தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது.
இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும்.
பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.
இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கணணியில் இயக்க
http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் கணணியில் இயங்கும் ஓபரேட்டிங் சிஸ்டம்(விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட்) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment