கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

7 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விபரம்

  

7 வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அதிகபட்சமாக இந்திய பெறுமதி ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த முறை புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய யுவராஜ் இந்த முறை பெங்களூரு அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த முறை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜெயவர்த்தனேவை இந்த முறை யாரும் ஏலம் எடுக்கவில்லை. கடந்த 6 ஐ.பி.எல்., போட்டிகளிலும் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடிய முரளி விஜய், தற்போது டில்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

7 வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்காக பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. பெப்சி நிறுவனம் நடத்தும் இந்த இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கும் 8 அணிகளுக்காக 514 வீர்களின் ஏலம் இன்று நடைபெற்றது. இவர்களில் 259 பேர் புதுமுகங்கள். ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் நடத்தப்பட்டது.

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விலை விபரம் : 

யுவராஜ் சிங் - ரூ.14 கோடி (வாங்கிய அணி - பெங்களூரு)
தினேஷ் கார்த்திக் - ரூ.12.50 கோடி (வாங்கிய அணி - டில்லி)
கெவின் பீட்டர்சன் - ரூ. 9 கோடி (வாங்கிய அணி - டில்லி)
மிட்செல் ஜான்சன் - 6.50 கோடி (வாங்கிய அணி - பஞ்சாப்)
ஜேக் காலிஸ் - ரூ.5.5 கோடி (வாங்கிய அணி - கோல்கட்டா)
டேவிட் வார்னர் - ரூ.5.5 கோடி (வாங்கிய அணி - ஐதராபாத்)
முரளி விஜய் - ரூ.5 கோடி (வாங்கிய அணி - டில்லி)
மைக்கேல் ஹசி - ரூ.5 கோடி (வாங்கிய அணி - மும்பை)
மெக்கல்லம் - ரூ.3.25 கோடி (வாங்கிய அணி - சென்னை)
வீரேந்திர சேவாக் - ரூ.3.2 கோடி (வாங்கிய அணி - பஞ்சாப்)
ஜாகீர் கான் - ரூ.2.60 கோடி (வாங்கிய அணி - மும்பை)
 
Jaffna Muslim

பா.உ. அஜித் மன்னப்பெறும அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் நடைபெற்ற ரிபன்வேக் பயிற்சி நெறியும், கண்காட்சியும் (நிழல்படங்கள்)



கஹடோவிட வாழ் பெண்களின் சுய திறமையை விருத்தி செய்து சுய தொழிலுக்கான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கத்தோடு கடந்த 3 மாதங்களாக நடாத்தப்பட்டு வந்த தையல் (Ribbon Work ) பயிற்சி நெறியின் நிறைவாக தமது ஆக்கங்களைக் கொண்டு  ஒரு கண்காட்சி 02.02.2014 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கஹடோவிட மாதர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் பயிற்சி நெறியின் வகுப்புக்கள் கஹடோவிட பாலிகா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்று வந்தது. பயிற்சிநெறியின் இறுதியில் நடாத்தப்படவிருந்த கண்காட்சியும் பாலிகா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும்,  அரசியல் தலையீடுகாரணமாக இக்கண்காட்சி இறுதிநேரத்தில் இடம் மாற்றப்பட்டு சகோதரர் பஸ்லி நானா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

பயிற்சி நெறியில் பங்குபற்றிய பலரின் ஆக்கங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும (Hon. Ajith Mannapperuma) அவர்கள் இப்பயிற்சி நெறிக்கான நிதியை ஒதுக்கியமை மாத்திரம் அல்லாமல் கண்காட்சியை பார்வையிடுவதற்காகவும் வருகை தந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.













RE

இன்றும் கூட தெருவில் பணம் கிடந்தால், குனிந்து எடுக்க தயங்க மாட்டேன் - உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ் சொல்கிறார்


 
 
உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது. வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ ஒழிப்பு, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரசாரம் போன்றவற்றுக்காக செலவிட்டு வரும் அவர் இன்றும் கூட அன்றாடம் தான் சாப்பிட்ட தட்டுகளை இரவு வேளைகளில் தானே சுத்தம் செய்து வைப்பதில் மனநிறைவு கொள்கிறார்.

