கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

துருக்கியில் இஸ்ரேலிய தூதரகம் தீக்கிரை (படங்கள்)

துருக்கியின் இஸ்தான்பூலிலுள்ள இஸ்ரேலிய கொன்ஸல் தூதரகம் தற்போது தீக்கிரையாகி எரிந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன. காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களைக் கண்டித்து துருக்கியர்கள் இஸ்ரேல் தூதரகத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் ஒரு வாரகாலத்துக்கும் மேலாக காஸா மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 200 க்கும் மேற்பட்ட காஸா சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை வான்வழித்தாக்குதல்களை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் இன்னு முதல் தரைவழித் தாக்குதல்களையும் தொடங்கியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.


10458625_678888148860896_6735530652953492562_n


10553612_678872815529096_311643486722899725_n

இஸ்ரேலியத் தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன் மீதான இஸ்ரேலியத் தாக்குதலைக் கண்டித்து இன்று கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
03 copy
 பாலஸ்தீன நட்புறவுப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று பிற்பகல் கொழும்பு தேவடகஹா பள்ளிவாசலின் முன்னால் ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமானது.
 இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கட்சி பேதம் பாராது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பெரும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 இதன்போது பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காஸா மீதான தாக்குதலுக்கு உதவி வழங்கும் நாடுகளுக்கும் தமது கண்டனங்களை தெரிவித்தனர்.
 காஸா மீது கடந்த 11 நாட்களாக தொடர் வான் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் நேற்று முதல் தரைமார்க்கமான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இத்தாக்குதலில் இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 39 சிறுவர்களும் அடங்குகின்றனர். சுமார் 1900 இற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 இதேவேளை குறித்த தாக்குதல்களில் இஸ்ரேலின் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். 
dailyceylon

கஹட்டோவிட இமாம் சாபிஈ நிலையத்தில் உலா் உணவு விநியோகம்.




கஹட்டோவிடாவில் அமைந்திருக்கம் கல்விக்கும் ஆய்வுக்குமான இமாம் சாபிஈ நிலையத்தில் இன்று 16.07.2014 ஆம் திகதி உலர் உணவு விநியோகம் நடைபெற்றது. சுமார் 200 போ்களுக்கு வழங்கப்பட்ட இவ்வுலருணவு விநியோகத்தில் சிங்கள சகோதரர்கள் சிலரும் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வைபவத்தில் அத்தனகல்ல பிரதேச சபையின் தலைவரும், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் புளத்சிங்கள ஆகியோரும் கலந்து கொண்டனா். 4000 ரூபாய்கள் பெறுமதியான உணவுப் பொதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தர்ஹாநகர், பேருவளையில் இனவெறியாட்டம் நடந்து ஒரு மாதம் - சூத்திரதாரி சுதந்திரமாக நடமாடுகிறான்.

சுதந்திரம் பெற்ற ஜனநாயகத் தேசமொன்றில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியம். எந்தவொரு நபரினாலோ அல்லது ஒரு குழுவினாலோ ஒரு தனிநபரது அல்லது ஓர் இனத்தினது உரிமைகள் பறிக்கப்படுகின்ற, மிதிக்கப்படுகின்றபோது, அவ்வுரிமைகளுக்கு பங்கம் ஏற்படுகின்றபோது குறிப்பிட்ட தனிநபருக்கெதிராக அல்லது அந்தக் குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்ட ஆட்சி இடம்பெறும் ஜனநாயகத் தேசத்தினை ஆளும் ஆட்சியாளர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

அவ்வாறு குற்றம் புரிவோர், குற்றம்; செயல் இடம்பெறுவதற்கு தூண்டுவோருக்கு எதிராகச் சட்டம் அதன் கடமையை சரியாக நிலைநிறுத்தும்போதுதான் அத்தேசத்தில் ஜனநாயகம் மலரும்.

ஆக, மனித உரிமைகளை மதிக்கின்ற, ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கின்ற பல்லின சமூகம் வாழும் ஒரு சுதந்திரத் தேசத்தில் ஓர் இனம் மற்றுமொரு இனத்தினால் வஞ்சிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டியது அந்த தேசத்தின் அரசையே சாரும் என்பது ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளாகும்.

