அல கஸ்ஸாம் வெளியிட்டுள்ள வீடியோ
நியாயமான எமது கோரிக்கைகளுக்கு உடன்படும்வரை எந்தவிதமான யுத்தநிறுத்தமும் இல்லை – அல் கஸ்ஸாம்
ஹமாஸ் இயக்கத்தின் ஒரு பகுதியான அல் கஸ்ஸாம் படைப்பிரிவினரால் வெளியிடப்பட்ட காணொளியில் இருந்து,
https://www.youtube.com/watch?v=QSX9FbnXIeg
பலஸ்தீன மக்களின் நியாய)ர்வமான, அடிப்படை கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத வரைக்கும், எந்தவிதமான தற்காலிக யுத்தநிறுத்தத்திற்கோ, சமாதான உடன்படிக்கைகளுக்கோ உடன்படுவதில்லை என்று அல் கஸ்ஸாம் தற்காப்புப் படைப்பிரிவு அறிவித்துள்ளது.
காஸா மீதான முற்றுகையை முழுமையாக நீக்குதல், மற்றும் காஸாவிற்கான ஒரு துறைமுகத்தை அமைத்தல் என்பன இந்த அடிப்படைக் கோரிக்கைகளில் உள்ளடங்குகின்றன. இந்த நியாய)ர்வமான அடிப்படைக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை எந்நவொரு தற்காலிக யுத்த நிறுத்தமோ, சமாதான உடன்படிக்கையோ, காஸா பிரதேசத்தின் எந்தவொரு தற்காப்புப் படைப்பிரிவினராலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தக் காணொளியில் அல் கஸ்ஸாம் படைப்பிரிவின் படைவீரர் கூறுகையில்,
இஸ்ரேல் இராணுவமும் அதன் அரசியல் தலைவர்களும், பலஸ்தீன மக்களுக்கும், அதன் தற்காப்புப் படைப்பிரிவினருக்கும் எதிரான அச்சுருத்தலை மேற்கொள்ளுகின்ற அதேவேளை, இஸ்ரேலானது அதனது பயங்கரவாதச் செயல்களையும், படுகொலைகளையும் வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளது. இது உயிரிழப்புகளையும் அழிவுகளையுமே உருவாக்குகின்றது.
இந்தக் காணெளியில் அல் கஸ்ஸாம் படைப்பிரிவின் பிரதிநிதி மேலும் கூறுகையில்,
'அவர்கள் நம்புகின்றார்கள், அவர்களது இராணுவம் வெற்றிகொள்ளப்பட முடியாதது, அவர்களது யுத்தத் தாங்கிகள்அழிக்கப்பட முடியாதது என்று, மேலும் அவர்களது போர்விமானங்கள், அவர்களது யுத்தத் தாங்கிகள், அவர்களது விஷேட படைப்பிரிவினர், அவர்கள் விரும்புகின்ற எதனையும் சாதிக்க வல்லவை என்றும் நம்புகின்றார்கள்.
ஆனால் அவர்களத புiஎயவi மற்றும் யோயட படைப்பிரிவின் படைவீரர்கள் மற்றும் பரசூட் வீரர்களின் வீரம் பற்றிய அவர்களது பொய் மற்றும் ஏமாற்றுதல்களுக்கு அப்பால், அல் கஸ்ஸாம் தற்காப்புப் படையணியினதும், அனைத்து தற்காப்புப் படைப்பிரிவினதும் கதாநாயகர்களாகிய போராளிகளின் வீரத்தையும், திறமைகளையும் கண்டுகொள்ளத் தவறிவிட்டார்கள்.
அவர்கள் நினைக்கிறார்கள் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியும், சர்வதேச சட்டங்களை தொடர்ந்தும் மீற முடியும் என்று, ஆனால் அவர்கள் தமது இராணுவத்தை பின்வாங்கச் செய்தார்கள், ஏனென்றால் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள், காஸா மீதான நில ஆக்கிரமிப்பு என்பது, சதுப்பு நிலங்களில் புதையுண்டு போவதற்கு ஒப்பானது என்று........... நில ஆக்கிரமிப்பை மீண்டும் ஆரம்பிப்பது என்ற அவர்களின் எந்தவொரு முடிவானதும், அவர்களது அதிகமான படைவீரர்கள் கொல்லப்படுவதற்கும், காயமடைவதற்கும், கைதிகளாகப் பிடிபடுவதற்கும், அச்சமடைவதற்குமே வழிவகுக்கும்......... அவர்களது ஆயுதம் தாங்கிய வாகனங்கள் முழு உலகினதும் நகைப்புக்குரிய விடயமாக மாறிவிடும்...........'
