கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

டாக்டர் சாஹிர் நாயீக் இலங்கையில்



இலங்கை வந்துள்ள இஸ்லாமிய மார்க்க பேச்சாளரான டாக்டர் சாஹிர் நாயீக் நாளை திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளுடனேயே டாக்டர் சாஹிர் நாயீக் கிழக்கு மாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

டாக்டர் சாஹிர் நாயீகை சந்தித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் விளக்கியமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மார்க்கப் பேச்சாளரான டாக்டர் சாஹிர் நாயீக் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

.......


அவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம் செய்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளையும் கொழும்பில் வைத்து சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது இலங்கை முஸ்லிம்களின் சமகால நிலவரம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகளை இன்று சனிக்கிழமை இரவு சந்தித்து கிழக்கு மாகாண வெள்ள நிலைமை மற்றும் இலங்கை ஊடகங்களின் நிலை தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

டாக்டர் சாஹிர் நாயீக் கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு முதற் தடவையாக இலங்கைக்கு வந்த போது சுகததாஸ வெளியரங்கில்பல்லாயிரக்கணக்கானோர் மத்தயில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மும்பாயை பிறப்பிடமாக கொண்ட டாக்டர் சாஹிர் நாயீக் உலக நாடுகள் பலவற்றில் விரிவுரையாற்றியுள்ளார்.

போராட்டத்தில் குதித்த எகிப்திய மக்கள் – அரபு நாடுகளில் பரபரப்பு


egypt_protest_04.jpg

துனிசிய மக்களின் துணிச்சலான போராட்டத்தின் பலனாக அந்த நாட்டு அதிபர், பிரான்சின் தளபதி என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும், மேற்கத்திய நாடுகளின் கைப்பிள்ளையாக விளங்கிய பின் அலி நாடு துரத்தப்பட்டு, கடைசியாக சவுதியில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த பின் அலிக்கு தற்போது இன்டர்போல் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த துனிசிய மக்களின் துணிவின் எதிரொலி, எகிப்திய மக்களுக்கு நம்பிக்கை ஒளி ஊட்டியது. கடந்த செவ்வாய்க்கிழமை, 25/1/2011, காவலர் நாளாகும், அன்று அரசு விடுமுறை. துனிசிய மக்களின் துணிச்சலுக்குப் பின், எகிப்திய மக்களுக்கு நம்பிக்கை துளிர் ஒட்டியதன் விளைவால், 25/1/2011, அன்று போராட்டம் என மக்களாகவே அறிவித்தனர், பெரும்பாலானவர்கள் இளைஞர்களே.

முதல் நாள் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி போராட்டத்தில் பங்கேற்றது, மற்றவர்களையும் ஊக்கப்படுத்தியது. அது நாளுக்கு நாள் கூட, வெள்ளிக்கிழமையான இன்று (28-1-11) ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரவு பகல் என்றில்லாமல் போராடி வருவதாக செய்திகள் அறிவிக்கின்றன. (படங்கள் இங்கே) இதுவரை 18 பேர் (இதை எழுதி முடிப்பதற்குள் 26) அரசின் காட்டுமிராண்டிதனத்தால் இறந்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

egypt_protest_01.jpg
மேலும் செய்திகளுக்கு செல்வதற்கு முன், இதன் முக்கிய காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். எகிப்தில், வறுமை தலை விரித்து ஆடுகிறது, லஞ்ச லாவநியங்களுக்கு பஞ்சமில்லை, காட்டுமிராண்டித்தனமான அரசு. எகிப்திய அதிபரான (இவரை மன்னர் என்று சொல்வதே சரியானது) ஹுஸ்னி முபாரக், கடந்த 30 வருடங்களாக மன்னராகவுள்ளார் (அதாவது, அதிபராகவுள்ளார்). இவரைப்பற்றி சொல்ல வேண்டுமானால் எகிப்து மக்களிடையே உள்ள ஒரு எகிப்தைய நகைச்சுவை ஒன்றை கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.

ஹுஸ்னி முபாரக் தனது ஆலோசகர் ஒருவரிடம் ஒரு கேள்வியைக்கேட்டார்:

முபாரக்: “நான் சிறந்தவனா அல்லது முன்னாள் அதிபர் நாசர் சிறந்தவரா?

ஆலோசகர்: “நீங்கள் தான் சிறந்தவர்”

முபாரக்: “காரணம் என்னவோ?”

ஆலோசகர்: அதிபர் நாசர், சோவியத் யுனியனைக் கண்டு பயப்பட்டார், நீங்கள் பயப்படுவது இல்லை.

முபாரக்: “நான் சிறந்தவனா அல்லது முன்னாள் அதிபர் அன்வர் சாதத் சிறந்தவரா?

ஆலோசகர்: “நீங்கள் தான் சிறந்தவர்”

முபாரக்: “காரணம் என்னவோ?”

ஆலோசகர்: அதிபர் நாசர், அமெரிக்காவை கண்டு பயப்பட்டார், நீங்கள் பயப்படுவது இல்லை.

முபாரக்: “நான் சிறந்தவனா அல்லது கலிபா உமர (ரலி) சிறந்தவரா?

ஆலோசகர்: “நீங்கள் தான் சிறந்தவர்”

முபாரக்: “காரணம் என்னவோ?”

ஆலோசகர்: உமர்(ரலி), அல்லாஹ்வைப் பயப்பட்டார், நீங்கள் பயப்படுவது இல்லை.

egypt_protest_08.jpgஎன்றாராம் அந்த ஆலோசகர், இது நகைச்சுவையாக எகிப்து மக்கள் சொல்வது என்றாலும், இதன் சாரம்சத்தை புரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக இன்றைய எகிப்திய மக்களின் நிலை குறித்தும் ஒரு நகைச்சுவை உண்டு.அது என்னவென்றால்:

ஒருவர், உணவு உண்டாராம், அப்போது ஷைத்தான், அவரை அடித்து, பிஸ்மில்லாஹ் சொல்ல சொன்னானாம். இவர் குழம்பிப் போய் நின்றபோது, நானும் பாக்கிறன் நீ எப்பப்பாரு இந்த சாப்பட்டதான் சாப்பிடுற, பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துருற, அதுனால நான் சாப்ட வேண்டியதா இருக்கு. என்னால இத சாப்ட முடியாது, அதனாலதான் பிஸ்மில்லாஹ் சொன்ன சொன்னேன் என்றானாம் ஷைத்தான்.

இப்போது இன்றைக்கு வருவோம், இன்றைய நிலைப்படி, அங்கு இணையதளங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, கைபேசிகள் முடக்கப்பட்டுள்ளன. போராட்ட படங்கள், மனதை நெகிழ வைக்கின்றன. இந்தப்போராட்டத்தில், படித்தவர்கள், படிக்காதவர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள், பெண்கள் உட்பட, அனைத்து தரப்பினரும் பங்கு கொண்டுள்ளனர்.
எகிப்திய மக்களை ஆயுதம் கொண்டு தாக்கி வருகிறது ஹுஸ்னி முபாரக் அரசு. எகிப்திய கொடுங்கோல் அடக்குமுறைக்கு அத்தாட்சிக்கு கீழ்வரும் இன்றைய கானோளியைப்பாருங்கள்:

http://www.youtube.com/watch?v=4XnhHzs91MY

அநியாயமாக ஒருவர் சுடப்படுகிறார்.

கீழே, காவலராக நிற்கும் தனது மகனை, போராளியாக நிற்கும் ஓர் பெண்மணி முத்தமிடுகிறார்.

http://media.sacbee.com/static/weblogs/photos/images/2011/jan11/egypt_protest_sm/egypt_protest_40.jpg

மேலும் படங்களுக்கு: http://blogs.sacbee.com/photos/2011/01/rioting-and-chaos-engulfs-egyp.html

இந்த போராட்டம், மற்ற அரபுலக மற்றும், வாடா ஆப்பிரிக்க நாடுகளையும் தொற்றிக்கொண்டுள்ளது. எமன், ஜோர்டன், அல்ஜீரிய போன்ற நாடுகளிலும் தற்போது போராட்டங்கள் வலுத்து வருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது.

அரேபிய நாடுகளின் மன்னர்கள் உறக்கமிலந்துள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டம் தோற்க வேண்டும் என அரபுலக மன்னர்கள் விரும்புவதாகவும், வெற்றி பெற வேண்டுமென இளைஞர்கள் வேண்டுவதாகவும் செய்திகள் அறிவிக்கின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த மக்களுக்ககும், நமக்கும், சிறந்த ஆட்சியையும் ஆட்சியாளரையும் தந்தருள இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

tntj.net இணையதளத்திற்காக சிறப்பு செய்தி – எஸ். ஜாஃபர் அலி (USA)

ஆசிரியரின் திருமணத்திற்காக பாடசாலை விடுமுறை



ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தில் கடமைப்புரியும் ஆசிரியர் ஒருவரின் திருமணத்தினை முன்னிட்டு அப் பாடசாலைக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டமைத்தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.




ஆசிரியரின் திருமணத்திற்காக இப்பாடசாலையை இன்று வெள்ளிக்கிழமை மூடுவதற்கு ஹட்டன் கல்வி வலயத்தின் மேலதிக கல்விப்பணிப்பாளர் ஒருவர் அனுமதி வழங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவ்விடயம் தொடர்பாக ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ஆசிரியர் ஒருவரின் திருமணத்திற்காக பாடசாலைக்கு விடுமுறை வழங்கமுடியாது என்றும் குறிப்பிட்ட பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்ட நாளுக்குப் பதிலாக பிறிதொரு நாளில் பாடசாலையை நடத்துவதற்கு பாடசாலையின் அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கஹட்டோவிட அல்பத்ரியாவில் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பம்

2011இன் கல்வியாண்டிற்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சகல பாடசாலைகளிலும் இல்ல விளையாட்ட போட்டிகள் கலைகட்டிய வண்ணமுள்ளன. அந்த வகையில் கஹட்டோவிட அல்பந்ரியாவிலும் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளதை காணக் கூடியதாக இருக்கிறது. சென்ற வருடம்போன்று இம்முறையும் ஷம்ஸ், கமர், நஜ்ம் ஆகிய இல்லங்கள் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொ்ள்ளவுள்ளன. இல்ல விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அறியக் கிடைத்துள்ள அதேவேளை பழைய மாணவர்களும் தத்தமது முன்னைய இல்லம் வெற்றி பெற அவர்களது ஒத்துழைப்புக்களை நல்குவதாகவும் அறியக் கிடைக்கின்றது.

துனிஷியா : அரபு ஆட்சியாளர்களுக்கு ஓர் அபாய சங்கு


சிறு சிறு கோஷ்டி சண்டைகளையும், நடிகைகள் ஆடை அணியாததையும் எல்லாம் தலைப்பு செய்தியாக வெளியிடும் இந்திய, இலங்கை ஊடகங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் துனிஷியாவில் நடந்த மக்கள் எழுச்சியை குறித்து எவ்வித பரபரப்பும் காட்டாதது அதியசமில்லை. ஆனால் தமிழ் முஸ்லீம் குழுமங்களிலும் கூட இது அவ்வளவாக விவாதிக்கப்படாததும் அரபுலகில் நிகழவிருக்கும் மிகப் பெரும் மாற்றத்திற்கு கட்டியம் கூறவிருக்கும் இந்நிகழ்வு குறித்து இந்திய முஸ்லீம் தலைமைகளும் மெளனம் காப்பது தான் ஆச்சர்யமளிக்கிறது.