இலங்கையும் பல்லின சமூகங்கள் வாழும் ஒரு சுதந்திரத் தேசமாகும். இத்தேசத்தில் வாழும் சகல இனங்களும் தங்களுக்கான சுதந்திரத்துடன் ஏனைய சமூகங்களின் சுதந்திரங்களை மீறாது தமக்குரிய உரிமைகளோடு வாழ்வதற்கு உரித்துடையவை.

தேசிய இனத்துவமும் உரிமையும்.
உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் தனித்துவத்துடன்தான் பிறக்கின்றன. ஒரு குழுமத்தில், ஒரு சமூகத்தில் அல்லது ஓர் இனம் அல்லது ஒரு சமூகம் அவரவருக்குரிய தனித்துவப் பண்புகளுடன் காணப்படுவது இயற்கை. ஒருவரின் தனித்துவத்தை மற்றுமொருவர் கைவிடக்கோரவோ அல்லது அவற்றை இல்லாதொழிக்கவோ முடியாது. இது ஜனநாயக மரபுமல்ல.

இலங்கை என்பது ஒரு தேசம். அதில் வாழும் எல்லோரும் இலங்கையர் என்பதும் அவர்களுக்கு சம உரிமை உண்டென்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதர்சனங்களாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் என இத்தேசத்தில் வாழும் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அந்தந்த இனத்தை அடையாளப்படுத்தக்கூடிய கலை, கலாசார, பண்பாட்டு மத விவகாரம் என பல விடயங்களில் தனித்துவம் பேணப்படுகிறது. முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காகவோ அல்லது சிங்கள மொழி பேசுகிறார்கள் என்பதற்காகவோ ஒரு தேசிய இனம் என்ற தனித்துவத்தை இழந்து வாழ முடியாது. அவ்வாறுதான், தமிழர்கள் சிங்கள மொழி அல்லது ஆங்கில மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தேசிய தமிழ் இனம் என்ற இனத்திற்கான இனத்துவ பண்புகளை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறே சிங்களவர்கள் எந்தமொழி பேசினாலும் அவர்களுக்குரிய தனித்துவத்துடன்தான் வாழ முடியும். இதுதான் யதார்த்தமாகும்.

ஒரு குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு மக்கள் பிரிவின் அகம்சார்ந்த உணர்வுகளை முற்றாக நிராகரித்து, நீங்கள் இவ்வாறுதான் உங்களை அடையாளப்படுத்த முடியும் என்று விதிமுறைகளை யாரும் திணிக்க முடியாது

ஆனால், தற்பொது இந்நாட்டில் தோண்டியுள்ள கடும்போக்களார்களின் கருத்துக்களும் அவர்களின் செயற்பாடுகளும் ஒரு இனத்தின் தனித்துவப் பண்புகளை நிராகரிப்பதாக அல்லது மட்டுப்படுத்துவதாகவே புலப்படுகிறது.
ஓர் இனத்தினர் தம்மை எதுவாக அடையாளப்படுத்த விரும்புகிறார்களோ அதுவாக அவர்களை அங்கீகரிப்பதுதான் இனங்களின் தனித்துவத்தை, அம்மக்களின் அபிலாசைகளை மதிப்பவர்களின் கடமையாகும். ஆனால் கடும்போக்கு மதவாதிகள் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் தனித்துவ உணவு, தனித்துவ ஆடை எனப் பல தனித்துவ அடையாளங்களை சிதைப்பதை இலக்காகக்கொண்டு செயற்படுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

நாட்டில் சமாதானம் நிலைக்க வேண்டும். அமைதி நிலைபெற வேண்டும் சமூ ஒருமைப்பாடும், இனவுறவுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். என்றாலெல்லாம்  பேசப்படுகின்றது. அதற்காக மகாநாடுகளும் நடத்தப்படுகின்றன. அவற்றை வெற்றிகொள்வதற்காக செயற்திட்டங்களும் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

ஆனால், அவற்றுக்கெல்லாம் கொல்லி வைப்பது போன்று இனவாதம் அதன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, அதன் கொடூரத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. உள்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பான அகமுரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் சமூகத்திற்கெதிரான கட்டமைக்கப்பட்ட கருத்துவாதத்தை பொதுபலசேனா போன்ற கடும்போக்காளர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளது மாத்திரமல்லாது, வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்கள் மத்தியிலும் இந்த எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். பல சமூக இணையத்தளங்களில் பகிரப்படுகின்ற தகவல்கள் அவற்றைப் புடம்போடுகிறது

இவற்றின் காரணமாக வடக்குக் கிழக்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தின் தாக்குதல்கள் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது. மத அடையாளங்கள், வர்த்;தக நிலைங்யகள்;, குடியிருப்புக்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தொடர்கின்றன. இந்நடவடிக்கைகள் முஸ்லிம் சமூதாயத்தின்; சுயாதீனத்தையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அவைமாத்திரமின்றி, புனித பிரதேசங்களின் பெயரால் பள்ளிவாசல்களை அகற்றுதல், சுவீகரித்தல், பாங்கு ஒலிப்பதை தடைசெய்தல், கலாசார ஆடை அணியும் முஸ்லிம் பெண்களை, ஆண்களை அச்சுறுத்துதல் அல்லது தடைசெய்ய முனைதல், முஸ்லிம் வர்த்தக நிலையங்களைப்  புறக்கணித்தல், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளல், சூறையாடுதல், தீ வைத்தல், முஸ்லிம்களுக்குள் மதவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம் உள்ளது எனப் பிரச்சாரம் செய்தல், முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சியையும் விரோதத்தையும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் பொதுக் கூட்டங்களையும் மகாநாடுகளையும் நடத்துதல் இத்தகையை பிரச்சாரங்களுக்காக ஊடகங்களைப் பயன்படுத்துதல், போஸ்டாக்ள ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுதல் என்ற நிலைமை மிக மோசமடைந்து இவற்றின் மொத்தவடிவமாக  தெற்கில் அளுத்தக, தர்ஹாநகர், பேருவளையில் இனவெறியாட்டம் நடந்தேறி ஜூ 15ஆம் திகதியுடன் ஒரு மாதமாகிறது.

இருப்பினும் இந்த அழிவு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தார் என்று இந்த உலகமே பேலும் அந்தத் துறவி இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை ஏன் என்றுதான் எல்லோரும் கேட்கிறார்கள்?

அளுத்கம அழிவென்பது பேரினவாதம் மேற்கொள்ள கொடூரத்தின் ஆரம்பம் மட்டும்தான். பேரினவாதத்தின் இறுதி இலக்கானது அழிவுகள் பல கண்ட 1915 அல்லது 1983 நிலைமைகளை உருவாக்குவதாகவே  இருக்கலாம்.  இந்த நிலைமை உருவாகும் வரையிலும் சட்டம் அதன்பாட்டில் இருக்கப்போகிறதா? அல்லது அதன் கடமையைப் புரியப்போகிறதா? என்பதே நிகழ்காலத்தின் கேள்வியாகும். சட்டம் நிகழ்காலத்தில் அதன் பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுமாயின் எதிர்காலம் நிம்மதியானதாகவும் சுபிட்சமானதாகவும் அமையும்.

இது ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழுக்கின்ற எந்தவொரு இனமும் அந்த இனத்துக்குரித்தான உரிமைகளுடன்; வாழவும் கல்வி கற்கவும் தொழில் புரியவும் கலை, கலாசார பண்பாட்டு மத விடயங்களைப் பின்பற்றவும் இந்நாட்டின் அரசியல் சானம் இடம்வகுத்துள்ளது.

அது மாத்திரமின்றி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உலகப் பொதுப் பிரகடனத்தின் உறுப்புரை 2ஆனது இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு அபிப்பிராயமடைமை, தேசிய அல்லது சமூகத் தோற்றம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி, இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும்; சுதந்திரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவாரவர் எனக் குறிப்பிடுகிறது.

அத்துடன,; ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் எவரினதும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது எனவும் ஐ.நா மனித உரிமைகள் உலகபொதுப்பிரகடனத்தின் 15வது உறுப்புரை சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறான நிலையில், ஒரு தேசிய இனத்தின் இனத்துவ அடையாளங்களை அழிப்பதற்கு, அல்லது அந்த இனம் தமது தனித்துவ அவ்வடையாளங்களை வெளிக்காட்டக் கூடாது என அச்சுறுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லாத போது, பொதுபலசேனா போன்ற கடும்போக்காளர்கள் ஒரு தேசிய இனத்தின் இனத்துவத்துக்கெதிராக தொடர்ச்சியான நெருக்குவாரங்களையும் அடாவடித்தனங்களையும் புரிந்துகொண்டு வருவதை சட்டம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

சட்டமும் கடமையும்
ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுமை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும.; ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல் தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் தனித்தன்மை கொண்டதுதான் சட்டம்.

மனிதனை மனிதனாய் வாழ வைக்கவும் மற்றும் நிறுவனங்களின் முறைப்படுத்தப்பட்ட இயக்கத்திற்கும் சட்டம் தேவை. அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் நீதியுடனும், சமமாகவும், உரிமைகளோடும், அமைதியாகவும் வாழ்ந்திட சட்;டம் வழிவகை செய்கிறது.

குற்றம் விளைவித்தால்  அந்தக் குற்றத்திற்கு தண்டனை வழங்க இந்நாட்டில் சட்டம் இருக்கிறது. ஏனெனில் சட்டத்தின்முன் எல்லோரும் சமமானவர்கள். ஆனால் குற்றம்; செய்தார்கள், குற்றம் செய்யத் தூண்டினார்கள் என்று நீதியையும் நியாத்தையும் சட்டவரம்புகளையும் மதிக்கின்றவர்களால் சுட்டிக்காட்டப்படுபவர்கள் சட்டத்தினால் இதுவரை ஏன் தண்டிக்கப்படவில்லை என்பதே மர்மமாகவுள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தி, குற்றமிழைத்தவர்களை அல்லது குற்றம் புரியத் தூண்டியவர்களை கைது செய்து தண்டனை வழங்க, சட்டத்தை நிறைவேற்றுக்கின்ற மன்றங்கள் இருந்தும் கூட, இத்தகையவர்கள் சுதந்தரிமாக உலாவுவது மனித உரிமைகளையும் சட்டத்தையும் மதிக்கின்றவர்களின் உள்ளங்களில் வேதனையை உருவாக்கியுள்ளது.

அது மாத்திரமின்றி, எவ்வித அதிகாரமுமில்லாத அல்லது நிழல் அதிகாரத்துடன் செயற்படுவதாக் கூறப்படுகின்ற இனவாத அமைப்புக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு குற்றமிழைவித்தவர்களைத் தண்டிப்பதற்கு முற்படும் நிலை இந்த நாட்டில் ஏற்பட்டிருப்பதானது,  சட்டமும் நீதியும் சாகாது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்ந ஜனநாயக நாட்டில், ஜனநாயகத்தை நேசிகின்ற, சட்;டத்தையும் நீதியையும் மதிக்கின்றவர்களை இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்துள்ளது.

பர்மாவில் எவ்வாறு அந்நாட்டு இனவாதிகளினால் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்களோ அதேநிலைமைதான் 2012 ஆண்டு தோற்றம் பெற்ற பொதுபலசேனாவினாலும் கடும்போக்கு பேரினவாத அமைப்புக்களினாலும் இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்கள் தொடாச்சியாக நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள.; உள ரீதியாக வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இந்நடவடிக்கைகளை நோக்குகின்றபோது, சர்வதேச முஸ்லிம் எதிர்பாலர்களின் திட்டத்திற்கேற்ப பொதுபலசேனாவும் கடும்போக்கு பேரினவாத அமைப்புக்களும் செயற்படுகிறதா என எண்ணத் தோன்றுகிறது.

சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது. அவ்வாறு சட்டத்தைக் கையில் எடுப்பவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறிவருகிறார். இவ்வாறான நிலையில் சட்டம் அதற்கான பொறுப்பை புரிய வேண்டும். குற்றம் இழைத்தவர்களுக்கெதிராக நிறைவேற்றப்படும் இலங்கைச் சட்டங்கள் நாட்டின் இன ஒற்றுமைக்கும், அமைதிக்கும் எதிராகச் செயற்படும் இத்தகையவர்களுக்கெதிராகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல்  உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டத்தின் 3ஆம் பிரிவானது ஆளெவரும் போரைப் பரப்புவதோ அல்லது பாரபட்சத்தை, எதிர்ப்பு உணர்ச்சியை அல்லது வன்முறையைத் தூண்டுவதாக அமையும் தேசிய, இன அல்லது மத ரீதியிலான பகைமைய ஆதரித்தலோ ஆகாது எனக் குறிப்பிடுகிறது.

அத்துடன், குற்றம் புரிவதற்கு எத்தனிக்கும், அதனைப் புரிவதில் உதவி புரியும் அல்லது உடந்தையாயிருக்கும் அல்லது புரியப்போவதாக அச்சுறுத்துகின்ற ஒவ்வொருவரும் இச்சட்;டத்தின் கீழ் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென இச்சட்டம் சுட்டிக்காட்டுகிறது

இவ்வாறு சட்டம் உள்ள நிலையில், அச்சட்டமானது அதன் பொறுப்பை நிறைவேற்றுமாயின் இன ஒற்றுமைக்கும் சமூக சகவாழ்வுக்கும் நாட்டின் அமைதிக்கும் பங்கம் ஏற்படாது பல்லாண்டு காலங்கள் இந்த நாட்டில் இனவுறவுடன் வாழும் சகல இனங்களும் தங்களுக்குரிய இனத்துவ உரிமையுடன் நிம்தியாக வாழ முடியும்.

கடும்போக்காளர்களினால் இனத்துவ உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்ற சூழலில்  குற்றமிழைத்தவர்கள் அல்லது குற்றமிழைக்கத் தூண்டியவர்களுக்கு எதிராகச் சட்டம்;  அதன் பொறுப்பi நிகழ்காலத்தில் சரியாக நிறைவேற்றுமாயின்  இனமுரண்பாடற்ற இலங்கையை எதிர்காலத்தில் காணமுடியும். அந்தக் கனவு நிறைவேற வேண்டுமென்பதே சட்டத்தையும் இனத்துவ உரிமைகளையும் மதிக்கும் எல்லோரினதும் பிரார்த்தனையுமாகும்.

jaffnamuslim

இஸ்ரேலிய டி.வி. ஒளிபரப்பை ‘ஹைஜாக்’ பண்ணியதா ஹமாஸ் ?

ஸ்ரேலை நோக்கி காசா பகுதியில் இருந்து ஏவுகணைகளை ஏவிக்கொண்டிருக்கும் ஹமாஸ் இயக்கம், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இஸ்ரேலில் சில குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
Demonstrators at a pro-Israel demonstration in Los Angeles on Sunday, July 13, 2014 (Photo credit: Rick Loomis/Los Angeles Times/AP)
இதையடுத்து, ஹமாஸ்-இஸ்ரேல் யுத்தத்தின் 7-வது நாளாகிய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பாகும் சில டி.வி. சேனல்களை ‘ஹைஜாக்’ பண்ணும் முயற்சி ஒன்று, அமோஸ் சாட்டலைட் ஊடாக ஹமாஸ் இயக்க தொழில்நுட்பவியலாளர்களால் செய்து பார்க்கப்பட்டது.

அப்போது அந்த டி.வி. சேனல்களில் பிரைம்-டைம் செய்தியறிக்கை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

நேற்றிரவு அமோஸ் சாட்டலைட் ஊடாக இஸ்ரேலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சேனல் 2, சேனல் 10 தொலைக்காட்சி ஒளிபரப்பை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது ஹமாஸ்.

ஆனால், சுமார் 120 செக்கன்டுகளே இவர்களால் அந்த சேனல்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது. 2 நிமிடங்களின்பின், செய்தியறிக்கை தொடர்ந்தது.

