கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பள்ளிவாசல்கள் சம்மேளனம் கஹடோவிட ஒகடபொள. (துண்டுப் பிரசுரம்)

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது பிரதேசத்தில் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்ற ஒழுக்கவீனங்கள்களாலும் கல்வியின் பின்னடைவாலும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பள்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

சமூக ஒழுக்கத்தை மேம்படுத்தி கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே நல்லதோர் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது திண்ணம்.இந்த அடிப்படையில் கஹடோவிட முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் மஸ்ஜிதுன்னூர் ஜும்ஆ மஸ்ஜித் ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் ஓகடபொல மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தை உருவாக்கியுள்ளோம் என்பதை ஊர் மக்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

இன்ஷா அல்லாஹ் எமது பிரதேசத்தின் முன்னேற்றம் கருதி பல்வேறு செயற்திட்டங்களை செயற்படுத்த எண்ணியுள்ளோம்.

இதன் ஆரம்பகட்டமாக பள்ளிவாசல் சம்மேளன அறிமுகவிழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

இடம்     :  அல் பத்ரியா ம.வி

காலம் :  08 08 2010

நேரம்:காலை 9.00 மணி கல்;விமான்கள் பொலிஸ் அதிகாரிகள் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்ற இவ்விழாவில் ஜமாஅத்தர்களாகிய ஆண்கள் பெண்கள் அனைவரும’

கலந்து பயன்பெற்று நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதி;ல் பங்கெடுக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

ஜஸாகுமுல்லாஹ்_ கைரா.

இஸ்லாமிய வதிவிடப்பயிற்சி நெறி

“ரமலானில் பூரண பயன்பெறுவோம்” என்ற கருப்பொருளில் இன்ஷா அல்லாஹ் இம்முறை ஆண்களுக்கான முழு நேர வதிவிட வசதிகளுடன் கூடிய இரு நாள் பயிற்சிநெறியை நடாத்த நத்வதுஸ்ஸபா திட்டமிட்டுள்ளது.
காலம் : 14, 15  / 08 / 2010
நேரம்    : காலை 8.00மணி

இடம்     : மஸ்ஜிதுத் தக்வா, எல்லலமுல்ல

ஏற்பாடு : நத்வதுஸ்ஸபா


நிபந்தனைகள்
  • ஆண்கள் மாத்திரம் பங்குபற்றலாம்
  • 9ஆம் தரத்திற்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் பங்குபற்றலாம்
  • பயிற்சி நெறியில் முழுமையாக பங்குபற்றல் அவசியம்

எமது இரண்டு நாள் பயிற்சி நெறியினுடாக மாணவர்களது ரமலான் நாட்களை நன்கு பயன்படுத்தவும் அவர்களது ஆன்மிக வாழ்வை புத்துயிரூட்டவும் உள்ளங்களில் ஈமானியப் பலத்தை ஏற்படுத்தவும் அவர்களது பல்வேறு ஆற்றல்களை வெளிக்கொணரவும் இங்கு வழிகாட்டப்படும்.இறுதி நாள் போட்டி நிகழ்சிகள் மூலம் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட தொகையினரே சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதால் தொலைபேசியினுடாகப்பதி;வுக்கு முந்திக்கொள்ளுங்கள்.

மேலதிக தகவல்களுக்கும் பதிவுகளுக்கும்:

                                  NADHVATHUS SAFA
THE YOUTH SOCIETY FOR CONVEYING ISLAM

 22, ELLALAMULLA, PASYALA.

 0716692229 / 0716645462 / 0771343694

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை- 20 ஆண்டுகள்

காத்தான் குடி பள்ளிவாசல்
காத்தான் குடி பள்ளிவாசல்
இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடி பள்ளிவாசலொன்றில் 20 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளினால் நடத்ப்பட்ட தாக்குதல் சம்பவமாம் இன்று நினைவு கூறப்பட்டுள்ளது.
1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜம்மா பள்ளிவாசலில் இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்டப்டிருந்தார்கள்
இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்களிடையே இன்னமும் ஒரு கருப்பு தினமாகவே கருதப்படுகின்ற இந் நாளை காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் வருடாந்தம் சுகதாக்கள் தினமாக நினைவு கூர்ந்து அனுஷ்டித்து வருகின்றார்கள்.
தாக்குதலில் பாதிப்புக்களை பள்ளிவாசல் சுவரில் காணக்கூடியதாக இருக்கிறது
துப்பாக்கி குண்டுகள் பள்ளிவாசலில் ஏற்படுத்திய தாக்கம்

சம்பவ தினம் இரவு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமையினால் ஜெனரேற்றர் வெளிச்சத்தில் தொழுகை நடந்ததாக சம்பவததை நினைவு படுத்திக் கூறும் 40 வயதான அப்துல் கரீம் மொகமது லாபீர்.
தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூட்டுடன் கைக்குண்டு தாக்குதலையும் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் முழங்காலிலும், இரண்டு கைகளிலும் தான் காயமடைந்ததாகவும் கூறுகின்றார்
விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக் காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்தபொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையேயான உறவின் ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது.
தாக்குதலில் தப்பிய அப்துல் கரீம் மொகமது லாபீர்
தாக்குதலில் தப்பிய அப்துல் கரீம் மொகமது லாபீர்
அன்று ஏற்பட்ட பாதிப்பு 20 வருடம் கடந்தும் இன்னமும் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்கின்றார் மட்டக்களப்பு பல்சமய சமாதான ஒன்றியத்தின் துணைச் செயலாளரான ஐ.எம்.இலியாஸ் மெளலவி
முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவங்கள் கவலைக்குரியது எனக் கூறும் மனித உரிமைகள் சட்டத்தரணியும், சமூக ஆய்வாளருமான பேரின்பம் பிரேம்நாத் அந்த வடு அவர்கள் மத்தியில் இன்னும் மாறவில்லை என்கின்றார்
தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான இன உறவை பழைய நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பு சமய மற்றும் அரசியல் தலைவர்களின் செயல்பாட்டிலேயே தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்
இந்த சம்பவங்கள் நடந்து 20 ஆண்டுகளாகியும், இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த பல்தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அப்படியான நெருக்கமான உறவுகளும் பரஸ்பர நம்பிக்கையும் இன்னும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டெங்கு ஒழிப்பில் அசிரத்தையாக நடந்த சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டிப் போட்டார் மேர்வின்!

 

 

பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த வாரம் முன்னெடுக்கத் தவறிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை இன்று மாமரம் ஒன்றில் கட்டிப் போட்டார்.

அவர் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுத்து ஊடகவியலாளர்களின் முன்னிலையிலேயே இந்த தண்டனையைப் பகிரங்கமாக வழங்கினார்.

களனிப் பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட இடங்களில் பொறுப்பான அதிகாரிகள் எவராவது டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஒழுங்கான முறையில் முன்னெடுக்கத் தவறினால் அவர்களை மரத்தில் கட்டிப் போடுவார் என்று பிரதி அமைச்சர் கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.

 

பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு இரு பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த இரு பெண்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டு விடும் என்று பிரதி அமைச்சர் எச்சரித்தார்.

கொஞ்ச நேரம் கழித்து அந்தச் சமுர்த்தி உத்தியோகத்தரை பிரதி அமைச்சர் அவிழ்த்து விட்டார். மகளுக்கு சுகவீனம் ஏற்பட்டிருந்தமையாலேயே கடந்த வாரம் இடம்பெற்றிருந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பங்குபற்ற முடியாமல் போய் விட்டது என்று அந்த சமுர்த்தி உத்தியோகத்தர் கூறினார்.

கஹட்டோவிடக் கிராமத்தின் சீர்திருத்தக் குழுவின் அங்குரார்ப்பண வைபவம்.

