கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடாவைச் சோ்ந்த M.C.M ரிபாய் நாநா அவா்கள் காலமானார்.

கஹடோவிடாவைச் சோ்ந்த ரிபாய் நானா அவா்கள்  இன்று (17.10.2014) காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  

அன்னார் மர்ஹும் களான ஓய்வுபெற்ற அதிபர் காஸிம் ஹாஜியார், மற்றும் உம்மு ரஹீமா ஆகியோரின் புதல்வரும். அல்லரமுல்லவைச் சோ்ந்த சித்தி நஸீமா அவர்களின் அன்புக் கனவரும். முஹம்மத் ஸமீர், பாதிமா ரிஸ்வானா ஆகியோரின் தந்தையும். திஹாரிய ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி அதிபா் அல்ஹாபிழ் மௌலவி இர்ஹாம் (ரஹ்மானி) அவர்களின் மாமனாரும் ஆவார்.
அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ( 17.10.2014) முற்பகல் 10.30 மணியளவில் மஸ்ஜிதுன் நுாா் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

ரிபாய் நானா அவா்கள் காலமானாா்.

கஹடோவிடாவைச் சோ்ந்த ரிபாய் நானா அவா்கள்  இன்று (17.10.2014) காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  

அன்னார் மர்ஹும் களான ஓய்வுபெற்ற அதிபர் காஸிம் ஹாஜியார், மற்றும் உம்மு ரஹீமா ஆகியோரின் புதல்வரும். அல்லரமுல்லவைச் சோ்ந்த சித்தி நஸீமா அவர்களின் அன்புக் கனவரும். முஹம்மத் ஸமீர், பாதிமா ரிஸ்வா ஆகியோரின் தந்தையும். அல்ஹாபிழ் இர்ஹாம் அவர்களின் மாமனாரும் ஆவார்.


அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ( 17.10.2014) முற்பகல் 10.30 மணியளவில் மஸ்ஜிதுன் நுாா் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்துக்கு அனுமதியின்றி சென்ற ராவனபலய அமைப்பினாரால் பதட்டம்!

பத்தரமுல்ல – வெளிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய நிலையத்திற்கு ராவணா பலய அமைப்பு இன்று (16)  சென்றுள்ள  நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட குழுவினரே இன்று ந‌ன்பகல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய நிலையத்திற்கு சென்று பணிப்பாளரை சந்திக்க அனுமதி கோரியுள்ளனர்.

இந்நிலையில்,ராவணா பலய அமைப்பின் முன்கூட்டியே அனுமதி பெற்று வந்திராத நிலையில் அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு அணிந்துள்ள காவி உடைக்கு அபகீர்த்தி ஏற்படாதவாறு பௌத்த தர்மத்துடன் கௌரவமாக நடந்து கொள்ளுமாறும் அதிகாரிகள் ராவணா பலய அமைப்பினருக்கு அறிவிருத்தல் வழங்கியுள்ளனர்.

இது தவிர வேலை வாய்ப்பு நிலையத் தலைவருகும், ராவணா பலய அமைப்பினருக்கும் இடையில்  வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு சிலநேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.

சிலந்தி தான் கட்டிய வலையில் சிலந்தி சிக்கிக்கொள்வதில்லை ஏன் தெரியுமா?

சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்டஇழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன
spider background 12 high
சிலந்திகளை சாதாரணமாக வீட்டில் பார்த்திருப்போமே தவிர, அவற்றைப் பற்றி அதிகமாக அறிந்திருக்க மாட்டோம்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிலந்திகள் உதவப் போகின்றன. சென்னையில் உள்ள ‘இந்திய அறிவு அமைப்புகள் மையம்’, அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த மையத்தினர், சிலந்திகளைக் கொண்டு இயற்கைக் கட்டுப்பாட்டு முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

சிலந்தியைப் பார்க்கும் போதே பலருக்குப் பயம் ஏற்படும். அவசரமாக விலகிச் செல்வார்கள். ஆனால் உண்மையில், பெரும்பாலான இந்தியச் சிலந்திகள் அபாயமற்றவை. நஞ்சு கொண்ட சில சிலந்திகளும் அதிகமாக அபாயத்தை ஏற்படுத்தாது.

‘ஓநாய் சிலந்தி’ போன்றவை விவசாயிகளின் தோழர்களாகி வருகின்றன. அவை, பயிர்களை நாசம் செய்யும் பழுப்பு தாவர வெட்டுக்கிளிகளை விருப்பமான உணவாகக் கொள்கின்றன.

‘பெரிய நண்டுச் சிலந்தி’ மற்றொரு இயற்கையான பூச்சிக்கொல்லியாகும். இந்த சாம்பல் கலந்த பழுப்பு நிறச் சிலந்தி, கரப்பான்பூச்சிகளை வேட்டையாடி உண்கிறது.

இது வலை ஏதும் பின்னுவதில்லை. மாறாக, சமையலறை ‘சிங்க்’ மற்றும் வீட்டுக் குப்பைகளில் மறைந்திருக்கிறது. இரவில் மட்டும் வெளிப்பட்டு கரப்பான்பூச்சிகளை வேட்டையாடுகிறது. இந்தச் சிலந்தியால் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் கிடையாது.

சென்னை இந்தியா அறிவு அமைப்புகள் மையமானது நிறைய ‘பெரிய நண்டுச் சிலந்திகளை’ உருவாக்குகிறது. கரப்பான்பூச்சிகளை வேட்டையாடும் அளவுக்குப் பெரிதாகும் வரை அவற்றை வளர்க்கிறது. பின்னர், கரப்பான்பூச்சித் தொந்தரவு அதிகமுள்ள பகுதிகளில் அவற்றை விடுகிறது.

ஒரு கட்டத்தில் இந்தச் சிலந்திகளின் எண்ணிக்கையே அளவுக்கதிமாக அதிகரித்து ஒரு தொந்தரவாகிவிடுமா? கிடையாது. இந்தச் சிலந்திகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். ஒரே பாலினத்தைச் சேர்ந்த சிலந்திகளை ஒரு பகுதியில் அதிகமாக விடும்போது அவை பெருகாமல் போய்விடுகின்றன.

சிலந்தி அல்லது எட்டுக்கால் பூச்சிகளைக் கண்டு நாம் பயப்படுகிறோம். ஆனால் உண்மையாக எல்லாப் பூச்சிகளும் நம்மைக் கண்டு பயப்படுகின்றன. நீங்கள் சிலந்தி வலைப் பின்னுவதைப் பார்த்திருப்பீர்கள். சுவற்றின் மூலைகள் அதற்கு மிகப் பிடித்த இடம். அதன் உமிழ்நீராலேயே அது வலைப் பின்னும். அது எவ்வளவு லாவகமாக அதைப் பின்னும் என்பது அதை உற்றுக் கவனிக்கப் புரியும். பகுதியில் அந்த வலையின் நூல் அறுந்தாலும் திரும்பவும் அந்த இடத்தை மிக அழகாக பின்னி விடும். பெரியக் கட்டடக்கலை நிபுணர் போல் தன் வலையைத் தயார் செய்யும்.

உலகத்தில் சிலந்தியின் வகைகள் சுமார் 50000 என்று சொல்லுகிறார்கள் ஆஸ்ட்ரேலியாவில் மிகவும் விஷம் வாய்ந்தச் சிலந்திகள் உள்ளனவாம். சிலந்தி அல்லது எட்டுகால் பூச்சி கடித்தால் அவரவர் உடல் அமைப்புக்கேற்றவாறு எதிர்ப்பலன்கள் reaction இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். சிலருக்கு உடல் முழுவதும் தடிக்கும், அரிக்கும், சிவப்பு சிவப்பாக, பட்டை பட்டையாக தோலின் மேல் அடையாளம் வந்து அரித்து தொல்லைக் கொடுக்கும். சிலருக்குத் தலைவலியுடன் சுரமும் வரலாம். குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாகத் தெரியும்.


ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடிந்தளவு பாடுபடுவேன் - ரதன தேரர் எச்சரிக்கை

இரண்டு தடவைகள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு வசதியாக மஹிந்த 18வது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தார்.

இதனை எனது கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் ஆதரித்து வாக்களித்து வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது.

இந்த சட்ட திருத்தத்தின் மூலம் அதுவரை செயல்பாட்டில் இருந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான 17 வது திருத்தச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டன. நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.

ஜனாதிபதி மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை வலுப்படுத்திய பின்பே அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

அதற்காக 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு அவர் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்பதற்கு தயங்க மாட்டோம்.

அவருக்கு எதிராக வீதியில் இறங்கி போராடவும் தயாராக இருக்கின்றோம். இதற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறவும் நாங்கள் தயார்

உள்ளத்தால்_உயர்ந்த_கிரிக்கெட்_வீரர்_ஷாஹித்_அப்ரிதி‬

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல் மற்றும் பெரிய நிறுவனங்களைத் தொடங்கி தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக்காதவர்கள். நாம் ஒய்வு பெற்ற பின்பும் ஏதாவது வருமானம் வருமா என்றுதான் அவர்கள் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்‪#‎ஷாஹித்_அப்ரிதி‬ மக்கள் பணிக்காக கோடிக்கோடியாக செலவழித்து உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார்.
அந்த வகையில், பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிதி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டக்காரரோ அதே அளவிற்கு, இளகிய மனம் படைத்தவர். ஆம், தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைப்பதற்கும், மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கும் செலவு செய்து உள்ளார்.
இதுவரை அவர் இதற்காக 17 மில்லியன் டாலர்களை செலவு செய்து உள்ளார். இந்த பணத்திற்கான இந்திய மதிப்பு 77 கோடிக்கும் மேல் இருக்கும். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்ரிதியின் மனிதநேயச் செயலை பாராட்டுவோம்... வாழ்த்துவோம்..!
இன்னும் சிலரோ ஒய்வு பெற்ற பிறகு ‪#‎கிரிக்கெட்‬ அகடமி தொடங்குவார்கள். அதில் புதிய ஆட்டக்காரர்கள் நுழைவதற்கு லட்சக்கணக்கில் ஃபீஸ் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத்தில், இருபது சதவீதம் வாழ்நாள் முழுவதும் கமிஷன் பெறுவார்கள். இதுதானே இங்கே நடந்து கொண்டு இருக்கிறது?.
அக்டோபர் 10 - 16, 2014 பதிப்பு
உரிமை: 19 குரல்: 07

முன்னால் பிரபல குத்துச்சண்டை வீரர் “முஹம்மத் அலி” வாபாத்தானார்?

முன்னால் பிரபல உலக அதிபாரக் குத்துச்சண்டை வீரர் “முஹம்மத் அலி” தனது 72 வயதில் “பார்கின்சன்” எனப்படும் நோயினால் வாபாத்தாகிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
முஹம்மத் அலி 1942ல் அமெரிக்காவில் ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தார். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள முன்னர் இவரது பெயர் “கேசியோ க்லேய்” என்பதாகும்.
1965ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மத் அலி என மாற்றிக்கொண்ட இவர் உலக அதிபார குத்துச்சண்டைப் போட்டிகளில் மூன்று தடவை உலகக் கோப்பையை வென்றுள்ளார்.
Islamtech

விரட்டியடிக்கபடவிருந்த முஸ்லிம்களை, செனரத் மன்னன் காப்பாற்றினான்

மகிந்த சிந்தனையில் என்பது சதவீதம் படுதோல்வியடைந்துள்ளதன் காரணமாக இன்று பண்டங்கள் வினியோகிக்கும் அரசியல் ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறதென கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டி தங்கொல்லையில் இடம்(13.10.2014) பெற்ற ஊடக சந்திப்பொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

 ஜனாதிபதித் தேர்தலில் முதலாம் முறை தற்போதைய ஜனாதிபதி போட்டி இட்ட போது 'மகிந்த சிந்தனை' வெளியிடப்பட்டது. இரண்டாம் முறை போட்டியிட்டபோது 'மகிந்த சிந்தனையின் மிகுதிப் பாகம்' வெளியிடப்பட்டது. இப்போது மகிந்த சிந்தனைக்குப் பதில் பண்டமாற்று அரசியல் சாசனம் அறிமுகம் செய்யப்படுகிறது.

மக்கள் அரசிடம் கேட்டது மோட்டார் சைக்கிள்கள் அல்ல. நிறந்தர சமாதானத்தையே கேட்டனர். ஆனால் மகிந்த சிந்தனையில் கூறப்பட்டவைகளுக்கு மாற்றமான விடயங்களே இன்று நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மகிந்த சிந்தனையில் ஒவ்வொறு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு தொழிற் சாலை வீதம் திறக்கப்பட்டு 500 பேர்கள் என்ற அடிப்படையில் தொழில் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடந்துள்ளதா? கண்டியில் மட்டும் 20 தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. பல்லேகலையில் 3000 ஊழியர்கள் தொழில் புரிந்த ஒரு தொழிற் சாலை மூடப்பட்டுள்ளது.

மகிந்த சிந்தனையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது. முதல் வருடம் செலவிடும் பணத்தை போன்று அடுத்த வருடம் இருமடங்கும் அதற்கடுத்த வருடம் மும் மடங்குமாக வருடாவருடம் அதிகரிப்பதாகத் தெரிவித்த போதும் இன்று அது நடக்க வில்லை. பதிலாக கல்விக்கான செலவில் 30 முதல் 40 சதவீத செலவை பெற்றோர் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் நேர்மையற்ற ஆட்சி செய்யும் நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஐ.நா.சபையில் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிராக மூன்று முறை பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன.

ஜர்மன் போன்ற நாடுகளில் மொத்த தேசிய செலவிற்கு அதிகமான வருமானம் காணப் படுகின்றது. அவ்வாறான நாடுகளில் இலவசமாக அல்லது குறைந்த விலையில் பொருட்களை வழங்க முடியும். ஆனால் இலங்கையைப் பொருத்தவரையில் கடந்த சில வருடங்களாக இலங்கை பெற்ற கடனுக்கான வட்டியையும், தவணைக்கட்டணத்தையும் செலுத்த எமது தேசிய வருமானத்தை விட அதிகரித்த பணம் தேவைப் படுகிறது. கடன் வாங்கி கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் எமக்கு இலவசம் என்ற ஒன்று தாக்குப் பிடிக்க முடியாதது.

சிலவருடங்களுக்கு முன் எரிவாயு சிலிண்டர் ஒன்று சுமார் 1000 ரூபாவாக இருந்தது. இந்த அரசு அதனை 2400 வாக உயர்த்தி தற்போது 250 ரூபாயைக் குறைத்துள்ளது. இதில் என்ன நியாயம் உண்டு?

பெற்றோல் ஒரு லீட்டருக்கான விலையை 85 ரூபாவால் அதிகரித்து தற்போது 5 ரூபாவால் குறைக்கப்பட்டதில் அர்த்தம் உண்டா?

கடந்த மூன்று வருடங்களுக்கான வருமான வரியை எடுத்துப்பார்த்ததால் அரசுக்குச் செலுத்திய தொகை படிப்படியாகக் குறைந்துள்ளது. அப்படியாயின் வர்த்தகத்துறையில் வருமானம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது தெளிவு.