சரி, அப்படி என்ன தான் நடந்தது துனிஷியாவில் ? துனிஷியாவில் பிற அரபு நாடுகளை போல் சர்வதிகார ஆட்சியின் பிடியில் இருந்தது. 1987 அக்டோபரில் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டு பின் ரத்தமில்லா புரட்சியின் மூலம் நவம்பர் 1987ல் ஆட்சியை பிடித்த ஜைனுல் ஆபிதின் பின் அலி 23 ஆண்டு காலமாக தன் எதிர்ப்பாளர்களை துவம்சம் செய்து போலி தேர்தல்கள் மூலம் விடாப்பிடியாக ஆட்சி செய்து கொண்டிருந்த பின் அலி மக்களின் பேரெழுச்சியின் காரணமாக பதவி விலகி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

வேலை வாய்ப்பின்மையும் வறுமையும் மக்களை ஆட்டி படைத்தாலும் பின் அலி சுகவாசியாய் ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எதிர்கட்சிகளை குறிப்பாக ஊழல்மய ஆட்சியை அகற்றி இஸ்லாமிய ஆட்சியை நிறுவ உழைத்த இஸ்லாமிய இயக்கத்தினரை சித்ரவதை செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார். மக்கள் மேல் தான் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளுக்கெல்லாம் அமெரிக்கா பாணியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கட்டுபடுத்தவே செய்ததாக நாடகமாடினார்.

பின் அலியின் 23 ஆண்டு கால கொடூர சர்வதிகார ஆட்சியின் முடிவு இப்படி தான் ஆரம்பமானது. வேலை வாய்ப்பின்றி அவதிப்பட்ட ஏராளமான துனிஷியர்களில் ஒரு இளைஞன் வேலை தர கோரி அதிகார வர்க்கத்திடம் முறையிட்டு அங்கு அவமானப்படுத்தப்பட்டதால் மனமுடைந்து தன்னை நெருப்பில் பொசுக்கி கொண்டு இறந்து போனான். அவனின் மரணத்தை தியாகமாக சித்தரித்து ஓட்டு மொத்த துனிசியா மக்களும் தங்கள் 23 ஆண்டு கால கோபத்தை வெளிக்காட்ட கிடைத்த தருணமாக வீதியில் வந்து போராட, போராடிய மக்களை ராணுவம் சுட்டு தள்ள, கடைசியில் மக்கள் எதிர்ப்பை தாங்க இயலாமல் அதிபர் பின் அலி நாட்டை விட்டு ஓடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.

இம்மக்கள் எழுச்சி துனிஷியாவை விட மத்திய கிழக்கு உள்ளிட்ட அரபு நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிஷியாவை தூக்கி எறிந்த மக்கள் எழுச்சி தங்கள் நாட்டிலும் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் எல்லா நாட்டு தலைவர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. இது வரை பின் அலியின் ஆட்சியை புகழ்ந்து வந்த அரபு நாடுகள் இம்மக்கள் எழுச்சிக்கு பிறகு மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் இவ்வெழுச்சியை கண்டிக்காமலும் வரவேற்காமலும் பொதுவாக துனிஷியாவில் அமைதி திரும்ப வேண்டும் எனும் தொனியில் அறிக்கை விட்டுள்ளன.

பின் அலி நாட்டை விட்டு தப்பி ஓடியதுமே ஏற்கனவே ஏமனில் சர்வதிகார ஆட்சியை நடத்தி வரும் அலி அப்துல்லா சலேஹ்வுக்கு எதிராக பல்கலைகழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் “ கவிழ்க்கப்படும் முன் விலகி கொள்ளுங்கள்” எனும் பதாகையை தாங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் துனிஷியாவின் மக்கள் எழுச்சியை பார்த்து பிற அரபு மக்களும் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஏமனை போலவே தற்போது சவூதியும் உள்நாட்டு குழப்பத்தில் மூழ்கும் ஆபத்தில் உள்ளது. மன்னர் அப்துல்லாவின் உடல்நலக் குறைவால் அடுத்து யார் ஆட்சிக்கு வருவது என்ற வாரிசுரிமை போராட்டத்தால் சவூதி அரச குடும்பம் கலகலத்து கிடக்கிறது. இளவரசர் ஃபைசல் மன்னர் ஆவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் அவர் அமெரிக்காவுக்கு எதிர்ப்பானவர் என்பதால் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பதாக வந்துள்ள செய்திகள் ஒரு முஸ்லீம் நாட்டின் மன்னராக யார் வர வேண்டும் என்பதை கூட முடிவு செய்யும் பொறுப்பை எடுக்க லாயக்கற்ற நிலையை நிதர்சனமாய் காட்டுகிறது.

துனிஷியாவை தங்கள் நட்பு நாடாக பாவித்து வந்த அமெரிக்கா இப்போராட்டத்திற்கு பின் பட்டும் படாமல் காவல்துறையால் 40 நபர்கள் கொல்லப்பட்டது போன்ற அதிகார அத்துமீறல்கள் தவிர்த்து கொள்ளப்பட வேண்டியது என்றும் இனி மேலாவது ஜனநாயக பாதைக்கு துனிஷியா செல்லும் என்று எதிர்பார்ப்பதாக ஜனநாயக கோஷத்தை எழுப்பியுள்ளது. இஸ்லாமிய எழுச்சிக்கு பாடுபடுவோரை எல்லாம் நாட்டை விட்டு துரத்தும் அல்லது நாட்டுக்குள்ளே சிறை வைக்கும் சவூதி அரேபியா, முஸ்லீம் உம்மாவின் செல்வங்களை கொள்ளையடித்த ஒரு சர்வதிகாரிக்கு, இஸ்லாம் இம்மண்ணில் மேலோங்க பாடுபட்டோரை சித்ரவதை செய்தவருக்கு தஞ்சமடைய இடம் கொடுத்துள்ளது ஆச்சரியமான ஒன்றல்ல.

சிரியாவிலிருந்து வெளிவரும் அரசு ஆதரவு பத்திரிகையான அல்-வதான் தன் தலையங்கத்தில் “ அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் விலை போன அரசுகள் துனிஷியாவிலிருந்து பாடம் கற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்காமல் தங்கள் புத்தியை அடகு வைத்து விட்டு மேற்குலகின் வசதிக்கேற்ப முடிவு எடுக்கும் நாடுகளுக்கு தங்களுக்கு பிரச்னை வந்தால் அவர்கள் கை விட்டு விடுவார்கள்” என்பதை உணர வேண்டும் என்று எழுதியுள்ளது.

துனிஷியா ஆட்சி கவிழ்ப்பு பற்றி கருத்து தெரிவித்த ஜோர்டானின் மிகப் பெரும் இஸ்லாமிய அமைப்பான இக்வானுல் முஸ்லீமின் இனி மேலாவது அரபு நாடுகள் இஸ்லாமின் அடிப்படையில் சரியான சீர்திருத்தத்தை மேற் கொள்ள வேண்டும் என்றும் சர்வதிகாரமே அரபு நாடுகளில் காணப்படும் அனைத்து தீமைகளுக்கும் ஆணி வேர் என்று வர்ணித்துள்ளது. துனிஷியாவை போலவே தாங்கள் இஸ்லாமிய மலர்ச்சிக்கு உழைப்பதால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.

இன்னொரு மத்திய கிழக்கு நாடான குவைத்தின் எதிர்கட்சி இஸ்லாமிய உறுப்பினர் வலீத் அல் தபத்ததி துனிஷிய மக்களின் தைரியத்தை பாராட்டுவதாகவும் தங்கள் மக்களை ஒடுக்கி இஸ்லாமிய தனித்துவத்தை கைவிட்டு மேற்குலகின் பாதையில் அடியெடுத்து செல்ல முற்படும் எல்லா நாடுகளுக்கும் இதே நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

துனிஷியாவில் நிகழ்ந்துள்ள நிகழ்வுகளிலிருந்து இஸ்லாத்தின் பெயரால் ஆட்சி செய்து கொண்டு இஸ்லாத்தை ஆளும் கொள்கையாக இப்புவியில் நிலைநாட்ட பாடுபடுவோரை சித்ரவதை செய்யும் அரசுகள், முஸ்லீம் உம்மாவை சில சட்ட பிரச்னைகளில் மாத்திரம் காலம் முழுக்க உழல வைக்கும் அடிப்படையில் செயல்படும் முஸ்லீம் அரசுகள் பாடம் கற்க வேண்டும்.

