கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடவைச் சேர்ந்த A.L.M. ஹஸன் காலமானார். அன்னார் காலஞ்சென்ற பாத்திமாவின் கணவரும் காலஞ்சென்ற ரசாத்தின் சகோதரரும் பாயிஸ், பெரோஸ், ஸஹீல் மௌலவி, நஸீரா, பரீதா, சனீரா, முனவ்வரா ஆகியோரின் தந்தையும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (2010.06.30) இரவு 7.00 மணியளவில் மஸ்ஜிதுன்னூர் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

நன்றி http://www.kahatovita.tk/

உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதியில் 8 அணிகள்


தென்ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று இரண்டு நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றன.

இரவு 7.30 மணிக்குத் தொடங்கிய போட்டியில் ஜப்பான் - பராகுவே அணிகள் மோதின. ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் இருஅணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. அதனால் கூடுதல் நேரம் தரப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை என்பதால் 'பெனால்டிக் கிக்' தரப்பட்டது. இதில் ஜப்பான் வீரர் ஒருவர் கோல் அடிக்கத் தவறியதால் பராகுவே 5-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

நள்ளிரவு நடைபெற்ற ஸ்பெயின் - போர்ச்சுகல் இடையேயான போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. இத்துடன் நாக்-அவுட் சுற்றுகள் முடிவுக்கு வந்தன.

இன்றும் நாளையும் ஓய்வு நாட்கள் என்பதால், நாளை மறுதினம் ஜூலை 2 ஆம் தேதி காலிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன.


காலிறுதியில் மோதும் அணிகளின் விவரம் வருமாறு

பிரேசில் - நெதர்லாந்து

அர்ஜெண்டினா - ஜெர்மனி

உருகுவே - கானா

பராகுவே - ஸ்பெயின் - ஆகிய அணிகள் மோதுகின்றன.


காலிறுதிக்குள் நுழைந்துள்ள அணிகளில் நான்கு நாடுகள் தென் அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்தவை. 3 அணிகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்து கானா மட்டுமே காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. பராகுவே அணியிடம் ஜப்பான் அணி நேற்று வீழ்ந்தால் ஆசியா கண்டத்தில் இருந்தும் எந்த அணியும் காலிறுதிக்குள் நுழையவில்லை.

-சிவாஜி டிவி

6 வயது இந்திய சிறுமி தீவிரவாதியா? பெயரை நீக்க அமெரிக்க அரசு மறுப்பு

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் 6 வயது மகளை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. இந்நிலையில் குறித்த சிறுமி விமானங்களில் பயணிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணம், வெஸ்ட்லேக் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷ் தாமசின் மகள் அலிஷா (வயது 6). இவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, அவர் விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது.

சமீபத்தில் க்ளீவ்லேண்டில் இருந்து மினியபொலிஸ் நகருக்கு விமானத்தில் செல்ல டிக்கெட் பெற்றுக்கொள்ள முயன்றபோது, எயார்ர்லைன்ஸ் நிறுவனத்தின் முகவர் இந்தத் தகவலை சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், விமானத்தில் பயணிக்க அனுமதி அளித்த விமான நிலைய அதிகாரிகள், இது குறித்து உள்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் பேசி, சிறுமியின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்புத்துறைக்கு டாக்டர் சந்தோஷ் கடிதம் எழுதினார். ஆனால், அவர்களிடமிருந்து வந்த பதில் அதிர்ச்சியைத் தந்துள்ளது. சிறுமியின் பெயருக்கு அனுப்பப்பட்ட அந்த பதிலில், உங்களது கோப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தை "பாக்ஸ் நியூஸ்" தொலைக்காட்சி ஆய்வு செய்ததுடன், இது குறித்து விமானப் பாதுகாப்பு துறையிடம் கேள்வியும் எழுப்பியது.

இதன்போது குறித்த தொலைக்காட்சிக்கு பதிலளித்த விமானப் பாதுகாப்பு துறை, "தம்மிடமுள்ள பட்டியலின் அடிப்படையில் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களை விமானத்தில் பயணிக்காமல் தடுப்பது உண்மை" என்று தெரிவித்தது. "ஆனால், அதில் யாருடைய பெயர்கள் உள்ளன என்பது இரகசியம். மேலும் அந்தப் பட்டியலில் உள்ள நபர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்பதால் அது குறித்து யாருக்கும் எந்த விளக்கமும் தரப்படாது" என்றும் பதிலளித்துள்ளது.

இத்தனைக்கும் அலிஷா பிறந்து 2 மாதத்தில் இருந்து பலமுறை விமானப் பயணம் செய்துள்ளார். கடந்த பெப்ரவரியில் மெக்சிகோவுக்கும் தங்களுடன் சென்று வந்துள்ளது இந்தக் குழந்தை. அப்போதெல்லாம் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. திடீரென இப்போது தான் அவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர் அதிகாரிகள் என்று அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

முன்பு வெளிநாட்டுப் பயணிகளி்ல் சந்தேகப்படும்படி உள்ளோரின் பெயர்களை இந்தப் பட்டியலில் சேர்த்து வந்தனர். இப்போது உள்நாட்டினரையும் அதில் சேர்க்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த விவகாரத்தை நேரடியாக அமெரிக்க உள்துறையிடம் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் மருத்துவர் சந்தோஷ் ஈடுபட்டுள்ளார்.

ரஜப் மாத துஆ

“நபியவர்கள் ரஜப் மாதத்தை அடைந்தால் அல்லாஹம்ம பாரிக் லனா பீ ரஜப் வ ஷஃபான் வபல்லிக்னா ரமலான் எனப் பிரார்த்திப்பார்கள் என்று வரும் செய்தி பஸ்ஸார் , இப்னுஸ் சுன்னி 659, சுஃபுல் ஈமான் 3815 , போன்ற கிரந்தங்களில் நபித்தோழர் அனஸ் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. இந்த செய்தியில் ஸாஇதா இப்னு அபிர்ருக்காத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் இச்செய்தியை ஸியாத் இப்னுன் நுமைரி என்பவர் வழியாக அறிவிக்கிறார். இருவருமே மிகவும் பலவீனமானவர்கள்.

1.இமாம் புகாரி அபூ ஹாதிம் போன்றோர் ஸாஇதாவை மிக பலஹீனமானவர் என்று விமரிசித்துள்ளனர்.

2.அதே போன்று ஸியாத் அந்நுமைரி ஒருபொருட்டே இல்லை என இப்னு மஈன் விமரிசித்துள்ளார்.

இப்னு ஹஜர் அவர்கள் தப்யீனுல் அஜப் என்ற தனது ரஜப் மாதம் பற்றிய நூலில் இந்தச் செய்தியை பலஹீனப்படுத்தியுள்ளார். பார்க்க பக்கம் 40. இந்த பலஹீனமான செய்தியை குறுஞ் செய்திகள் மூலம் பலர் பரப்பி வருகின்றனர். அவர்கள் இது பலஹீனமான ஒரு செய்தி என்று உணர்ந்துகொள்ள இன்னொரு குறுஞ்செய்தி மூலம் சகோதரர்கள் தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்காகவே இதைப் பதிவு செய்கிறோம்

நன்றி http://www.mujahidsrilanki.com/2010/06/

இனந்தெரியாதோரால் வியாபாரி தாக்கப்பட்டுள்ளார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த பிரபல வர்த்தகரொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடு கொள்வனவுக்காக கிருந்துவளயைய்யொட்டிய ஊரொண்டுக்குச்சென்று சுமார் 50000 ரூபாய் பெருமதியான மாடொன்றை கொள்வனவுசெய்து சில பாதையொன்றினால் மாட்டைக் கொண்டுவந்துள்ளார். வரும் வழியில் வல்கமுள்ளைப் பகுதியில்வைத்து வாகனமொன்றில் வந்த சிலர் இவர்களை வழிமரித்துத் தாக்கியிருக்கின்றனர். அத்துடன் மாட்டையும் இவர்கள் பிடியிலிருந்து தப்பிச்செல்லவிட்டிருக்கின்றனர்.மாலை வேலை என்ற படியாலும்,சனநடமாட்டம் குறைந்த பாதை என்பதனாலும் இச்சம்பவம் கச்சிதமாக நடந்துள்ளது. சம்மந்தப்பட்ட வியாபாரிக்கு அவ்வளவு பாதிப்பில்லாவிடினும் மாற்றுமத சகாக்களுக்கு பலத்த அடிகள் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. பின்னர் வல்கமுள்ளை மற்றைய வயற் பகுதியிலிருந்து மாட்டைப் பிடித்ததாகவும் சொல்லப்படுகின்றது. வியாபாரிகள் சிலரின் சதியினால்தான் இச்சம்பவம் நிகழ்துள்ளதாகவும் வியாபாரிகளின் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே இதுபோன்று வியாபாரம் செய்வோர் மிகக் கவணமாகவும், முடிந்தளவு சட்டபுர்வமுhகவும் புரிந்துணர்வுடனும், நேர்மையாகவும் தமது வியாபாரநடவடிக்கைகளை அமைத்துக்கொள்வது நல்லதாகும்.

பாணின் விலை 4 ரூபாவால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இதுவரை காலமும் 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு இறாத்தல் பாண், இன்று நள்ளிரவு முதல் 44 ரூபாவாக விற்பனை செய்யப்படவிருக்கிறது.

கோதுமை மாவின் விலை நேற்று அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே, பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார்.

ஒரு கிலோ பிரீமா கோதுமை மாவின் விலையை 10 ரூபா 50 சதத்தால் நேற்று அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 63 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கோதுமை மா, ரூ.73.50 சதமாக தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, 400 கிலோகிராம் நிறையுடைய பால் மா பைக்கற்றின் விலையை 14 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் நிறையுடைய பால் மா பைக்கற்றின் விலையை 48 ரூபாவினாலும் கடந்த வாரம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திறந்த சிறைகள்

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்
.
..................................................................................................................................
நக்கலும் நகைப்புமாய் குத்தலும் முறைப்புமாய் அவர்கள் செல்கிறார்கள். பையிலொரு பேனாவும் கையிலொரு புத்தகமுமாய் வர்ணஜால கோலங்களில் படையெடுத்து அவர்கள் செல்கிறார்கள். எங்கு செல்கிறோம் எதற்காகச் செல்கிறோம் என்பதைவிட எப்படிச் செல்கிறோம் என்பதுதான் அவர்களுக்கு அவசியம் போலும். பள்ளிப்பருவம் புரியும் வினோத விந்தைகள் இவர்களை வானம்பாடிகளாக்கிவிட்டன. காணல் நீரில் மீன் பிடிப்பார்கள், தொடுவானில் சிறகடிப்பார்கள். இவார்கள்தான் பின்னேர வகுப்புக்குச் செல்லும் சில பிஞ்சுகள். கூலிக்கு மாரடிக்கும் சிலர் கொளுத்த பணம் பெருக்க மாலையில் வகுப்பு வைக்கிறார்களாம். அரிச்சுவடி சொல்லிக் கொடுக்கவே ஆயிரம் வகுப்பு வைக்கிறார்களாம். கல்வி முறையைக் குறை கூறுவதா? இவர்களைக் குறை கூறுவதா? யாரைத்தான் குறை கூறுவது. குறைகளை முறையாய் எடுத்துக் கூறுவதுதான் இன்றைக்குப் பெரும் குறையாய் போயிருக்கிறது. பாடங்களைப் படித்து முடிக்க பாடசாலையில் நேரம் போதாதாம். பாடத்திட்டம் போட்டவர்களுக்கு ஏன் இந்த நேரம் போதாமை தெரியாமற் போனதாம். போகிற போக்கில் இவர்கள் பச்சைத் தண்ணீரில் பலகாரமே பொரிப்பார்கள் போல.  நாப்பது நிமிடப் பாடத்தில் முக்கால் நேரம் அரட்டையில். எஞ்சிய பத்திலும் எதைத்தான் படிக்கலாம். மாலை வகுப்புக்கு வராதவர்களைப் பார்த்து மிரட்டல் வேற இவர்கள் விடுகிறார்களாம். யாரை ஏமாற்றுகிறார்கள். ஒரு சமூகத்தையல்லவா இவர்கள் ஏமாற்றுகிறார்கள். பிஞ்சுகளுக்கெல்லாம் வகுப்பு வைக்கும் இந்தக் கலாச்சாரம் மாற்றப்படல் வேண்டும். தாலாட்டுப் பாடிய வாய்களும் நிலாச்சோறூட்டிய கைகளும் தன் பிள்ளைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து, லயித்து, கடைவாயில் எச்சிலைக் கூட துடைக்க மறந்த இந்தத் தாய்க்குலத்துக்கு தொலைந்து போகும் தம் பிள்ளையின் எதிர்காலம் என்றைக்குத்தான் நினைவில் வரப்போகுது? ஆனால் பரீட்சை முடிந்துவிட்டால் போதும். மக்கன், மடையன்……… ஒரு அகராதியையே வாசிப்பர்கள். பரிதாபம் இந்த இளசுகள். முளையிலேயே கருகிவிடுகிறார்கள். காலையானால் பாடசாலை, மாலையானால் ஒரு வகுப்பு, அது முடிந்ததும் இன்னொரு வகுப்பு. எதனைத்தான் படிப்பார்கள்? சிறைசெல்லாமலேயே சிறையை இவர்கள் தெரிந்துவிட்டார்கள். எங்களை யாருமே பரியமாட்டார்களா என்று நொந்துபோய்விட்டார்கள். இனியாவது இவர்களை யாராவது புரிந்து கொள்ளட்டும்!

களுத்துறையில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் : அமைச்சர் நடவடிக்கை _

  களுத்துறை மாவட்டத்தில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.

பேருவளை ஜாமியா நளீமியா இஸ்லாமிய கற்கை நிலையம், சர்வதேச தரத்தினாலான இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டாக்டர். ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அண்மையில் ஜாமியா நளீமியாவில் இடம்பெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட அவர் அங்குள்ள வளங்களையும் தரத்தையும் கருத்திற் கொண்டு, இம் முடிவுக்குத் தாம் வந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பான ஆவணங்களைத் தயாரிக்கும்படி அவர் தமது அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மக்ரூஃப் " ஹெட் - ரிக் " சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர், பர்வீஸ் மக்ரூஃப், தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை (ஹெட் -ரிக்) கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

தம்புளையில் நடபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று களமிறங்கியுள்ளன.

இந்நிலையிலேயே பர்வீஸ் மக்ரூஃப், இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணியைச் சேர்ந்த, ரவிந்திர ஜடேஜா, பிரவீன் குமார் மற்றும் ஷஹீர்கான் ஆகியோரே அவரது பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்துள்ளனர்.

விஜித ஹேரத்தால் நமது கிராமத்திட்கு நிதி ஓதிக்கீடு

மேல் மாகணசபை உறுப்பினர் விஜித ஹேரத அவர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட பண்முகப்படுத்தப்பட்ட நதியில் குறைந்தளவு மூன்றரை இலட்சம் ரூபா அளவில்; கஹடோவிட கிராமத்திலுள்ள பாடசாலைக்கு ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்;;துள்ளாறென்று தகவலரிந்தவட்டாரங்கள் மூலமாக அறியக்கிடைக்கின்றது. இந்த நிதியைப் பயண்படுத்த அதற்கான தேவையை மதிப்பீடு செய்து கணிப்பிட்டுத்தருமாறு கேட்டுள்ளார்.
எனவே இந்த நிதி பிரயேசனமானதொரு வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்தப்போவதாக உண்மையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஹட்டோவிட காதிரிய்யா தரீக்காவிற்குள் குழுச்சண்டை