இந்நிலையில், அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் நடவடிக்கை, கேட்ஸ் அறக்கட்டளையின் தொண்டுகள், மற்றும் தனது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தொடர்பாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக நேற்று ‘ஆன் லைன்’ மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் சரமாரியாக பதில்களை அள்ளி வீசினார்.

இவற்றில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த பில் கேட்ஸ், ‘இன்றும் கூட தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை குனிந்து எடுக்க நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன்’ என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
 
JM

துருக்கியில் மறைத்து வைக்கப்பட்ட பழைய பைபிள் பிரதி வெளிவருகிறது!


துருக்கி அரசால் கடந்த 13 ஆண்டுகள் காலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500 ஆண்டுகால பழமையான பைபிள் பிரதி பொது மக்களின் பார்வைக்கு வர இருக்கிறது.

2000 ஆம் ஆண்டு சுங்கச் சோதனையின் போது 1,500 ஆண்டுகள் பழமையான பைபிள் பிரதியொன்றைத் துருக்கி காவல்துறையினர் கைப்பற்றினர். தங்க எழுத்துகளால் எழுதப்பட்ட அப்பிரதி, ஏசுவின் தாய் மொழியான அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ளது.

சுமார் 14 மில்லியன் யூரோ மதிப்பிடப்பட்டுள்ள இந்தப் பழமையான பைபிள் பிரதியில், தமக்குப் பின்னர் முஹம்மது என்ற தூதர் உலகிற்கு வருவார் என ஏசு போதித்ததான விபரம் தெளிவாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

"பர்னபாஸ் சுவிசேஷம்" என கருதப்படும் இப்பழமையான பிரதியினைப் பார்வையிட XVI ஆவது போப் பெனடிக்ட் ஆர்வம் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இப்பிரதியினை அங்காரா அருங்காட்சியகத்துக்குத் துருக்கி அரசு கைமாறியுள்ளது.

மிக விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு இப்பழைய பைபிள் பிரதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் போது, முஹம்மது நபியின் வருகை குறித்து அதில் ஏசு தெரிவித்திருந்ததாக கூறப்படும் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகில் மத நம்பிக்கையாளர்களிடையே அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
 
Jaffnamuslim

தனது மன மாற்றம் சம்பந்தமாக யுவன் சங்கர் ராஜாவின் பிரத்யேக பேட்டி!

தனது மன மாற்றம் சம்பந்தமாக டெக்கான் க்ரோனிக்கல் என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்:

அனுபமா சுப்ரமணியன்: இஸ்லாத்துக்கு செல்வதென்ற முடிவு திடீரென்று ஏன் உங்களுக்கு ஏற்பட்டது?

யுவன் சங்கர்: திடீரென்று எடுத்த முடிவாக இதனை நான் சொல்ல மாட்டேன். கடந்த ஒரு வருடமாக இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து இஸ்லாம் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டேன். இதன் பின் பல சிறந்த கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது. இதற்கு முன் எனக்கு அவ்வாறு நிகழ்ந்ததில்லை. பலமுறை இது எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் விவரித்து சொல்ல இயலாது. ஏதோ ஒரு இறை சக்தி என்னை ஆட்கொள்கிறது என்பதை மட்டும் விளங்கிக் கொண்டேன். ஆனால் அது என்னவென்று சரியாக விளங்காமல் இருந்தது. அதன் பிறகு புனித குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த சந்தேகங்கள், கனவுகளுக்கான விடைகளை குர்ஆனில் நான் கண்டு கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொண்டேன். இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்க முழு காரணமாக இருந்தது. இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றே நினைக்கிறேன்.