இறைவன் தந்த கனிம வளங்களை கொண்டு கொழிக்கும் பொருளாதரத்தை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆடம்பர ஹோட்டல்கள், தீவுகள், விமானங்கள் என சொகுசாகவும், துப்பாக்கியே தூக்க தெரியாத ராணுவத்துக்காக பில்லியன் கணக்கில் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்து அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் செய்யும் அரபு நாடுகள் அப்பணத்தை ஏழை முஸ்லீம் நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும். தங்களிடம் எஞ்சியுள்ள பணத்தை தானமாகவோ அல்லது வட்டியில்லா கடனாகனோ கொடுத்து அவர்களையும் வளப்படுத்த வேண்டும். மன்னராட்சியை ஒழித்து, அமெரிக்காவுக்கு கால் பிடிக்காமல் இஸ்லாத்தை முழுமையாய் நிலைநாட்ட முயன்றால் குறைந்த பட்சம் மத்திய கிழக்கு நாடுகள் ஓரே குடையின் கீழ் வரலாம். அவை விரிந்து 56 முஸ்லீம் நாடுகளும் ஓரே தலைமையின் கீழ் கிலாபத்தை புனர்நிர்மாணம் செய்ய அது அடித்தளமாய் விளங்கலாம். இஸ்லாத்திற்கு முரணாக செயல்படுவதை நிறுத்தா விட்டால், துனிஷியாவிலிருந்து பாடம் கற்காவிட்டால் துனிஷியா உங்கள் வீட்டு கதவையும் தட்டும். அடக்கி வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் உம்மாவின் எழுச்சி வெடித்து சிதறும் போது நிச்சயம் ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்படுவார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்களே துனிஷியா உங்களுக்கு ஓர் அபாய சங்கு, கிலாபத்திற்கு இது ஓர் எழுச்சி கீதம்.

விண்டோஸ் Safe Mode ஏன் ? எதற்காக?


மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்து விடுகிறது.


குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும். உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?

வழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது. இந்த வழியைக் கண்டறிந்து சரி செய்த பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். விண்டோஸ் சேப் மோடில் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.

1. சேப் மோடில் autoexec.bat அல்லது config.sys பைல் இயக்கப்பட மாட்டாது.

2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்குத் துணை புரிபவை.

3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, சேப் மோடில் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.

4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில் testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.

5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sys என்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.

6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு ( batch ) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் ( Virtual Device Drivers – VxDs ) என்று அழைக்கப்படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.

7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registry செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் win.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.
8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது. நாமும் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி சேப் மோடுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.
சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல், எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும். அதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும். இதே போல ஏதேனும் கேம்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம். ரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.

பிளேட்டோ

[Plato.jpg]

பிளேட்டோபிளேட்டோ (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு.

தத்துவம், கலை இலக்கியம், வீரம் ஆகியவற்றின் விளை நிலமாக இருந்தது கிரேக்கம் என்பதை நாம் அறிவோம். அம்மண்ணிலே தோன்றிய மாபெரும் அறிஞர்களில் ஒருவர் தான் பிளாட்டோ. இவர் சாக்ரட்டீசின் மாணவராவார்.