கடந்த சில வருடங்களாக கஹட்டோவிடாவைச் சேர்ந்த ஒருவர் காதிரிய்யாத் தரீக்காவிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டதையும், குறித்த தரீக்காவின் முரீதுகள் யாரும் அந்நபருடன் எவ்விதத் தொடர்பையும் வைக்கக் கூடாதெனவும் கதிரிய்யாத் தரீக்காவின் தலைவரால் அறிவிக்கப்பட்டிருந்ததையும் பலரும் அறிந்திருப்பர். சுpல வருடங்களாக இத்தடையுத்தரவால் விரக்தியடைந்திருந்த இந்நபர் சென்ற ஓரிருவாரங்களாக அவரின் சில முஹிப்பீன்களை வைத்துக்கொண்டு குர்ஆன் விளக்க வகுப்பு நடாத்தியிருக்கிறார்போலும். இந்த வகுப்புக்கு எதிர்பார்த்ததையும் விட மக்கள் ஆதரவு ஏற்பட்டதால் இதையறிந்த கஹட்டோவிட காதிரிய்யா தக்கியா வட்டாரம் தமது அதிரடி முடிவுகளை வெளியிடுமுகமாக இந்நபரின் வகுப்புக்கு தமது தக்கியாவைச் சார்ந்த யாரும் செல்லக் கூடாதென சென்ற வெள்ளிக்கிழமை காலை புர்தா, ராதிபு வைபவத்தைத் தொடர்ந்து தெரிவித்துள்ளது. இவ்வறிவிப்பால் நொந்துபோன அந்த நபரின் ஆதரவாளர் சிலர் அதே வெள்ளியன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் தமது தரீக்காவைச் சேர்ந்த சிலருடன் பெரிய பள்ளிவாயலில் வைத்து வாக்குவாதப்பட்டிருக்கின்றனர். கலவரமுற்ற இப்பிரிவினர் காதிரிய்யாத் தரீக்காவின் கஹட்டோவிட கலீபாவின் வீட்டுக்குச்சென்று ‘யாமுஹியத்தீன் விவகாரம்’   தொடர்பில் வினவியுள்ளனர். இதற்குப் பதிலளித்த அந்தக் கலீபா கப்ரில் முன்கர் நகீர் உனது ரப்பு யார் என்று கேள்வி கேட்டால் யாமுஹையத்தீன் என்று கூறுவது தவறில்லை என்று தமது தரீக்காவின் தலைவர் கட்டளையிட்டிருப்பதாகவும் இதைத் தமது தரீக்காவின் பிள்ளைகளுக்கு மட்டுமே தாம் கூறியிருப்பதாகவும் வேறெவருக்கும் இதை நாம் கூறவேண்டிய அவசியமில்லையெனவும் இதற்கு ஆதாரபூர்வமான புத்தகம் வேருவலையில் உள்ளதாகவும் அதைப் பார்த்துத் தாம் தெளிவு பெற்றுவிட்டு வேருவிலைக்கு அனுப்பிவிட்டதாகவும் யாருக்கும் அதைக்காட்ட வேண்டிய அவசியமில்லையெனவும் அறிவு பூர்வமாக பதில் சொல்லியுள்ளார். கலீபாவைச்சந்திக்கச் சென்ற இக்குறிப்பிட்ட குழுவில் ஷதுலிய்யா மற்றும் பாதிபிய்யா தரீக்காவைச் சேர்ந்த ஒரு சிலரும் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் ஒரு கட்டத்தில் ‘நாம் தரீக்காக்கள் எல்லாம் ஒன்றுதான் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். தரீக்காக்களை ஒன்றினைத்து தரீக்காக் கவுன்சில் அமைத்துள்ளோம். எனினும் நீங்கள் கூறும் இந்த யாமுஹையத்தீன் கருத்து இஸ்லாமிய அகீதாவிற்கு மாற்றமாக உள்ளதே என்றும் கேட்டுள்ளார்’. இதற்குப் பதிலளித்த கலீபா தமது கருத்தில் தாம் உறுதியாகவுள்ளதாக கட்டன்ரைட்டாக பதில் சொல்லியுள்ளார். தொடர்ந்தும் குழப்பமடைந்த இக்குழுவினர் கலீபாவின் இக்கருத்துக்களை ஒலிப்பதிவு செய்துள்ளதாகவும் இந்த யாமுஹையத்தீன் விவகாரத்தை ஜம்இய்யதுல் உலமாவுக்கும், வக்பு சபைக்கும் அனுப்பி இது விடயத்தில் இஸ்லாமியத் தீர்ப்பு என்ன என்று பத்வாக்  கேட்கப்போவதாகவும் தகவல்கள் கசிகின்றன. மேலும் இஸ்லாமிய அகீதாவிற்கு முரணான கருத்தையுடைய இந்தத் தரீக்காவினர் சிலர் பெரிய பள்ளி நிர்வாகத்தில் இருப்பதாகவும் இவர்கள் தொடர்பில் சரியான இஸ்லாமியக் கருத்து என்ன என்று மக்களுக்கு தெளிவுபடுத்தப்படல் வேண்டும் என்றும் ஒரு சிலர் கருத்துக்கொண்டுள்ளதாகவும் இத்தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறிருப்பினும் சத்தியம் ஒரு நாளைக்கு வெளிவரும் என்பதும் பசுத்தோல் போர்த்திய புரோகிதப் புலிகளின் சொந்த முகங்கள் ஒரு நாள் எல்லோருக்கும் தெரியத்தான் போகிறது எனபதும் நிச்சம்.
“சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, அசத்தியம் அழிந்தே தீரும்” (அல்-குர்ஆன்)

பூமி வெப்பம் அடைவது ஏன்?


உலக தட்பவெப்ப நிலைகளில் மனிதன் அசைக்க முடியாத தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறான் என்பது வெப்பநிலை ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தற்போது அதிகரித்துக் கொண்டுள்ள வெப்பநிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ மனிதனும் மனிதச் செயல்களும் காரணமாகிவிட்டன எ ன்பதே உறுதியான உண்மை.


இத்தட்பவெப்பநிலை மாற்றங்களினால் பலவகை விலங்குகளும் செடிகளும் மறைந்து கொண்டு வருகின்றன. புவிவெப்பமடைதலே இம்மாற்றங்களுக்கு ஆணிவேராகக் கருதப்படுகின்றது. உலக தட்பவெப்ப மாற்றங்களுக்கு காரணம் பசுங்கூட (Green House) விளைவேயாகும். பசுங்ககூட விளைவு என்பது இயற்கையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு. இவ்விளைவினால் பூமியிலிருந்து பிரதிபலிக்கும் புற ஊதாக் கதிர்களும் அகச் சிவப்புக் கதிர்களும் வளி மண்டலத்தில் உள்ள பசுங்கூட வாயுக்களால் விழுங்கப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பவும் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக பூமி அதிக வெப்பமடைகிறது.

முன்பிருந்த தொழிற்சாலை கழிவுநீர்களில் இருந்து தற்கால தொழிற்சாலை கழிவுகளின் தன்மைகள் வேறாக மாறியுள்ளன. இதனால் ஒட்டுமொத்த ஹாலோ கார்பன் என்பவற்றின் அளவு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக புவி வெப்பமடைதல் ஒரு சதுர மீட்டருக்கு 2.450 சென்டிகிரேடு வெப்பம் என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. கரியமிலவாயு, மீத்தேன், குளோரா புளோரோ கார்பன், ப்ரியான், ஹாலஜன்ஸ், ஏரோசால் பிரப்பலெட்ஸ் போன்று பலவகையான குளிர் சாதனப் பெட்டிகளிலிருந்து வெளிவருகின்ற வாயுக்களே இந்த பசுங்கூட விளைவுக்கு காரணமாகின்றன. அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி புவி 2.50 பாரன் ஹீட் வரை வெப்பமாகிக் கொண்டேயுள்ளது.

இது தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளில்:

 கடல் வெப்பமடைந்து கடல் நீர்மட்டம் உயரும்;
 பனிமலைகள் உருகி மேலும் கடல் மட்டம் உயரும். இதனால் 21 ஆம் நூற்றாண்டிற்குள் கடல் மட்டம் 9 செ.மீ.இலிருந்து 88 சென்டி மீட்டருக்கு உயரும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
 பருவகாலங்கள் மாறலாம்
 வெப்பம் அதிகரிப்பதால் நீராவி அதிகரித்து மழை அதிகரிக்கலாம். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வரலாம்.
 இயற்கை சீற்றங்கள் புயல், சூறாவளி ஆகியன பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கலாம். அண்மையில் 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 562 முறை சூறாவளி வந்ததாக சான்றுகள் பல உள்ளன.
 உலகின் பல இடங்கள் பாலைவனங்களாய் மாறலாம்.
 பல்வேறு வகையான செடிகொடிகள் மற்றும் விலங்கினங்கள் கூட அழிந்து விடலாம்.
 பருவகால மாற்றத்தினால் விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.
 மலேரியா, டெங்குகாய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் போன்ற வெப்ப மண்டல நோய்கள் குளிர்பிரதேசங்களுக்கும், காலரா, வயிற்றுப் போக்கு போன்ற தண்ணீரால் வரும் நோய்கள் வெப்ப மண்டலங்களுக்கும் இடம் மாறும்.
 கடல் மட்டம் உயர்வதால் நிலப்பரப்பு குறைந்து மக்கள் நெருக்கம் அதிகரிக்கும்.
 பல வகையான காடுகள் குறிப்பாக அலையாத்திக் காடுகள் அழியக்கூடும்.

