கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

1001 கண்டுபிடிப்புக்கள்!

ஐரோப்பா இருண்ட யுகத்தில் இருந்த வேளையில் (கி.பி 5 - 15) இஸ்லாம் ஒளிமயமாக உலகிற்கு தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருந்தது மாத்திரமன்றி இன்றைய நவீன உலகினது அநேக கண்டுபிடிப்புகளுக்கும் விஞ்ஞான கைத்தொழில் மறுமலர்ச்சிகளுக்கும் தேவையான அடிப்படை கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதுடன்அவற்றை விருத்தி செய்வதற்கு அன்று கிலாபா அரசின் கீழ் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

அத்தகைய பங்களிப்புகளில் சிலவற்றை இந்த வீடியோ காட்சியை பார்ப்பதன் மூலம் நாம் உணரலாம்....
இது ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்க டப் பண்ணப்பட்டுள்ளது. அவசியம் பார்த்து பகிரவும்!
 


பெட்ரோல் உருவான, கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ( History of Petrol)

 
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர்.
 
அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன் சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அருகிலுள்ள பாறை வெடிப்புகளுக்குள் பாய்ந்து அடர் கருப்பு நிறத்தை கொண்ட எண்ணெய் வளங்களாக உருமாறுகின்றது.
 
இந்த எண்ணெய் வளங்களை உலகில் முதன் முதலில் கண்டறிந்தவர்கள் ஈராக்கியர்கள் என்னும் பண்டைய பாபிலோனியர்கள் ஆவர். பண்டைய பாபிலோனியர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மண்ணில் வானுயர்ந்த கோபுரங்களை கட்டும்போது, கட்டிடத்தின் வலிமையை கருத்தில் கொண்டு கட்டிடத்தின் அஸ்திவாரச்சுவரை (Foundation Wall) நிலத்தில் சற்று ஆழத்திலிருந்து கட்டி எழுப்பினார்கள். அப்படி ஒரு சமயம் ஈராக்கிலுள்ள Andericca (Near Babylon Province) என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தின் கட்டுமானதிற்க்காக சற்று ஆழமாக குழி தோண்டியபோது கிடைத்ததுதான் இந்த கச்சா எண்ணெய் (Crude oil).
 
 
கச்சா எண்ணெய் சேர்த்து கட்டப்பட்ட சுவர்கள் கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கொள்வதை தற்செயலாக ஒரு நாள் கண்டுபிடித்த பாபிலோனியர்கள் அதன் பின்னர் கச்சா எண்ணெய்யை வெகுநேரம் கொதிக்கவைத்து வற்றச்செய்து கிடைத்த கூழ்மத்தை (நிலக்கீல், Asphalt) நிலத்திற்குள் மறையும் கட்டிடத்தின் அஸ்திவாரச் சுவர்களின் மீது சாயமாக (paint) பூசினார்கள். அதோடு கச்சா எண்ணையின் எரியும் திறனை கருத்தில் கொண்டு வெளிச்சத்தை உண்டாக்க தீபந்ததிற்க்குரிய எண்ணெய்யாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனை ஹீரோட்டஸ் (Herodus – கி.மு.484) மற்றும் டியோடோரஸ் (Diodorus – கி.மு. 60) என்ற இரு புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ஆய்வுகட்டுரைகளில் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.
எல்லோருக்கும் தெரிந்த உலகின் முதல் நவீன எண்ணெய் கிணறு கி.பி.347 ஆம் ஆண்டு சீனாவில் துளையிடப்பட்டது. மூங்கில் கம்புகளால் துளையிடப்பட்ட அந்த கிணறு கிட்டத்தட்ட 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கச்சா எண்ணெய் விளக்கு எரிப்பதற்கு தேவைப்படும் விளக்கு எண்ணெயாகவும் கட்டிடகட்டுமான பணிகளில் நிலக்கீலாகவும் தான் பயன்படுத்தப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் நிலக்கீலைக் கொண்டு ஈராக் தலைநகர் முழுவதும் அழகான சாலைகள் அமைக்கும் பணி துவங்கியது. உலகில் முதன் முதலாக நிலக்கீல் (asphalt) கொண்டு சாலைகள் போடப்பட்டது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தான்.
 
