கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளி வாசலின் ஈதுல் அழ்ஹா பெருநாள் திடல்தொழுகை
அல்லாஹ்வின் அருளால் இம்முறையும் கஹட்டோவிட ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளி வாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை கஹட்டோவிட அல் பத்ரியா மகாவித்தியாலய தானத்தில் காலை 7.15 மணிக்கு நடைபெற்றது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே நேரத்தில் நடாத்தப்பட்ட இத்தொழுகையில் சுமார் 1000 பேரளவில் கல்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொழுகையைத் தொடா்ந்து பள்ளி வாசலின் பிரதம இமாம் மௌலவி மஸ்ஊத் ஸலபி அவா்களின் உரை இடம்பெற்றது. உள்ளத்தை உருக வைத்த இவரது உரையில் இப்றாஹீம் நபியவா்களின் வாழ்விலிருந்து நாம் பெறும் படிப்பினையை வழமைக்கு மாற்றமான வித்தியாசமான ஒரு கோணத்தில் சுருக்கமாக விளக்கிக் கூறினார். மேலும் கருத்து வேறுபாடுகளின் போது நடந்து கொள்ள வேண்டிய அழகிய முன்மாதிரிகளையும் தெளிவு படுத்தினார். இவரது உரையைத் தொடர்ந்து வந்திருந்தவா்கள் ஒருவருக்கொருவா் ஸலாம் கூறி துஆக்களைப் பரிமாறிக் கொண்டதையும் காணக் கூடியதாக இருந்தது.

0 comments:
Post a Comment