இவை, உயிரிகளிடத்தே ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மனித இனம் எதிர்பாராத ஒன்றாய் இருக்கும் என்பதில் துளிகூட அய்யமில்லை. 1970களில் அமெரிக்கா மட்டுமே சுமார் 2,00,000 டன்னுக்கும் மேல் ஹாலோ கார்பன்களை வெளியேற்றியது. இதனை எதிர்த்து அய்க்கிய நாடுகள் அவை பல்வேறு ஒப்பந்தங்களைக் கொண்டு வந்தது.

நார்வே, ஸ்வீடன், கனடா போன்ற நாடுகளாலும் ஹாலோ கார்பன் வெளியேற்றம் தடை செய்யப்பட்டது. மேலும் நச்சுப் பொருள்களின் தடை ஆணையின் படி இவற்றின் உற்பத்தியும் பயன்பாடும் தடை செய்யப்பட்டன. அமெரிக்க வானியல் ஆராய்ச்சி மய்யமான ‘நாசா' 13.7.2004 அன்று பூமி வெப்பமடைதல் பற்றி ஆய்வு செய்ய செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியது.

அமெரிக்காவில் மட்டும் இருந்து 25 சதவிகிதம் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) வெளியேறுவதால் அமெரிக்க அதிபர் புஷ், தம் நாட்டு மக்கள் இதன் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தாம் இது குறித்து தீவிர முடிவுகள் மேற்கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார். இது போன்ற முடிவுகள் பிரிட்டனின் முதல் அமைச்சரான டோனி ப்ளேராலும் மேற்கொள்ளப்பட்டன.

‘நாசா'வின் கருத்துப்படி பனிப்பிரதேசங்களில், பனிமலைகளும், பனிப்பாறைகளும் பத்தாண்டுகளுக்கு 9 சதவிகிதம் எனும் அடிப்படையில் உருகி வருகின்றன. இதனால் 40 சதவிகித பனிப்பாறைகள் குறைந்துள்ளன. மேலும் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்ட கரியமிலவாயுவில் 50% கடல் நீரில் கரைந்து, கடல் நீரின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் பவழப் பாறைகள் பெருமளவில் குறைந்தபடி உள்ளன. பல கடல் உயிரிகளும் அழிந்த வண்ணம் உள்ளன.

இத்தகைய மாற்றங்களையும், பேரழிவுகளையும் கண்டு நாம் அஞ்சினால், நமது இனம் மண்ணில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தால் நடைமுறையில் நாம் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாக வேண்டும். புவி வெப்பமடைதலை முழுவதுமாய் குறைக்க முடியாவிட்டாலும் நம்மால் இயன்றவரை அதன் வேகத்தையும் அளவையுமாவது கட்டுப்படுத்தலாம் அல்லவா? அதற்கு தனி மனிதர்களின் தனிப்பட்ட பல்வேறு பயன்பாடுகளை தவிர்த்தல் வேண்டும்.

அவசர அவசிய தேவைகளுக்கே தனியார் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். பிற நேரங்களில் பொது போக்குவரத்து வாகனங்களை நாடுவது அதிக அளவில் வெளியேறும் CO2, N2O ஆகியவற்றை குறைக்க வழி வகை செய்கிறது.

எரிவாயுவிற்கும் மின்சாரத்திற்கும் பதிலாக சூரியனில் இருந்து கிடைக்கும் சூரியச் சக்தி, காற்றுசக்தி, நீர் சக்தி போன்று பலவற்றை நாம் பயன்படுத்தலாம். மேலும் கிராமப்புறங்களில் மிகுதியாகக் கிடைக்கும் சாண எரிவாயு மற்றும் அழுகிய பொருள்களிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை நாம் பயன்படுத்தலாம்.
பசுங்கூட விளைவினை ஏற்படுத்தக்கூடிய வாயுக்களை வெளியேற்றும் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல் வேண்டும்.

இவை பற்றிய விழிப்புணர்வினை உலகின் பட்டி தொட்டிகளுக்கும் சென்றடைய நாம் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் தீவிரவாதத்தைவிட அதிதீவிரமான பிரச்சினை புவி வெப்பமடைதல் ஆகும். இவற்றை எல்லோரும் உணரும் வகையில் செய்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை குறைக்க வழி வகுப்போம். இயற்கை அன்னையை காப்பாற்றுவோம்.

பைசா கோபுரத்தை முறியடித்த அபுதாபிக் கட்டடம்

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியின் பைசா என்ற சாய்ந்த கோபுரத்தை முறியடித்துள்ளது அபுதாபியின் நவீன கட்டடம். அதிகளவில் சாய்ந்திருக்கும் சாதனையில் இத்தாலியின் பைசா கோபுரத்தை அபுதாபியின் கேட் கப்பிற்றல் (Gate-Capital) கோபுரம் முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பைசா கோபுரம் 4 பாகை சாய்ந்துள்ளது. அதை பின்னுக்குத் தள்ளி கேட் கப்பிற்றல் முதலிடம் பிடித்துள்ளது. பைசா கோபுரத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 18 பாகை கோணத்தில் இது சாய்வாக கட்டப்பட்டுள்ளது.


அபுதாபி தேசிய கண்காட்சி நிறுவனம் இதை கட்டியுள்ளது. உலகின் மிக சாய்ந்த கட்டடம் குறித்து கடந்த ஜனவரியில் கின்னஸ் அமைப்பு மறுஆய்வு செய்தது. அதில் அபுதாபி கட்டடத்துக்கு முதலிடம் தரப்பட்டது.

பைசா கோபுரம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாக சிறிது சாய்வது சிறப்பு. ஆனால், இந்த ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் முடியப் போகும் அபுதாபி கட்டடமே சாய்வாக கட்டப்பட்டுள்ளது.

160 மீற்றர் உயரம் கொண்ட அதில் ஐந்து நட்சத்திர விடுதி அமையப் போகிறது. ஏற்கனவே, துபாயின் புர்ஜ் கலீபா கோபுரமே உலகிலேயே உயர்ந்த கட்டடம் என்ற சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொம்பனத்தெரு பகுதி பள்ளிவாசல்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்


கொழும்பு, கொம்பனத்தெரு பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் மேற்கொண்டதாக அங்குள்ள மக்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தனர்.


மேலும் இது சம்பந்தமாக தெரியவருவதாவது, தொழுகைகளுக்காக பள்ளி வாசல்களுக்கு வருவோர், பள்ளி வாசல்களின் வருமானம், சொத்து விபரங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து குறித்த பள்ளிவாசல்களுக்கு உதவி கிடைக்கப் பெறுகின்றதா என்பது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

சிவில் உடையணிந்த படை அதிகாரிகளே இந்த விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலான ஆகியோருக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(R.A)

அனோமா பொன்சேகாவுக்கு மரியாதை செலுத்திய இராணுவ வீரர் இடமாற்றம்

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகாவுக்கு மரியாதை  செலுத்திய இராணுவ வீரர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்துவதற்காக அனோமா பொன்சேக்கா சென்றிருந்த போதே அவருக்கு குறித்த வீரர் மரியாதை செலுத்தியுள்ளார். 

சல்யூட் அடித்து மரியாதை செய்யும் புகைப்படம் அண்மையில் ஊடகங்களில் வெளியானைதை அடுத்து அவர் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ள பாதுகாப்பு அமைச்சிடம்  முன்னாள் இராணுவத் தளபதியின் மனைவி என்ற வகையில் அவருக்கு மரியாதை செய்வது இராணுவ நடைமுறை என்பதால் தாம் அவருக்கு மரியாதை செலுத்தியதாக மேற்படி இராணுவ வீரர் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த வீரரை உடனடியாக வேறொரு மாவட்டத்துக்கு மாற்றம் செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு  பிறப்பித்துள்ளது.

இதேவேளை இந்த இராணுவ வீரரின் இடமாற்றத்தை உறுதி செய்த இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, மேற்படி இடமாற்றத்துக்கும் அனோமா பொன்சேகாவுக்கு மரியாதை செலுத்தினார் என்ற சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

குறுகிய மனப்பான்மையினைக் கொண்டவர்களே இவ்விரு சமபவங்களையும் தொடர்புபதுத்திக் கதைக்கின்றார்கள் என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.

அனோமாவின் தாயார் மரணம் : இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சரத்துக்கு அனுமதி


அனோமா பொன்சேகாவின் தாயார் இன்று மரணமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. அன்னாரது பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சலையில் வைக்கப்பட்டுள்ளது.