அனுபமா சுப்ரமணியன்: ஒரு வதந்தி நிலவுகிறதே! டைரக்டர் அமீர் தான் உங்களின் மனமாற்றத்துக்கு காரணம் என்றும் அவர்தான் உங்களை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று இஸ்லாத்துக்கு மாற்றியதாக ஒரு செய்தி உலவுகிறதே!

யுவன் சங்கர்: (பலமாக சிரிக்கிறார்) நீங்கள் சொல்லும் அனைத்தும் தவறான தகவல்கள். என்னை யாரும் இஸ்லாத்தை ஏற்கச் சொல்லி வற்புறுத்தவில்லை. இது அவரவர்களின் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். உங்களின் உள் மனதில் இறை நம்பிக்கையில் ஏற்படும் சில மாற்றங்களே தற்போது என்னுள் நடந்துள்ளது. இது தான் உண்மையும் கூட.

அனுபமா சுப்ரமணியம்: உங்கள் தந்தை இந்து மத நம்பிக்கைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். உங்களின் இந்த மன மாற்றத்தை எவ்வாறு எடுத்துக் கொண்டார்?

யுவன் சங்கர்: ஒரு மகனாக, எனது இந்த மன மாற்றத்தை முதலில் எனது அப்பாவிடம் தான் சொன்னேன். ஆம். சொன்னவுடன் அவர் முதலில் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு எனது முடிவை ஒத்துக் கொண்டு என்னையும் ஏற்றுக் கொண்டார். தனது மகன் மகிழ்ச்சியாக இருப்பதையே அவர் விரும்பினார். எனது தங்கை பாவனாவிடமும், எனது அண்ணன் கார்த்திக்கிடமும் இதைப் பற்றி கூறினேன். அவர்கள் இருவரும் கூட என்னை நன்கு புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கும் எனது தந்தைக்குமிடையே இந்த மன மாற்றம் சம்பந்தமாக பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி சில காலமாக மீடியாவில் உலவுகிறது. அனைத்து செய்திகளும் தவறானவை. நானும் எனது குடும்ப அங்கத்தினர்களும் எப்போதும் போலவே சந்தோஷமாக இருக்கிறோம்.

அனுபமா சுப்ரமணியம்: ஏ ஆர் ரஹ்மானை நீங்கள் பின்பற்றுவதாக சிலர் கூறுகின்றனரே!

யுவன் சங்கர்: அவரை நான் ஏன் பின்பற்ற வேண்டும்? என்னுள் ஏற்பட்ட சில மாற்றங்கள் இந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது. அவ்வளவுதான்.

அனுபமா சுப்ரமணியம்: நீங்கள் மூன்றாம் முறையாக ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அதுவும் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்திருப்பதாகவும் ஒரு செய்தி உலவுகிறதே?

யுவன் சங்கர்: இந்த செய்தியை நானும் படித்தேன். இது பற்றி நான் தெளிவுபடுத்தி விடுகின்றேன். எனது நண்பர் கிருஷ்ணாவின் திருமணத்துக்காக கோவை சென்றிருந்த போது மீடியாக்களால் இந்த செய்தி பரப்பப்பட்டது. எனது இஸ்லாமிய நண்பரும் அவரது மனைவியும் நானும் அந்த போட்டோவில் ஒன்றாக இருப்பதை பார்த்து இந்த வதந்தி பரப்பப்பட்டது. உடனே சிலர் அந்த போட்டோவை பத்திரிக்கையில் போட்டு நான் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதாக பொய்களை பரப்பி வந்தனர். இதனை பலமுறை மறுத்தும் உள்ளேன். தற்போதும் அதே மறுப்பை பதிய செய்கிறேன்.

அனுபமா சுப்ரமணியம்: 'யுவன் சங்கர் ராஜா' என்ற உங்களின் இந்த பெயரும் மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாமா?

யுவன் சங்கர்: இது பற்றிய செய்தியை விரைவிலேயே வெளியிடுவேன்.



அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17


ஆம். இதைத்தான் யுவன் சங்கர் ராஜாவும் 'இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான்' என்று அழகாக தனது பேட்டியில் சொல்லியுள்ளார். இந்த குர்ஆன் வசனத்தின்படி ஏ ஆர் ரஹ்மானோ, யுவன் சங்கர் ராஜாவோ, மைக்கேல் ஜாக்ஸனோ யார் இஸ்லாத்திற்குள் வந்தாலும் அதனால் இஸ்லாம் எந்த வகையிலும் நன்மையை அடையப் போவதில்லை. மாறாக மாறிய அந்த நபர்கள் சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொள்கிறார்கள்.

வாளால் இஸ்லாம் உலகமெங்கும் பரப்பப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் பிடித்துக் கொண்டு 'எது வேண்டும?' என்று ஒளரங்கஜேப் கேட்டதாக நமது வரலாற்று புத்தகங்களில் ஏகத்துக்கும் கதை அளந்திருப்பார்கள். அந்த கதைகள் அனைத்தும் கற்பனைளே என்பதற்கு இந்த பேட்டி மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

--------------------------------------------------------

ஹூஸைனீ எனும் அன்ஸாரீ ஒருவருக்கு கிறிஸ்தவர்களான இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் இஸ்லாத்தைத் தழுவும்படி அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் தொடர்ந்தும் இருக்கப் போவதாக பிடிவாதமாக இருந்தனர். எனவே, அவ்விருவரையும் இஸ்லாத்தைத் தழுவ நிர்ப்பந்திக் கட்டுமா என நபி அவர்களிடம் அவர் வினவியபோது நபியவர்கள் அவரைத் தடுத்தார்கள்.அப்போது இந்த வசனம் இறக்கப்பட்டது.

“மார்க்கத்தில் பலவந்தமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழியானது தெளிவாகிவிட்டது”
குர்ஆன்: (2:256)


எனவே எவரையும் அவரின் வறுமையையும், சிரமத்தையும், இயலாமையையும் காரணமாக்கி அதன் மூலம் வலுக்கட்டாயமாக எவரையும் இஸ்லாத்தில் இணைக்க முற்படுவது குர்ஆனின் கட்டளைக்கே மாற்றமானது என்பதை விளங்குகிறோம். இதன்படி மொகலாயர்கள் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்தக் கொள்வதற்காக தினம் பொரிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மத மாற்றம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை அதை அவர்கள் விரும்பவும் இல்லை என்பதை விளங்குகிறோம்.

சுவனப்பிரியன்

இன்று பாராளுமன்ற உறுப்பிணர் விஜித ஹெரத் கஹடோவிடாவில்!



பாராளுமன்ற உறுப்பிணர் விஜித ஹெரத் அவர்கள் அங்கம்பிடிய சிறிய கூட்டமொன்றுக்கு வருகைதந்து செல்லும் வழியில் கஹடோவிட ஹிஷாம் நானாவின் வீட்டுக்கு அவரது ஆதரவாளர்களை சந்திப்பதற்காக  திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ளதாகவும்.

அவர் அங்கு அவரது ஆதரவாளர்களோடு உரையாடும் போது, இப்பகுதிக்கு வந்தால் கஹடோவிடாவை தரிசிக்காமல் எப்படியும் செல்லமுடியாதென்றும், காரணம் சில வருடங்களுக்கு முன் கஹடோவிடாவில் அவருக்கு கொடுத்த வரவேற்பை பற்றி ஞாபகப்படுத்தியதோடு, பாடசாலையின் நிலைமை பற்றியும், ஊரின் நிலவரங்கள் பற்றியும் கலந்துறையாடிவிட்டு சென்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

ஹிட்லர் 95 வயது வரை வாழ்ந்ததாக பரபரப்புத் தகவல்



கொடுங்கோல் ஆட்சியாளராக அறியப்பட்ட ஹிட்லர் தனது 95 ஆவது வயது வரை உயிர்வாழ்ந்ததாக நூலாசிரியர் ஒருவர் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

2ஆம் உலகப் போரின் இறுதியில், 1945ஆம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு ஹிட்லர் உயிரிழந்தார் என்பதுதான் வரலாற்று தகவலாக இருந்தது.

