துஆவிற்காக நன்றி செலுத்துகிறேன். அல்லாஹ்வுடைய உதவியால் இன்றைய இரவு முதல் காசாவில் காயப்ப்பட்டுள்ளவர்கள், சிகிச்சைக்காக வேண்டி துருக்கி வைத்தியசாலைகளுக்கு அழைத்துவரப்படுவார்கள்.” என்று கூறினார்.

0 comments:

Post a Comment