அவரது மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கு, இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அனோமா பொன்சேகாவின் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹிட்லர் பற்றி படமா? இஸ்ரேலியர்கள் அதிர்ச்சி

நாஜித் தலைவர், ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் பற்றி ஹிந்தியில் திரைப்படம் எடுக்கவிருக்கும் செய்தி இஸ்ரேலியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கொடுங்கோலன் ஹிட்லர் இந்தியாவை நேசித்ததாகவும், அவர் இந்திய விடுதலைக்கு மறைமுகமாக பங்களிப்பு செய்ததாகவும் அதில் காட்டப்படவுள்ளது என்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்திய யூதர்கள் மைய அமைப்பின் தலைவர் நோவா மஸ்ஸில் இது குறித்துக் கூறுகையில்:

"நான் இந்தியன் என்று கூறிக்கொளவதை கௌரவ்மாகக் கருதி வருகிறேன், இஸ்ரேலில் எங்கு சென்றாலும் நான் இந்தியன் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன், எனது சக இஸ்ரேலியர்களிடம் நான் கூறுவதெல்லாம் இந்தியாவில் ஒரு போதும் யூதத் துவேஷம் இருந்ததில்லை என்று கூறிவந்துள்ளேன், ஆனால் இந்த பாலிவுட் பட விவகாரத்தினால் நான் இப்போது தலைகுனிந்து நிற்கிறேன், பாலிவுட்டின் அறியாமை குறித்து வெட்கப்படுகிறேன்.

எனக்குத் தெரிந்ததெல்லாம் ஹிட்லர் ஒரு போதும் இந்திய விடுதலையை ஆதரித்ததில்லை என்பதே. நான் பிரதமர் மன்மோகன் சிங் அல்லது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதப்போகிறேன், பாலிவுட்டின் இந்த முயற்சியை நிறுத்தவேண்டும். ஏனெனில் இங்கு புகழ் பெற்றிருக்கும் அந்த சினிமா தொழிலுக்கு இழுக்கு செய்வதாகும்." என்றார் மஸ்ஸில்

செவ்வாயில் கால்பதிப்பதற்காக ப+மியில் 520 நாள் விண்வெளிப் பயிற்சி

சந்திரனில் கால்பதித்த மனிதன் தற்பொழுது செவ்வாயில் கால் வைப்பதற்கான தீவிர முயற்சியில் குதித்துள்ளான். செவ்வாய் கிரகம் சந்திரனை விட அதிக தூரத்தில் உள்ளதால் அங்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னரே பூமிக்கு திரும்ப நேரிடும்.
அதனால் இதற்கான பயிற்சிகள் செவ்வாய் கிரகம் போன்ற சூழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக மொஸ்கோவிலுள்ள ஆய்வு மையத்தில் உலோகக் கூண்டொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் நுழைந்தால் செவ்வாயில் இருக்கும் மனநிலைதான் வருமாம். இதற்குள் ஒரு பக்கத்தில் செவ்வாய் கிரக விண்கலம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த கூண்டில் நுழைந்த ஆறு விண்வெளி வீரர்களுக்கும் 24 மணி நேரமும் தனிமைதான். சூரியனைப் பார்க்க முடியாது. 10 நாட்களுக்கு ஒருமுறை வேண்டுமானால் குளிக்கலாம். வெளியில் வரவே முடியாது. தூங்குவதற்கு தனி அறைகூட இதில் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளே புகும்போது அளிக்கப்பட்ட தண்ணீர், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை தான் கடைசி நாள் வரை சமமாக பிரித்து சாப்பிட வேண்டும். தண்ணீரையும் குறைவாக பயன்படுத்த வேண்டும்.
பொழுது போக்குக்கு புத்தகம் படிக்கலாம். கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸ் கூட விளையாடலாம்.
வெளியில் இருப்பவர்களை ஈமெயில் மூலம் மட்டுமே தொடர்புகொள்ள முடியும். தினமும் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளியில் உள்ள விஞ்ஞானிகளுக்கு இதன் மூலமாக அவர்கள் தெரிவிப்பார்கள். அடைக்கப்பட்ட கூண்டுக்குள் இவர்கள் 520 நாட்கள் தொடர்ந்து தங்கவேண்டும்.
கிட்டத்தட்ட பூமியில் ஒரு செவ்வாய் கிரகம் உருவாக்கப்பட்டு, அதற்கு சென்று வருவது போல, விண்வெளி வீரர்களை வைத்தே ஆய்வு நடத்தப்படுகிறது. நெருங்கவே முடியாத செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் சென்று, திரும்பிவர முடியுமா என்று பார்க்கவே புதுமையான முறையிலான இந்த சோதனையை ரஷ்யா ஆரம்பித்துள்ளது.
520 நாட்கள் இருக்க முடியாதவர்களுக்கு இந்த பரிசோதனையில் இருந்து பாதியிலே விலக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
செவ்வாயில் நடக்க முடியுமா? என்பதே ஒத்திகையில் முக்கிய பரிசோதனை. செவ்வாய் எப்படியிருக்கும் அதில் நடக்க முடியுமா என்பதை கற்பனை செய்து அதற்கேற்ப ஒத்திகை நடத்தப்படுகிறது. அதற்காக செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பும், பெரிய மணல் திட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
-தினகரன்

பரிதாப நிலையில் நமது பாடசாலை (தொடர் பாகம் 02)

92 இற்குப் பின்னரிலிருந்து இன்றுவரைக்கும் எந்தவொரு ஆண் மாணவர் எவரும் எமது பாடசாலையிலிருந்து பலகலை செல்லவில்லை


ஒரே தடவையில் 11 பேர் பல்கலை சென்ற பெருமை நமது பாடசாலைக்குண்டு. ஆனால் இரு தசாப்தங்கள் கழிந்த நிலையிலும் இன்றுவரை அது போன்ற உயர் பெறுமானமொன்றை பாடசாலை பெறவில்லை என்பது மனவருத்தத்துக்குறியதாகும். உயர்தரமாயினும் சாதாரணதரமாயினும் மாணவிகளின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கின்றது. ஆனால் இதுவும் தற்போது கேள்விக்குறியாகவுள்ளது. இந்த அசமந்த நிலைக்கு எனக்கு காரணம் என்பது தொடர்பாக யாரும் பெரிதாய் அலட்டிக்கொள்வதாகக்கூட தெரியவில்லை. இது பாடசாலை எதிர்கொள்ளும் மிகப்பெரும் ஆபத்தெனலாம்.


பாடசாலையின் உயர்தரப் பிரிவு மூடுவிழாக் காணும் அபாயம்
உயர்தரப் பிரிவிற்கு உரிய ஆசிரியர்கள் இல்லாமையினால் கலைத்துறையில் படிக்கும் மாணவர்கள் கூட வெளியூர்களிற்குப் போகும் நிலயேற்பட்டிருக்கின்றது. உயர்தர வகுப்பு மாணவர்கள் கூட பாடசாலை நேரங்களில் வெளியில் சுற்றித் திரிவதையும் அவதானிக்க முடிகிறது. கலைப்பிரிவிலும் வனிகப்பிரிவிலும் எமது பாடசாலையில் கற்க வேண்டிய திறமையான பல மாணவர்கள் தற்போது வெளியிடங்களிலேயே தமது படிப்பைத் தொடருகின்றார்கள். உயர்தரப் பிரிவு பாடசாலையில் இருக்கின்றது என்று பேருக்காவது இருந்த கலைப்பிரிவும் ஆட்டம் காணலாம் என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்நிலை தொடருமாயின் மகாவித்தியாலய தரத்திலிருந்து வித்தியாலயத்தரத்திற்கு பாடசாலை தரம் குறைக்கப்படலாமென்று அவதானிகள் கூறுகின்றனர். இந்த அசாதாரண நிலையை மாற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதும் அதிபரின் கரங்களைப் பலப்படுத்துவதும் நமது பொறுப்பாகும்.


பத்ரியாவா பாலிகாவா..?