ஆனால் ஹிட்லர் சாகவில்லை, தப்பி விட்டார் சிமோனி ரெனீ குரேரியோ என்ற முதுகலை மாணவி தான் வெளியிட்டுள்ள ர்வைடநச Hitler in Brazil - His Life and His Death, என்ற நூலில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இத்தகவலின்படி,

ஹிட்லர் 1984ஆம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்துள்ளார். தனது 95வது வயதில்தான் இயற்கையாக அவர் மரணமடைந்துள்ளார். அவர் தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தை பிரேசிலில் கழித்துள்ளார். 

பெர்லினை விட்டுத் தப்பிச் சென்ற ஹிட்லர் ஒரு கருப்பர் இனப் பெண்ணுடன் காதல் கொண்டு அவருடன் சில காலம் வாழ்ந்துள்ளார். 

ஹிட்லரின் சகாப்தம் பெர்லின் பதுங்கு குழியோடு முடியவில்லை. 2ம் உலகப் போரில் ஜெர்மனி வீழ்ந்ததை அறிந்த ஹிட்லர் உடனடியாக தப்பி ஓடி விட்டார். ஜெர்மனியை விட்டு வெளியேறிய அவர் பல நாடுகளுக்கும் மாறு வேடத்தில் போயுள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் அர்ஜென்டினா போயுள்ளார், பராகுவே போயுள்ளார். கடைசியாக பிரேசில் வந்து சேர்ந்துள்ளார்.

இந்த நாடுகளில் ஹிட்லர் மற்றும் அவரது கூட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல அரிய பொக்கிஷங்களை மறைத்து வைத்துள்ளனர். அதைத் தேடித்தான் ஹிட்லர் போனதாக கூறப்படுகின்றது.

பொலிவியா நாடுகளுக்கிடையிலான எல்லைப் பகுதியில் பிரேசிலுக்குட்பட்ட மாடோ கிராஸ்ஸோ என்ற மாகாணத்தில்தான் ஹிட்லர் தலைமறைவாக 1984ஆம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளார்.

இந்த நாடோடிப் பயணத்தின்போது அவருக்கும், கருப்பர் இனத்தைச் சேர்ந்த குட்டிங்கா என்ற பெண்ணுக்கும் இடையே நட்பும், காதலும், உறவும் ஏற்பட்டதாம்.

அடோல்ப் லிப்ஸிக் என்ற பெயரில் பிரேசிலுக்குத் தப்பி வந்த ஹிட்லர் தனது பெயரை அடோல்ப் லிப்ஸிக் என்று மாற்றிக் கொண்டு வாழ்ந்ததாக ரெனீ கூறுகிறார். 

ஹிட்லரை அங்குள்ளவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த தாத்தா என்று அழைத்து வந்துள்ளனர் அந்நூலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilmirror

மௌலானா மௌதூதியின் (ரஹ் ) ஜமாதே இஸ்லாமியும் , இன்றைய இலங்கை 'நியோ இஸ்லாமியும்' !!!


     
“இவர்கள் இஸ்லாத்தின் அரசியல் அகீதா பற்றி பேசுகிறார்கள். பின்னர் தேசிய ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர். ஒன்று அல்லாஹ்விற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அல்லது  குப்ரிய அரசிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். தங்கள் இருப்பை பேணவும், தங்கள் தூய தஃவாவை பேணவும் இரண்டையும் செய்ய முற்படுவது மாபெரும் நயவஞ்சக அரசியலாகும்” 
 