கஹட்டோவிடக் கிராமத்தில் பகிரங்கமாக நடைபெற்றுவரும் ஒழுக்க சீர்கேடுகளைத் தடுத்தல் சம்பந்தமான பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் ஊர் நலன்விரும்பிகளால் மேற்கொள்ளப்பட்டு ஒழுக்க சீர்கேடுகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட குழுவாக செயற்படுவதன் மூலமே சாத்;தியமாகும் என்ற  அடிப்படையில் ஒரு சீர்திருத்தக் குழுவை உருவாக்கல் சம்பந்தமான பல தகவல்களை சென்ற காலங்களில் எமது வாசகர்களுக்கு நாம் அறியத்தந்தோம்.
அல்ஹம்துலில்லாஹ், அவ்வாறான ஒரு குழு கஹட்டோவிட ஓகடபொள பள்ளிவாசல்களின் நிர்வாக உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு அதன் அங்குரார்ப்பண வைபவம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 08.08.2010 அன்று காலை 9.00மணிக்கு கஹட்டோவிட அல்பத்ரியா மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிகழ்வில் நிட்டம்புவ, வீரங்குல பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கமபஹா மாவட்ட நீதிபதி மக்கி அவர்களும் கம்பஹா மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் மொஹமட் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சமூக சீர்கேடுகளைத் தடுப்பதற்கான செயற்திட்டங்களையும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து செயற்படுத்துவது சம்பந்தமான விடயங்களை இந்நிகழ்வில் பேசப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ இக்குழுவின் செயற்பாடுகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! சிறந்த மாற்றத்தை எமது சமூகத்தில் ஏற்படுத்துவானாக!;

ஆப்கானில் ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான மக்கள் போராட்டம்

காபுலில் அமெரிக்க தூதுவராலய வாகனத் தொடரணி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் நான்கு ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமுற்ற பொது மக்கள் தூதுவராலய வாகனத்தை அடித்து நொறுக்கி, எரித்துள்ளனர். காபுல் நகரில் இருந்து விமான நிலையம் போகும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. நேரில் கண்ட சாட்சிகளின் படி விபத்து நடந்த பின்னர் அமெரிக்கர்கள் அங்கிருந்த ஆப்கானியரை நோக்கி சுட்டுள்ளனர். இதனால் விபத்தை பார்க்க வந்த மக்கள் ஆவேசமுற்று தூதுவராலய வாகனங்களை தாக்கியுள்ளனர். திடீரென ஏற்பட்ட கலவரத்தின் பொழுது அமெரிக்காவுக்கும், கர்சாயுக்கும் எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. சம்வம் நடந்த இடத்திற்கு வந்த அமெரிக்க படையினர் வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைத்துள்ளனர்.
Afghans riot after deadly accident

ஆப்கானிஸ்தானில் அந்நிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான மக்கள் போராட்டம் பெருகி வருகின்றது. இவை குறித்து ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. ஊடகவியலாளருக்கு கொடுக்கப்படும் பண முடிப்புகள், இது போன்ற செய்திகள் வெளியுலகத்தை அடைவதை தடுக்கின்றது. கடந்த வாரம் ஹெல்மன்ட் மாகாணத்தில் ஆக்கிரமிப்பு படைகளால் கொல்லப்பட்ட 65 வயது முதியவரின் சடலத்தை ஏந்திய மக்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர். அந்த முதியவர் நேட்டோ படையினரால் கொல்லப்பட்டதாகவும், உடனடி விசாரணை அவசியம் என்றும், அன்னியப் படைகள் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஹெல்மன்ட் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், சில வாரங்களுக்கு முன்னர் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தாலிபானுக்கும், இராணுவத்திற்கும் இடையில் நடந்த சண்டையில் இருந்து தப்பிக்க ஒளிந்து கொண்ட பெண்களும், குழந்தைகளுமே பலியாகியுள்ளனர். நேட்டோ படையினர் ஏவிய மோட்டார் ஷெல்களே அவர்களது உயிரைக் குடித்துள்ளது. ஊர் மக்கள், படுகொலை நடந்த பின்னர் கண்டனம் தெரிவிப்பதற்காக, அண்மையில் இருந்த நேட்டோ படை முகாமை நோக்கி சென்றனர். "எம்மோடு வந்து பலியான மக்களைப் பாருங்கள். ஷெல் வந்த திசையை பாருங்கள். நீங்கள் தாலிபான்களை சுட்டீர்களா? அல்லது மக்களை நோக்கி சுட்டீர்களா? நீங்கள் எங்களை பாதுகாக்க வந்தீர்களா? அல்லது கொல்ல வந்தீர்களா?" ஊர் மக்கள் நியாயம் கேட்ட பொழுது, படையினரிடம் இருந்து துப்பாக்கி குண்டுகளே பதிலாக வந்தன.

