கொஸ்கம ஆயுதக் கிடங்கில் தீ விபத்து, ஊர் மக்கள் வெளியேற்றம். வெடி அதிர்வுகள், தீப்பிளம்புகளை கஹ்டோவிடவிலும் உயர் பிரதேசங்களில் பார்க்கமுடிந்துள்ளது.
கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதனைச் சூழ 8 மீற்றர் தூரத்தில் வசிப்போரை அந்த இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீ இன்னும் அணைக்கப்படவில்லை எனவும், நிலைமைகள் கட்டுப்பாடில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவத்தின் சத்தமானது 50 கிலோமீற்றர தூரத்தில் உள்ள தெரணியகல நூரி தோட்டம் வரை கேட்டதாகவும், வெளிவரும் புகை,வெளிச்சங்களைக் கொண்டு கொஸ்கம பிரதேசத்தை பார்க்க கூடியதாகவுள்ளதாகவும் இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஹங்வெல, அவிஸ்ஸாவளை பிரதேசங்களுக்கே குறித்த தீயினால் பொருட்கள் சிதறி விழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவிஸ்ஸாவளை வைத்தியசாலைக்கும் பொருட்கள் வந்து விழுவதால் நோயாளிகளை இடமாற்றியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சற்று நிமுடங்களுக்கு முன்னர் கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக ஹோமாகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 25 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள எமது கிராமம் கஹடோவிடாவிற்கு இதன் தாக்கம் தெளிவாக கேட்க்ககூடியதாகவும், தீப்பிழம்புகளை பார்க்கக் கூடியதாகவும் இருந்தது.
0 comments:
Post a Comment