அல்பத்ரியா கல்வித்துறையில் ஆட்டம் கண்டகொண்டிருக்கும் இந்தத் தருவாயில் சிலர் பத்ரியாவா பாலிகாவா சிறந்தது எனக் கணக்குப் போட்டுத் திரிவதாகக் கூறப்படுகின்றது. பத்ரியாவைப் பிடிக்காதவர்கள் பாலிகாவையும், பாலிகாவைப் பிடிக்காதவர்கள் பத்ரியாவையும் தலையில் தூக்கிப் பேசுவது வழமையானதே. சிறு பிள்ளைத் தனமான இதுபோன்ற சிந்தனைகள்தான் இரு பாடசாலைகளையும் குட்டிச் சுவராக்கப் பார்க்கின்றன. இரண்டுமே நமதூரின் பாடசாலைகள்தான். இரண்டிலுமே இந்த மண்ணின் பிள்ளைகள்தான் கல்வி கற்கின்றார்கள். ஆகவே ஒன்று வீழ்ந்து ஒன்று எழுவதானது ஒரு பிள்ளை படித்து மறு பிள்ளை படிக்காமல் போதல் என்பது போன்றதாகும். இரண்டையும் கண்களாய்க் காத்து வளர்ப்பது இந்த ஊரின் சொந்தங்களனைவரினதும் தலையாய கடமையாகும். இவ்வாறு சிந்திப்பவர்களே நமதூருக்கு என்றைக்கும் தேவைப்படுகின்றனர். பாடசாலையொன்று எங்களுக்குக் கிடைக்காதா என்று பலர் ஏங்கும் பொழுதில் இப்பாடசாலைகள் இரண்டும் நமதூருக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெறும் சொத்தாகும். எனவே அதிகாரத்தையும் வரட்டு கௌரவத்தையும் தூக்கி வீசிவிட்டு எதிர்கால மாணவ சமூகம் ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்தோராக ஆவன செய்ய அணிதிரள்வோம்!

குடும்பமாக வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள்! _

கல்கிசை, நீர்கொழும்பு, சீதுவை ஆகிய பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளில் ஓரினச் சேர்க்கையாளர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சீதுவை கடற்கரையோரத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் இருவரை நேற்றுமுன்தினம் பொலிஸார் கைது செய்தனர். அவர்களை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை, பொலிஸார் பல்வேறு தகவல்களை நீதவானிடம்தெரிவித்தனர்.

கரையோரப் பகுதிகளில் இவ்வாறானவர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அதனைத் தடுப்பதற்காக தனியான பொலிஸ் குழுவினர் இயங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

அதேபோன்று, அவர்கள் தெரிவித்த மற்றுமொரு கருத்து அதிர்ச்சியடைய வைத்தது. தாம் காணும் ஓரினச் சேர்க்கையாளர்களில் பலர் 18 வயதுக்கும் குறைந்த சிறுபராயத்தினரே என்பதுதான் அது.

பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய இருவரும் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்பது மற்றுமொரு செய்தி.

கல்கிசை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளின் கரையோரங்களில் ஏராளமான மதுபான விடுதிகளும் உல்லாசத் தளங்களும் காணப்படுகின்றன. சமூக சீர்கேடான நடவடிக்கைகள் அதிகரிக்க இவையும் காரணங்களாகலாம்.

நீர்கொழும்பில் வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள் சேரிப்புறங்களில் வாடகைக்கு வீடு வாங்கி, வாழ்ந்து வருவதாகவும் தினமும் அங்கு சல்லாபங்கள் இடம்பெற்று வருவதாகவும் அங்கிருந்து எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவு வேளைகளில், கடற்கரையோரமாக நடமாடிவரும் இவர்கள் சாதாரண பொதுமக்கள் அவ்வழியாகச் சென்றால், வற்புறுத்தி உறவுக்கு அழைப்பதாகவும் இல்லாவிடின் பணம் கேட்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இவர்களிடம் சிக்கும் பாடசாலை சிறுவர்கள் சிற்றின்பத்தின் தாக்கத்தினால் நாளடைவில் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறிவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு நீண்டகால சமுதாயச் சீரழிவை ஏற்படுத்துகிறது.

பொலிஸார் மட்டுமே தனித்து இதனைக் கட்டுப்படுத்த முடியாது. பொதுமக்களும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு, ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டியது அவசியமாகும். ஓரினச் சேர்க்கைக்கு சிறுவர்களும் இளைஞர்களும் அடிமையாவது தடுக்கப்பட வேண்டியதவசியம். மேற்குலக நாடுகளில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை போன்ற கலாசார பாரம்பரியம் கொண்ட வளர்முக நாடுகளில் ஓரினச் சேர்க்கையானது எதிர் விளைவுகளையே தரக்கூடியதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. -ஆர்.நிர்ஷன்

உயிருக்கே கேடு விளைவிக்கும் செல்போன் டவர்!

நகரெங்கும் கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக நின்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது. இந்த டவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் கதிர் வீச்சு காரணமாக மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.

ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம்..." என்கிறார்.

ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர்.

செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30 டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார்.

இந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார். ___

Virakesari News

கிர்கிஸ்தான் இன மோதல்களைக் கட்டுப்படுத்த

நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டதென்கிறார் இடைக்கால அரசின் ஜனாதிபதி


கிர்கிஸ்தானில் எழுந்துள்ள இன மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டு இடைக்கால அர சாங்கம் ரஷ்யாவிடம் படைகளை அனுப்பி உதவுமாறு கேட்டுள்ளது.

மோசமாகப் பரவும் வன்முறை களைக் கட்டுப்படுத்த பொலிஸார் இராணுவத்தினர் வீதிகளின் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வன்முறைகளில் இறங்குவோரைக் கைது செயயம்படியும் நிலைமை மோசமடைந்தால் துப்பாக்கிப் பிர யோகம் செய்யுமாறும் இடைக்கால அரசின் ஜனாதிபதி ரோஸா ஒட்டுன் பைவியா உத்தரவிட்டார்.

வியாழக்கிழமை கிர்கிஸ்தானில் கிர்கிஸ் உஸ்பெக் இனத்தாரிடையே இன மோதல்கள் வெடித்தன. இதில் 75 பேர் பலியாகினர்.

ஆயிரம் பேர் வரை காய மடைந் தனர். வன்முறைகளிலீடுபட்டோர் தனியார் அரச சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

இதனால் நிலைமை மோசமடை ந்தது. தனியார், அரச சொத்துக் களைப் பாதுகாக்கவும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

நிலைமை எங்களின் கைகளை விட்டுப் போய்விட்டது. எனவே ரஷயாவிடம் இராணுவ உதவிக ளைக் கேட்டுள்ளோம் என இடை க்கால அரசின் ஜனாதிபதி கூறினார்.


இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் கூறுகையில், கிர்கிஸ்தானில் நடப்பவை உள் நாட்டு விவகாரம் அங்கு இராணு வத்தை அனுப்புவது சம்பந்தமாக நாங்கள் இன்னும் முடிவு எடுக்க வில்லை என்றார். வியாழக்கிழமை ஆரம்பித்த இன மோதல்கள் சனிக் கிழமை வரை மிக மோதசாகப் பரவியது.

கட்டடங்கள் கடைகள், வாகன ங்கள் என்பன தீயிட்டுக் கொளுத்த ப்பட்டன. ஆயிரக் கணக்கான உஸ் பெக் இனப் பெண்கள், குழந்தைகள் வீதிகளில் அநாதரவாகக் கதறியழு த்தனர். செஞ்சிலுவைச் சங்கம் நிலைமையைக் கட்டுப்படுத்த உச்ச கட்ட முயற்சிகளை மேற் கொண் டது.

அங்குள்ள நிலைமை களைக் கட்டுப்படுத்த நிவாரணப் பொருட்களையும் உதவியாளர்களை யும் அனுப்பவுள்ளதாகத் தெரிவித்தது. உஸ்பெகிஸ்தான் அரசாங்கம் நிலைமையைக் கட்டுப்படுத்துமாறு சர்வதேசத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பில் பூமி அதிர்ச்சி- சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.(இலங்கை நேரம் 3.30 அதிகாலை)
கடல்மட்ட உயர வாசிப்புகளில் சுனாமி அலை உருவாகுவது அவதானிக்கப்படாமையால் சுனாமி எச்சரிக்கை நீக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மக்கள் வெளியேறத்தேவை இல்லையென்றும் இலங்கை வானிலை அவதானிப்பு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை
இன்று(6/13/2010) அதிகாலை இந்து சமுத்திரத்தில் இடம்பெற்ற 7.7 பூமி அதிர்ச்சியை தொடர்ந்து இலங்கை பூராவும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 12.55 மணியளவில் ஏற்பட்ட பூமிஅதிர்வை தொடர்ந்து பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் சுனாமி எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது. கடலுக்கு அருகில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
பூமி அதிர்வு 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
மீண்டும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

அதிர்வு ஏற்பட்ட இடம் மையப்பகுதி- படம்



இலங்கையில் கண்டி, அனுராதபுரம், பதுளை,கொழும்பு ஆகிய இடங்களில் அதிர்வு உணரப்பட்டுள்ளது..

