உயிர் பெருமா பள்ளிவாசல்களின் சம்மேளனம்…..?
எது எப்படியிருப்பினும் ஊரின் அண்மைக்கால நிகழ்;வுகளை அவதானிக்கும்பொழுது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயற்பாடு துறிதப்படுத்தப்படல் அவசியமாகின்றது என்பதை காணக் கூடியதாகவுள்ளது. இளைஞர்கள் மத்தியில் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் காதல் தொடர்பானது மிக மோசமான விளைவுகளில் முடிவதுடன் , இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைகளாக மாறிவருவதையும் காண முடிகின்றனது. மட்டுமின்றி புகைத்தல் இளைஞர்கள் மத்தியில் சர்வசாதாரணமான ஒரு விடயமாக மாறியிருப்பதுடன் சினிமாவை சித்தரிக்கும் ஒரு வாழ்க்கையை நமது இளைஞர்கள் வாழ்கிறார்கள் என்றாலும் மிகையாகாது. எனவே எமது இன்றைய இளைஞர்களை வழிகாட்டி நெறிப்படுத்தி ஆரோக்கியமான ஒரு சமுதாயமாக மாற்ற பள்ளிவாசல்கள் சம்மேளனத்தில் தலைமையில் எமது ஊரின் நலன் விரும்பிகள் ஒன்றினைந்து செயற்படுது காலத்தின் தேவையாகும்.