தமது முஅஸ்கர்களிலும், இஜ்திமாக்களிலும் நேற்று  “இகாமதுத் தீன்” என்றம், “இலாஹியத்” என்றும், “சட்டம் இயற்றும் அதிகாரம்” என்றும் முழங்கியவர்கள் இன்று தேசிய ஜனநாயக ஒழுங்கியல்கள் பற்றி சித்தாந்தம் பேசுகிறார்கள். இவர்களது புத்தக சாலையில் மௌலான மௌதூதி எழுதிய “ஜிஹாத் பீஸபீலில்லாஹ்”, “ஜிஹாத் ஏன் எதற்கு” என்ற புத்தகங்களை விற்றவர்கள் தான் இன்று தேசிய ஜனநாயகம் பற்றி எழுதுகிறார்கள். முரண்பாடுகளின் மொத்த வடிவமாக மாறி நிற்கிறது சத்தியப்பாதையில் இலட்சிய பயணம் செல்ல முற்றபட்ட இஸ்லாமிய இயக்கம். இன்று  தாகூத்தோடு அதன் வாழ்வியலோடு சமரசம் செய்து, தேசிய சகவாழ்வு என்ற சரணடைவில் தான் மீட்சி உண்டு ; என சொல்கிறார்கள் . அவ்வாறு சொல்வது சாதாரண ஒரு பாமர முஸ்லீம் அல்ல . இஸ்லாமிய அரசியலை பேசிய ஒரு இஸ்லாமிய இயக்கம் !! இவர்கள் குப்ரை திருப்திப்படுத்துவதில் அஹ்லாகை வரைவிலக்கணப் படுத்துகிறார்கள் . ஒரு தெளிவான ஜாஹிலீயத்துக்கு இஸ்லாமிய சாயம் பூசி முஸ்லிம் உம்மத்தை ஏமாற்றுகிறார்கள் . 
         இலங்கை ஜமாதே இஸ்லாமியின் மாத இதழான 'அல் ஹசனாத்தின் 'பெப்ரவரி வெளியீடு பலத்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது . அது முழுக்க முழுக்க குப்ரிய அரசியலான தேசியத்தையும் அதன் கொடியையும் அதன்மீதான அதீத பற்றையும் கட்டி பறக்க விடப்பட்ட ஒரு வெளியீடாக இருந்தது . இந்த தேசியம் எனும் ஏமாற்று இலங்கையின் முஸ்லீம்கள் அல்லாத மட்டங்களிலேயே பலத்த கேள்விகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருக்கும் இன்றைய  நிலையில் இவர்களது செயல் நாய் வாலை நிமிர்த்தும் தரத்தில் அமைந்துள்ளது .(இன்னொருபுறம் இலங்கையில் முஸ்லீம்கள் வழிவாராக கடைப்பிடிக்காத ஒரு விடயத்தை அனாவசிய அடையாளப்படுத்தல் மூலம் பிரித்துக் காட்ட எத்தனிக்கிறார்கள் !! அதன் முடிவு காலத்தால் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயப்படுத்தப் படலாம் . அல்லாது விடின் குற்றம் செய்யாத நிலையிலும் தேசத் துரோகி என்ற கொடிய பார்வை அவன் மீது பதிக்கப்படலாம் . இப்படி ஒரு வடிவம் தேவையா !?)

         நிகழ்கால குப்ரிய மனித அடிமைத்துவ பொறிமுறை அரசியலின் எல்லைப்படுதப்பட்ட வடிவமே இந்த தேசியம் எனும் விடயமாகும் .அது குறுந் தேசியம் மற்றும் அதற்குள் பற்பல முரண்பாடுகள் போன்ற சாபக்கேட்டை சுமந்த அரசியல் வடிவமாகும் . இங்கு பெரும்பான்மை என்ற சண்டித்தனமிக்க எஜமானனை அண்டி வாழும் ஜனநாயகத்தை சுற்றியே சகல விடயங்களும் அமைந்திருக்கும் என்பது அனுபவ பூர்வ உண்மை . இப்படி சமூக அநீதி ஒரு உயர்ந்த விடயமாக போற்றப்படும் ஒரு அகீதா தரத்தில் இருந்து சத்தியம்,நன்மை என்பன எவ்வாறு தோற்றம் பெற முடியும்!?

