பிரதேச சபைத் தேர்தலில் சகோதரர் நாஸர் மீண்டும் போட்டி
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் நாஸர் மீண்டும் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அத்தனகல்ல தொகுதிக்கான காரியாலயத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட கம்பஹ மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சரணகுணவர்தன அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அவர் மீண்டும் தேர்தல் களத்தில் களமிறங்கவுள்ளதாகவும் அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்க கட்சி சார்பாக ஜனாப் நஜீம் J.P அவர்கள் களமிறங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந் இரு வருடங்களாக வேட்டபாளர்களை நிறுத்தி வெற்றியீட்டிய முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யாரும் களமிறங்கவுள்ளதாக இதுவரை தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. எது எப்படியிருப்பினும் ஊர் மக்கள் தமக்குச் சேவை செய்யக் கூடிய சிறந்த ஒரு உறுப்பினரை வென்றெடுக்க வேண்டும் என்பதே எமது ஆலோசனையாகும்.
0 comments:
Post a Comment