கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிடா அல்பத்ரியா மைதானத்தின் நோன்புப் பெருநாள் நிகழ்வுகள் (Photos)













நீர்கடுப்பு எதனால் ஏற்படுகிறது.?அது வராமல் தடுக்கும் முறைகள் என்ன.?

ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
என்ன காரணம்?
உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைகாலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது; கடுக்கிறது.
கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்காய்ச்சல் வரும்.
சிறார்கள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
சிறுநீர்ப் பாதையில் கல்
சிறுநீரகத்தில் தொடங்கிச் சிறுநீர்ப் புறவழிவரை சிறுநீர் செல்லும் பாதையில் கல் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.
கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும், வயிற்றில் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சில நேரம் அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறு கிற புறவழித் துவாரம்வரை பரவும்.
சிறுநீர்ப்பை பிரச்சினைகள்
சிறுநீர்ப் பையில் தொற்று ஏற்பட்டு வீக்கம் உண்டாகும்போது, நீர்க்கடுப்பு ஏற்படும். இங்கு கல், காசநோய், புற்றுநோய் என எது தாக்கினாலும் நீர்க்கடுப்புடன், சிறுநீரில் இரத்தம், சீழ் வெளியேறுதல், குளிர் காய்ச்சல், வாந்தி, வலி போன்ற துணைப் பிரச்சினைகளும் சேர்ந்துகொள்ளும்.
புராஸ்டேட் வீக்கம்
புராஸ்டேட் வீக்கமும் புற்றுநோயும், ஆண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்பட முக்கியக் காரணங்களாக அமைகின்றன. வழக்கத்தில் வழக்கமாக, நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கே இந்த மாதிரியான பிரச்சினைகளால் நீர்க்கடுப்பு வருகிறது. இவர்களுக்கு சிறுநீர் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகப் போகும். மிதமான வேகத்தில் போகும். ஒருமுறை சிறுநீர் கழிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். எத்தனை முறை போனாலும் சிறுநீர் முழுவதுமாகப் போய்விட்ட திருப்தி இருக்காது. இன்னமும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.
சுய சுகாதாரம் முக்கியம்
சிறுநீர் வெளியேறுகிற பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தவறினால், சிறுநீர்க் கடுப்பு ஏற்படும். குறிப்பாக, குழந்தைகளுக்கும் புதுமணத் தம்பதிகளுக்கும் இந்தக் காரணத்தால்தான் அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. மேகவெட்டை (கொனோரியா) போன்ற பால்வினை நோய்கள் தாக்கினாலும், சிறுநீர்ப் புறவழி அழற்சி அடைந்து நீர்க்கடுப்பை உண்டாக்கும்.
சிறுநீர்த் தாரையில் கல் அடைத்துக்கொண்டாலும், அந்தப் பாதை சுருங்கிவிட்டாலும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. இவர்களுக்குச் சிறுநீர் சொட்டுச் சொட்டாகப் போகும். சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாகவோ, கருப்பாகவோ மாறும்.
பெண்களுக்குரிய பிரச்சினைகள்
கர்ப்பப்பைக் கட்டிகள், சினைப்பைக் கட்டிகள், அடி இறங்கிய கருப்பை போன்றவை சிறுநீர்ப் பையை அழுத்தும்போது பெண்களுக்கு அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படுவதுண்டு. மேகவெட்டை நோய் வந்த பெண்களுக்குச் சிறுநீர்க் கடுப்பு நிறைய தொல்லை தரும்.
மாத்திரை மருந்துகள் கவனம்!
வலி நிவாரணி மாத்திரைகள், சல்பா மருந்துகள், ஆக்சாலிக் அமிலம் கலந்த மருந்துகள், வீரியம் மிகுந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவை நீர்க்கடுப்பை ஏற்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட வழி அமைக்கும். அதன் விளைவாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு நீர்க்கடுப்பும் அடிக்கடி தொல்லை தரும்.
பரிசோதனைகள் என்ன?
சிறுநீர்க் கடுப்புக்குச் சிறுநீரைப் பரிசோதித்தாலே காரணம் புரிந்துவிடும். இத்துடன் வயிற்றுப் பகுதியில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் முழுமையான காரணங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இதைக்கொண்டு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதையும் முடிவு செய்துவிடலாம். அடிப்படைக் காரணத்தைக் களையும் சிகிச்சைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான முன்னணியில் போட்டியிடுகின்றர் சகோதரர் ஸுஹைல் முகமட்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில்
ஐக்கிய சமாதான முன்னணியில் போட்டியிடுகின்ற
'ஐக்கிய மக்கள் காங்கிரஸின் (UPC) தலைவர்:-
M. SUHAIL MOHAMAD,
பொதுச் செயலாளர் 
KAMAAL ABDUL NAASAR (JP),
தேசிய அமைப்பாளர்
M.H.M KIYAS ஆகியோர்
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வெளியேருவதை காணலாம்.


ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்..

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
‘ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.
எவ்வளவு? எவர்களுக்காக?
‘ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம்பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்’
அறிவிப்பவர் : அலி இப்னு உமர்(ஸல்),
நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா.
”ஒரு ‘ஸாஉ’ உணவு, அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை, அல்லது ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம் அல்லது ஒரு ‘ஸாஉ’ தயிர் அல்லது ஒரு ‘ஸாஉ’ வெண்னை என்பவற்றை ஸகாதுல் ஃபித்ராவாக நாம் வழங்குபவராக இருந்தோம்’ என அபூ ஸயீதில் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).
‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும். இது அறபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும். சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ‘ஸாஉ’ என்பது 2.3 kg. ஐக் குறிக்கும் என்பர்.
இந்த அளவு உணவையோ, உணவுத் தானியத்தையோ வழங்கவேண்டும். பெருநாள் செலவு போக மீதமிருக்கும் அளவு பொருளாதாரம் உள்ள அனைவரும் இதை வழங்கவேண்டும். ஒருவர் தனது பொறுப்பிலுள்ள அனைவருக்காகவும் இதை வழங்கவேண்டும்.
உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களுமிருந்தால் தனது மூன்று பிள்ளைகள், தான், தனது மனைவி, பெற்றோர் இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ‘ஸாஉ’ உணவு வழங்க வேண்டும். எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும் விதியாகின்றது! சிறுவர்கள், வாய்ப்பற்ற முதியவர்கள் என்பவர்களுக்கும் விதியாகின் றது. அதை அவர்களது பொறுப்புதாரிகள் நிறை வேற்ற வேண்டும்.
எப்போது? எதற்காக!
‘நோன்பாளி வீண் விளையாட்டுக்கள், தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும்’ ‘ஸகாதுல் பித்ரை’ நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும். யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அபூ தாவூத், இப்னு மாஜா).
இந்த நபி வழி ‘ஸகாதுல் பித்ரா’வின் நோக்கம், அது வழங்கப்பட வேண்டிய கால எல்லை என்பவற்றை விபரிக்கின்றது.
நோன்பாளிக்கு நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்குப் பரிகாரம் என்பது முதல் காரண மாகும்.
நோன்பு கடமையான சிறுவர்களுக்காகவும் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு முதல் காரணம் பொருந்தாவிட்டாலும், பெருநாள் தினத்தில் ஏழை, எளியவர்கள் யாரும் உண்ண உணவு இன்றி இருக்கக் கூடாது, என்பது இரண்டாவது காரணமாகும். இது இவர்களுக்கும் பொருந்தும்.
இதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் வழங்கிவிட வேண்டும். இது வழங்கப்பட வேண்டிய நேரத்தின் இறுதிக் காலமாகும். பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்குபவராக இப்னு உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். (அபூதாவூத்).
மற்றுமொரு அறிவிப்பில், இது ஸஹாபாக்களின் நடைமுறையாக இருந்தது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது. ‘அதை பெற்றுக் கொள்பவர்களுக்கு நாம் வழங்குபவர்களாக இருந்தோம். நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதை வழங்கு பவர்களாக இருந்தார்கள்.’ (புகாரி)
எனவே, பெருநாளைக்கு ஓரிரு தினங்க ளுக்கு முன்னர் இருந்து இதை வழங்க ஆரம் பிக்கலாம்.
எங்கே? எவர்களுக்கு?
‘ஸகாதுல் பித்ரை’ அவரவர் வகிக்கும் பகுதிக்கே விநியோகிக்க வேண்டும். அதுவும் ஏழை எளியவர்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதை கூட்டாக சேகரித்து வழங்கியுள்ளார்கள். சிலர் ‘ஸகாதுல் பித்ரா’ என்ற பேரில் ‘பித்ரா’ கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு ‘பித்ரா’ வழங்குவது பொருத்தமல்ல. சொந்த ஊரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கி மீதமிருந்தால் வெளியூர் ஏழைகளுக்கு வழங்கலாம். அஃதின்றி வெளியூர்களிலிருந்து ‘பித்ரா’ கேட்டு வருபவர்களுக்கு ஒரு சுண்டு இரு சுண்டு அரிசி அல்லது சில்லறை வழங்குவது ‘பித்ரா’வில் அடங்குமா என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
எதை வழங்குவது?
‘ஸகாதுல் பித்ரா’வாக ஒரு ‘ஸாஉ’ உணவுக்கான பணத்தை வழங்க முடியுமா? எனற விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது.
பெரும்பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர். இது ஒரு இபாதத்தாக இருப்பதால் இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
பணத்தையும் ‘பித்ரா’வாக வழங்கலாம் எனக்கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக் கூறி இதை ஆமோதிக்கினறனர். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளார்.
இதில் முதல் கருத்தே மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கின்றது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பலின் மகன் ‘எனது தந்தை ‘ஸகாதுல் பித்ரா’வுக்குப் பகரமாக அதன் அளவுக்குப் பணம் வழங்கப்படுவதை வெறுப்பவராக இருந்தார். பணம் வழங்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாமோ என நான் அஞ்சுகின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
(அல் மஸாயினுல் இமாம் அஹ்மத்., பக். 171 அல்மஸஅலா., 647)
இமாம் இப்னு குதாமா அவர்களும் இது அங்கீகரிக்கப்படாது ‘தவி முஃனி’யில் குறிப்பிடுகின்றார்.
இமாம் ஷவ்கானி அவர்களும் குறிப்பிட்ட பொருளிலிருந்து தான் ‘ஸகாதுல் ஃபித்ர்’ வழங்கப்பட வேண்டும். குறித்த பொருள் இல்லாத போது, அல்லது ஏதேனும் ஒரு நிர்ப்பந்தத்தால் அன்றி அதன் பெறுமதிக்குப் பணம் வழங்க முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்கள். குறித்த ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து ‘ஸாஉ’ என்ற அளவு தான் முக்கியம். அதன் பெறுமதி கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பது புலப்படுகின்றது என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ‘ஷரஹ் ஸஹீஹ் அல் முஸ்லிமில் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் ‘அல் மஜ்முஉ’விலும் இக்கருத்தை விளக்கியுள்ளார்கள்.
இமாம் அபூ ஹனீபா அவர்கள்தான் பணத்தை வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள். ஏனைய அறிஞர்கள் உணவுத் தானியங்களை வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் பணத்தை வழங்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
ஒரு ஆட்டை அல்லது மாட்டை ஸகாத் கொடுக்கவேண்டும் எனும் போது, அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்பது போல், இதுவும் கூடாது என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறே, இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறித்த பொருட்களின் அளவு ஒரே அளவாக இருந்தாலும் பணமாக கணக்கிடும் போது, அதன் அளவுகள் மாறுபடும். எனவே,
(1) ‘ஸகாத்துல் ஃபித்ர்’ இபாதத்தாக இருப்பதால் அதைக் குறிப்பிட்ட விதத்திலேயே செய்ய வேண்டும்.
(2) ஏழைகளின் நலன் நாடியே பணத்தை வழங்கலாம் என்று கூறப்படுகின்றது. தெளிவான ஆதாரம் இருக்கும் போது, ‘இஜ்திஹாத்’ செய்வதற்கு இடம் இல்லை.
(3) நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏராளமான ஏழைகள் இருந்தபோதும், அவர்கள் உணவுத் தானியங்களையே வழங்கினர். பணத்தை வழங்கவில்லை. எனவே, இது பின்னால் வந்ததொரு கருத்தாகவும், நடைமுறையாகவும் திகழ்கின்றது.
(4) நபி(ஸல்) அவர்களும், கலீபாக்களும் உணவு வழங்கிய நடைமுறைக்கு இது முரண்பட்டதாகும். நிர்ப்பந்த நிலைகளில் அனுமதிக்கப்பட்ட பணம் வழங்கலாம் என்ற கருத்து இன்று ‘பித்ரா’ வாகப் பணம் தான் வழங்கப்படவேண்டும் என்ற அளவுக்கு, சுன்னாவை மிஞ்சி வளர்ந்துவிட்டது.
எனவே ‘பித்ரா’வை உணவாகவே வழங்க வேண்டும். என்றாலும் நிர்ப்பந்தமான, தவிர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டும் மாற்று வழிகளைக் கைக்கொள்ளலாம்.
ஒரு ஆலோசனை:
ஏழைகளுக்கு உணவை வழங்குவது அவர்களுக்குப் போதியதாக இருக்காது என்று கருதுபவர்கள் ‘பித்ரா’வாக குறித்த அளவுக்கு உணவை வழங்கி விட்டு மேலதிக தர்மமாக வேண்டுமானால் பணத்தையோ, வேறு பொருட்களையோ வழங்கலாம். பணத்தை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்காமல், உணவை ‘ஸகாதுல் பித்ரா’வாக ஆக்கி, பணத்தை மேலதிக தர்ம மாக ‘ஸதகா’வைச் செய்யலாம். இது அவசியம் என்பதற்காகக் கூறப்படவில்லை. அதிக வசதியுள்ளவர்கள், ஏழைகள் மீது அனுதாபம் கொண் டவர்கள் அதற்காக மார்க்க நிலைப்பாட்டில் மாற்று முடிவு எடுக்காது, செயல்படுவதற்காகவே இவ்வாலோசனையாகும்.
-அல்லாஹ்வே மிக அறிந்தவன்-
நன்றி: உண்மை உதயம் மாதஇதழ் 2007

மஹிந்தவுக்கு சவால் விடுக்கும் வகையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்ட பின்னர் அதிருப்தியடைந்த ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கிய தரப்புக்கள், கூட்டமைப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளன.
இதனையடுத்து அந்த தரப்புக்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, துமிந்த திஸாநாயக்க, அர்ஜூன ரணதுங்க ஆகியோர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து தமது முடிவை அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த அணியினர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் முன்னணி ஒன்றை அமைப்பதற்கான பேச்சுக்களில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரின் கீழ் புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கப்பட்டு அதுவே மஹிந்த ராஜபக்சவின் தரப்புக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும்.
இதன்கீழ் சம்பிக்க ரணவக்க மற்றும் ஹிருனிக்கா பிரேமசந்திர ஆகியோர் கொழும்பில் போட்டியிடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவுக்கு எதிரான நல்லாட்சி ஐக்கிய தேசிய முன்னணியில் மேலும் பலர் இணைவு
மஹிந்தவுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து மேலும் பலர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணையவுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சியின் கீழ் பொதுத்தேர்தலில் இவர்கள் போட்டியிடவுள்ளனர்.
ஏற்கனவே இந்த முன்னணியில் அர்ஜூன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க, ராஜித சேனாரத்ன, ஹிருனிக்கா, ரத்தன தேரர், ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
தற்போது அது விரிவாக்கப்பட்டு எஸ். பி.திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, பியசேன கமகே, சரத் அமனுகம, ரெஜினோல்ட் குரே, சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே, நியூமல் பெரேரா ஆகியோர் புதிய அணியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இவர்கள் புதிய முன்னணியில் இணைந்து கொள்வதற்கு முன்னர், ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வேட்புமனுவில் கைச்சாத்திட்டமையை திரும்பப் பெற்றுக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இந்த வாரம் லண்டனில் இருந்து நாடு திரும்பியவுடன், விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தின் கீழ் பௌத்த பிக்குகள் போட்டியிட முடியாது என்று யாப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அத்துரலியே ரத்தனவின் விடயம் தொடர்பில் தீர்வுக்காணப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை இஸ்லாம் ஆளும் .... ! இன்ஷாஅல்லாஹ்....!!

உலகில் முதலாளித்துவத்திற்கு சவால் விடும் ஒரே சித்தாந்தம் இஸ்லாமாகும். கம்யூனிஸம் கூட இன்று திரை மறைவு முதலாளித்துவ அச்சினிலேயே நகர்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களின் பொருளாதாரங்களை கட்டுப்படுத்தும் யூதர்களும் இலுமினாட்டிகளும் பயப்படுவது வட்டிக்கு எதிரான இஸ்லாத்தின் சமூக சித்தாந்தகளிற்கும் அதன் பொருளாதார முறைமைக்குமாகும். ஆனால் சிகப்பு தேசம் எதற்காக இஸ்லாத்தை தன் நாட்டில் ஒடுக்க முனைகிறது..?   