பிளாட்டோவின் இயற்பெயர் அரிஸ்டோக்கிளீஸ், அவர் எழுதுவதற்காக ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி "பிளாட்டோ' என வைத்துக் கொண்டார். அனேகமாக புனைப்பெயரை வைத்துக் கொண்டு எழுதிய உலகின் முதல் எழுத்தாளர் அவராகத்தான் இருக்கும்.

"பிளாட்டோ' என்றால் பரந்த, விரிந்த என்று பொருள்படும் இச்சொல்லில் இருந்து தான் ஆங்கிலச் சொல்லான Flat வந்தது. பிளாட்டோவின் சொந்த ஊர் ஏதென்ஸ். செல்வசெழிப்புமிக்க குடும்பத்தில் இவர் பிறந்திருந்தாலும் எளிமையையே விரும்பியவர். இவரின் தந்தை அரிஸ்டோன், தாய் பெரிக்டியோனி. இவர்களுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் கடைசிப் பிள்ளைதான் பிளாட்டோ.

கிரேகத்தின் வழக்கப்படி இராணுவத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தனது இருபதாவது வயதில் சாக்ரட்டீசிடம் மாணவராகச் சேர்ந்தார் பிளாட்டோ. இவருக்கு தத்துவத்துறையில் மட்டுமல்லாது இசை, கவிதை, ஓவியம் ஆகிய நுண்கலைகளின் மீதும் அளவற்ற ஈடுபாடு இருந்தது. சாக்ரட்டீசின் முதன்மை மாணவனாக இருந்த பிளாட்டோ, அவர் இறக்கும் காலம் வரை அவருடனேயே இருந்தார்.

சாக்ரட்டீஸ் இறந்த பிறகு பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இப்பயணங்கள் அவருக்கு அனுபவ அறிவை சேர்க்கவும், சாக்ரட்டீசின் கருத்துக்களை பரப்பவும் உதவின.கிரேக்கம் திரும்பிய பிளாட்டோ ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். உலகின் முதல் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வுகளும், பொதுக்கல்வி போதனையும், நுன்கலை பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பிளாட்டோ எழுதிய "குடியரசு' என்ற நூல் மிகச் சிறந்தது என போற்றப்படுகிறது.

பிளாட்டோவின் சிந்தனைகள் இன்றளவும் மிகச் சிறந்தவையாக மதிக்கப்படுகின்றன. பெண்களுக்கு தனி வாழ்விலும், அரசியலிலும் சம பங்கு தரவேண்டும் திறனை வளர்க்க கல்வி பயன்படவேண்டும். அன்பு, வீரம், பொறுமை, நேர்மை ஆகிய ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று பிளாட்டோ வலியுறுத்தினார்."மனிதனிடம் அறிவு உறங்கும்போது, கீழான ஆசைகள் தோன்றி வாழ்வை சீர்குலைத்துவிடும். நல்லறிவு இல்லாததால் தான் தீமைகள் ஏற்படுகின்றன' என்றார் பிளாட்டோ.

நீதி என்பது மனிதப்பண்பு எனச்சொன்ன பிளாட்டோ, புத்தரைப் போலவே - அதிகப்படியான ஆசையே துன்பங்களுக்கு காரணம் - என்றார். வாழும்போதே மக்களின் பேராதரவினையும், மதிப்பையும் பெற்றவர் பிளாட்டோ, அவர் தனது என்பதாவது வயதில் இறந்தபோது ஏதென்சு நகரமே துக்கம் அனுசரித்ததாம். விரிந்த சிந்தனையும் பரந்த உள்ளமும் எப்போதுமே மக்களின் பாராட்டுக்களை பெறும். உலகம் அவர்களைப் போற்றும்.

ஜனாஸா அறிவித்தல்

உடுகொடையைச் சேர்ந்த பாத்திமா ரிம்ஸானா காலமானார். அன்னார் ஜனாப் ஸரூக்கின் மகளும் சகோதரர் ரிகாஸின் மனைவியுமாவார். . அன்னாரின் ஜனாஸா இன்று  (2011.01.16) காலை 10.00 மணியளவில் உடுகொடை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹ் இச் சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!