கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நல்லாட்சியில் கஹடோவிடாவின் முன்மாதிரி...

கஹடோவிடாவின் பிரதான பாதைக்கான புனர்நிர்மானம் தற்போது மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.  நல்லாட்சிக்கான மக்கள் பங்கேற்பை வினைத்திறனுடன் மேற்கொள்ள இந்த அரசாங்கத்துக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

கம்பஹா மாவட்ட அத்தனகல்லை தேர்தல் தொகுதிக்குற்பட்ட கஹடோவிட எனும் கிராமம் சுமார் 2500 குடும்பங்களை கொண்டதாகும். இக்கிராம மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுவந்த பிரதான பாதையை புணர்னிர்மானம் செய்வதற்காக முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரனாயகவின் சிபாரிசின்படி அமைச்சர் கபீர் ஹாசிமின் அங்கீகாரத்துடன் கஹடோவிட பிரதான பாதைக்கு காபட் இட அனுமதி வழங்கப்பட்டமைக்கு கஹடோவிட மக்கள் என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

கஹடோவிட கிராம மக்கள் இச்சந்தர்பத்தை நல்ல முறையில் அனுகி உச்சபயனை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்பிரதான பாதை விஸ்தரிப்புக்கு இக்கிராம மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும். பாதை விஸ்தரிப்புக்கு தேவையான குறைந்தபட்ச வீடு/கடை/காணிகளை வீட்டு உரிமையாளர்களுடன் கலந்துறையாடி உடைக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு மீண்டும் கட்டிக்கொடுக்க இக்கிராம மக்கள் முன்வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்பணியை அரசாங்கம் மேற்கொள்ளுமாக இருந்தால் எமது கிராம மக்களுக்கு நஷ்ட ஈடாக சுமார் 80 இலட்சத்துக்கும் மேலான அளவில் வழங்கவேண்டியிருக்கும்.

கடந்த அரசாங்கத்தில் பொதுவாக அனைத்து மூலை முடுக்குகளிலும் செய்யப்பட்ட புனர் நிர்மானப் பாதைகளில் சில அமைச்சர்கள் ஊளல்/இலன்சம்/தரவு பெற்றுக்கொண்டடே பாதைகள் புணர்னிர்மானம் செய்யப்பட்டதாக  குற்றம் சுமத்தப்படுவதை நாம் பத்திரிகைகள் மூலம் அறிகின்றோம். அவ்வாரான சூழ் நிலையில் இன்று நல்லாட்சிக்கான அரசாங்கத்திற்கு கஹடோவிட கிராம மக்கள் முன்னுதாரனமாக செயல் படுத்திக்காட்டியிருக்கிறமை வராலாற்று முக்கியத்துவமாகும்.

கடந்த ஆட்சியில் கம்பஹா மாவட்டத்தில் அனைத்து மூலை முடுக்குகளிலும் காபட் இடப்பட்ட போதும் கஹடோவிட பிரதான பாதை அரசியல் ரீதியான பளிவாங்களுக்கு உற்படுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

Abu shakek

எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் புற்றுநோக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றமையால் முற்றாக தடைசெய்யப்படவுள்ளது.

எஸ்பெஸ்டஸ் பொருட்களின் இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு  2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்.

புற்றுநோய்க்கு முதற்காரணமாக எஸ்பெஸ்டஸ் இருப்பது கண்டிறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அறிவித்தார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பொலித்தின் பாவனை தொடபில் கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். 

எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் புற்றுநோக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.

இதன்படி, 2018ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கிறோம்.

அது போல் எஸ்பெஸ்டஸ் உள்நாட்டு உற்பத்திக்கும் தடை விதிக்கின்றோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே இது தொடர்பில் நாங்கள் அறிவிக்க காரணம் வர்த்தக நிறுவனங்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஊர் மக்களிடம் பாதை விஸ்தரிப்புக் குழு முன்வைக்கும் வேண்டுகோள்.

அல்லாஹ்வின் உதவியினால் பிரதான பாதை விஸ்தரிப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றதை காணக்கூடியதாக இருகிறது. இப்பணிகள் கஹடோவிட சந்தியில் இருந்து ருக்மல வீதி வரை இடம்பெறவிருப்பதால் ஊர்மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கி ஒத்துழைக்குமாறு ஊர்மக்களிடம் வேண்டுகோள் விடப்படுகிறது.
ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் முடிக்கப்படவேண்டியுள்ளதால் ஊர்மக்களின் பங்களிப்பு முன்னதைவிட அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உடைக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் இனி உடைக்கப்படவுள்ள கட்டடங்களை கட்டிக்கொள்ள வசதியற்றவர்களுக்கு நிதியுதவிகளை வழங்குவதற்காக இதுவரை சேகரிக்கப்பட்ட நிதி போதாத நிலையிலுள்ளதாகவும். ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் வாக்களித்த தொகையை மிக அவசரமாக தந்துதவுமாறு வேண்டுகோள்விடப்படுவதோடு, ஏனையவர்களும் தாராளமாக நிதியுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


