சிறந்த பாடசாலை தரப்படுத்தலில் அல்பத்ரியாவும் தெரிவு, அரசாங்கத்தினால் 1 கோடி பெறுமதியான இன்னுமொரு கட்டிடம்.
கடந்த 09.08.2016 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கஹடோவிட அல்பத்ரியா ம.வி இன் விசேட கூட்டத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
அண்மையில் மேல்மாகணக் கல்வி அமைச்சினால் சிறந்த பாடசாலைகள் என்ற தரப்படுத்தலில் எமது பாடசாலையும் இடப்பெற்றுள்ளமையை அதிபர் சுட்டிக்காட்டினார். அத்தோடு அரசாங்கத்தினால் எமது பாடசாலைக்கு சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான கட்டிடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளமை இன்னுமொரு மையிற்கல் என்றும் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக பாடசாலை திருத்த வேலைகளை மேற்கொள்ளவென சுமார் 20 இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதில், சில ஆசிரியர்கள் கற்பித்தலில் முறையாக ஈடுபடாத விடயங்கள் பற்றியும், பாட நேரங்களில் வகுப்பரைக்கு செல்லாமல் அவர்களுடைய கடமையை புறக்கணிப்பது பற்றியும் பேசப்பட்டது. முக்கியமாக இதில் உரையாற்றிய பாடசாலை நலன்விரும்பி ஒருவர், ஆசிரியர்கள் தமது தொழிலில் ஹராம், ஹலால் பேணி நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டதுடன், பாடசாலையின் கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment