கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்துக்கு அனுமதியின்றி சென்ற ராவனபலய அமைப்பினாரால் பதட்டம்!

பத்தரமுல்ல – வெளிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய நிலையத்திற்கு ராவணா பலய அமைப்பு இன்று (16)  சென்றுள்ள  நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட குழுவினரே இன்று ந‌ன்பகல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய நிலையத்திற்கு சென்று பணிப்பாளரை சந்திக்க அனுமதி கோரியுள்ளனர்.

இந்நிலையில்,ராவணா பலய அமைப்பின் முன்கூட்டியே அனுமதி பெற்று வந்திராத நிலையில் அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு அணிந்துள்ள காவி உடைக்கு அபகீர்த்தி ஏற்படாதவாறு பௌத்த தர்மத்துடன் கௌரவமாக நடந்து கொள்ளுமாறும் அதிகாரிகள் ராவணா பலய அமைப்பினருக்கு அறிவிருத்தல் வழங்கியுள்ளனர்.

இது தவிர வேலை வாய்ப்பு நிலையத் தலைவருகும், ராவணா பலய அமைப்பினருக்கும் இடையில்  வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு சிலநேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.

0 comments:

Post a Comment