இந்த செய்தியை வெளியிட்டது "Free Afghanistan" வானொலி. முன்பு சோஷலிச நாடுகளுக்கு எதிராக Radio Free Europe என்ற வானொலி இயங்கி வந்தது. அதே பாணியில் அமெரிக்க ஆதரவு பிரச்சாரத்திற்காக, அமெரிக்க நிதியில் ஆரம்பிக்கப் பட்டதே அந்த வானொலி.

தொழச்சென்ற இளைஞன் பள்ளியிலிருந்து விரட்டப்பட்டார்.



நேற்றைய முன்தினம் மாலை அஸர்; தொழுகைக்காக கஹடோவிட நூர் பள்ளிக்கு வழமைபோன்று இளைஞர் ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது பள்ளியிலிருந்த ஒரு நபர் குறித்த இளைஞரை தொப்பியணிந்து தொழுமாறு பலவந்தப்படுத்தியிருக்கிறார். அத்தோடு மிக முறைகேடாகவும் நடந்துள்ளார். ஆத்திரமடைந்த அவ்விளைஞரும் தன்னால் முடிந்தளவு போராடியிருக்கிறார் இருந்தாலும் அந்த நபர் விட்டபாடில்லை. ஈற்றில் குறித்த அவ்விளைஞர் தொழமுடியாமல் பள்ளியிலிருந்து திருப்பியிருக்கிறார். செல்வந்தர்கள், சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் அப்பள்ளியில் தொப்பி அணியாமல் தொழும்போது பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நபர் திடீர்ரென்று ஏன் அவ்விளைஞனுடன் மாத்திரம் இவ்வாறு நடந்துகொண்டார் என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. தடுக்கவேண்டும் பள்ளிவாசல்கள் பொது இடங்களாகும் அவை அல்லஹ்வுக்குரியவையாகும். அவற்றில் யாருக்கும் உரிமைகொண்டாட முடியாது. எத்தனையோ இளைஞர்கள் தொழுகையே இல்லாமல் வீதியளந்து திரியும் போது இந்த இளைஞர் பள்ளிக்கு தொழ வந்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய செயற்பாடுகள் இளைஞர்கள் மனதி;ல் பலபாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அவை காலப்போக்கில் அவர்களை விரக்தி நிலைக்குக் கூட கொண்டு செல்லலாம். ஆகவே பள்ளிவாசல் நிருவாகங்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒருசில நபர்களின் அறிவீனமான செயல்கள் பள்ளிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன. ஆகவே மக்களுடன் அன்பாக பன்பாக நடந்துகொள்ளும் பக்குவம் வளர்ந்தோரிடம் கட்டாயம் இருக்கவேண்டும்.

இந்த தகவலை உங்களது தளத்தில் பிரசுரிப்பீர்கள் என்று எதிர்பார்கின்றோம்.
ஊர்வாசி

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் _

  வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக சமூக பாதுகாப்புச் சபை தெரிவித்தது.

சபையின் தலைவர் நிமல் அமரசிங்க இது தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில், "வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை பிரஜைகளது நலன் கருதி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது தொடர்பாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். அடுத்த வாரம் எமது குழு அங்கு செல்லவுள்ளது.

இவ் ஓய்வூதியத் திட்;டமானது 3 அம்சங்களை கொண்டமைந்தது. இதன் மூலம் 60 வயதின் பின் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக மாதாந்தம் வெளிநாட்டில் இருந்து வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளமுடியும்.

தற்போது 364 ஆயிரம் ஊழியர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் அனைத்து ஊழியர்களையும் இத்திட்டத்தில் உள்வாங்கவுள்ளோம். அத்துடன் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களையும் இதில் உள்வாங்கவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.