 
 
இதனை தொடர்ந்து அரபுநாடுகள் முழுவதிலும் கச்சா எண்ணெய் கிடைக்கும் இடங்களை தேடும் பணி துவங்கியது கி.பி. பத்தாம் நூற்றாண்டுவாக்கில் அபு அல் ஹாசன் (Abu Al Hasan) என்ற முஸ்லிம் புவியியல் வல்லுநர் அஜர்பாஜன் (Azerbaijan) என்ற நாட்டிளிலுள்ள பாகு (baku) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து பாகுவில் நூற்றுக்கும் அதிகமான எண்ணெய் கிணறு வெட்டப்பட்டது. உலகிலேயே முதன் முதலாய் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் எண்ணெய் கிணறு வெட்டப்பட்ட இடம் அஜர்பாஜன் நாட்டிளிலுள்ள பாகுவில்தான்.
 
 
இந்நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சில ரசவாதிகள் (alchemist)  கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தும்போது எரியும் தன்மை கொண்ட நீர் (kerosene) கிடைப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து முகம்மது இபின் ஷகாரியா அல்-ரஷி (Muhammed Ibn Zakariya Al-Razi, கி.பி.865-925) என்ற பெர்சியன் ரசவாதி (Persian alchemist) கச்சா எண்ணெய்யை வடிகட்டும் முயற்சியில் இறங்கினார். இதற்க்காக இவர் தானே தயாரித்த அலம்பிக் (alembic)  என்ற ஒரு வகை வடிகலனை பயன்படுத்தினார். முயற்சியின் விளைவாக வெடித்து எரியும் நீரைக் (petrol) கண்டறிந்தார். இவரது இந்த கண்டுபிடிப்பு பெர்சிய ராணுவத்தினரால் எதிரி நாட்டு ராணுவத்தினரை தாக்க வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணையின் முக்கியத்துவம் உணரப்பட்டு உலகமெங்கும் எண்ணெய் வளங்கள் கிடைக்கும் இடங்களை கண்டறியும் சோதனை துவங்கியது. பனிரெண்டாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமானியாவிலும் எண்ணெய் கிடைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் (1753-ஆம் ஆண்டு) முதன் முதலாக அமெரிக்காவின் பெனிசுலவேனியா (Pennsylvania) நகரிலும், பின்னர் பிரான்ஸிலுள்ள அல்சசே (Alsace) என்ற நகரிலும் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவிலுள்ள உக்தா (ukhta) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து ரஷ்ய சக்கரவர்த்தினி (Empress) எலிசபெத் என்பவருடன் உதவியோடு உலகின் முதல் கச்சா எண்ணெய் வடிப்பு ஆலை உக்தாவில் நிறுவப்பட்டது. இந்த ஆலை கிட்டத்தட்ட இபின் ஷகாரியாவின் வடிகட்டுதல் முறையை அடிப்படையாக கொண்டிருந்தது. இதன் மூலம் வடிகட்டப்பட்ட எண்ணெய்., ரஷ்ய நாட்டு தேவாலயங்களிலும் (church), மடாலயங்களிலும் (monasteries) விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.
 
இந்நிலையில் 1846 ஆம் ஆண்டு ஆப்ரஹாம் ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்ற கனடா நாட்டை சேர்ந்த நிலவியல் வல்லுநர் உலகில் முதன் முதலாக நிலக்கரியிலிருந்து மண்ணெண்ணெய்யை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதோடு மண்ணெண்ணெய்யில் எரியும் விளக்குகளையும் உருவாக்கி இருளில் மிதந்திருந்த உலகத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டினார். அதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய்யின் தேவை பன்மடங்கு அதிகரிக்க துவங்கியது. நிலக்கரியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட மிகக்குறைந்த மண்ணெண்ணெய் மனிதர்களின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய இயலாததால் மாற்று வழி பற்றி யோசிக்கப்பட்டது..
 
 
கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தி கிட்டத்தட்ட மூன்றிக்கும் மேற்பட்ட எண்ணெய்களை பிரித்தெடுக்கலாம் என்கிற உண்மையை உலகில் முதன் முதலாக 1846 ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த Lgnacy Lukasiewicz என்ற வேதியியல் வல்லுநர் கண்டறிந்தார் இவர் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய்யிலிருந்து மண்ணெண்ணையை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தினை கண்டுபிடித்தவர் ஆவர். இதை தொடர்ந்து மண்ணெண்ணெய் தயாரித்து விற்பதற்கென்று வணிக நோக்கிலான உலகின் முதல் எண்ணெய் கிணறு போலந்து (Poland) நாட்டில் 1853 ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. இதற்க்கிடையில் முக்கிய திருப்பமாக 1854 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயிலிருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில் பெட்ரோலை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தினை பெஞ்சமின் சில்லிமன் (Benjamin Silliman) என்ற அமெரிக்கர் கண்டறிந்தார். இவரது இந்த கண்டுபிடிப்பு காட்டுத்தீயைப் போல் மிகவேகமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.
 
உலகின் முதல் வணிக நோக்கிலான எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை போலந்து நாட்டிலுள்ள ஜாஸ்லோ (jaslo) என்ற நகரில் Lgnacy Lukasiewicz-யின் மேற்பார்வையின் கீழ் 1856 ஆம் அண்டு துவங்கப்பட்டது. அந்த ஆலையில் தான் முதன் முதலாக கச்சா எண்ணெயிலிருந்து ஒன்றிக்கும் மேற்பட்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன. பெட்ரோல் (Gasoline), மண்ணெண்ணெய் (Kerosene), டீசல் (Diesel), மசகு எண்ணெய் (lubricating Oil) மற்றும் நிலக்கீல் (Asphalt) ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி வடித்து பிரித்தெடுக்கப்பட்டது.இதில் டீசலுக்கு மட்டும் டீசல் என்ற பெயரிடப்படாமல் ஆயில் என்றே பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1893 ஆம் ஆண்டு ருடால்ப் டீசல் (Rudolf Diesel) என்பவர் டீசலில் இயங்கும் வகையில் ஒரு என்ஜினை கண்டறிந்தார் அவரது கண்டுபிடிப்பை போற்றும் வகையில் டீசல் என்கிற அவரது பெயரையை அந்த எரிபொருளுக்கு சூட்டப்பட்டது.
உலகின் இரண்டாவது கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை 1857 ஆம் ஆண்டு ரோமானியா (Romania) நாட்டிலுள்ள Ploiesti என்ற நகரில் ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடாக சுத்தீகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ரோமானியாதான் உலகில் முதன் முதலாக கச்சா எண்ணெய்யை வெளிச்சந்தையில் விற்பனை செய்த முதல் நாடு ஆகும். ரோமானியா மொத்தமாக 275 டன் கச்சா எண்ணெய்யை முதன் முதலாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தது.
 
வரலாற்று சுவடுகள்

ஹாசீம்ஆம்லா,பர்வேஸ் ரசூல் போன்ற விளையாட்டுவீரர்களின் வரிசையில் ஒரு புதிய பெயர் பவாத் அஹமத்


உலக ஆடம்பரங்களுக்காக இஸ்லாமிய கொள்கைகளை விட்டுகொடுக்காத ஹாசீம்ஆம்லா,பர்வேஸ் ரசூல் போன்ற விளையாட்டுவீரர்களின் வரிசையில் ஒரு புதிய பெயர் பவாத் அஹமத்....