தனது இராணுவ பூட்சுகளை பாதுகாப்பு என்ற பெயரில் ஷின்-ஷியாங்கின் மூலை முடுக்கெல்லாம் பதிக்க முனைகிறது..?. கன்பூஷியஸ் பாதையில் சில ஒழுக்க நெறிகளே உள்ளன. அடுத்தவரை துன்புறுத்தாமை, பொருமை காத்தல், மூத்தோரை மதித்தல், பலவீனர்களுடன் அன்பாக இருத்தல், தியானத்தில் மன நிம்மதியை தேடுதல் என அதன் அறவழிகள் தொடர்கின்றன. குற்றவியல் பற்றியோ, சிவில் பிரச்சனைகள் பற்றியோ, அரசியல் கொள்கைகள் பற்றியோ எதுவும் சொல்லவில்லை. ஒவ்வொரு சீனானும் இதற்கு பகரமாக மனசாட்சியையே தங்கள் வழிகாட்டியாக கொள்ள வேண்டும். இங்கே தான் சீன அரசிற்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது.    

எதுவுமே இல்லாத சிந்தாந்த குளருபடிகள் உள்ள சீனமக்கள் பொருளாதார தேசமாக உலகை மிகைக்க முற்பட்ட போது அவர்களின் ஆன்மீகம், லொகீகம் இரண்டையும் பலன்ஸ் பண்ணும் நியூட்ரல் ரிலிஜன் இல்லாததன் குறையை நிறையவே உணர ஆரம்பித்தனர். ஷின்-ஷியாங்கின் இஸ்லாம் அவர்களை ஆகர்ஷிக்க முனைந்தது. ஆன்மீக தேடலில் ஆரம்பித்த அவர்களது மதத்திற்கான பயணம் இஸ்லாமிய அரசியல் கொள்கை வரை சென்றது. இங்கு தான் பிரச்சனையின் மையப்புள்ளி ஆரம்பமாகிறது.   


அபூஜஹலின் மூளை இயல்பாகவே உணர்ந்து கொண்ட அந்த எச்சரிக்கையின் ஓசையை சீன உளவுப்பிரிவு கண்டறிய நிறைய வருடங்கள் பிடித்துள்ளன. மக்கள் குடியரசு, மக்கள் இராணுவம், மக்கள் பாராளுமன்றம், மக்கள் நீதிமன்றம், மக்கள் சுப்ரீம் கவுன்ஸில் என்று மாவோ சேதுங் ஏமாற்றிய அதிகார அரசியல் இஸ்லாத்தின் அரசியல் கொள்கை சீனாவில் எங்கேயும் எப்போதும் பரவக்கூடாது என்பதில் குறியாக செயற்படுகிறது.   

 ஷின்-ஷியாங்கில் அது குவித்துள்ள செஞ்சேனை இராணுவ உளவாளிகளில் பாதிப் பேர் கூட சீனாவின் ஏணைய மாகாணங்களில் செயற்படவில்லை. இஸ்லாம் சொல்லும் அதிகாரத்தின் மையப்புள்ளியை அவர்கள் உணர்ந்த கொண்டதன் விளைவு இது. நோன்பில் கூட முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகைக்கு ஒன்று கூடுவது அவர்களிற்கு அவர்களின் சகோதர பலம் பற்றிய பயத்தை உருவாக்கியுள்ளது. அதனால் தான் ஏராளம் தாராளமான தடைச்சட்டங்கள்.   

முஸ்லிம்களின் சின்ன சின்ன உரிமைகளிற்கான போராட்டங்களை கூட தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் இரும்புக் கரம் கொண்ட நசுக்குகிறது. செயற்பாட்டாளர்களை இராஜ துரோகிகள், உளவாளிகள் என்ற பெயரில் அழைத்து வந்து பொதுமக்கள் முன் மண்டியிட வைத்து தலையின் பிடரியில் சுட்டு அரச கட்டளைகளை நிறைவேற்றுகிறது.    

ஆனால் அதையும் தாண்டி இன்றை சேர்வேயின் புள்ளிவிபரங்கள் என்ன சொல்கிறது தெரியுமா!. 30 வயதிற்கு குறைந்த சீனர்களில் 22.4% மானவர்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்பட்டு முஸ்லிம்களாக மாறி வருகின்றனர் என்பதே. சீனாவில் முஸ்லிம் சிறுபான்மை இனக் குழுக்களாகவேயுள்ளனர். சீனப்பெண்களே இஸ்லாத்தை நேசித்து பெரிதும் மதம் மாறுகின்றனர். சீன அரசின் குடும்பகட்டுப்பாடுகளை புறந்தள்ளி அவர்கள் பல குழந்தைகளை பெறுகின்றனர். இவர்களிற்கு பிறப்பவை அனைத்தும் முஸ்லிம் குழந்தைகளாகவே பிறக்கின்றன.   


60 வயதினை கடந்தவர்கள் தான் மன அமைதி நாடி புத்த மதத்தையும் தாவோயிஸத்தையும் பின்பற்ற முனைகின்றனர். அதாவது உற்பத்தி திறன் குறைந்த வினையாக்க திறன் குறைந்த ஓய்வு பராயத்தினர் தான் அப்படிச் செல்கின்றனர். உழைக்கும் இளம் சீன இரத்தம் இஸ்லாத்தை நாடுகிறது. இது இறைவன் வகுத்த விதி. இது தான் அவர்களின் டெஸ்டினி. இதை எந்த சட்டம் கொண்டு செஞ்சீன அரசு நிறுத்தப் போகிறது. ஸைஃய்த் இப்னு அபீவக்காஸ் (ரலி) விதைத்த இஸ்லாம் அல்லவா அங்குள்ளது நம் தேசத்திற்கு இஸ்லாம் வந்தது போலல்லாமல்..........!!! 

நன்றி  by கைபர் தளம் .

பாரூக் அப்பா (போஸ்ட் மாஸ்டா்) அவா்கள் காலமானர்

கஹடோவிடாவைச்  சோ்ந்த  போஸ்ட் மாஸ்டர் என புணைப்பெயரல் அழைக்கப்படும் சகோதரர் பாரூக் அவர்கள்  இன்று (06.07.2015) காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் உம்முல் ஹைரா அவர்களின் அன்புக் கணவரும், பயாஸ் நானா, அஸாம், விலாயா, ரஸினா, ரிஹானா ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் முகியத்தீன்  ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار   

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

Florida நீதிமன்றில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம்.

அண்மையில் Florida வில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம் நடந்திருக்கின்றது.
ஒரே வகுப்பில் படித்த இருவர் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள் ஒருவர் நீதிபதியாக, மற்றவர் குற்றவாளியாக.
தீர்ப்பு வழங்குமுன் அங்கிருந்த பெண் நீதிபதி நீங்கள் Nautilus Middle என்ற கல்லூரியில் என்னோடு ஒன்றாகப் படித்த நண்பர்தானே என்று குற்றவாளியுடன் அறிமுகமாகின்றார்.
தனது பாடசாலை நண்பிதான் நீதிபதி என்று அறிந்து கொள்ளும் குற்றவாளி கண்ணீர்விட்டு அழுகிறார்.
பின்னர் அந்த பெண் நீதிபதி: உங்களை இப்படி சந்திக்கக் கிடைத்ததை எண்ணி நான் மிகவும் வருத்தமடைகிறேன்.
எமது கல்லூரியில் இருந்த சிறந்த Foot Ball வீரர் இவர். கல்லூரிக் காலத்தில் மிகத் திறமையான மாணவர் என்று அந்த குற்றவாளி நண்பரை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் நீதிபதி.
அதோடு உங்களது பாதையை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி தனது நண்பருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஒரு நல்ல நிலமைக்கு வந்ததும் ஒன்றாக இருந்த நண்பர்களை கண்டும் காணமல் இருப்பவர்களுக்கு மத்தியில் ஒரு நீதிபதியாக இருந்து கொண்டு ஒரு குற்றவாளியை தனது நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்த அந்த பெண் நீதிபதியின் பன்பு அழகானது.
வீடியோ பார்க்க  https://www.youtube.com/watch?v=5gBWlFGzGWs