'நாங்கள் பின்வருவனவற்றை மிக உறுதியுடன் கூறிக்கொள்கிறோம்,
ஆரம்பமாக நாங்கள் எதிர்வரவிருக்கின்ற எந்தவொரு யுத்தத்திற்கும் தயாராகவே இருக்கின்றோம், அவர்களது எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் மிகக் கடினமான தெரிவாக மாற்றிவிடுவோம், நாங்கள் அவர்களை தொடர்ச்சியான யுத்த நிலைமைகளுக்கு உற்படுத்துவோம், அதனூடாக நாம் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை செயலிலக்கச் செய்வோம், டீநn புரசழைn விமான நிலையத்தின் அனைத்துவிதமான விமானப் போக்குவரத்துக்களையும் நீண்ட மாதங்களுக்கு தடைசெய்துவிடுவோம், அவர்களை நாம் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிடுவோம்.
அல்லது அவர்களை நாம் தரைவழி யுத்தத்திற்குள் தள்ளி, அவர்களை அவர்களது இறுதியான தரைவழியுத்தத்தில் தோல்வியடைந்த இராணுவமாக நாம் மாற்றிவிடுவோம், இவ்யுத்தத்தினூடாக நாம் அவர்களது ஆயிரக்கணக்கான படைவீரர்களை கொலைசெய்வோம், அவர்களது நூறாயிரக்கணக்கான படைவீரர்களை காயமடையச்செய்வோம், மேலும் நாம் அவர்களில் அதிகமானவர்களை யுத்தக்கைதிகளாக்குவோம், நாம் அவர்களது ஆநமயஎய யுத்தத் தாங்கிகளை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைப்புக்குரிய விடயமாக மாற்றிவிடுவோம். எமது தற்காப்புப் படைவீரர்களும், மக்களும் அவர்களது ஆக்கிரமிப்பு இராணுவத்தை சிதைத்து சின்னாபின்னமாக்குவதற்கும், சுதந்திரப்போராட்டத்தை வெற்றிகொள்வதற்கும் தயாராகவே உள்ளனர்.
இரண்டாவதாக நாம் இந்த யுத்தத்தை நிறைவடையச் செய்யமாட்டோம், எந்தளவுக்கொனில், எமது மக்களுக்கெதிரான அனைத்துவிதமான, உண்மையான, விரோதச் செயல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, காஸா மீதான முற்றுகையை, முழுமையான முறையில், உண்மையாக நீக்கி, காஸாவிற்கான ஒரு துறைமுகத்தை நிறுவும் வரை...... இதுவல்லாத எந்தவொரு முடிவும் எமது உயரிய சமுதாயத்தின் அளப்பரிய தியாகத்தை புறக்கணிப்பதாகவும், ஏமாற்றுவதாகவுமே அமைந்துவிடும்.
மூன்றாவதாக, நாங்கள் ஆழமாக நம்புகின்றோம், எமது எந்தவொரு கோரிக்கையும் பேரம்பேசுதலுக்கோ, பேச்சுவர்த்தைக்கோ உட்பட்டதல்ல, அவைகள் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டவை. ஆகவே நாம் பலஸ்தீனத்திற்காக பேரம்பேசுபவர்களை வேண்டிக்கொள்கின்றோம், நீங்கள் எந்த விதமான யுத்த நிறுத்த உடன்படிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்! எதுவரையெனில் எமது மக்களின் நியாய)ர்வமான கோரிக்கைகளை அடைந்துகொள்ளும் வரை.
எமது நியாய)ர்வமான கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், எமக்கிடையிலான யுத்த நிறுத்தத்தை நீடிக்கச்செய்ய முடியும், அடுத்த கட்ட நடவடிக்கையாக விபரமான மேலதிக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும். ஆனால் இஸ்ரோல் எமது நியாய)ர்வமான கோரிக்கைகளை நிராகரிக்கும் பட்சத்தில், நாம் எமது பலஸ்தீன பேச்சுவர்த்தை அணியினரிடம் வேண்டிக்கொள்கின்றோம், அனைத்துவிதமான பேச்சுவர்த்தைகளையும் முடிவுக்குக் கொண்டுவாருங்கள், மேலும் நாம் அவர்களிடம் வேண்டிக்கொள்கின்றோம், நீங்கள் அனைவரும், இஸ்ரேலின் அனைத்துவிதமான ஏமாற்று நடவடிக்கைகளிலிருந்தும் நீங்கிக் கொள்ளுங்கள் என்று.
எமது போராளிகள், இறைவனின் உதவியுடனும், நாட்டப்படியும், எமது கோரிக்கைகளையும், எமது மக்களின் கோரிக்கைகளையும், அடைந்து கொள்ள ஆற்றல் பெற்றிருக்கின்றோம்.
அல்லாஹுஅக்பர். அல்லாஹ் மிகப்பெரியவன், இதுவே எமது அறவழிப்போராட்டம், ஜிஹாத், வீரமரணமே எமது வெற்றி – அல் கஸ்ஸாம் படைப்பிரிவு
தமிழ் மொழி பெயர்ப்பு ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக Azam)
0 comments:
Post a Comment