டாக்டர் சாஹிர் நாயீக் இலங்கையில்
இலங்கை வந்துள்ள இஸ்லாமிய மார்க்க பேச்சாளரான டாக்டர் சாஹிர் நாயீக் நாளை திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார்.
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளுடனேயே டாக்டர் சாஹிர் நாயீக் கிழக்கு மாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
டாக்டர் சாஹிர் நாயீகை சந்தித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் விளக்கியமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மார்க்கப் பேச்சாளரான டாக்டர் சாஹிர் நாயீக் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
.......
அவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம் செய்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளையும் கொழும்பில் வைத்து சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது இலங்கை முஸ்லிம்களின் சமகால நிலவரம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகளை இன்று சனிக்கிழமை இரவு சந்தித்து கிழக்கு மாகாண வெள்ள நிலைமை மற்றும் இலங்கை ஊடகங்களின் நிலை தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
டாக்டர் சாஹிர் நாயீக் கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு முதற் தடவையாக இலங்கைக்கு வந்த போது சுகததாஸ வெளியரங்கில்பல்லாயிரக்கணக்கானோர் மத்தயில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மும்பாயை பிறப்பிடமாக கொண்ட டாக்டர் சாஹிர் நாயீக் உலக நாடுகள் பலவற்றில் விரிவுரையாற்றியுள்ளார்.
0 comments:
Post a Comment