கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள் .

அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே!…ஒரு சில நிமிடங்களில் நமது கணினியையே காலி செய்துவிடும்…பாடுபட்டு உழைத்த தகவல்கள், முக்கிய ஆவணங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என அனைத்தும் பாதிபடைந்து தங்கள் கணினி முழுவதும் முடக்கப்படும்.


இதற்க்கு தீர்வுதான் என்ன….பொதுவாக வைரஸையை தங்கள் கணினியில் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்…ஏனெனில் அது வந்து பின்பு அதை கட்டுப்படுத்துவதும், நீக்குவதும் மிக மிக கடினம். இவற்றை தீர்ப்பதற்கான இலகுவான பத்து வழிகள்.


01. தங்கள் கணினியில் தாங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய ஒன்று ஓர் சிறந்த வைரஸ் தொகுப்பு மென்பொருளை நிறுவ வேண்டும். ஆன்டிவைரஸை நிறுவிட்டால் போதுமா! கணினியை வாரத்திற்கு ஒரு முறையாவது முழு வைரஸ் ஸ்கேன் செய்திட வேண்டும்.

02. தங்களுக்கு வரும் இ-மெயில் ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்ய மறந்து விடாதிர்கள். தாங்கள் கணினிலியே இ-மெயில் மென்பொருள்களை பயன்படுத்தினால் கண்டிபாக ஸ்கேன் செய்ய வேண்டும். அதே மாறி தங்களுக்கு வரும் மெயில்களின் இணைந்து வரும் பைல்களை(ATTACHMENT FILES) கையாளுவதில் அதிக கவனம் தேவை.
03. தங்கள் கணினியில் விண்டோஸ் தரும் FIREWALL யை தவிர்த்து வேறு சில சிறந்த FIREWALL பயன்படுத்துங்கள். ஏனெனில் விண்டோஸ் சிஸ்டம் தரும் FIREWALL அவ்வளவாக பாதுகாப்பு தருவதில்லை. உதரணமாக COMODO, ZONEALARAM போன்றவை.

04. தங்கள் ஆன்டிவைரஸ் தொகுப்பை அதாவது மென்பொருளை கணினி இயங்கும் (START UP) போதே தானாக இயங்க்கும் படி அமைத்திடவும். மேலும் பூட் ஸ்கேன் செயல்படும் படி அமைத்து விடவும்.

05. தங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும். தங்கள் நிறுவிய மென்பொருள் நிறுவிய தேதியின் நிலைமையும் பாதுகாப்பை மற்றும் பெற்றுயிருக்கும். அதன் பின்னர் பல சிறப்பு வசதிகளும், புதிய வைரஸ் தடுக்கும் திறனும் வெளியிடப்பட்டிருக்கும். தாங்கள் அப்கேர்ட் செய்வதில் புதிய திறனுடன் தங்கள் ஆண்டிவைரஸ் தொகுப்பு இயங்கும். இதனால் வைரஸ் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும்.

06. இணையத் தளங்களில் பார்வையிடும் போது தோன்றும் பாப் அப் விண்டோக்களை கிளிக் செய்வதில் கவனம் கொள்ளுங்கள். மேலும் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யவா என சில அறிவிப்புகளை தாங்கள் கண்டுயிருக்கலாம், இதில் தாங்கள் கிளிக் செய்தால் போதும் தங்கள் கணினி ஸ்கேன் செய்வதும் போன்றும் வைரஸ்யிருப்பதும் போன்றும் தோன்றும். ஆனால் இங்கு தான் சில விசமிகளின் செயல் உள்ளது. இவ்வாறு தாங்கள் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யும் போது தங்கள் கணினிக்கு அவர்கள் வைரஸ், மால்வேர், டிரோஜன் போன்றவற்றை அனுப்பிவிடுகின்றன. இவ்வாறனவற்றை பெரும்பாலும் தவிர்க்க பாருங்கள்.

07. இணையம் மூலம் பைல்களை பதிவிறக்கும் போது நம்பிக்கை வாய்ந்த தளங்களில் இருந்து மட்டும் பைல்களை பதிவிறக்கவும். அந்த தளமானது தங்கள் தளத்தில் வைரஸ் எதுவும் இல்லை என உறுதியளிப்பு தரப்பட்டுள்ளதா என அறியவும். மேலும் .EXE OR .COM போன்ற பைல்களை பதிவிறக்குவதில் அதிக கவனம் தேவை.