அதேபோன்று தினமும் இரவு 10.00 மணிமுதல் சிரமதானப் பணிகள் நடைபெற்று வருவதால் இப்பணிகளில் அனைவரும் இணைந்துகொள்வதோடு தேவையான சாதணங்கள், உபகரணங்களையும் தந்துதவுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதயத்தை உருக்கும் புகைப்படம் - 22 மணித்தியாலங்களில் குவிந்த பணத் தொகை $ 58K

சிரியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் தனது தோள்களில் மகளைத் தூங்க வைத்தவாறு பேனாக்களை விற்பனை செய்வதைப் படம்பிடித்து ட்விட்டரில் Gissur Simonarson என்பவர் பதிவிட்டிருந்தார்.
லெபனான் – பேய்ரூட்டில் அந்நபர் பேனா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதயத்தை உருக்கும் இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பார்த்த பலரும் அந்தத் தந்தைக்கு உதவ முன்வந்தனர்.

இதன் பயனாக, ட்விட்டரில் புகைப்படம் பதிவிடப்பட்ட மூன்றே மணித்தியாலங்களில் அவருக்கு £11,000 உதவித்தொகை குவிந்துள்ளது.

அதனை அவரிடம் ஒப்படைக்குமாறு ட்விட்டரில் பலரும் Gissur Simonarson இடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், சிரியாவைச் சேர்ந்த அகதித் தந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டார் Gissur Simonarson.

அதிர்ஷ்டவசமாக, ட்விட்டரில் இந்த புகைப்படத்தையும், அதில் உள்ளவரை Gissur Simonarson தேடுவதையும் அவதானித்த நபர் ஒருவர், Gissur Simonarson ஐத் தொடர்பு கொண்டு சிரிய அகதி குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.

அந்நபர் தனது வீட்டை அண்டிய பகுதியில் இருப்பதாகத் தெரியப்படுத்தியுள்ளார்.

24 மணிநேரத் தேடுதலில் அந்த தந்தை கண்டுபிடிக்கப்பட்டார். அப்துல்லா எனப்படும் இந்நபர் தனது மனைவி இல்லாமல் தனியாக இரண்டு பிள்ளைகளை வளர்த்து வருபவர் என்பது தெரிய வந்தது.

டமஸ்கஸிலுள்ள ஒரு அகதி முகாமில் இவர் வசித்து வருகிறார்.

#BuyPens எனும் ஹேஸ்டேக்கில் இவருக்கு தற்போதும் உதவித் தொகை வழங்க ட்விட்டரில் பலரும் முன்வந்தவண்ணமுள்ளனர்.

jaffnamuslim

latest news:

#BuyPens: Fund for Syria Refugee Abdul Reaches $58K in 22 Hours

குஜராத் கலவரத்தில் 9 பேர் பலி!…

ஆமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினார்கள். சுமார் 10 லட்சம் பேர் திரண்டதால் ஆமதாபாத் நகரமே குலுங்கியது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான 22 வயது ஹார்திக் படேலை போலீசார் கைது செய்தனர். இதை அறிந்ததும் படேல் சமுதாயத்தினர் ஆமதாபாத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். அது பெரும் கலவரமாக வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள்.


கலவரக்காரர்கள் பா.ஜ.க. தலைவர்களின் அலுவலகங்கள், வீடுகளை குறி வைத்து தாக்கினார்கள். அரசு அலுவலகங்கள் உடைக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து விடிய, விடிய கலவரம் நடந்தது. கலவரத்தை போலீசாரால் கட்டுப்படுத்த இயலவில்லை. இதையடுத்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேலை விடுதலை செய்தனர். என்றாலும் கலவரம் ஓயவில்லை. மாறாக நேற்று சூரத், ராஜ்கோட், ஜாம் நகர், போர்பந்தர், பாவ்நகர் உள்பட பல நகரங்களுக்கு கலவரம் பரவியது.

இதில் குஜராத் மாநில அரசு பேருந்துகள் அதிக பாதிப்பை சந்தித்தன. கலவரக்காரர்களால் 292 பஸ்கள் தீ வைத்தும், கல்வீசியும் தாக்கப்பட்டன. இதில் சுமார் 200 பஸ்கள் எரிந்து நாசமானது. கலவரம் பரவியதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்துக்கு நேற்று 5 ஆயிரம் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆமதாபாத்தின் முக்கிய பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் ஆமதாபாத் நகரில் வன்முறை சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

ஆனால் சூரத் உள்பட மேலும் சில நகரங்களில் நேற்று கலவரம் தலை விரித்தாடியது. சூரத் மாநகராட்சிக்கு சொந்தமான 2 தானியக்கிடங்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் சூரத் நகரில் வைரம் பட்டை தீட்டும் ஆலைகள், துணி உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டன. ராஜ்கோட் நகரில் மத்திய மந்திரி மோகன் குண்டாரி பாலின் அலுவலகம் நொறுக்கப்பட்டது. பா.ஜ.க.வினரை படேல் சமுதாயத்தினர் இப்படி குறி வைத்து தாக்கியதால் வேதனை அடைந்த பிரதமர் நரேந்திரமோடி, பொதுமக்கள் கலவரத்தை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்றார். என்றாலும் குஜராத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை. இட ஒதுக்கீடு பெறும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேல் அறிவித்துள்ளார். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் மீண்டும் வன்முறையில் ஈடுபடுவோம் என்று படேல் போராட்டக்குழுவினர் எச்சரித்துள்ளனர். இதனால் ஆமதாபாத், சூரத் உள்பட பல நகரங்களில் பதற்றம் நீடிக்கிறது. இந்த நகரங்களில் மீண்டும் வன்முறை வெடிக்காமல் இருக்க குஜராத்துக்கு இன்று மேலும் 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த ஆமதாபாத், சூரத், ராஜ்கோட், மெஹசானா, படான், பலென்பூர், ஊஞ்சா, விஸ்நகர், ஜாம்நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு இன்று 2–வது நாளாக நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கலவரம் பாதித்த பகுதிகளிலும், பதற்றமான பகுதிகளிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் தற்போது குஜராத்தில் அமைதி திரும்பத் தொடங்கியுள்ளது என்றாலும் மக்களிடம் பதற்றம் காணப்படுகிறது. சகஜ வாழ்க்கைக்கு மக்கள் இன்னும் திரும்பவில்லை. நேற்றிரவு சிறு, சிறு கல்வீச்சு தவிர பெரிய அளவில் வன்முறை ஏற்படவில்லை. இன்று பகலிலும் அமைதி நிலவியது. கடந்த 2 நாட்களாக குஜராத் மாநிலத்தை கொந்தளிக்க வைத்த இந்த கலவரத்தால் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பஸ், ரெயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இது மக்களை திணற வைத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதை புணரமைப்புக்கு கிடைத்த கஹடோவிட மக்களின் மெச்சத்தகுந்த பங்களிப்பு

தற்போது நடைபெற்றுவரும் கஹடோவிட பிரதான பாதைக்கு ”காபட்” இடும் பணிகளுக்கு எமதூர் மக்களிடமிருந்து மெச்சத்தகுந்த பாரிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பதையை விரிவாக்குவதற்கு பலர் தங்களது மதிகளையும், சொந்த வீட்டின் சில பகுதிகளை உடைத்து பெருந்தண்மையுடன் ஒத்துழைத்தமை பாராட்டத்தக்கது.
அதே போன்று பாதை சிறப்பாக அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு எமது ஊர் மக்களுக்காக பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் பலரது வாய்ச்சாடல்களுக்கு, ஏச்சுப் பேச்சுக்களுக்கு மத்தியில் இந்த வேலை சிறப்பாக முடியவேண்டும் என்பதற்காக களத்தில் நிற்கும் ஊா் நலன் விரும்பிகள் அனைவருக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்  இவர்களின் இம்மகத்தான ஒத்துழைப்புக்கு நட்கூலியை வழங்குவானாக!

மேலும் இந்த பாதைப் புணரமைப்ப வேலைக்காக உடைக்கப்பட்டுகின்ற மதில்கள், வீடுகளை திருத்திக் கொடுப்பதற்காக ஊர் மக்கள் ஒன்றினைந்து நிதிசேகரிப்பில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.  இந்நிதிக்காக எமது ஊரைச் சேர்ந்த பல தனவந்தர்களின் பங்களிப்பை கிடைத்ததாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கிறது.  குறிப்பிட்டுக் கூறுவதென்றால் எமது ஊரைச் சோ்ந்த தனவந்தர்களுல் ஒருவர் இந் நிதிக்காக சுமார் ஒரு இலச்சம் ரூபாவை கொடுத்தள்ளாா்.

இந்த பணிசிறப்பாக நடைபெற்று முடிய எல்லாம் வல்ல இறைவனிடம் நாமும் பிராத்திக்கின்றோம்.





காத்தான்குடியில் பதற்றம் !!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டிலில் மூலம் மக்களினால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர் முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் வெளியிடப் பட்டுள்ளதை தொடர்ந்து காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்களினால் ஊர்வலம் நடாத்தப் பட்டுவரும் நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆதரவாளர்கள் அங்கத்தவர்கள் மீதும் அவர்களின் வீடுகள் கடைகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனால் சிலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கிறது
அதேவேளை அங்குள்ள மஸ்ஜித் ஒன்றின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டிலில் சேர்க்கப் பட்டுள்ள நபர்கள் தொடர்பில் ஜனாதிபதி இறுதி தீர்மானம் எடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது , ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமைய சிலரின் தற்போது இணைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் கூட நீக்கப்படலாம் என அறிய முடிகிறது

காழ்ப்புணர்வின் மீது கட்டப்பட்டுள்ள ஷீஆயிஸம்

காழ்ப்புணர்வுகள் மீது தனது கட்டுமானத்தை நிறுவிய ஓர் அமைப்பினால் தனது உறுப்பினர்களின் உள்ளங்களிலிருந்து அந்தக் காழ்ப்புணர்வுகளை நீக்குவது எளிதானதல்ல. அது கட்டுமானத்தை வைத்துக் கொண்டு அத்திவாரத்தை உடைப்பது போன்றதாகும். காழ்ப்புணர்வுகள் மீது கட்டுமானத்தை எழுப்பியவர்களின் விடயத்தில் அதனை நாம் கண்கூடாகவே காண்கின்றோம். அவர்கள் விரும்பினாலும் அந்தக் காழ்ப்புணர்வுகளை அவர்களது உறுப்பினர்களின் உள்ளங்களிலிருந்து நீக்க முடியாது.

இதற்கு இன்றைய உலகில் இருக்கும் சிறந்த உதாரணம்தான் ஷீஆக்கள். ஷீஆயிஸம் என்ற கட்டுமானத்தை தீராத பகை மற்றும் குரோதம், வெறுப்பு, துவேஷம் என்பவற்றின் மீதே அவர்கள் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். யாரின் மீது பகை?

அபூபக்ர், உமர், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹும் போன்ற உத்தம ஸஹாபாக்கள் மீது கொண்ட தீராப் பகையை 1400 வருடங்களாக வளர்த்துப் போஷித்துப் பாதுகாத்து அந்தப் பகையைச் சுற்றி கொள்கை, கோட்பாடுகள் தத்துவங்கள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள், சடங்குகள் என்பற்றையும் வளர்த்து ஷீஆயிஸம் என்ற கோட்டையை அவர்கள் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். இன்று அவர்களுடைய எதிரிகள் யாரென்றால், அந்த உத்தம ஸஹாபாக்களை அவர்களைப் போல் வாய் நிறையத் திட்டி சாபமிடாத ஸுன்னிகள்தான், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வேரோடு கிள்ளியெறிய விரும்பும் ஸியோனிஸ மாபியாக்கள் அல்ல.

ஷீஆக்கள் இன்று உலகத்தில் யாரோடு போரிடுகிறார்கள் என்பதை ஒரு கணம் நோட்டமிடுங்கள். அவர்கள் அமெரிக்க ஸியோனிஸ சக்திகளுடன் போராடவில்லை. மாறாக, அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் சொற்போர்தான் நடத்தியிருக்கிறார்கள். எனினும், முஸ்லிம்களான சுன்னிகளோடு ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போருக்கு துணை போனதால் இன்று அமெரிக்கா ஷீஆக்களோடு கைகோர்த்திருக்கிறது. காரணம், முஸ்லிம் உம்மத்துக்கு மத்தியில் இத்தகைய பகையும் குரோதமும் வளர வேண்டும் என்பதைத்தான் இஸ்லாத்தின் எதிரிகள் விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான பகையும் குரோதமும் இந்த உம்மத்தில் தாராளமாகவே இருக்கிறது என்பதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு நாங்களா சொல்லிக் கொடுக்க வேண்டும்?

குமைனி ஈரானியப் புரட்சியில் வெற்றி பெற்றார். எனினும், பகை நீக்கும் புரட்சியில் வெற்றி பெறவில்லை. இல்லை அந்தப் புரட்சியை அவர் செய்யவே இல்லை. 1400 வருடங்களாக வளர்ந்த ஸஹாபாக்கள் மீதான பகையை அவர் நீக்க முயற்சித்திருந்தால் ஷீஆக்களின் பகைப் புயல் அவரைத்தான் அள்ளிக் கொண்டு போயிருக்கும்.

இந்த வரலாறு கற்றுத் தருகின்ற பாடம் என்ன? முஸ்லிம் உம்மத்திற்குள் பகை வளர்ப்பவர்கள் வெளியே இருக்கும் தங்களது பிரதான எதிரியை மறந்து விடுவார்கள். உள் வீட்டில் இருக்கும் நண்பர்களை எதிரிகளாக மாற்றிக் கொள்வார்கள். இறுதியில் இஸ்லாத்தின் பெயராலேயே தங்களது சமூகத்தை அவர்கள் நாசமாக்குவார்கள்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் 


நன்றி - எங்கள் தேசம்