புகையிரதத்துடன் கார் மோதியதில் இருவர் காயம் (photos)
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரத வண்டியில் கார் ஒன்று மோதியதில் இருவர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் கடவையை கடக்க முயன்ற கார் கொழும்பு திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரத்தில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
இச்சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(M.Z.Shajahan)
0 comments:
Post a Comment