தொடர்புடைய செய்தி
இன்று(6/13/2010) அதிகாலை 12.55 மணியளவில் கொழும்பில் பூமி அதிர்வு உணரப்பட்டு மக்கள் அச்சத்தில் அலறிஅடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். நீண்ட நேரம் காத்திருந்தும் மீண்டும் அதிர்வெதுவும் தென்படாததால் மக்கள் வீடுகளுக்கு அச்சத்துடனேயே திரும்பினர்.

பரிதாப நிலையில் நமது பாடசாலையில் (பாகம் 01)



கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுல் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திற்கு குறிப்பிடத் தக்களவிலான அறிவுப் பாரம்பரியமும், சிறப்புக்களும் உண்டு. பாடசாலையின் முன்னைய கல்வியியற் சாதனைகளும் புகழும்தான இன்றுவரை பாடசாலையின் பெயரையும் காப்பாற்றியிருக்கின்றது என்று கூறினாலும் அது மிகைப்படுத்தலகாது. ஆனாலும் பாடசாலையின் அண்மைய நிலவரங்கள் அவ்வளவு வரவேற்புக்குறியனதாகவில்லை என்பதோடு எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பாரிய பின்னடைவுகளை எதிர்வு கூறுபவையாகவும் அவைகள் கானப்படுகின்றன. எனவே இவ்வாறான பொது விடயங்கள் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது ஒரு ஊடகத்தின் அதீத பொறுப்பு என்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் நமது கருத்துக்களை இங்கு பிரஸ்தாபிக்கலாம் என நினைக்கின்றோம்.

பாடசாலையின் பிரதான குறைபாடு
பாடசாலையின் குறைபாடாக பல அம்சங்கள் கண்டறியப்பட்டிருந்தாலும் அவற்றுள் மிகப் பிரதானமானதும் அவசரமாய் தீர்வு காணப்பட வேண்டியதுமானதாக விளங்குவது ஆசிரியர் பற்றாக்குறையாகும். சுமார் 17 ஆசிரியர்ள் பாடசாலைக்குத் தேவைப்படுகின்றனர். இக்குறைபாட்டின் காரணமாக பாடங்கள் உரிய நேரங்களில் நடைபெறுவதில்லை. க.பொ.த தர வகுப்புக்களுக்கும் சில நாட்களில் இரண்டு அல்லது மூன்று பாடங்களே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. இதனால் சில வகுப்புக்கள் நேரகாலத்தோடு வீடுகளிற்குப் போய்விடுவதாகவும் சொல்லப்படுகின்றது. சில ஆசிரியர்கள் தாம் நினைத்த மாத்திரத்தில் இடைக்கிடையே விடுமுறை எடுப்பதாகவும் சொல்லப்படுகின்றது. உண்மையில் தமது சொந்த லீவுகளைத்தான் இவர்கள் எடுப்பதாக நியாயம் கூறப்பட்டாலும் பாடசாலையில் ஆசிரியர் குறைபாடிருப்பதனால் மாணவர் நலன் கருதி சற்றுத் தாராளத் தண்மையோடு இவர்கள் நடந்து கொண்டால் என்ன?என்று பலரும் கேள்வியெழுப்புகின்றனர். இது சம்பந்தமான தகவலை எமது சகோதர இணையத்தளமொன்றிலும் காண முடிகின்றது.

"தனது மகனின் சுகவீனம் காரணமாக பாடசாலை விடயங்களை முழுமையாகக் கவனிக்க முடியாத நிலைக்கு அதிபர் தள்ளப்பட்டுள்ளதால் இந்நிலை மேலும் மோசமடைந்தள்ளது www.kahatovita.tk "

எமது பாடசாலையின் அண்மைய நிலைதொடர்பான மேலும் கவலைக்குறிய பல தகவல்களை வாசகர்களாகிய உங்களுக்கு அறியத்தரவுள்ளோம். அல்பதிரியாவை வீழ்ச்சியிலிருந்து காப்பதற்க்குரிய ஆக்கபுர்வமான கருத்துக்களை நீங்களும் இத்தளத்தினூடாக பகிர்ந்துகொள்ளலாம்.

பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தில் மாபொரும் கண்காட்சி


பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடம் ஏற்பாடு செய்துள்ள அல்குர்ஆனின் அறிவியல் அற்புதமும் உலக நாகரீகத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான மாபொரும் கண்காட்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.

நான்கு பிரதான பிரிவுகளை கொண்ட இக்கண்காட்சியில், இஸ்லாமிய கிலாபத்தின் இறுதி பேராகிய துருக்கிய உஸ்மானிய பேரின் வரலாற்று சின்னங்கள் மற்றும் ஈரானிய புராதன கலை, கலாச்சர சின்னங்களை காட்சிப்படுத்தும் விஷேட காட்சிக்கூடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்கள் என 50,000 மேற்பட்டேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கண்காட்சியை காலை 8 மணி முதல் இரவு 8 மணி கண்டுகளிக்கலாம் என ஏற்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கண்காட்சி எதிர்வரும் திங்கட்கிழமை வரை இடம்பெறவுள்ளது. இறுதி நாள் பெண்களுக்கு என ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இத்தினத்தில் எக்காரணம் கொண்டு ஆண்கள் கண்காட்சி வளாகத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

கொம்பனித்தெருவில் வீடுகள் அகற்றல்; தனிநபர் ஒத்திவைப்பு பிரோரணைக்கு நாடாளுமன்றத்தில் தடை


கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியில் சட்ட விரோத வீடுகள் என்று 22 வீடுகள் அகற்றப்பட்டமை சம்பந்தமாக இன்று நாடாளுமன்றத்தில் தனிநபர் ஒத்திவைப்பு பிரோரணை ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்தார்.

எனினும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களின் மூலம் தெரியவந்ததே ஒழிய, வழக்கை பதிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிக்கவும் இல்லை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்து கொள்வது என அறிவிக்கவும் இல்லை. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்.

இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமாயின் தான் பதிலளிக்க தயார் இல்லை என்று அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பது அவர்களின் சிறப்புரிமையை மீறும் செயலாகும். பாதுகாப்பு செயலாளரிற்கு பயந்து கொண்டு இவ்விவாதத்திற்கு பதிலளிக்க முடியாது என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், இது சம்பந்தமான விவாதம் இன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு குறிப்பிட்ட அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்.

எனினும், சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் இன்று விவாதிக்க முடியாது. நீதிமன்ற விசாரணைகளின் முடிவடைந்த பிற்பாடு இது சம்பந்தாக விவாதிப்போம் என்று கூறி நாடளுமன்ற அமர்வை எதிர்வரும் 29ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.(R.A)

பொது இடங்களில் தகாதவாறு நடந்ததாக 200 இளம் ஜோடிகளுக்கு எதிராக வழக்கு


பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 200 இளம் ஜோடிகள் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நாட்டின் இரு பிரதான நகரங்களான குருநாகல் மற்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களிலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பீ.பீ.சி. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

குறுத்த பிரதேசங்களிலுள்ள பொது மைதானங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் முத்தமிடுதல் உள்ளிட்ட தகாத நடவடிக்கைகைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே மேற்படி ஜோடிகள் கைதாகியுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களில் பெரும்பாலானோர் 15 வயதான பாடசாலைச் செல்லும் சிறுமிகள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சுமார் 350 ஜோடிகள் உரிய எச்சரிக்கைகளின் பின்னர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மேற்படிச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் அரசமைப்பில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம் : லக்ஷ்மன் யாப்பா


நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரத்ன முன்வைத்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அந்தவகையில் துரித கதியில் கட்டம் கட்டமாக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: "அரசாங்கம் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது. அந்த வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. .

கடந்தகாலங்களில் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் காரணமாக அபிவிருத்திகளை மேற்கொள்வதில் பல்வேறு தடைகள் காணப்பட்டன. மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தனர். .

தற்போது 30 வருடகால பயங்கரவாதம் முடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பாகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியினால் வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. .

அங்கீகாரம்.

அந்தவகையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் VII அ, XI, XVIII அ, ஆகிய அத்தியாயங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கும் புதிய திருத்தங்களை முன்வைப்பதற்கும் அடையாளம் காணப்பட்ட சட்டங்களுக்குத் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ளவும் இது தொடர்பான சட்ட வரைவுகளை செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. .

அமைச்சரவை உபகுழு.

அதேவேளை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படுகின்ற நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அவற்றை நீக்குவதற்கான யோசனைகள் என்பன தொடர்பில் ஆராய அண்மையில் அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இடம்பெறுகின்றேன். தற்போது குறித்த குழு பல தடவைகள் கூடி யோசனைகளை தயாரித்து வருகின்றது. சில வாரங்களில் நாங்கள் இது தொடர்பான யோசனைகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்போம்.

சல்மான்கானின் திரைப்படம் இலங்கையில்

மேலும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தியதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. அதாவது வேறு ஒரு நாட்டில் படப்பிடிப்புக்களை மேற்கொள்ளவிருந்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் திரைப்படம் தற்போது முழுமையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. 150 இந்திய குழுவினர் இலங்கையில் படப்பிடிப்புக்களை நடத்துவார்கள்."இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரளித்த பதில்களும் : கேள்வி: எவ்வாறான அம்சங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று கூற முடியுமா?

பதில்: பல விடயங்களில் திருத்தங்கள் இடம்பெறும். அவற்றை விபரமாக தற்போது என்னால் கூற முடியாது. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தேர்தல் முறைமை உள்ளூராட்சி முறை போன்றவற்றில் திருத்தங்கள் இடம்பெறவுள்ளன.

கேள்வி : நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எவ்வாறு திருத்தம் செய்யப்படும்?

பதில்: அதாவது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்கு ஒருதடவை நாடாளுமன்றத்துக்கு வரவேண்டிய வகையில் திருத்தம் செய்யப்படும். தற்போது அவ்வாறு இல்லை.

கேள்வி: ஜனாதிபதி பதவிக்கால தடவைகளை நீடிப்பது தொடர்பில் ஆராயப்படுகின்றதா?

பதில்: ஒருவர் எத்தனை தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பதனை மக்களே தீர்மானிக்கின்றனர். எனவே அதில் சிக்கல்கள் இல்லை. யார் ஜனாதிபதியாயானலும் மக்களே தீர்மானிக்கின்றனர்.

கேள்வி:அரசியல் தீர்வு விடயமும் அரசியலைமைப்பு திருத்தங்களில் உள்ளடக்கப்படுமா?

பதில்: அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பேசப்படுகின்றது

கேள்வி: எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தாரே?

பதில்: மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் என்று நான் கூறவில்லை. அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பேசப்படுவதாகவே கூறினேன். இதில் பல்வேறு விடயங்கள் உள்ளன.

கேள்வி: அப்படியானால் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு?

பதில்: நாங்கள் முதற்கட்டமாக வடக்கில் மாகாண சபையை நிறுவவுள்ளோம்.

கேள்வி:: அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஏதாவது பேசப்படுகின்றதா?

பதில்: நாங்கள் முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுவருகின்றோம். அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவருகின்றோம். உலகில் எங்குமே இடம்பெறாதவாறு இடம்பெயர்ந்த மக்கள் மிகவேகமாக மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

கேள்வி: அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான குழுவினரின் யோசனைகளுக்கா தற்போது அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது?

பதில்:அந்தக் குழுவும் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கேள்வி:மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாகவும் பேசப்படுகின்றதா?

பதில்: பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்றது.

கிளை 07: வஞ்சமில்லா வதனம்

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.
............................................................................................................................
அது ஒரு வயல் வெளி. ஒரு தலையில் இரு வகிடுகள் போல் அதில் இரண்டு பாதைகள். ஆங்காங்கே ஓரிரு வீடுகள். 
சில வேளை அது திரிசு நிலம், அப்போது அது எங்கள் மைதானம், 
சில வேளை அது சதுப்பு நிலம், அப்போது அது எங்கள் வயல் நிலம், 
சிலபோது அது எங்கள் நீச்சற் குளம். 

பற்றைப் புதர்களுடன் சேர்ந்த நாணற் புற்கள் தென்றலின் சீண்டலால் வலைந்து நெலிந்து ஆடும் ஆட்டத்தைக்காண அந்திகள் பல தேவை. (என்றைக்கும் பசுமையாக அந்த புற்றரையை ரசிக்கும்). வஞ்சமமேயில்லா அந்த இயற்கைப் பசுமைக்கு ஆண்டுக்கொருமுறை வந்து செல்லும் ஆற்று வெள்ளம் சேறு பூசிச்ச செல்வது மனதுக்குக் கொஞ்சம் வேதனைதான்.

 புற்களுக்கு வேண்டுமென்றால் படிந்த சேறு மறு மழையில் கரைந்து விடும். ஆனால் எங்கள் மக்களுக்கு அது எத்துனை காயங்களை விட்டுச் செல்கின்றது. பல வருடங்கள் புன்பட்ட எங்கள் நெஞ்சங்கள் பண்பட்டுவிட்டன. அது எதையும் தாங்கும் இதயமொன்றை எங்களுக்குள் உருவாக்கிட்டு. அந்த வீதியில் நின்று பார்த்தால் தெரிவதெல்லாம் தென்னை மரங்களும், பலா மரங்களும் சேர்ந்த ஒரு சோலைதான். அது ஒரு நந்தவனமோ அல்லது சரணாலயமோ என்றெல்லாம் சிலர் எங்க@ரின் முகப்பைப் பார்த்து பிரமித்ததுண்டு. அந்த வரப்புகளுக்கு மேல் ஓர் எட்டு வைக்கும்போது ஒரு பிரமை எங்களுக்கு. ஏனென்றால் வரப்புக்களையும் வேளாண்மைகளையும் எங்களுக்கு அறிமுகஞ் செய்து வைத்ததே இந்த வயல்வெளிதான். 

என்னது செய்வது செயற்கைகளையே ரசித்துப் பழகிவிட்ட இன்றைய மனிஷருக்கு இந்த இயற்கைகளை ரசிக்கப் பிடிக்கவில்லை போலும்.

கிளை 06. புனை கதை

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....

கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.

....................................................

புனை கதைகளுக்குப் பொய்களே அழகு சேர்க்கின்றன. பொய்யெனத் தெரிந்தும் நம்மில் எத்தனைபேர் எத்தனையோ புனைகதைக்குள் புதைந்து போயிருக்கிறார்கள்…? பொய்யானாலும் அதற்குள்ளிலுக்கும் ஒரு வகை ஈர்ப்புத்தான் இந்த மதிமயக்கத்திற்குக் காரணம். சில உண்மைகளும் புனைகதைகள் போல் கற்பனைகளாகியிருக்கின்றன. அதிலொன்றுதான் எங்கள் ஊருக்கு மைதானம் வரப்போகும் கதையாகும். தலைமுறை தலைமுறையாக வாய்களில்தான் அந்த மைதானத்தைக் காணக்கிடைக்கின்றது. உழைப்பதே சுமையாகிவிட்ட இன்றைய பொழுதுகளில் உறவுகளோடு ஒரு வார்த்தை பேச நேரமில்லாத போது இந்த மைதானத்தைப் பற்றி அரட்டையடிக்கவா எங்களுக்கு நேரம் கிடைக்கப் போகுது? பாவம் அந்தப் பிஞ்சுகள். தென்னம் தோப்பு, ரப்பர் தோட்டம் எல்லாம் அழிச்சு மீதமிருக்கும் சில சகதி வயல்கள்தான் அவர்களை விளையாட வைக்கின்றன. பாடசாலை மைதானத்திலும் எத்தனை பேர்தான் விளையாடுவது? தேய்ந்துபோன வண்டிச் சக்கரம் போல அந்த செம்மண் தரையில் ஓடி ஆடிய எங்கள் பாதங்களும் தேய்மானம் கண்டுவிட்டன. அகரம் சொல்லித் தந்த அந்தப் பள்ளிக் கூட மண்ணிண் தன்மை கொஞ்சம் கடுமைதான். ஆனாலும் அதில் விளையாடுவது எங்களுக்கு என்றென்றும் அருமைதான். போதும் எங்களுக்கு இதுவொன்றும் போதும். துள்ளி விளையாட எங்கள் பள்ளி மண்ணே போதும். எங்களைப் பொறுத்த மட்டில் அந்த மைதானக் கதை எங்களுக்குப் புடித்த ஒரு புனை கதைதான். அந்தக் கதையைச் சொன்னால் சம்பிரதாயத்திற்குக் கேட்போம், ஆனால் அதில் லயிக்க மாட்டோம். வாழ்க்கையே புனை கதையாகின்ற போது இதுவொன்றும் புதுமையல்ல.