08. அதே மாறி இலவசமாக கிடைக்கிறது என சந்தையில் கிடைக்கும் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் சாதனங்களை பயன்படுத்துவதில் கவனம் அதிகம் தேவை…இலவசமாக சிடிகளில் பதிந்து தரப்படும் மென்பொருட்கள், தகவல்களில் தான் அதிக வைரஸ்கள் இடம் பெறுகின்றன.

09. தங்கள் நண்பர்கள் முலம் சிடிகளை பகிர்ந்துக் கொள்வதில் கவனம் தேவை. சிடிகளின் இருக்கும் வைரஸ்கள் அவ்வளவாக தங்களை அடையாளம் காட்டிவதில்லை..தங்கள் கணினியை ஒவ்வொரு முறையும் அணைக்கும் SHUTDOWN செய்யும் போதும்..சிடி டிரைகளில் இருந்து சிடிகளை நிக்கிவிடுங்கள். எனெனில் தாங்கள் கணினியை பூட் செய்யும் போது சிடிகளில் இருக்கும் வைரஸ் தங்கள் கணினியில் பாதிப்பை ஏற்ப்படுத்தகூடும். Save

10. REMOVEBLE DRIVEகளான பென்டிரைவ், மெமரிகார்டை போன்றவற்றை பயன்படுத்தும் முன்பு கவனம் தேவை..ஏனெனில் அதிகமாக வைரஸ்கள் REMOVEBLE DRIVEகள் போன்றவற்றால் தான் பரவுகின்றன. ஒவ்வொரு முறை தாங்கள் இந்த REMOVEBLE DRIVE பயன்படுத்தும் போதும் அதை ஸ்கேன் செய்யவும். REMOVEBLE DRIVE என தனி ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பயன்படுத்துங்கள்.

இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்பவர்களின் கவனத்திற்கு

இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கின்றோம்.

ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ.

1. இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணனியில் பதிந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஓன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.

2. எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.

3. தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்தாலும் கூட நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்த பின் செய்யவும்.

4. எந்த தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது, மொத்த தரவிறக்கம் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை தரவிறக்கம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அதிகம் பேர் பார்த்து இருந்தால், அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது. ஆகவே அந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

5. ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணனியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு, தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள். இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணனியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம்.
 
thanks computertoday

உலக நாடுகளில் இஸ்லாம்மை தடைசெய்த முதல் நாடாக மாறியுள்ளது !!!! (செய்தியின் உண்மைத்தன்மை)



வாஷிங்டனில் அங்கோலா நாட்டு தூதுவர் இந்த செய்தியை மறுத்துள்ளார். அவர்களும் இணையதளம் செய்திகள் மூலமாகதான் இதை கேள்விப்படுவதாக கூறியுள்ளனர். 

 சரியான அரசு ஆவணங்கள் இல்லாததால் பள்ளி ஒன்று இடிக்கப்பட்டதாகவும் அதை தொடர்ந்து இந்த செய்திகள் பரவியதாகவும் சொல்லப்படுகிறது.

இணையத்தை தேடும் போது, இதுவும் வதந்தி அடிப்படையில் வந்த செய்தியாகவே தோன்றுகின்றது. குறித்த நாட்டில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களுக்கும் 1% இற்கும் குறைவான முஸ்லிம் சமூகத்துக்கும் இடையில் முறுகல் நிலை உள்ளது என்பது உண்மையே. ஆனால் இப்படி ஒரு முடிவை தமது அரசாங்கம் எடுக்காது என்றும், தமக்கு அப்படி ஒன்றை அறிவிக்கவில்லை என்றும் அமெரிக்காவில் உள்ள அங்கோலா நாட்டு உயர்ஸ்தானிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அநேக சமூக வலைதளங்களில் இந்த செய்தியுடன் பரப்பப்பட்ட பள்ளி ஒன்று இடிந்து விழுவது 2008 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது என்று International Business Times கருத்து தெரிவித்துள்ளது.  ஒரு செய்தி "அங்கு சொல்கிறார்கள், இங்கு சொல்கிறார்கள்" என்று துவங்கினால், அது ஒரு வதந்திகான முழு தகைமைகளையும் கொண்டது எனலாம்.
 பொறுப்புள்ள முஸ்லிம் சமூகம் என்கிற வகையில் சில "பரபரப்பான" செய்திகளை ஆர்வத்துடன் பதிவிடுவதற்கு முன்பு, குறித்த செய்தி "பரபரப்பாக" பேசப்படுவதற்கான காரணம் என்ன என்பவற்றை ஆராய்ந்து பதிவிட்டால் "வதந்தி" பரப்பிய பாவத்திலிருந்து நாமும் விடுபடலாம்.
 IBL இன் முழு செய்தி இதோ:

http://www.ibtimes.com/angola-denies-it-banned-islam-destroyed-mosques-1484898

மேல் மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் முத்தையா முரளிதரன் ?



