கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கைகலப்பில்முடிந்த MoonStart ஈத்தின உதைபந்தாட்டப் போட்டி



புனித ஈகைத்திருநானை முன்னிட்டு ஓகடபொள “மூன் ஸ்டார்“ விளையாட்டுக் கழகத்தினால் உதைபந்தாட்ட  போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு அணிகளுக்கிடையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஒரே அணியை்ச் சோ்ந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட சிறு பிரச்சினை கைகலப்பில் முடிவடைந்து பொலிஸ்நிலையம் வரை சென்றுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

நேற்று 31.07.2014ம் திகதி இடம்பெற்ற இப்போட்டியில்  தமது அணியில் விளையாடிக் கொண்டிருந்த ஒருவரின் விளையாட்டு வழுவானது என்பதை இன்னுமொரு வீரர் சுட்டிக் காட்டும்போது ஏற்பட்ட வாய்ச்சண்டை பின்னா் கைகலப்பாக மாறி சக வீரரை தனது உதைபந்தாட்ட சப்பாத்துக்காலால் தாக்கவே காயமடைந்த வீரர் மயக்கமுற்று விழுந்துள்ளார். மயக்கமுற்ற வீரரை உடனடியாக வதுபிடிவல வைத்தியாசாலக்கு எடுத்துச் சென்று வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாக பதியப்படதாகவும் பின்னா் காயத்துக்குள்ளானவரின் சகோதரர் விசயமறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து நடந்தத விடயத்தை வைத்தியா்களிடம் கூறவே, பொலிஸில் புகார் பதியப்படதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சகவீரரைத்தாக்கிய நபரை பொலிஸார் தேடுவதாகவும் அறிய முடிகின்றது.

0 comments:

Post a Comment