பிரபல கிரிக்கெட் வீரர் பாவாத் அஹ்மத் ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்று தற்போது இங்கிலாந்துக்கெதிரான தொடரில் சிறப்பாக ஆடிவருகிறார்.பாக்கிஸ்தானை சேர்ந்த இவர் ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்றவராவார்.ஆஸ்திரிலேயா அணியின் ஸ்பான்சர் VB BITTER என்ற மதுபான நிறுவனமாகும்.எனவே அவர்களின் மதுபானவிளம்பரம் பொருந்திய டிசர்ட்டை அணிந்துதான் வீரர்கள் விளையாடவேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் இதற்க்கு விருப்பமில்லாத பவாத் "நான் ஒரு இஸ்லாமியன்.இஸ்லாத்தில் மதுபானம் அருந்துவதும்,அதனை மற்றவர்கள் குடிக்க ஊக்குவிப்பதும் ஹராமாகும்.எனவே தயவுசெய்து என்னுடைய சட்டையில் இருந்து மதுபானவிளம்பரத்தை அகற்றவேண்டும்"என்று ஆஸ்திரேலிய கிரிகெட் போர்டிடம் வேண்டுகோள் விடுத்தார்.இதனை பரிசீலித்த கிரிக்கேட்போர்ட் அவரது நியாயமான கோரிக்கையை அங்கீகரித்தது.

அல்ஹம்துலில்லாஹ்.அற்ப சந்தோஷங்களுக்காக மார்க்கத்தை குழிதோண்டி புதைக்கும் பெயர்தாங்கி வீரர்கள் மத்தியில் ஆங்கிலேய அணியில் இடம்பெற்றும் கொள்கைகளை விட்டுகொடுக்காத உங்களுக்கு அல்லாஹ் மேலும் மேலும் பல வெற்றிகளை வழங்குவானாக.........

படியுங்கள்...பரப்புங்கள்....
 

உலக ஆடம்பரங்களுக்காக இஸ்லாமிய கொள்கைகளை விட்டுகொடுக்காத ஹாசீம்ஆம்லா,பர்வேஸ் ரசூல் போன்ற விளையாட்டுவீரர்களின் வரிசையில் ஒரு புதிய பெயர் பவாத் அஹமத்....

பிரபல கிரிக்கெட் வீரர் பாவாத் அஹ்மத் ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்று தற்போது இங்கிலாந்துக்கெதிரான தொடரில் சிறப்பாக ஆடிவருகிறார்.பாக்கிஸ்தானை சேர்ந்த இவர் ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்றவராவார்.ஆஸ்திரிலேயா அணியின் ஸ்பான்சர் VB BITTER என்ற மதுபான நிறுவனமாகும்.எனவே அவர்களின் மதுபானவிளம்பரம் பொருந்திய டிசர்ட்டை அணிந்துதான் வீரர்கள் விளையாடவேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் இதற்க்கு விருப்பமில்லாத பவாத் "நான் ஒரு இஸ்லாமியன்.இஸ்லாத்தில் மதுபானம் அருந்துவதும்,அதனை மற்றவர்கள் குடிக்க ஊக்குவிப்பதும் ஹராமாகும்.எனவே தயவுசெய்து என்னுடைய சட்டையில் இருந்து மதுபானவிளம்பரத்தை அகற்றவேண்டும்"என்று ஆஸ்திரேலிய கிரிகெட் போர்டிடம் வேண்டுகோள் விடுத்தார்.இதனை பரிசீலித்த கிரிக்கேட்போர்ட் அவரது நியாயமான கோரிக்கையை அங்கீகரித்தது.

அல்ஹம்துலில்லாஹ்.அற்ப சந்தோஷங்களுக்காக மார்க்கத்தை குழிதோண்டி புதைக்கும் பெயர்தாங்கி வீரர்கள் மத்தியில் ஆங்கிலேய அணியில் இடம்பெற்றும் கொள்கைகளை விட்டுகொடுக்காத உங்களுக்கு அல்லாஹ் மேலும் மேலும் பல வெற்றிகளை வழங்குவானாக.........