         சரி நடப்பு  தேசம் ,தேசியம் மற்றும் அதுசார் அரசியல் பற்றி ஜமாதே இஸ்லாமி அறியாமலா இதை பேசியது !? இந்தக் கேள்வி வழி நடப்பு ஆதிக்க சித்தாந்தம் தொடர்பில் ஜமாதே இஸ்லாமியின் கருத்து என்ன என்பதே ஆகும்  !? இப்போது சொல்வது சரியாக இருந்தால் நேற்று  இவர்கள் பேசிய இகாமதுத் தீன் ,தீனே இலாஹியத் ,ஹாக்கீமியத் போன்ற விடயங்களின் அர்த்தம் தான் என்ன !? சரி இதெல்லாம் ஒரு ஹிக்மத் என வைத்துக் கொண்டால் ,இந்த ஹிக்மத்தை செய்வதற்கான சுன்னா தான் என்ன !?

          இஸ்லாத்தின் போராட்டம் இப்படித்தான் அமையவேண்டும் என்பதை சிறுபான்மை நிலையிலும் ,பெரும்பான்மை நிலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) காட்டித் தரவில்லையா !? அல்லது இஸ்லாம் காட்டித் தந்த சுன்னாவழி அரசியல் போராட்டம் காலம் கடந்த ஒன்றா !? அப்படியானால சோக்கிரடீஸ் ,தொடங்கி ஆபிரகாம்லிங்கனை ஊடறுத்து இன்றைய நவீன தாகூத்கள் வரை நவீன   அரசியளுக்கான நபிமார்களாக போய்விடுவார்கள் !!!

           இவர்கள் உண்மையில் பேசி நிற்பது 'நியோ இஸ்லாம்' என்பதில் சந்தேகம் இல்லை .இதன் முடிவிடம் இணைவைப்போடு கூடிய நூதனம் என்பதில் சந்தேகம் இல்லை .குப்ரை அனுசரிப்பதில் வாழ்வுள்ளது என்பதற்கான எந்த ஒரு வஹியின் ஆதாரமும் இல்லவே இல்லை . அல்குர் ஆன் காட்டித் தராத ஒரு அரசியலை ,வாழ்வை "நமதலை நினதடி மேல் வைத்தோமே  நமதுயிரே தாயே" என வழிபடும் தேசிய தெய்வமும் ! ஜனநாயக மார்க்கமும் ! கற்றுத் தருகிறதா !? இப்படி இஸ்லாமிய அகீதாவை முட்டிமோதும் ஒரு தவ்வாவை ஒரு இஸ்லாமிய இயக்கம் செய்வது ஆச்சரியமே !

        தகூத்தியம் செங்கம்பளம் விரித்து வரவேற்கும் இத்தகு முரண்பாடு பிடித்த இலக்கையா மௌலானா மௌதூதி (ரஹ் ) கற்றுத் தந்தார் !? என்பதை புரிந்து கொள்ள மீண்டும் ஒரு தடவை 'இதுதான் இஸ்லாம்' நூலையும் , "கொத்துபா பேருரை ' நூலையும் படிப்பது நல்லது .அப்படியும் அவர் கூறிய இலக்கை புரியா விட்டால் ... "முஸ்லிமே விழித்து எழு ! இங்கு சரணடைவு அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ! இஸ்லாத்தை ஓரம் கட்டிய இனிய வாழ்வுக்கான அழைப்பு !! என ஒரு தேசிய முன்னணி ஆக தம்மை அடையாளப்படுத்தட்டும் . அதற்கும் அல்லாஹு அக்பர் சொல்ல ஒரு முரீத் கூட்டம் இருக்கவே இருக்கிறது !!! 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கந்தக்களம்