எதிர்வரும் மேல் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நட்சத்திரம் முத்தையா முரளிதரன் என்று தகவல்கள் குறிப்பிடுகிறது .
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதோடு அரசியல் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்த அர்ஜூன ரணதுங்க, சனத் ஜயசூரிய வரிசையில் முத்தையா முரளிதரனும் அரசியல் மைதானத்திற்கு வருவதாக ஜனாதிபதிக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.என்று அந்த தகவல்கள் குறிப்பிடுகிறது
 
முரளிதரனின் விருப்பம் கிடைத்துள்ள நிலையில் மகிழ்ச்சியடைந்துள்ள ஜனாதிபதி, நாட்டின் இரண்டாவது தமிழ் முதலமைச்சராக முத்தையா முரளிதரனுக்கு பட்டாபிஷேகம் செய்ய திட்டங்களை வகுத்து வருகிறார்.
தாம் தமிழ் மக்களையும் சரிநிகர் சமமாக நடத்துவதாக உலகத்திற்கு காட்ட ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
 
முத்தையா முரளிதரன் தென்னிந்திய பெண்ணொருவரையே மணந்திருப்பதால், தென்னிந்தியாவுடன் அவருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்புகளை ஜனாதிபதி தனக்கு சாதகமாக பயன்படுத்துவதை தடுக்க முடியாது.
 
எனினும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முத்தையா முரளிதரனுக்கு எதிரான எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் முரளியின் அரசியல் வருகையின் பின்னணியில் வேறு ஒரு கதை இருப்பதாக பேசப்படுகிறது.
 
வானொலி அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படுவதை தடுக்க துமிந்த சில்வா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது போல் முரளிதரனின் பின்னணியிலும் அப்படியான கதை இருப்பதாக தெரியவருகிறது.
 
அவரது சகோதரர் ஒருவர் சிறைச் செல்வதை தடுப்பதற்காவே முரளி அரசுடன் கைகோர்க்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு பெருந் தொகையான எத்தனேல் மதுசாரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முரளியின் சகோதரர்  ஒருவர் பெருந்தொகை பணத்தை அபராதமாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த வர்த்தகத்தை அவர் நீண்டகாலமாக செய்து வந்துள்ளதாகவும் இதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரிப் பணம் கிடைக்காமல் போயிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைகளை மூடிமறைக்க இருக்கும் ஒரே வழி அரசாங்கத்துடன் இணைவதுதான் என்று அறிந்திருக்கும் முரளிதரன், அரசியலில் இறங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

100 கோடி டொலர் அபராதத்தை 30 லாரிகளில் சில்லரைகளாக அனுப்பிய சம்சுங்



அமெரிக்க நிறுவனமான ஆப்பிளுக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர் அபராதம் விதித்தது அமெரிக்க நீதிமன்றம். கொரிய நிறுவனமான சாம்சுங், இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது.

கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சுங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர் (6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பானது.

சாம்சுங் நிறுவனத்தின் 26 வகையான ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் நிறுவன தொழில்நுட்பம் காப்பியடிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு 30 லாரிகள் வந்தன. அங்கிருந்த செக்யூரிட்டி, முகவரி மாறி வந்து விட்டதாக கூறியிருக்கிறார். தங்களிடம் இந்த முகவரிதான் கொடுக்கப்பட்டுள்ளதாக லாரி டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போதுதான் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வந்துள்ளது. சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ குவான் கியூன் பேசினார். உங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் அனுப்பியிருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார். அத்தனை லாரிகளிலும் சில்லரை காசுகள்.

5 சென்ட் நாணயங்கள். மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். ஆப்பிள் நிறுவனத்தின் குடோன்களில் 30 டிப்பர் லாரிகளில் இருந்தும் நாணயங்கள் கொட்டப்பட்டுள்ளன. 100 கோடி டொலருக்கும் சில்லரை. இதை எப்படி எண்ணுவது, எங்கே பாதுகாப்பாக வைப்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள். வங்கிகளில் இவ்வளவு சில்லரைகளை ஏற்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் இவற்றை நோட்டாக மாற்றுவதும் கடினம் என்பதால் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என முடிவான போது, அதை எப்படி கொடுப்பது என்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதனால் சில்லரைகளை அனுப்பி பழி வாங்கியுள்ளது சாம்சுங். எங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.

எல்லா ஸ்மார்ட்போனும் செவ்வக வடிவத்தில்தான் இருக்கும். செவ்வக வடிவத்துக்கு எல்லாம் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டு, யாரும் அந்த சைசில் போன் தயாரிக்கக் கூடாது என்கிறார்கள். எங்களிடமே காப்புரிமை விளையாட்டு விளையாடுகிறார்கள். எங்களுக்கும் விளையாடத் தெரியும் என பேட்டி கொடுத்திருக்கிறார் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ குன் ஹீ.
 

ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி

   
 
நவீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி உருவாகிறது. கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாகக் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுக்க மூளையாகச் செயல்பட்ட அதே Arnaud Van Doom தான்.
ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கும் முதல்கட்டப் பணிகளை முடித்துவிட்டார். இதுதான், இஸ்லாமிய அடிப்படையில் ஐரோப்பாவில் தொடங்கப்படும் முதலாவது அரசியல் கட்சியாகும். இக்கட்சி ஐரோப்பிய குடிமகனுக்கு இஸ்லாத்தின் மகிமையை எடுத்துச்சொல்லும் என்கிறார் Arnaud.
இஸ்லாத்தின் மீது தீவிர எதிர்ப்பு சிந்தனை கொண்ட ஹாலந்து சுதந்திரக் கட்சியின் (PW) முன்னாள் பிரதிநிதி ஆவார் இவர். இக்கட்சிதான், இஸ்லாத்திற்கெதிரான திரைப்படம் தயாரிக்கப் பின்னணியில் இருந்து எல்லா உதவிகளையும் செய்தது. இவர் நபி (ஸல்) அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் படித்து மனம் மாறினார்; மதமும் மாறினார்.
முஸ்லிமானபின், ஹாலந்தில் மட்டுமன்றி, முழு ஐரோப்பாவிலும் நபியவர்களின் மேன்மை குறித்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது முஸ்லிம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஐரோப்பா எங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தமது கட்சி சேவை செய்யும் என்று கூறுகின்ற Arnaud. முஸ்லிம்களைக் கணிசமான எண்ணிக்கையில் தம் கட்சியில் சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளார். முஸ்லிம்களுடன் நல்லுறவு பாராட்டிவரும் நண்பர்களையும் உறுப்பினர்களாக்க முயல்வேன் என்கிறார்.
 
 
வரும் நாட்கள், இஸ்லாத்தைப் பற்றிய புரிதலைச் செய்யும் பணியில் அதிகப் பங்களிப்பைக் காணும். அதற்காக ‘மனிதகுலத் தலைவர் முஹம்மத்’ எனும் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன். ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு கனடாவில் உள்ள தாவா சென்டர் உதவ முன்வந்துள்ளது.
அத்துடன் நபிகளாரின் வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் தொகுப்பு ஒன்றை உருவாக்கி, ஐந்து மொழிகளில் மொழிபெயர்த்து, ஐரோப்பிய நாடுகளில் அதிகமானோர் கையில் சேர்க்க எண்ணியுள்ளேன் –என்றார் அவர். ‘எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்’ என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா? சத்தியம் அப்படித்தான்! இது நபிகளார் காலத்திலிருந்தே தொடரும் உண்மை!
தகவல். கான் பாகவி.

சகோதரர் உவைஸ் ஹாஜியார் அவர்கள் காலமானார்.