வரிப்பணம் சம்பந்தமான ஒரு அறிவித்தல்.



அத்தனகல்ல பிரதேச சபையினால் எனதுக்கு 2012 வரை அறவிடப்பட்டு வந்த வரிப்பணத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்த நடவடிக்கை மூலும் எமது ஊரில் உள்ள சுமார் 80 வீதமானவர்களுடைய வரிப்பண அங்கத்துவம் நீக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஏழைகளின் தோழனும், பிரதேச சபை உறுப்பனறுமாகிய நஜீம் நானா அவர்களின் இந்த முயற்சிக்கு எமது ஊர் மக்கள் சார்பாக நாமும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கின்றோம்.

எனவே இது சம்பந்தமான மேலதிக விபரங்களை அவசரமாக கிராம சேவையாளரிடம் அல்லது பிரதேசபை உறுப்பினர் நஜீம் நானாவிடம் கேட்டு அறிந்துகொள்ளலாம்.

அல்பத்ரியாவின் வளா்ச்சியிற்கு சில விசமிகளால் தடை. மாணவா்கள் ஆா்ப்பாட்டம்


கடந்த சில நாட்களாக கஹட்டோவிட அல்பத்ரியா மகாவித்தியாலயத்தின் சொத்துக்களிற்கு சில விசமிகள் ஊருவிளைவித்துள்ளன. கடந்த விடுமுறை காலத்தில் ஒருசில விரும்பத்தகாத நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. விடுமுறையின் பின்னா் பாடசாலை ஆரம்பித்தன் பின்னா் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவா்களின் புத்தகங்கள் மற்றும் காட்சிப் பொருட்கள் என்பன தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடா்நது நேற்று இரவு பாடசாலையின் சில வகுப்புக்களின் தும்புத்தடிகள் தீமுட்டப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் அனைத்து வகுப்புக்களினதும் மின்குமிழ்கள் உடைக்கப்பட்டிந்ததாகவும் அறியக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைத் தொடா்ந்து இந்த அசம்பாவிதம் பற்றி ஒரு விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்குடன் பாடசாலை மாணவா்கள் ஒரு எதிர்ப்பு ஊா்வலத்தை இன்று நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசமிகளின் நடவடிக்கையினால் பாடசாலை மாணவா்களின் கல்வி மற்றுமின்றி மாலை நேரங்களில் விளையாடும் மாணவா்களின் விளையாட்டுக்கும் தடங்கள் ஏற்பட்டுள்ளமை வருந்ததக்கதாகும். எது எப்படியிருப்பினும் பாடசாலை என்பது பொதுவான ஒரு இடம். இதில் தனிப்பிட்ட கோபங்களை வெளிப்படுத்துவதோ அல்லது அதற்கு சேதம் ஏற்படுத்துவதோ முறையற்ற ஒரு செயலாகும். இதுவிடயத்தில் ஊா்மக்கள்  அனைவரும் இணைந்து இந்த விசமிகளை இனம் கண்டு உரிய நடவடிக்கை எடுப்பது கடமையாகும்.

சிரியா தாக்கப்படுமானால் ரஷ்யா சவுதி அரேபியாவை தாக்கும் !! - விளாடிமிர் புட்டின் அசோல்டிங் ஓடரில் கையொப்பமிட்டார்!!

Bandar_Putin
Khaibar Thalam News Re-view
இதன் பெயர் எண்ணைய் யுத்தம். மத்திய கிழக்கின் ரஷ்யாவின் பெறுமதிமிக்க ஒரே ஒரு தளத்தையும் அழித்து அதன் பின் மத்திய கிழக்கு நாடுகளை தன் அடிமை தேசமாக மாற்றி பூகோள பெற்றோலிய அதிகாரத்தை தக்க வைக்கும் முதலாளித்து தேங்களின் பொறியில் இருந்து விடுபட ரஷ்யா தாயராகிறது. அதனை செய்ய சிரயாவை காப்பாற்றல் என புருடா விடுகிறது”

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இருந்து Russian Federation for the Armed Forces-இற்கு ஒரு அவசர மெமரண்டம் அனுப்பப்பட்டுள்ளது. “முழு நேர தாக்குதலிற்கான படைகளை தயார்படுத்தும் கட்டளை” அதில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு நாடுகள் சிரியா மீது தாக்குதல் தொடுக்குமானால் சவுதி அரேபியா மீத ரஷ்யாவின் தாக்குதல்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கம். இதனை யூரோ டைம்ஸ் தெரிவித்துள்ளது.

 சிரியா மீதான தாக்குதலிற்கு சவுதி அரேபியா எவ்விதத்திலும் உதவ கூடாது என்று கடந்த ஆகஸ்டில் சவுதி அரேபிய இளவரசர்  Bandar bin Sultan-னிடம் அதிபர் புட்டின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் கடந்த ஒரு வருட காலத்தில் சவுதி ஆட்சியாளர்கள் அதற்கு நேர் முரணான அமெரிக்க சார்பு கொள்கைகளிற்கு துணை நின்றதுடன் நேரடியாகவே பணம், ஆயுத உதவி என சிரிய போராளிகளிற்கு வழங்க ஆரம்பித்தது. சிரியா மீதான தாக்குதலில் மேற்கு நாடுகளிற்கு தனது பரிபூரணை ஒத்துழைப்பை வழங்க அண்மையில் சவுதி அரேபிய அரசு உடன்பட்டிருந்தது. அதன் விளைவே "command battle" எனும் சவுதி மீதான ரஷ்யாவின் தாக்குதல் திட்டமாகும்.

Bandar bin Sultan ரஷ்ய அதிபருடன் பேசும் பொழுது பஸர் அல்-அஸாதின் ஆட்சி தூக்கி வீசப்பட்டாலோ அல்லது சிரியா மீதான தாக்குதல் ஏற்பட்டாலோ, சிரியாவில் உள்ள ரஷ்ய கடற்தளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அது தொடர்ந்தும் இயங்கும்படியான சூழ்நிலைகள் உருவாக்கப்படும் என வாக்களித்திருந்தார். ஆனால் இப்போது அமெரிக்க முதன்மை தாக்குதல் திட்டத்தில் அனைத்து சிரிய துறைமுகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

சவுதி அரேபிய அரசு சிரியா மீதான ஆதரவை ரஷ்யா விளக்கிகொள்ளுமாக இருந்தால் எண்ணை சந்தையில் உலகாதிக்கம் மிக்க நாடாக ரஷ்யாவை மாற்ற தாம் துணை நிற்பதுடன் ரஷ்யாவுடன் பாரிய எரிவாயு ஒப்பந்தத்தையும் செய்ய தயார் என மெல்ல டீல் பேசியிருந்தது. அதற்கு ரஷ்ய அதிபர் புட்டின் “தாம் ஒரு போதும் சிரியாவை கைவிட முடியாது” என ஆணித்தரமாக தெரிவித்து இருந்தார். இந்த தகவலை லண்டன் டெய்லி கிராப்ஃ பத்திரிகை தெரிவித்திருந்தது. 

இதற்கமைவாக லண்டன் இன்டிபென்டன்ட் பத்திரிகை ரஷ்ய வெளியுறவுதுறை செயளரின் பேச்சை ஆதாரம் காட்டியுள்ளது. Alexander Lukashevich சிரியா மீதான தாக்குதல்கள் பற்றி கருத்து வெளியிடுகையில் சிரியா மீதான அமெரிக்காவின் சீரியல் தாக்குதல்களின் விளைவாக மத்தியகிழக்கும் வடஆபிரிக்காவும் தாக்குதல்களிற்கு உள்ளாகும். இது மூன்றாம் உலகப் போரிற்கான ஆரம்பமாக அமையும் என எச்சரித்திருந்தார். 