வங்கிகள் இன்று அரசிற்குத்தான் கடன் வழங்குகின்றன. முன்பு முதலீடுகளுக்காகப் பொது மக்கள் வங்கிகளில் இருந்து கடன் எடுத்தனர். இன்று அரசியல் நோக்கங்களுக்காக அரசு கடன் எடுக்கிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதாக ஜனாதிபதித் தேர்தல்கள் இரண்டிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதே நேரம் அக்காலத்தில் புலிப் பயங்கரவாதமும் இருந்தது. இப்போது அது ஒழிக்கப்பட்டு விட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை ஏன் மாற்ற முடியாதுள்ளது.

இலங்கையில் வாழும் 40 சதவீத மக்களின் ஒரு நாள் வருமானம் இரண்டு அமேரிக்க டொலரையும் விடக் குறைவு. அதாவது ஒருநாள் வருமாணம் 260 ரூபாவிலும் குறைவு. 2006ம் ஆண்டிலிலிருந் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை. இன்று ஓய்வு பெற்றவர்கள் மிகச் சிறமத்திற்கு மத்தியில் வாழ்கின்றனர்.

முன்னர் ஓய்வுதியம் பெற்றவர்கள் தமது திரட்டிய வேதனைத்தை வங்கிகளில் முதலீடு செய்து 14 சதவீத வட்டியைப் பெற்றனர். இன்று 5 அல்து 6 சதவீதமான வட்டியே வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் ஓய்வூதியக் காரர்களுக்கு ஏற்பட்ட ஒரு சிரமமாகும்.

1978ம் ஆண்டு கட்டுநாயக்கா பெரு வீதியை அபிவிருத்தி செய்தோம். ஆனால் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயம் காரணமாக 100 தொழிற் சாலைகள் திறக்கப்பட்டன. இதன் காரணமாக கட்டு நாயக்கா வீதிக்கு செலவழித்த பணம் முழுவதையும் இரண்டு வருடங்களில் பெற்றுக் கொள்ள முடிந்தது. இன்று அமைக்கப் படும் பெருவீதிகள் கடன் பெற்றே அமைக்;கப்படுகின்றன. அவற்றால் முதலீடுகள் அதிகரிக்க வில்லை.

வியட்னாமை எடுத்துக் கொண்டால் வெளிநாட்டு முதலீடுகளாக மூன்று இலட்சம் கோடி அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டில் அப்படியான பாரிய வெளிநாட்டு முதலீடுகள் இல்லை.

இவ்அரசு இலங்கை தமிழ் மக்களுக்கு 13 பிளஸ் தருவதாக இந்தியாவிடம் வாக்குறுதி அளித்தது. அதாவது 13ம் திருத்தத்தற்கும் மேலதிகாமாக ஏதும் தருவதாக. ஆனால் இன ஒற்றுமையைக் கூட ஏற்படுத்த முடியாதுள்ளது.

கி.பி. 1300 முதல் ஒல்லாந்தர் போர்த்துக்கேயர் என்று வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வர ஆரம்பித்து விட்டனர். இவர்களுக்கு மத்தியில் பெருமளவு அராபிய முஸ்லீம் வர்த்தகர்களும் இலங்கைக்கு வந்து போயினர். அப்படி வந்த குடியேறிய முஸ்லீம்களை விரட்டி அடிக்க முற்பட்ட சமயத்தில்  செனரத் மன்னன் முஸ்லீமகளுக்குப் பாதுகாப்பு வழங்கி அவர்களை கண்டியில் குடி அமர்த்தினான். கண்டியை ஆண்ட இறுதி மன்னர்கள் வரிசையில் தமிழர்கள் இருந்தனர். ஒன்று மட்டுமே வித்தியாசம். அவர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றிய தமிழர்களாக இருந்தனர்.

அமேரிக்க ஜனாதிபதியே அங்கு உயர் பதவிக்கான அதிகாரிகளை சிபாரிசு செய்வார். அதனை செனட் சபை அங்கீகரிக்க வேண்டும். இலங்கையில் ஜனாதிபதியே அதனை நியமிக்கிறார். எவரது அங்கீகாரமும் தேவையில்லை. ஏன்னெனில் அங்கீகரிப்பவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் அமைப்பாக இருக்கிறது. இலங்கை அரசியல் அமைப்பின் 17 வது திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது.

ஊடக வியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.-

மக்கள் விடுதலை முன்னணி 1970 களில்  கிளர்ச்சியில் ஈடுபட்டன. ஆனால் அந்த ஜே.வி.பி.உடன் ஸ்ரீமாவோ அம்மையார் உற்பட பல அரசியல் தலைவர்கள் பேச்சு வாhத்தை நடத்தினார்கள். அதில் தவறு இல்லை. அதேபோல் விடுதலைப் புலிகளும் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி அவ்வாறு கிளர்ச்சிகளில் ஈடுபட்வில்லை. எனவே தமிழர் விடுதலை கூட்டணியுடன் பேச்சு வார்த்தைநடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. கட்டாயம் நடத்தத்தான் வேண்டும்.

ஊவா தேர்தல் ஐ.தே.க. ஐப் பொருத்தவரை மிக முக்கிய தேர்தலாகும். ஏனெனில் ஐ.தே.க.விட்டும் வெளியேறிய பலர் இப்போது எம்முடன் இணைந்து வருகின்றனர். அத்துடன் எமது வாக்குப் பலத்தை 40 சதவீதமாக உயர்த்தித்தந்தள்ளது. இன்னும் எமக்குத் தேவை வெறும் 10 சதவீதம் மட்டுமே, அதனை அடைவது மிகச் சுழபமாகும். மேலும் அரசு தனது முழுப் பலத்தையும் ஊவாவில் பிரயோகித்து கைக்கடிகாரம், கைத் தொலைபேசி, மின் உபகரணம், உள் ஆடை, வெளி ஆடை, வேட்டி, சாரி, வரட்சி நிவாரணம் என்று அரச பணத்தை இரைத்தே அந்த வாக்குகளைப் பெற்றுள்ளன. எனவே எதிர்காலத்தில் எமக்கு அது சவாலாக அமையாது.

நாட்டின் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் அரச ஆதரவாளர்களுக்கு ஒரு சட்டமும் எதிரணியினருக்கு வேறு சட்மும் இருக்க முடியாது. பிரித்தானியாவின் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்ட சம்பவம் முழு உலகிலும் இலங்கை ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவு படுத்தி விட்டது. இலங்கையின் சட்டம் பற்றி நோனிஸ் தெரிந்து வைத்தில்லை போலும். ஆதனால்தான் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. அவர் நியுயோர்க் பொலீசில் முறைப்பாடு செய்திருந்தால் அதற்கு தீர்வு கிடைத்திருக்கும்.

புலம் பெயர்ந்த மக்கள் (டயஸ்போரா) பற்றி பேசப்படுகிறது. தமிழ் மக்கள் மட்டுமல்ல மல்ல சிங்கள டயஸ்போராவும் உண்டு. இவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. இவர்கள் எமது நாட்டின் வளங்கள். அவர்களது சேவையை நம் நாடு பெறவேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை இந்தியப் பிரஜைகள் எவ்வளவு காலம் சென்று நாடு திரும்மினாலும் அவர்களது முதலிட்டை இந்தியா வரவேற்கிறது. எனவே எமது நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த சகல மக்களையும் ஒன்றிணைத்து எம்நாட்டில்; அவர்கள் முதலீடு செய்ய ஊக்கு விக்க வேண்டும். அவர்கள் வைத்தியர்களும், பொறியியலாளர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் பாரிய முதலீட்டாளர்களுமேயாவார்கள் என்று தெரவித்தார்.

(JM.Hafeez)