கஹடோவிடாவைச் சேந்தவரும், உடுகொடையை வசிப்பிடமாககொண்டவருமான அல்ஹாஜ் உவைஸ் அவர்கள் இன்று  காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன் அன்னார். நொவ்ஸி நானா (திரீவீல்), நஸீர், நௌஷாத் ஆகியோரின் தந்தையும் ஆவார். அனனாரின் ஜனாஸா  இன்று (24.11.2013)  முஹியத்தீன்  ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار
 
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

முகத்தை முழு மையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு தற்காலிக அனுமதி


முகத்தை முழு மையாக மறைக் கும் வகையில் தலைக்கவசம் (ஹெல்மட்) அணிவ தற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதிதாக நடைமுறைப்படுத்திய சட்டத்தை

அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வரவு-செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் சமர்ப்பிப்பு: ஒரே பார்வையில் வரவு-செலவு திட்ட நிவாரணமும் சலுகையும்



இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தனது 68 ஆவது வயதில் நாடாளுமன்றத்தில்  சமர்ப்பித்தார். அதில் உள்ள முக்கிய விடயங்கலாவது:

அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது.
மோட்டார் வாகன திணைக்களம் மற்றும் நில பதிவுமுறைகள் திறைச்சேரியின் கீழ் கொண்டுவரப்படும். இதனால் வரியை இணையம் மூலமாக செலுத்தலாம்

நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு காணி விற்க முடியாது. அப்படி விற்றால் இவ்வருடம் தொடக்கம் வரி அறவீட்டின் கீழ் அது இடம்பெறும்
பெரும்போகத்திலும் சிறுபாகத்திலும் பசளைக்கு 350 ரூபா வழங்கப்படும். நீர்பாசன முறைமாக்க 1700 மில்லியன் வழங்கப்படும்.

அரச வியாபாரங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது. அரசாங்க வியாபார நிறுவனங்கள் 54இல் 48 லாபத்தில் இங்குகின்றது
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

பால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டள்ளது. அதனை மேம்படுத்துவதற்கு நாட்டுக்கு 20 ஆயிரம் பால் மாடுகள் இறக்குமதி செய்யப்படும். அத்துடன் மிருக வைத்தியருக்கு 7500 ரூபா கொடுப்பனவு
இரு மின்உற்பத்தி நிலைய பணிகள் நிறைவு பெற்றதும் 600MW மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படும்

பின்தங்கிய கிராமங்களில் 1000 பாலங்கள் அடுத்தவருடம் நிர்மாணிக்கப்படும். கமநெகுமவை மேம்படுத்துவதற்கும் ஏனைய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கும்  4500 ரூபா ஒதுக்கப்படும்
தொலைத்தொடர்பு வரி 25% ஆக இருக்கிறது அதில் மாற்றம் ஏற்படுத்தப்படாது

1557 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தேசத்தை கட்டியெழுப்பும் வரி 2% அதிகரிக்கப்பட்டுள்ளது

இபோச 1000 மில்லியன் ரூபா செலவில் 2,000 பஸ்கள் வழங்கப்படும்
விவசாய ஓய்வூதிய திட்டத்தை 2014 ஜனவரி தொடக்கம் செயற்படுத்துமாறு யோசனை முன்வைக்கிறேன். 63 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 1250 ரூபா வீதம் விவசாய ஓய்வூதியம் வழங்கப்படும். அதற்கு 1000 மில்லியன் அரசாங்கம் ஆரம்ப நிவாரண நிதியாக வழங்கும் ஜனாதிபதி

வடக்கு மற்றும் தெற்கில் குடிநீர், மின்சார திட்டங்களை செயற்படுத்த 1400 மில்லியன் ஒதுக்கீடு
சிறு தேயிலை செய்கை தொழிலை ஊக்குவிக்க வருடாந்தம் ஒரு ஏக்கருக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்கப்படும். தேசிய தெங்கு தொழிலை வலுப்படுத்த எண்ணெய் இறக்குமதி மட்டுப்படுத்தப்படும். தேயிலை, இறப்பர், தேங்கு, கருவா, மிளகு ஏற்றுமதி வலுப்படுத்தப்படும்.

வெண்ணெய், தயிருக்கு வரி: வெண்ணெய் மற்றும் தயிர் இறக்குமதிக்கு வரி விதிக்கப்படும்
கர்ப்பிணி மற்றும் தாய்மார்களின் போசனை அதிகரிக்கப்பட வேண்டும்

திவிநெகும திட்டத்தில் 125,000 பண்ணைகள்: திவிநெகும திட்டத்தின் கீழ் 125,000 பண்ணைகள் அமைத்து ஒவ்வொரு பண்ணை உரிமையாளர்களுக்கும் மாதாந்தம் 10,000 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படும்
தளபாடங்கள் போக்குவரத்து திட்டத்தை ரத்து செய்ய அனுமதி . முடிந்தளவு உள்நாட்டு உற்பத்தி மரத்தளபாடங்களை பயன்படுத்த விழிப்புணர்வு வழங்கப்படும்