“பிளேன் சிரியா”-வில் பஸர் அல்-அஸாதின் இராணுவ கட்டமைப்பை தகர்ப்பது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல. டமஸ்கஸ் வரை நெருங்கி வந்து சண்டையிடும் அல்-காயிதா ஆதரவு அமைப்பை அழிப்பதும் அதன் நோக்கம். இறுதி இலக்காக ரஷ்யாவின் மத்தியகிழக்கிற்கான தளத்தை இல்லாமல் செய்வதே அதன் ஏகபோக எண்ணெய் சுரண்டலிற்கு வழியமைக்கும்.

சீனாவில் 22 உய்குர் முஸ்லிம்கள் சுட்டு கொலை - இஸ்லாமிய வணக்கங்களில் கூட்டாக ஈடுபட்டமை பயங்கரவாத செயற்பாடு என சீன பொலீஸார் அறிவிப்பு!!

22 Muslim Uighur Chinese police shot dead while praying on charges of "terrorism"

சீனாவின் ஷின்-ஷியாங் மாகாண முஸ்லிம்கள் மீண்டும் சீன பொலீஸாரினால் வேட்டையாடப்பட்டுள்ளனர். யாருமே பார்க்க முடியாத மியன்மார் களம் இன்று ஷின்-ஷியாங்கில் அரங்கேறி வருகிறது. இவர்களது போராட்டம் தொடர்பாக கைபர் தளத்தில் கடந்த வருடம் ஒரு பதிவு வெளியாகியிருந்தது.  கடந்த செவ்வாய்கிழமை (8/27/2013) இந்த தகவல் வெிளியிடப்பட்டுள்ளது. உய்குர் இன முஸ்லிம்கள் 22 பேரை சீன பொலீஸார் சுட்டு படுகொலை செய்துள்ளனர். அவர்களின் பிணங்களின் மேல் பங்கரவாதிகள் என்ற பிரசுரங்களை போட்டு விட்டு சென்றுள்ளனர். இவர்கள் சீன பாலைவன எல்லையான Yilkiqi Kargilik (Yecheng in Chinese)-வில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த தகவலை பிறீ ஏசியா ரேடியோ Free Asia (FRA) தெரிவித்துள்ளது. இவர்கள் கடந்த ஒகஸ்ட் 20ம் திகதி இந்த தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தாமதமாகவே வெளியாகியுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது. இவர்களது வீடுகளில் வைத்து பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக FRA தகவல் வெளியிட்டுள்ளது. 

இவர்கள் மீது சீன பொலீஸார் முன்வைத்த குற்றச்சாட்டு “ தடை செய்யப்பட்ட மார்க்க செயற்பாடுகளை செயற்படுத்தியமையும், அதனை செய்ய மற்றவர்களை ஊக்குவித்தமையுமாகும். இதன சீன அரசு “பயங்கரவாத செயற்பாடு” என பிரகடனம்  செய்துள்ளதுடன் இதனை செய்தவர்களை “பயங்கரவாதிகள்” என்றும் குற்றம் சுமத்தியுள்ளது. 

பிறீ ஏசியா ரேடியோவிற்கு ஷின்-ஷியாங் தலைமை பொலீஸ் அதிகாரி Osman Batur Yilkiqi தகவல் தருகையில் சீன குடியரசின் பொலீஸார் பயங்கரவாதிகள் 22  பேரை வெற்றிகரமாக உயிருடன் பிடித்ததாகவும், இவர்கள் மதப்பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் சொல்லும் மதப்பயங்கவாதத்தின் மறுவார்த்தை என்பது இஸ்லாமிய வணக்க வழிபாடுகள், மதப்பிரச்சாரம், மத ஒன்றுகூடல் போன்றனவாகும். 

கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு நாட்கள் பொலிஸ் கஷ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு தகவல்கள் பெற முயற்ச்சிக்கப்பட்ட நிலைகயில், கைகள் பின்புறம் கட்டப்பட்டு நீல் டவுனில் (முழங்காலில் முட்டியிடப்பட்டு) பின் பிடறியில் சுடப்பட்ட நிலையில் இந்த 22 உடல்களும் கறுப்பு கனத்த பொலிதீன் பேக்களில் போடப்பட்டு வீசப்பட்டிருந்தன. இதனை தாம் கண்டதாக Mahmut Han தெரிவித்துள்ளார். இவரே Yilkiqi City-யின் தலைமை நிர்வாகி. 

urban மலையுச்சியில் இவர்களது உடல்கள் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளன. இன்னொரு பிரதேசவாசியின் தகவல்படி இவர்கள் கைது செய்யப்படவேயில்லை. இவர்கள் கூட்டாக தொழுகை நாடாத்திக் கொண்டிருக்கும் போது சீன போலீஸார் சடுதியாக உள் நுழைந்து இவர்கள் மேல் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும், பின்னர் அதனை மறைக்க அவர்கள் கைகளை பின்புறம் கட்டி தலையில் சுட்டு தண்டனையை நிறைவேற்றியது போல் காட்சிகளை மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் வசம் 06 கத்திகளும், கோடரிகளும் இருந்ததாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆயுதங்களுடன் தடைசெய்யப்பட்ட வணக்க வழிபாடுகளிற்கு ஒன்று கூடியது பயங்கரவாத செயல்களில் ஈடுபடவேயென சீன பொலீஸார் நிலைமைகளை சோடித்துள்ளனர். 

சீனாவை பொருத்தவரை Xinjiang-இன் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினர் அனைவருமே பயங்கரவாதிகள் ஆவர். ஜேர்மனியின் பேர்லினில் உள்ள World Uyghur Congress (WUC), இந்த காட்டுமிராண்டித்தனமான சீன பொலீஸாரின் தாக்குதல்களை மிக வன்மையாக கண்டனம் செய்துள்ளனர். 

கைபர்தளம்

வானை மேடு செப்பமிடப்பட்டுள்ளது - SunRise இளைஞர்களின் முன்மாதிரி



 போக்குவர்த்துக் மிகவும் சிரமமாக குன்றும் குழியுமாக இருந்த வாணை மேட்டுப்பாதை செப்பனிடப்பட்டுள்ளது. இநதப் பணி ”
முஸ்லீம்களின் சோகத்தீயில் குளிர்காய்ந்த எமது ஊர் அரசியல் புள்ளிகள். ”  ஆல் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் இதில் சுவாரசியமான விடயம். எமது கிராத்தின் எதிர்காலத்தை தீர்மாணிக்கவிருக்கும் இளைஞர்களின் ஒரு சிறப்பான பணிதான் இந்தப் பாதை செப்பனிடல்.

SUNRISE YOUNG SOCIETY' SERVICES குழுமத்தின் அயராத முயற்சியால் இந்த வேலை செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பணத்தாலும் பொருளாலும் உதவி செய்தவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வளங்கவேண்டும் என்ற பிரார்த்தனையுடன், இப்பணியை ஒருமுகப்படித்தி சிறப்பாக நடாததி முடித்த SYSS டீமுக்கும் எமது ஊர் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். ஜதாகுமுல்லாஹ்.

எமது ஊரின் எதிர்காலத்தை அரசியல் வாதிகளின் கைகளில் விட்டுவிடாமல் உங்களைப் பொன்ற இளைஞாகள், பள்ளிவாசல்களின் தலைமையில் மற்றும் சமூகசேவை சார்ந்தவர்களின் கைகளில் விட்டுவிடுவதுதான் காலத்தின் தேவையாக இருக்கம் என்பது எமது கருத்து. இல்லையென்றால் ஒரு கஞசிக்கோப்பைக்காக இப்படியும் முஸ்லின் சோகத்தை விற்கக்குடியவாகள் தான் எம்மை வழிநடாத்த முட்படுவார்கள்.  ஊர் அரசியல் புள்ளிகள்”