இப்படியும் ஒரு நல்ல உள்ளம்... Cristiano Ronaldo

சமீபத்திய கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியும், இஸ்ரேல்
அணியும் களம் கண்டது.போட்டி முடிவில் பரஸ்பரம் கருதி தான் அணிந்து விளையாடிய உடைகளை இரு நாட்டு வீரர்களும் மாற்றி கொள்வது வழக்கம்..
போர்ச்சுகல் அணியை சேர்ந்த Cristiano Ronaldo இஸ்ரேலிய அணியின் வீரர்களிடம் இருந்து உடைகளை வாங்க மறுத்துவிட்டார்..
தனது அணியின் எல்லா வீரர்களும் இஸ்ரேல் அணியோடு ஆடை மாற்றிக் கொள்ள, ரொனால்டோ மட்டும் அவர்களோடு உடை மாற்றிக் கொள்ளாமல் செல்வதை கீழ்காணும் லிங்கில் காணலாம்..
அது மட்டுமின்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
இதுபற்றி கேள்வி எழுப்பியபோது
'‪#‎கொலைகாரர்களின்_உறவு_எனக்கு_தேவையில்லை#
என்று துணிச்சலாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பேட்டியளித்துள்ளார்...
அரபுநாடுகளே பாலஸ்தீனில் இஸ்ரேல் நடத்தும் கொடுமைகளை கண்டும் காணாமல் கண்மூடி தூங்குகிறது..
இவர் தொடர்ந்து பாலஸ்தீனிற்க்கு ஆதரவு அளிப்பது கண்டிப்பாக
பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்...
அல்லாஹ் இவரின் நல்ல உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவானாக..

-facebook-

இஸ்ரேலின் வெறியாட்டம் உயிர் இழப்புக்கள் 136 :முஸ்லிம் உலகம் இயலாமையில்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசின் தாக்குதல்கள் தொடர்கிறது பலஸ்தீன்  மீது மேற்கொண்ட  வரும்    தாக்குதல்களின் இதுவரை  136 பேர் சஹீதாக்கப்பட்டுள்ளனர்  1000 பேர் அளவில் படுகாயமடைதுள்ளனர்.
 1160 இடங்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது , இந்த தாக்குதலில் அதிகமான சிறுவர்கள் ,சிறுமியர்கள்  கொல்லப்பட்டுள்ளனர் .
அதேவேளை இஸ்ரேலியர் தரப்பில் இது வரை எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை ஒன்பது பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது , பலஸ்தீன போராளிகள் தொடர்ந்தும் ஏவுகுண்டு தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். ஆனால் தாக்குதல் பற்றிய பிரசாரத்துக்கு போதுமானதாக எந்தவொரு தாக்குதலும் பாரிய விளைவுகளை இஸ்ரேலிய எதிரிகளுக்கு ஏற்படுத்தவில்லை .
அதேவேளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு விரைவாக இராணுவத்தை காஸா பிரதேசத்துக்குள் உள்நுழைந்து தாக்குதல் நடாத்த திட்டமிட்டு வருவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர் . புதிதாக கிலாபாவை பிரகடனப் படுத்தியுள்ள ‘ இஸ்லாமிய ராஜ்ஜியம் ‘ IS  பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முட்படாளம் என எதிர்பார்க்கப்படுகிறது.
lankamuslim

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - பேசுவதற்கு வெட்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சட்டம், ஒழுங்கின் இன்றைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைமீதான விவாதத்தில் அளுத்கம, தர்காநகர், பேருவளை வன்முறைகள் தொடர்பில் எதிரும் புதிருமான, சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றபோதும் இதில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களோ பிரதியமைச்சர்களோ பங்கேற்கவில்லை.

 பாராளுமன்றத்தில் நேற்று ஜனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்வினால் நாட்டில் சட்டம் ,ஒழுங்கின் இன்றைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டு பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 6.30 மணிவரையான நான்கரை மணிநேர வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இவ்விவாதத்தில் பிரதான கருப்பொருளாக அளுத்கம, தர்காநகர் ,பேருவளை பகுதிகளில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன வன்முறையே இருந்தது.

 ஆனாலும் இவ்விவாதத்தில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளான அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் ,ரிசாத் பதியுதீன் ,அதாவுல்லா, பௌசி, பஷிர் சேகுதாவூத் ,பிரதியமைச்சர்களான பைஸர் முஸ்தபா, ஹிஸ்புல்லா, காதர் மற்றும் எம்.பி.க்கள் பலர் இருந்தபோதும் அரச தரப்பின் தேசியப் பட்டியல் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர், ஐ.தே.க. எம்.பி.யான கலீம் ஆகியோரைத் தவிர வேறு எவரும் பேசவில்லை.

jaffnamuslim.