68 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தொழில் முயற்சி உதவி: 68 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் தொழில் முயற்சிக்கு வட்டி இல்லாத கடன் மற்றும் சலுகைகள் வழங்கப்படும். 250,000 ரூபாவிற்கு மேல் இவர்களுக்கு கடன் வழங்கப்படும்
புற்றுநோயாளர்களின் 3 வருட வரிசை 6 மாதமாக குறைக்கப்படும்: கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் உள்ள பிரதான வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் நெரிசலை குறைக்க முடியும். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் புற்றுநோயாளி சிகிச்சைப் பெற 3 வருடங்கள் வரிசையில் நிற்க வேண்டும். அதனை 6 மாதங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வைத்தியசாலை ஊழியர்களுக்கான சீருடை கொடுப்பனவு 500 ரூபாவில் இருந்து 1500 ரூபாவிற்கு அதிகரிக்கப்படும்
இலங்கையின் இரண்டு பெரிய சிறுவர் வைத்தியசாலைகள் ஆய்வு மத்திய நிலையமாக விரைவில் மாற்றப்படும்
கலைஞர்களுக்கு 5 ஓய்வு விடுதி: கலைஞர்களுக்கு சுதந்திரமாக பணியை தொடர ஐந்து ஓய்வு விடுதிகளை அமைக்க தீர்மானித்துள்ளோம். அதற்கான காணியும் ஒதுக்கப்படும்.

பிரிவெனா ஆசிரியர்களுக்கு சம சலுகை: பிரிவெனா கல்வி நவீனமயப்படுத்தப்பட்டு அனைத்து பிரிவெனா ஆசிரியர்களும் ஏனைய ஆசிரியர்கள் பெறும் சலுகைகளை பெறுவர்
பல்கலை மாணவர் விடுதி பிரச்சினைக்கு தீர்வு: பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 15000 பில்லியன் ஒதுக்கீட்டில் புதிய விடுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் விடுதி பிரச்சினை தீர்க்கப்படும்.

விரிவுரையாளர்களுக்கு 5% கல்விக் கொடுப்பனவு: பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கல்விக் கொடுப்பனவு 5% அதிகரித்து வழங்கப்படும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
தகவல் தொழிநுட்ப வளர்ச்சிக்கு 1000 மில்லியன்: நாட்டின் தகவல் தொழிநுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள ஹம்பாந்தோட்ட தகவல் வலயம் அமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். நெனசல மத்திய நிலைய திட்டத்தை விரிவுபடுத்தி இணைய வசதிக்கு 1000 பில்லியன் ஒதுக்கப்பட்டும்.

கடல் பல்கலைக்கழகம் உருவாகும்: கடற்படை மற்றும் கடல் பல்கலைக்கழகம் நிறுவப்படும்
வீட்டு வசதிக்கு சலுகை கடன்: நகர்புற தொழிலாளர்களின் வீட்டு வசதிக்கு சலுகைக்கடன்

கொழும்புக்கு இணையாக பல நகரங்கள்: கொழும்புக்கு இணையாக கண்டி, காலி, அநுராதபுரம், யாழ்ப்பாணம், இரத்தினபுரி, திருகோணமலை நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படும்
சட்டத்திற்கு ஐந்தாண்டு திட்டம்: சட்ட மற்றும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்த ஐந்து ஆண்டு திட்டம்.

இலங்கையில் சர்வதேச நடுவர் மையம்: இலங்கையில் சர்வதேச நடுவர் மையம் அமைத்து அபிவிருத்தி செய்யப்படும்
50 ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்த வணிகங்களுக்கு மாகாண சபை வரி இல்லை.

அரச ஊழியர்களுக்கு 1200 ரூபா வாழ்வாதார கொடுப்பனவு: அரச ஊழியர்களின் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு 2014 ஜனவரி தொடக்கம் 1200 ரூபா அதிகரிக்கப்படும்
தனியார் துறை ஊழியர்களுக்கும் இவ்வாறு அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். தேசிய சம்பள திட்டமும் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளுக்கு 8% கொடுப்பனவு: நீதிபதிகளுக்கான தனிப்பட்ட கொடுப்பனவு 8% அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு: தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட போதும் அதன் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் தொடர்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்ல அனைவரும் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

7.5 வீத பொருளாதார வளர்ச்சி: அடுத்த மூன்று வருடங்களில் ஆண்டுக்கு 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை இலங்கை அடையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
காத்தான்குடி இன்போ