இலவச கத்னா வைபவம் - கஹட்டோவிட கொச்சிவத்தைப் பள்ளியில் ஏற்பாடு
கடந்த பல வருடங்களாக கஹடோவிடாவில் பல நிறுவனங்களால் இலவச கத்னா நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதே. அந்த வகையில் வெளி ஊரைச் சோ்ந்த ஒரு தனவந்தரின் உதவியினால் இவ்வருடமும் இலவச கத்னா வைபவ நிகழ்வொன்று எமதூரைச் சோ்ந்த சகோதரர் கியாஸ் மற்றும் அல்-ஹாஜ் ஹாரிஸ் ஆகியோரின் முயற்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு எதிா்வரும் 24.08.2014 ஆம் திகதியன்று கொச்சிவத்தை அமீரியா பள்ளி வாசலில் நடைபெறவுள்ளது.
தமது பிள்ளைகளை கத்னா செய்துகொள்ள விரும்புவோர் இவா்களைத் தொடா்புகொண்டு பெயா்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
ஒருவருக்கு சுமார் 6000 ரூபாய்கள் அளவில் செலவாகும் கத்னா நிகழ்வை இலவசமாக செய்து கொடுக்க முன்வந்தமைக்காக எமது ஊர்சார்பாக குறிப்பிட்ட அந்த தனவந்தருக்கு நாம் துஆச் செய்கிறோம். மேலும் இதற்காக முயற்சிகள் செய்து பாடுபட்டவர்களுக்காக அல்லாஹ் முழுமையான கூலியை வழங்குவானாக!
0 comments:
Post a Comment